This translation of M.V. Venkatram’s Tamil classic novel, Velvi Thee, is based on the lives of a little-known Saurashtrian silk weavers’ community in Tamil Nadu. A highly skilled and hard-working weaver, Kannan’s life has always been a battle of exploitation and survival—first by his own family members and later by unscrupulous middlemen who made sure the weavers remained impoverished. The story begins with rains lashing and ruining the weavers’ village, including Kannan and his wife Kausalai’s home and looms. Kannan’s economic ruin provides his long-time employee and confidante the opportunity to backstab him. During this turmoil, Hema, a young widow, enters Kannan’s life. She is determined to have a relationship with Kannan, even if it means sharing him with her friend Kausalai and giving Kannan money to bail him out of his dire financial situation. A pregnant Kausalai is furious and distraught when she finds the truth about Hema’s intentions. While Kannan is in the middle of negotiations to find a solution to the weavers’ union strike, he returns home late one night and realizes his wife and daughter are missing!
Venkatram was born in Kumbakonam in a Sourashtra family. He obtained a B.A degree in Economics and was involved in silk Zari business. He first started publishing in the literary magazine Manikodi in the 1930s, while he was still a college student. He was influenced by Ku. Pa. Rajagopalan and was part of a literary circle that included Karichan Kunju (R. Narayanaswami), Thi. Janakiraman, Thiruloka Seetaram, Dhenuka, Thanjai Prakash, Na.Vichuvanathan, C.M.Muthu and Podhikaiverkpan. His works have been published in magazines like Kaalamohini, Grama Ooozhiyan and Sivaji. He also ran a literary magazine named Thenee briefly. He has written over two hundred short stories and novels. Nithyakanni Kathukal and Velivithee are his most noted works. He also wrote more than 60 short biographies for Palaniappa Brothers and translated over 10 books for the National Book Trust of India. In 1993, he was awarded the Sahitya Akademi Award for Tamil for novel Kathukal (lit. Ears).
நாவல் ஆரம்பிக்கிறது இப்படி, ' ஐம்பூதங்களில் ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது; அந்த ஆடலையே மனிதர்களால் தாங்க முடியவில்லை; நிலம் அச்சத்தால் கண்ணீர் பெருக்கியது. ' என நாம் அனைவரும் நேசிக்கும் மழையை பழித்தவாறு தொடங்குகிறது. காரணம் இருக்கிறது, இந்த மழை என்பது பலருக்கு முக்கியமாக என்றும், விவசாயிகளுக்கு நன்மையென பலவிதங்களில் படித்திருப்போம். இப்படி இருக்கையில், நாவலின் தொடக்கமே ஏன் இப்படி? என யோசித்த போது.
புரிந்தது. இப்புத்தகம் வாயிலாய் எனக்கு தெரியாத ஒரு சமூகத்தை பற்றி தெரிந்து கொள்ளப் போகிறேன் என, ஆவலோடு தொடங்கினேன். இச்சமூகத்தைப் பற்றி நாவல் பல இடங்களில் பேசியுள்ளது. ' பட்டு நெசவாளர்களின் பிரச்சினை வேறு; பருத்தி நூல் நெசவாளர்களின் பிரச்சினை வேறு. பட்டு நெசவாளர்களை ஆட்சியாளர்கள் புறக்கணித்தே வந்துள்ளனர். இனியாவது மனிதாபிமானத்துடன் இந்த பிரச்சினையக் கவனிக்க வேண்டும் ' என சுருக்கமாக நம்முள் நிறுத்துகிறார், இது பட்டு நெசவாளர்களைப் பற்றியே என!!
' குழந்தையை ஏணையில் போட்டுட்டு வா; ரெண்டு தறியையும் சுருட்டி வச்சிடுவோம் ' என தொடக்கமே நன்றாய் ஈர்த்தது. ஒரு பட்டு நெசவாளர்களின் வாழ்வியல் என்பது கால மாறுதலைப் பொறுத்தது என்பது ஒரு உண்மையானால், இன்னொரு பக்கம் கடனுக்கு ஒப்பந்தமாய் தறி வாங்கி வேலை செய்பவன் ஒரு புறம், கூலிக்கு வேலை செய்பவர்கள் ஒரு புறம்.
இதில், கண்ணன் என்பவன் ஒப்பந்தமாய் தறி வாங்கி வேலை பார்ப்பவன். ஆரம்பம் முதலே, இவன் பல கனவுகள் காண ஒவ்வொரு சூழ்நிலையிலும் தள்ளப்படுகிறான். அண்ணன்மார்கள் விட்டுச் சென்றபோது, அண்ணியாரும் கண்டுகொள்ளாத போது, தன் தாயோடு தனியே ஒரு பெரும் கனவுகளின் பட்டியலுடன் தனியே சென்று விடுகிறான்; சொந்த வீடு, சொந்தமாக இரண்டு அல்லது ஐந்து தறி, பிறகு பெண்ணாசை மட்டும் எப்படி விடப்படும், சுற்றி இருப்பவர்ககால் முதலாளி எனவும் அழைக்கப்பட்டு அதுவும் ஒரு கனவை தந்து விடுகிறது.
இப்படி ஆசா,பாசங்கள் நிறைந்த ஒரு ஜீவனாய் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சோதகளை மேற்கொள்கிறான். தன்னம்பிக்கை கொண்டு முயற்சியும் செய்கிறான்.
இவனுடைய நன்னடத்தை இவனை ஒரு தொழிலாளர்களின் குரலாகவும் முன்னிறுத்துகிறது. இந்நாவல் எழுதப்பட்ட காலம், 1970-80களில் இருக்கலாம், அப்போது இருக்கும் அரசியல் மாற்றங்களை ஆங்காங்கே உரையாடல்கள் வாயிலாய் காணமுடியும். காங்கிரசுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்குமான இடர் ஒரு பக்கம், தி.க மற்றும் தி.மு.க சார்ர்ந்தவர்கள் ஒரு புறம் என இவர்கள் ஊதிய உயர்வு இருபத்தைந்து சதவீதம் வேண்டி ஒரு பொதுக்கூட்டம் நடத்துவார்கள்.
இந்த இடம், ஒவ்வொரு கட்சியினரின் தாக்கத்தில் இருக்கும் நபர்களின் பேச்சில் அதை மிக கவனமாய் பதிந்திருப்பார்.
' ஏழைகளுக்காக ஆளுவதாய் நீலிக் கண்ணீர் வடிக்கும் அரசாங்கம் என்ன செய்கிறது? ஆட்சியாளர்களின் பல்லக்கைச் சுமக்கும் முதலாளிகள் என்ன செய்கிறார்கள்? இந்த முதலாளித்துவ ஆட்சியென... என கம்யூனிஸ்ட் சார்ந்தவன் ஒரு புறம்,
' விலை ஒடிக் கொண்டே இருக்கிறதே, கூலி இருக்கிற இடத்தைவிட்டு அசையவில்லையே, கூலியை ஏற்றக் கூடாதா என்றால் தலைவர் தடுப்பார் ' என தி.மு.க சார்ந்தவன் ஒரு புறம்,
' நம் நாட்டில் பச்சை தமிழர் ஆட்சி நடக்கிறது; இந்த ஆட்சியைக் குறைக் கூறுவோர் தேசத் துரோகிகள்; பார்ப்பனரின் சூழ்ச்சிக்கு இரை ' என தி.க சார்ந்தவன இன்னொரு புறம்
என ஒவ்வொருவரும் மேடையேறி தங்கள் கட்சியின் நோக்கத்தோடு பேசி முடிப்பார்கள். இது, நமக்கு அக்கால அரசியல் பிளவுகளை காட்டுகிறது. இறுதியாய், கண்ணன் உள்ளதைப் பேசி முடிந்ததும் கூட்டம் கலையும்.
இப்படி இருக்கையில், ஒரு முதலாளியின் பிடியில் கண்ணன் ஒரு சொந்த வீட்டை வாங்குவான், தாயோடு மகிழ்ச்சியில் அடுத்த கனவிற்கு ஏங்கிப் போய் கிடந்தான்.
திருமணமும் நடந்து, எல்லாம் நன்றாக போகயில் இன்னொருத்தி புதிதாய் இவனுக்கு இன்னொரு கனவு காண இடத்தை கொடுப்பாள். கண்ணன் கூறுவான், ' இரண்டு பெண்களுக்கிடையே எப்படி நட்பு பூக்கிறது என்று யாருக்கு தெரியும் என ' இங்கு தான், கதையை மிக அழுத்தமாய் நகரும் ஒரு பாணி தொடங்குகிறது.
மனைவியாய் இருப்பவள், அடிமைப்பட்டும் கிடப்பாள், அடிவாங்கியும் கிடப்பாள், ஏன் எதிர்த்தும் கேட்டி இருக்கிறாள். இப்பெண்மணியின் முடிவு எதிர்பார்த்த ஒன்றாய் இருந்தாலும் அது அழுத்தமானவை. கண்ணனுடைய குழந்தை அம்மா, அப்பா என முதன் முதலில் பேச முயன்ற தருணங்கள் ஆழமானவையாக பதிந்துவிடுகிறது, மனதில்.
கண்ணன் இரண்டாவதாய் வந்தவள் மூலம் பலவற்றை இழந்து, இன்னொரு கனவிற்கும் தள்ளப்படுகிறான். " ஆமாங்க! மழையா...? " என நாவல் தொடங்கிய இடத்தில், இம்முறை ஒரு புத்துயிர்ப்பு பெற்ற உயிர்களைப் போல கண்ணனும் அவளும் மழையோடு பயணத்தை தொடர்கறார்கள். நாவலும் முடிகிறது.
தமிழ் வார்த்தைகள் இந்நாவல் ஆசிரியர்க்கு சரளமாய், நண்பனாய் இருக்கிறது. அவ்வளவு சுவை மிகுந்த எளிய நடையில், ஒரு தனிமனிதனின் வாயிலாய் ' சௌராஷ்டிர என்னும் பட்டு நெசவாளர்களின் சமூகத்தை ' மிக நுண்ணியமாய் எழுதியிருக்கிறார்.
அனைவராலும் வாசிக்கப்படலாம். கவனிக்கப்பட வேண்டியவை.
இந்த வருடம் எம்.வி. வெங்கட்ராமின் நூற்றாண்டு விழா வருடம்,எனவே அவரின் ஏதாவது படைப்பைப் படித்துவிடவேண்டும் என்று "வேள்வித்தீ" புதினத்தை வாசித்தேன்.சுந்தர ராமசாமியின் கூற்றுப்படி "மிகவும் நயமாக எழுதப்பட்ட புதினம்".எம்.வி.வெங்கட்ராமை வாசிக்க விரும்புபவர்களுக்கு இப்புதினம் சிறந்த ஆரம்பமாக இருக்கும் என நம்புகிறேன்.
“திருமண பந்தத்தை மீறி ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது பாவம் என்கிறார்கள். ஆனால், இம்மாதிரி உடலுறவு சோகத்தைச் சுகமாக்கும் சாதனமாகச் சிலருக்கு, பெண் ஆண் இருபாலருக்கும் உதவுகிறது என்பதை ‘வேள்வித் தீ’ என்கிற என் நாவலில் சுட்டிக் காட்டினேன்.”
‘காதுகள்’ நாவலுக்கு 1993ல் சாகித்ய அகாடமி விருது பெற்றபோது எம்.வி.வெங்கட்ராம் ஆற்றிய உரையின் சில வரிகள் இவை. ‘வேள்வித் தீ’ ஒரு Affair நாவலென்கிற அனுமானத்தில்தான் வாங்கினேன். ஆனால் அது பட்டு நெசவாளர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. இதனை அரசியல் பேசும் நாவல், குடும்ப நாவல், Affair நாவலென எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இதில் எம்.வி.வெ தொட்டிருக்கும் அபத்தவாதமே இந்நாவலின் உச்சம். கடைசி அத்தியாயத்தில் மட்டும் அபத்தவாதம் பேசப்பட்டிருந்தாலும் அதன் வீரியம் அதிகமாகவே உள்ளது.
இதற்கு முன் ஆல்பர்ட் காம்யூ மற்றும் முரகாமி ஆகியோரின் படைப்புகளிலிருந்து அபத்தவாதம் கொஞ்சம் பரிட்சியம். ஆனால் அவற்றைவிட ‘வேள்வித் தீ’ கொடுத்த ஆச்சரியம்தான் பரவசத்தில் ஆழ்த்தியது.
கதாநாயகனான கண்ணனின் மனைவி கௌசலை, கடைசிக்கு முந்தைய அத்தியாயத்தில் தற்கொலை செய்துகொள்கிறாள். அதையறிந்த கண்ணன் மனமுடைந்து போகிறான்.
காலம் - அவள் இறந்த மறுநாள்
நாவலின் கடைசி வரி (வசனம்), கண்ணின் குரலிலிருந்து இவ்வாறாக முடிகிறது:
“இப்போ, சந்தோஷமா இருக்கு”
This entire review has been hidden because of spoilers.
நெசவை தொழிலாக கொண்ட சமூகமான மிக குறைந்த அளவில் இருக்கும் சௌராஷ்டிரர்கள் வாழ்வை பதிவு செய்யும் சிறிய நாவல். இருந்தாலும் இது ஒட்டுமொத்தமாக சௌவுராஷ்டிரர்களின் வாழ்க்கையை கட்டமைத்து வாசகனுக்கு அளிப்பதில் குறைப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது, இருந்தாலும் இந்த மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரே ஒரு நாவலாக இது இருக்கிறது. ஏனென்றால் ஒன்றிரண்டு குடும்பத்தை வைத்தே கதை நகர்கிறது அதிலும் சமூகம் சார்ந்த போராட்டமாக பாதிக்கு மேல் நாவல் போகிறது நெசவாளர்களின் போராட்டம் அது.
கண்ணன் கௌசல்யை வாழ்வின் சிக்கல்களையும், மேடு பள்ளங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வாழ்வை நடத்துவதால் அதற்கான பொருத்தமான தலைப்பாக "வேள்வித் தீ " என்று ஆசிரியர் வைத்திருக்கிறார். கண்ணன் இளமையிலேயே பணம் சம்பாதிப்பதும் பொருள் ஈட்டுவதிலும் அதன் பிறகு குடும்பத்தை அமைத்துக் கொள்வதிலும் கனவு காண்பவனாக இருக்கிறான் தங்கள் குடும்பத்தாள் கைவிடப்பட்ட போது அவன் தன் வாழ்வை தொடங்கும் போது பல்வேறு வாழ்வியல் சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்கிறான் . அவன் அருகில் இருப்பவர்கள் அவனை பயன்படுத்திக் கொள்கிறார்கள் அல்லது ஏமாற்றுகிறார்கள். கண்ணனை அவனது முதலாளி மிக நுட்பமாக பயன்படுத்திக் கொள்கிறார் என்று தான் எனக்கு தோன்றுகிறது ஏனென்றால் திரும்பத் திரும்ப அந்த முதலாளி " ஒரு குடும்பத்தில் விளக்கு ஏற்றி வைத்த பெயர் எனக்கு இருக்கட்டும்" என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார் பல இடங்களில். கண்ணனை அவனது நிலையையும் சரியாக பயன்படுத்தி க்கொள்ளும் முதலாளி தொழிலாளிக்கான ஒரு சிக்கலான உறவாக இருந்தாலும் கண்ணன் அந்த முதலாளியின் உறவை அறுத்துக் கொள்ள நினைக்கவில்லை. நண்பன் சாரநாதன் மற்றும் கண்ணனின் உடன் பிறந்தார்கள் அவனை ஏமாற்றும்போது அவர்களின் உறவுகளை உடனடியாக முறித்துக் கொள்கிறான் கண்ணன். ஆனால் முதலாளியுடனான உறவை அவ்வாறு அவனால் செய்ய முடியவில்லை என்ன இருந்தாலும் கஷ்ட காலங்களில் தனக்கு கை கொடுத்தவர் அவர் என்று நம்புகிறான். ஹேமா அறிமுகம் ஆகும் இடத்திலேயே இவள் கண்ணனின் வாழ்க்கையை புரட்டிப் போடப் போகிறாள் என்று வாசகனுக்கு தெரிந்து விடுகிறது . இருபது வயதில் நோய்வாய்ப்பட்ட கணவனுக்கு வாக்கப்பட்டு கணவனை இழந்த அவள் கண்ணனை மிக எளிதாக கைப்பற்ற போகிறாள் என்பதை யூகிக்க கூடியதாக தான் இருக்கிறது. அதேதான் நாவலே நடக்கிறது பெண்கள் குறித்தும் பணம் குறைத்தும் பகல் கனவை கண்டு கொண்டிருக்கும் கண்ணன் மிக எளிதாக ஹேமாவை தன் வாழ்வின் உள் அனுமதிக்கிறான் அதற்கான விளைவு மிக கொடியதானதாக இருக்கிறது. ஆனாலும் அவற்றை புறந்தள்ளி இருவரும் நாவலின் இறுதியில் இணைகிறார்கள் அறிவுப்பூர்வமாக பார்க்கும் போது இது மிகக் கொடுமையான ஒரு முடிவாகவும் மோசமான செயலாகவும் படுகிறது. ஆனால் வாழ்வின் எதார்த்தத்தை வைத்து பார்க்கும் போது மனிதன் அவ்வாறு தான் நடந்து கொள்கிறான் என்பதால் அந்த கசப்பை நாம் ஏற்று ஆக வேண்டியும் உள்ளது. வாழ்வின் மேடு பள்ளங்களிலும் இன்ப துன்பங்களிலும் உறுதியாகவும் ஆறுதலாகவும் இருக்கும் கௌசல்யை , மோசமான முடிவை எடுத்ததை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை , எத்தனை உறுதியான பெண்களாக இருந்தாலும் கணவனின் துரோகம் அவர்களை மிக எளிதில் வீழ்த்தி விடுகிறது ஒரு எளிய பெண்ணாக கௌசல்யை அந்த முடிவை எடுப்பதால் அதன் யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
சௌராஷ்டிரர்கள் தனித்த மொழியும் பழக்க வழக்கங்களும் தனித்த அடையாளங்களும் கொண்டவர்களாக இருந்தாலும் அவற்றுக்காக முக்கியத்துவத்தை நாவலில் அளிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது . அவர்களின் வட்டார வழக்குகளோ தனிப்பட்ட பழக்க வழக்கங்களையோ, சடங்குகளையோ முறையாக பதிவு செய்யப்படவில்லை. சாதாரணமாக சமூகத்திலும் குடும்பத்திலும் அனைவரும் எதிர்கொள்ளும் சிக்கல்களை கொண்டே ஆவல் நகர்கிறது. இதனாலையே இது சிறந்த மொழி நடை கொண்டு இருந்தாலும் நல்ல நாவலாக கருதப்பட்டாலும் கலை வெற்றி முழுமையாக கை கூடாத படைப்பாக கருதப்படுகிறது.
இதன் எழுத்தாளர் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருப்பதாக இந்த நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் அவரின் இரண்டு நாவல்கள் தான் பெரும்பாலும் வாசிக்கப்பட்டு கொண்டிருக்கிறது ஒன்று "காதுகள்" இன்னொன்று "வேள்வித் தீ" பிற நூல்கள் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
புத்தகம் :வேள்வித் தீ எழுத்தாளர் : எம். வி. வெங்கட்ராம்
🌷இந்த நாவல் பட்டுத் தொழில் செய்யும் நெசவாளர்களின் வாழ்க்கையைத் தழுவியது. நெசவாளர்களின் வாழ்க்கை, உழைப்பாளர்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், முதலாளிகளுக்கும் உழைப்பாளிகளுக்கும் தொழில் சம்பந்தமாக உள்ள உறவுச் சிக்கல்கள், அவர்களுடைய கனவுகள், ஆண், பெண் உறவு சம்பந்தப்பட்டப் பிரச்சினைகள் என இதைச் சார்ந்தே வித்தியாசமாக, எதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது.
🌷வேள்வீத் தீ நாவல் மிக நயமாக, கதை சொல்லக்கூடிய முறையும், அதன் தொடர்ச்சியும், கதாபாத்திரத்திரங்களின் வெளிப்பாடுகளும், அழகிய நவீன தமிழில், மிக நேர்த்தியாக, கவரும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
🌷ஒரு சராசரி மனிதன் கண்ணன் என்பவன் கட்டிக் கொண்ட துணியோடு, அம்மாவுடன் வீட்டை விட்டு வெளியேறும் ஒருவன் சொந்த வீட்டில், சொந்தத் தறித் தொழிலில், தன் மனைவி கோசலை குழந்தை ராஜீயோடு எப்படி வாழ்கிறான்?? பிறகு இதெல்லாம் மழை மற்றும் ஒரு பெண்ணால் எப்படி குடும்பம், வீடு, தொழில் சின்னாபின்னமாகிறது??? என்பதை விவரிக்கிறது..
🌷 "குளிச்சுட்டுச் சாப்பிடுங்க. மனசைக் குழப்பிக்காதிங்க. சந்தோசமாக இருக்கனும். என்ன?" என்று சொல்லிக்கொண்டு கிளம்பியவள் பிறகு அடுத்த நாள் தன் மார்போடு இறுகக் கட்டிக் கொண்ட குழந்தையையும், வயிற்றில் நான்கு மாத சிசுவையும் சுமந்தபடி அந்த குளக்கரையில் மிதந்தாள்.
🌷கோசலையும், ராஜுவும், நான்கு மாதம் வயிற்றிலிருக்கும் குழந்தையும் அங்கே என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டனர்.. என்னால் இன்னும் அழுகையை நிறுத்த முடியவில்லை.. மனதே கனமாக இருக்கின்றது. மேலும் கடைசி அத்தியாயங்கள் சிந்தனையில் ஆழ்த்திவிட்டது.
🌷அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.. நல்ல அனுபவத்தை தந்தது.
🌷இந்தப் புத்தகத்தை என் வீட்டின் அருகில் உள்ள அண்ணன் மற்றும் நண்பரிடமிருந்து இரவல் வாங்கியது. இந்த நேரத்தில் இந்த வாசகம் தான் நியாபகத்திற்கு வருகிறது "புத்தகங்களை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக புத்தகங்கள் தான் நம்மைத் தேர்ந்தெடுக்கின்றன"
🌷 இந்த நாவலில் வரும் கண்ணன் என் அப்பாவையே நினைவுப்படுத்துகிறான்💙. தீரா உழைப்பு, திறமை, குணாதிசயங்கள், பண்பான பேச்சு என அனைத்தும் 💙🤗
M.V.Venkatram weaves sociology with relationship dilemmas in this novel. Set in times when the Congress is giving way to DMK, it beautifully captures the lives of the Sourashtrian weavers' community in Kumbakonam. Kannan, the protagonist, rises in life due to his single-minded hard work but is thrown off the tracks by a woman outside his marriage. While the plot has huge potential, it shines more as social commentary than an effective novel which strikes an emotional chord.
It is a short, honest, well-written novel on a weaver of Sourashtran origin in Kumbakonam. I have been curious about the Tamil speaking Sourashtra community. I got a good peek into their lives, struggles of silk weavers in the 1960s through the story of Kannan. It is a good slice of a life portrayal. But I don't understand why it is appreciated as a classic.