‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட்டவை. ஆர்வமூட்டும் வாசிப்புத்தளம் கொண்ட இக்கதைகள் ஜெயமோகனின் பிற கதைகள் போலவே வாழ்க்கையின் அடிப்படைகளை தத்துவ நோக்குடன் விசாரணை செய்பவையும் கூட.
3.5 Stars A collection of science fiction short stories! Subconsciousness, Alchemy, glimpse of Neuroscience and Psychiatry are the elements in this novel.
A collection of eclectic short stories. I had this feeling of having vaguely heard of each story already. This was perhaps due to the fact that the author had tried to emulate various genres through some striking stories. The emulation rather than the story was at forefront. It was more about the style and the style was good, but there was not much impact to the stories. Each story has some sort of exposure of truth or a glimmer that generally sets a short story apart. None of these stories had the punch you would expect and they were all very close to having that punch. It was just that it was predictable.
A good read for a rainy day but not something that is unmissable.
"திண்ணை" இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய அறிவியல் புனைகதைகளின் தொகுப்பே இந்நூல். கதைகள் அனைத்தும் இந்திய மருத்துவ, விஞ்ஞான மற்றும் தத்துவ முறைகளை மையமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் வித்தியாசமான அதே சமயத்தில் நல்லொதொரு வாசிப்பனுவத்தை கொடுக்கின்றது.
ஜெயமோகனின் இந்த சிறுகதைத் தொகுப்பு ஒரே முறை வாசித்தால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத ஆழம் கொண்டது. இதில் வரும் பல கதைகள் மனிதர்களின் பழக்கங்கள், அவர்களின் பெருமை, மற்றும் இயற்கையை வென்றுவிட்டோம் என்ற எண்ணத்தைப் பற்றி சிந்திக்க வைக்கின்றன. மனிதன் மிகப் பெரியதாக நினைக்கும் விஷயங்களை இயற்கை எப்படி எளிதாகப் பார்க்கிறது என்பதும் இதில் தெரிகிறது.
மனிதன் இயற்கையின் எல்லைகளை உடைத்துவிட்டதாக நினைத்தாலும், உண்மையில் அவன் அந்த எல்லைகளை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே கதைகள் சொல்லும் உண்மை. இதை நன்றாக உணர, கதைகளின் அர்த்தமும் சுவையும் முழுமையாகப் பிடிக்க, இந்தப் புத்தகத்தை இரண்டு முறை வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இது வெறும் கதைகள் மட்டும் அல்ல. இப்படிப்பட்ட சிந்தனைகள் எழுத ஒரு எழுத்தாளர் எவ்வளவு வாசித்திருக்க வேண்டும் என்பதையும் இந்தப் புத்தகம் காட்டுகிறது. அவர் பயன்படுத்தும் சொற்கள் மற்றும் குறிப்புகள் எல்லாம் ஆழமான வாசிப்பில் இருந்து வந்தவை. ஜெயமோகனுக்கு வாசிப்பு என்பது ஒரு பழக்கம் மட்டும் அல்ல; அது அவரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே தெரிகிறது.
அறிவியல் புனைகதைகள். சயன்ஸ் பிக்சன் என்றால் விண்வெளி எல்லாம் தேவையில்லை, சித்த மருத்துவம், ரசவாதம் என நம்மூர் சை-பை-களுக்கு பஞ்சமில்லை என சொல்லாமல் சொல்லும் புத்தகம். கடைசியாய் இலக்கியம் பற்றிய அந்தப் பெரிய கட்டுரைத் தவிர (சத்தியமா புரியல) அனைத்து கதைகளும் மனதில் நிற்கின்றன. ஒரு சிலவற்றை நம்மால் கணிக்க முடியும். ஒரு சில நல்ல கற்பனைகள் (நாக்கு).
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள எட்டு சிறுகதைகளில் "ஐந்தாவது மருந்து" "விசும்பு" ஆகிய இரு கதைகள் எனக்கு பிடித்திருந்தது. இப்புத்தகத்தினை படிக்கையில், இது தீவிர இலக்கியத்தை சேராத வணிக எழுத்து என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.
Thought-provoking collection of short stories in a narrative fashion. It gives a new perspective of looking at things related to science and something very complex to fit within an equation.
அறிவியல் சிறுகதைகளில் தமிழில் ஒரு புது முயற்சி. அறிவியல் கதைகளில் அறிவியல் தாண்டி ஆழ்மன குழப்பங்களுக்கு விடை தேடுபவர்கள் இதை படிக்கலாம்.ஐந்தாவது மருந்து, உற்று நோக்கும் பறவை ஆகிய இரண்டும் இந்த தொகுப்பின் பெஸ்டாக எனக்குப் பட்டது.தமிழ் இலக்கிய வடிவங்கள் கதையை வாசிக்கும் போது ஏதேனும் பின்னிணைப்பை அறிவிப்பில்லாமல் போட்டுவிட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். செமையான கற்பனை. ஆங்கில அறிவியல் புனைகதை வாசகர்கள் ஆர்வத்துடன் வாசித்தால் ஏமாந்து போவீர்கள். இது தமிழர்களுக்கான தமிழ் அறிவியல் புனைகதைகள்.
Collection of 8 scientific short stories discussing about different platforms such as siddha, ancient traditions, ancient culture, neurology, atheism, bird's research etc.,
This is a very innovative sci-fi attempt by jeyamohan. More rooted to our culture when compared to western inspired sci fi stories by sujatha.
Plus - the unique ideas around which the stories are constructed. The author covers diverse ideas like Conscience, Chaos Theory, Apocalypse etc. Also the stories are a cross pollination of science with history, philosophy and social ideas.
Minus - the narration style. Stories are very limited on plot content and the characters mostly discuss philosophical and science ideas. Nothing wrong with that. But a fiction is expected to implicitly convey philosophical ideas through its narration and not through dialogues. This gives most of the stories a non fiction flavor.
One story which was an exception to this was "Utru Nokkum Paravai". The climax of this story was mind blowing. A deep philosophical idea implicitly conveyed in the climax of this story. Wish all stories had been like this.
Nevertheless this is a great attempt from Jeyamohan because of its nativist style and also considering this genre is very rare in tamil.
தமிழில் இப்படியும் அறிவியல் புனைவு எழுதமுடியுமா என்று வியக்க வைக்கிற படைப்பு. இது வரை சுஜாதா தான் இந்த வகை படைப்புகளில் முடிசூடா மன்னனாக இருந்தார். இதில் இன்னொரு கலரும் ஒளியும் கூட காட்ட முடியும் என்று ஜெமோ அருமையாக எடுத்துக் காட்டி இருக்கிறார். அதிலும் சுஜாதாவின் கதைகளில் அதிகமாக அறிவியற் பதங்களும், ஆதி புத்திசாலி குழந்தைகள்/தாத்தாக்கள் வருவார்கள் - கொஞ்சம் அசிமாவ் வாசனையும் அடிக்கும் - ஜெமோ இதிலிருந்தேல்லாம் முற்றிலும் மாறுபட்டு இப்படைப்பை உருவாக்கி இருக்கிறார். வரலாறா, இலக்கியமா, அறிவியலா, கற்பனையா என்று அதிசயிக்க வைக்கும் படைப்பு. நிச்சயம் தமிழில் படிக்க வேண்டிய முக்கியமான சிறுகதை நூல்களுள் ஒன்று.
பல தளங்களில் விரியும் அபாரமான அறிவியல் புனைகதைகள். உற்று நோக்கும் பறவை, விசும்பு, பூர்ணம், நம்பிக்கையாளன், நாக்கு போன்ற கதைகள் எப்பேர்ப்பட்ட வாசகரையும் உள்ளிழுப்பவை. இந்திய தத்துவ, கலாசார அம்சங்கள், சூழலியல், நரம்பியல், பரிணாவியல் என்று பல இழைகளைத் தன்னகத்தே கொண்ட இக்கததைகள் உலகத் தரம் வாய்ந்தவை என்று சொன்னால் மிகையாகாது.
ஜெயமோகன் எழுதிய அறிவியல் புனைகதைகளின் தொகுப்பே இந்நூல். ஐந்தாவது மருந்து, விசும்பு, பூர்ணம், உற்று நோக்கும் பறவை போன்ற கதைகள் எப்பேர்ப்பட்ட வாசகரையும் உள்ளிழுப்பவை. சிந்திக்க வைக்கும் சிறந்த அறிவியல் புனைகதைகள்.