தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது. பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது. இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...
Su. Venkatesan (சு. வெங்கடேசன்), also known as S. Venkatesan, is a Tamil writer from Tamil Nadu, India and Tamil Nadu State Committee member of Communist Party of India (Marxist). His debutant novel Kaaval Kottam published in 2008 was awarded the Sahitya Academy Award for Tamil in 2011. The Tamil film 'Aravaan' is based on it. The Sahitya Academy-winning writer is also the president of the Tamil Nadu Progressive Writers Association. His second novel 'Veerayuga Nayagan Velpari' was serialised in Tamil popular magazine Ananda Vikatan. 'Veerayuga Nayagan Velpari' is the second Novel after Ponniyin Selvan to make a big craze between the readers at that time.
அணுவின் அளவு கிடைத்த செய்திகளைக்கொண்டு ஒரு நிகரற்ற மாபெரும் காவியத்தை படைத்துள்ளார் சு. வெங்கடேசன். சர்ச்சைக்கு இடம்தராமல் ஒரு தெளிந்த நீரோடை போல் எழுதியுள்ளார். மதிப்புக்குரிய மணியன் செல்வன் அவர்களின் ஓவியம் இந்த படைப்பை வேறு ஒரு தளத்துக்கு எடுத்து சென்றுள்ளது , சு. வெங்கடேசன் அவர்களின் எழுத்தை ஓவியமாக நாம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் .
பாரியின் கதை, பறம்பு நிலத்தின் கதை. படித்து மகிழுங்கள் .
அறுகநாடிலிருந்து கபிலர் தனது பயணத்தை மாற்றி பாரியின் பறம்பு நாட்டிற்கு நம்மையும் அழைத்து செல்கிறார். வேள்பாரி விகடனில் தொடராக வந்த பொழுதிலிருந்து, புத்தகமாக படிக்கவேண்டும் என்ற உறுதியில் தொடர் கதையை படிக்காமல் காத்திருந்ததன் பயன், புத்தகம் வெளிவந்ததும் முழுமையடைந்து. புத்தகத்தின் கனத்தை கையிலேந்தி, பாரியின் வாழ்க்கையை கற்பனையில் ஏந்த தொடங்கியவுடன் நிச்சயமாக எல்லா வாசகர்களும் சோமப்பூண்டின் பானத்தை அருந்தியது போல, மயக்கத்திலேயே பயணிப்போம்.
வாலியாறு, வேட்டுவன் பாறை, புலிவால் குகை , காட்டாலம் என குறிஞ்சி நிலத்தின் வாசனையை கண்களின் வழியே நுகரவைத்திருக்கிறார் சு.வெ.! பல பேருக்கு குலம் என்பதே முழுமையாக என்னவென்று தெரியாத இந்த காலகட்டத்தில், கொற்றவை கூத்தை கொண்டு எத்தனையோ அழிந்த குலங்களின் கதைகளை எழுத்துக்களின் வழியே, நினைவிற்கு ஏற்றி, கண்களின் வழியே வரலாறுகளை கரையச்செய்திருக்கிறார்.
எந்த பாகத்தை படிக்க தொடங்கினாலும், அதில் ஒரு வரலாறோ, காடுகளை பற்றிய அறிவோ அல்லது குறைந்த பட்சம் காதல் சுவையையாவது பகிர்ந்துகொண்டே தான் வேள்பாரி நகரும். சு.வெ வின் காவல் கோட்டம் படித்திருக்கிறேன், ஆனால் அதே எழுத்தாளரால் தான் வேள்பாரி புனையப்பட்டுள்ளது என்பதை மனம் நம்ப மறுக்கிறது.காவல் கோட்டம், 600 ஆண்டு வரலாறை தாங்கி வருவதால் வேகம் அதிகம், ஆனால் வேள்பாரி மாறுபட்ட வரலாற்று புனைவு. வரலாறுகளை புனையும் பொழுது கல்கியாகவும், காதல் களங்களையும், வார்த்தை களங்களையும் கையாளும்போது வைரமுத்துவை போலவும் பல்வேறு பரிணாமங்களை பெற்றிருக்கிறார் சு.வெ.
மீண்டும் ஒரு சாஹித்யா அகாடமி விருது சு.வெ க்கு கிடைக்கலாம் !
ஒரு புதினம் என்ன செய்துவிட போகிறது என ஒலிப்புதகமாக கேட்க தொடங்கினேன் ஆனால் இதை விட ஒரு சிறந்த புதினம் இருக்குமா என சந்தேகம் வருகிறது. சு. வெ அவர்களின் எழுத்து பிரமிப்பை தருகிறது. சில இடங்களில் அழுகை தந்தது. வாழ்நாள் அனுபவம் வேள்பாரி
வேள்பாரியும் கபிலரும் நம்மோடுதான் பேசுகிறார்கள். • தமிழரின் நாகரிகம், சிந்தனை மரபு, இயற்கை அறிவு, விஞ்ஞானம்,கலை இலக்கிய நுண்திறன், வீரம், காதல், வாழ்வு என பெரும் வரலாறுஒன்றைப் புனைவின் துணையோடு கவிதையின் மொழியில் சித்திரநுட்பத்தில் ஆக்கித் தந்திருக்கிறார் சு.வெங்கடேசன். • We homo Sapiens modified this world from the scratch with so many invention mastering in studies, development in cultures. This development what we called evolution it based on the success & that’s what we consider as history. Like only winners make the history. But fortunately there are people lived in the par end of everywhere in the world who don’t find success in commerce. • I strongly believe this book is proof our ancestor living habits and culture they maintain and reason for the process that we follow on festivals or carnivals. This book contains 60:40 ration fiction, I mean 40 percent of the book contains vast knowledge of truth and habitation of forest were my ancestors was lived. Even though the stories it contain fiction It was perfectly blended with so many meticulous surprising facts. specially the nature selection of plants, animals, astronomy like reading Darwin’s natural selection of species. • To be honest. I really blessed to read books in தமிழ்மொழி as a தமிழன். On Every aspect first part of the book is a masterpiece. 4 things in this book made me to declare this book as a life time favourite 1.வேள்பாரி & கபிலர் conversation and discussion. 2.முருகன் & வள்ளி காதலின் லயம். 3.சு.வெங்கடேசன் the way he leads the first part with his storytelling was legendary. 4. தேக்கன் பறம்பின் குடி ஆசான். பகிரி வேட்டையாடி, பறம்புச் சிறுவர்களை காடறியப் பயிற்றுவிப்பவன். வேளிர்குடிகாக்கும் இணையற்ற பெருவீரன். • வேள்பாரி is a legendary fiction, தேக்கன் will live in your heart forever. As a reader we don’t love books, we live with books. வேள்பாரி is one of the book that I loved & lived in it. • எனது வாழ்வின் மிகச்சிறந்த இந்தக் காலத்தைச் சொல்லால் வார்த்துச் சொல்கிறேன், 'உனது வரலாற்றுப் புதினம் மெய்'. அதை நான் பணிந்து ஏற்கிறேன்.
Book 21 of 2021 புத்தகம் : வேள்பாரி எழுத்தாளர் : சு.வெங்கடேசன் பதிப்பகம் : விகடன் பிரசுரம் பக்கங்கள் : 1408
ஆசிரியர் பற்றி : வெங்கடேசன் அவர்கள் 1970ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். கம்யுனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்டு, 2019ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினரானார் . இவரின் காவல் கோட்டம் நூலிற்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது. இனி நாம் பாரியைப் பற்றி காண்போம் ……..
“என் கருத்தைச் சொல்வதற்கு முன்னால் அவசியம் , அவசியம் , அவசியம் இந்த புத்தகத்தை படியுங்கள் என்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் “
💥என் முதல் நன்றி அறுக நாட்டு மன்னன் செம்பனுக்கு , அவன் அன்று தனது மாளிகையில் பாரியின் பெருமையை கூறாமல் இருந்திருந்தால் , கபிலர் தனித்து பாரியைக் காண புறப்பட்டிருக்க மாட்டார். கபிலரின் வாயிலாக நாமும் பறம்பின் அழகை கண்டிருக்க முடியாது. கபிலரின் வருகையை பெரிய திருவிழாவைப் போல் கொண்டாடினான் பாரி. அவரின் மேல் கொண்ட பற்றால் அன்பால் தன்னிடமே வைத்துக் கொண்டான்.
💥நூலில் வரும் காதல் பக்கத்திற்கும் பஞ்சமில்லை . முருகன் – வள்ளி, பாரி – ஆதினி, நீலன் – மயிலா, மற்றும் உதிரன் – அங்கவை. காதல் கொள்வது என்பது மிக இயல்பான மனித இயல்பு தானே, அதில் என இருந்துவிடுகிறது என்று கேட்கலாம். இல்லை சமவெளி மக்களின் காதலைக் காட்டிலும் பறம்பின் மக்கள் அதிலும் உயர்ந்தவர்களே.
💥மூவேந்தர்களும் எத்தனை யானைகள் , குதிரைகள் கொண்டு வந்தால் என்ன? பாரியை வெல்ல முடியுமா ? பறம்பில் இருக்கும் சிறு புல் முதல் அனைத்து மரம், கொடி , உயிரினம் மற்றும் மக்கள் பாரியின் நிழல் தானே. வெல்வது சாத்தியமில்லை . பெரும் படையோடு போய் , வஞ்சகம் செய்து, நீலனை கவர்ந்து சென்று, பாரியிடம் போர் செய்ததை விட மூவேந்தர்களும் பாரியிடம் வேண்டி நின்றிருந்தால் நாடு என்ன தன் உயிரையும் கொடுத்திருப்பான் எங்கள் பாரி .
💥மூவேந்தர்களையும் வென்று தன் நாட்டை அவன் காப்பாற்றினான் என்றாலும் , அவன் இழந்த உயிர்கள் அவனை துயரத்துற்கு ஆளாக்கின தேக்கன், இரவாதன் மற்றும் கீதானி . அங்கே திசைவேழர், பொற்சுவை .யாரென்று தெரியாமல் தன் மூதாதையர்களையே கொல்ல திட்டமிட்டேனே என பாரி வெரித்து கதறியபோது படிக்கும் வாசகர்களின் கண்கள் குளமாகும் .
இந்தப் புத்தகத்தை பாதி படிக்கும் போதே பாரியின் மேல் காதல் வந்து விட்டது , ஆனால் இறுதியில் அது பற்றாக மாறியது . பறம்பின் ஒரு குடிமகளாக பாரியின் நிழலில் வாழ்ந்திருக்க கூடாதா என்று மனசு ஏங்குகிறது .
அவசியம் படியுங்கள் , நான் சுவாசித்த பறம்பின் காற்றை அனைவரும் சுவாசிக்க வேண்டும் .
அருகனாடியில் இருந்து கபிலர் தன் பயணத்தை மாற்றி பறம்பு மலையிற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்...
கபிலர் வாயிலாக என்னுடைய கேள்விகளை பறம்பு மலையை பற்றி தெரிந்து கொண்டேன்..
கபிலர் கைகளை பிடித்துக்கொண்டு பறம்பு மலையயும், காடுகளையும், சுனைகளையும், இயற்கை வளங்களையும், அருவிகளையும், நதிகளையும் சுற்றி திரிந்த பின்பு தான் அறிந்தேன்... நாம் இயற்கையை விட்டு எவ்வளவு தொலைவில் வந்துவிட்டோம்..
"முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி" என்ற ஒற்றை வரியை மட்டுமே தெரிந்து வைத்திருந்த பாரியை இப்பொழுது அவருடைய வீரம், கருணை, இயற்கையின் புரிதல், வானியலில் அறிவு என அனைத்தையும் தெரிந்து கொண்டேன்..
பாரி மட்டுமில்லாது பறம்பின் ஆசான் தேக்கன், நீலன், பறையர்கள், நாகர்கள், தேக்கர்கள் என பல குலங்களை பற்றி கூறியிருக்கும் அழகிற்கு சு வெங்கடேசன் எவ்வளவு விருதுகள் பெற்றாலும் தகும்...
வரலாற்றுப் புதினங்கள் ஏன் நம்மைக் கட்டிப் போடுகின்றன? வாசிக்க எடுத்தால் மூடி வைக்க விடாமல் நம்மைச் செய்வது எது?
முதலிலிருந்து கடைசி வரை குழப்பமற்ற பாத்திர வார்ப்பு, கதை நடை, வீரமூட்டும் வசனங்கள், சுட்டெரிக்கும் நண்பகலில் சட்டெனக் கவியும் இருள் போலக் காமம் - இவையெல்லாம் தான் இதுவரை நம்மைப் பிரமிக்கச் செய்த விஷயங்கள். ஆனால் வேள்பாரியில் இவை தவிர கூடுதலாக ஒன்று உண்டு. அது இயற்கையைப் பற்றிய புதுப்புதுத் தகவல்கள். மரமும் செடியும் விலங்கும் பறவையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. கதையின் மையக் கதாபாத்திரமாய் இயற்கையே இருக்கிறது. உண்மையின் மை தொட்டு கற்பனை கலந்து எழுதும் படைப்புகள் எப்போதும் தோற்பதில்லை. வேள்பாரியும் அப்படித் தான்.
பேரரசுகளுக்கும் பாரிக்குமிடையில் இருக்கும் பல நுட்பமான வேறுபாடுகள் என்னை பிரமிக்க வைக்கின்றன.
முதலாவது அதிகாரம் - அனைத்தையும் வென்று ஆள நினைக்கும் அதிகாரச் செருக்கு மூவேந்தர்களிடம். ‘உன்னிலும் நான் உயர்ந்தவன்' என்று ஒவ்வொரு இடத்திலும் நிரூபிக்க எத்தனை முயற்சிகள்! ‘பேரரசே' என்ற விளியில் எவ்வளவு போதை நிரம்பிக் கிடக்கிறது! ஆனால் ‘பறம்பின் அரசன்' என்றழைப்பதில் பாரிக்கு உவப்பில்லை. “நான் பறம்பின் தலைவன், அரசனல்ல. இயற்கையை ஒரு போதும் ஆள முடியாது. இயற்கை தான் நம்மை ஆளும்” என்பது எவ்வளவு கணம் பொருந்திய வார்த்தைகள்!
காதல் – குலசேகரப் பாண்டியன் மகன் பொதியவெற்பனுக்கு பெரும் வணிகன் சூழ் கடல் முதுவன் மகள் பொற்சுவையைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அதில் காதல் என்பது துளியுமில்லை. வெறும் அரசியல்/வணிகப் பரிமாற்றங்களுக்கான திருமணம். அவள் ஒரு மலர். அவளை மலரவே விடாத திருமணம் எந்த வகையில் சேர்த்தி? இங்கே பறம்பில் காதல் என்பது கண்ணிமைப்பது போலச் சாதாரண நிகழ்வாக மட்டுமில்லை, ஒவ்வொரு விழாக்களிலும் காதலர்களுக்கு முன்னுரிமை தந்து கொண்டாடப்படும் ஒன்றாக இருக்கிறது. பாரி மகள் அங்கவை அவள் குடியல்லாத, நாகர் குடி உதிரனை நேசிக்கிறாள். அது அறிந்த பாரிக்கு அதில் எந்தவொரு தயக்கமும் இல்லை. அவன் பேரப்பிள்ளையின் கண்களில் நீல வளையம் பூத்து அடங்குவதைப் பார்க்கப் போகும் ஆவலொன்றே அவனுக்கு வருகிறது.
நட்பு – மூவேந்தர்களுக்கும் தங்கள் நட்பு என்பது தனக்கு வசதி செய்து கொள்ளும் ஓர் அமைப்பாகவே வைத்துக் கொள்கிறது. பாரிக்கு அது வாழ்க்கை முறை. அதற்கு முன் கண்டிராத கபிலரைத் தோளில் தூக்கிச் சுமக்கச் செய்கிறது இவனது நட்பு.
துரோகம் – நட்பாய் இருக்கிறவனைக் கூட எந்நேரமும் சந்தேகித்துக் கொண்டேயிருக்கிறது வேந்தர்கள் மனம். பாரியிடம் அடைக்கலம் அடைந்த ஈங்கையன், கொல்லும் அளவுக்குத் துரோகம் செய்த பின்னும் தன் குலத்தைக் காக்கத் தான் இதற்குத் துணிந்தான் என்ற பச்சாதாபம் பாரியிடம் துளிர்க்கிறது.
நாம் இவ்வளவு நாளும் வேந்தர் கதைகளில் படித்த அத்தனையையும் புரட்டிப் போடுகிறான் பாரி. அதற்கு மற்றொரு உதாரணம் ‘யாளி'. கபிலர் ஒரு இடத்தில் கேட்கிறார்:”ஆளி அழிந்து போனது உங்களுக்கு ஆச்சரியமளிக்கும் இல்லையா?” என்று. பாரி சொல்கிறான்:”இல்லை. அழிவை மட்டுமே செய்து கொண்டிருக்கும் ஓர் உயிரினம் வாழ முடியாது. விதையை நடாதவன் கிளைகளை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது”. யாளியைப் பற்றி பிரமித்து, மலைத்து எழுதியவற்றைப் படித்த நமக்கு பாரியின் பதில்கள் சுவாரஸ்யம்.
இப்படி ரசிக்கவும் கற்றுக் கொள்ளவும் எண்ணற்றவைகள் இந்நூலில் இருக்கிறது. படித்துப் பாருங்கள். பாரி உங்கள் மனதையும் ஆள்வான்.
பல்வேறு மூத்த குடிகளைப் பற்றியும் அவை எப்படி காலப்போக்கில் மனிதனோடு ஒட்டிக்கொண்ட பேராசையால் வஞ்சிக்கப்பட்டன என்பதை சூழ்ச்சியின் பிறப்பிடம் சுட்டிக்காட்டி விவரிக்கிறது புத்தகத்தின் பெரும் பகுதி.அனைத்து குடிகலையும் அரவணைக்கும் பாரியின் தாயன்பு மூவேந்தர்களில் இருந்து எப்படி மாறுப்பட்டு வானளாவி நிற்கிறது என்பதை எடுத்துரைக்கிறது.இயற்கை பற்றிய அறிவு எவ்வற்க்கும் பிடிபட வேண்டும் அதைப் புறந்தள்ளி வாழ முடியாது என்பதை நமக்கு வலியுறுத்தி விடைபெறுகின்றன ஆச்சரியப்பட வைக்கும் காட்டை பற்றிய எண்ணிலடங்கா செய்திகளைக் கொண்ட பக்கங்கள்.மறைந்த புதையலை தோண்டி வெளிக்கொணரும் வேலையை செய்ய ஆசிரியர் எவ்வளவு காலம் முனைப்புடன் பணியாற்ற வேண்டியதாயிருந்திருக்கும் என நினைக்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது.வள்ளிமுருகன் காதல் கற்களையும் காதல் கொள்ளச் செய்வதாய் புனையப்பட்டுள்ளது. போர் யுக்திகள், தாக்குதல்களை எண்ண ஓட்டதில் பொருத்தி பார்த்தால் Apocalypto போன்ற படங்களின் காட்சியமைப்புகளை வெகு சுலபமாக பின்னுக்குத் தள்ளி பக்கங்கள் முன்னேறுகின்றன.ஒரு எழுத்தாளனுடைய சாதனை வாசிப்பவனது கற்பனைத்திறனை தூண்டி அது வழியே அவனைப் பயணிக்கச் செய்வது தான்.அதில் பெருவெற்றி பெறுகிறார் திரு.சு.வெங்கடேசன்.பருக பருக திகட்டாமலும் கிளிர்ச்சியடையச் செய்யும் சோமபூண்டைப் போலத்தான் நகர்கிறது ஒவ்வொரு பக்கமும்.
சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி என்ற புத்தகத்தை இரு வருடத்திற்கு முன்பு பாரதி பாஸ்கர் அவர்களுடைய உரை ஒன்றில் தெரிந்து கொண்டேன்.
அதன் பிறகு இரண்டு Book Fairல் பார்த்தும் வாங்கவில்லை.இந்த Lockdownல் தான் audiobook formatல் கேட்க தொடங்கினேன��.
'முல்லைக்கு தேர் ஈந்தான் பாரி' என்பதை தவிர எனக்கு பாரி பற்றி வேறேதும் தெரியாது.
முதலில்,நேரத்தை கழிக்கத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆரம்பத்திலிருந்தே காம இச்சையை காதலாக மிகைப்படுத்தி இருப்பதாக தோன்றியது. அதனாலே பெரிதாக பிடிப்பு இல்லை. இருந்தும் நான் தொடர, எனக்கு உந்துசக்தியாக அமைந்தது காட்டை பற்றிய அவர்களது அறிவு.
இயற்கை தாயே அரண் அமைத்து கொடுத்த பச்சைமலை தொடர்களில் வாழ்ந்து வந்த பதினான்கு வேளிர் குடிகள் உட்பட, குரல்வளை நசுக்கப்பட்ட பல குடிகளின் தலைவன் தான் வீரயுக நாயகன் வேள்பாரி.
மாட மாளிகைகளையும், அழகிய மாடங்களையுடைய நகரங்கள் தான் பிற நாவல்களின் கதை களம். அதனின்று முற்றிலும் வேறுப்பட்டு மலையை கதைக்களமாக கொண்டுள்ளது வேள்பாரி.
பெரும்பாலான நாவல்கள்,கதைகள் மற்றும் திரைப்படங்கள் கதாநாயகனை சுற்றியே வடிவமைக்க பட்டிருக்கும். கதாநாயகன் என்றாலே அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கும்.கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் கதாநாயகன் எப்பொழுதுமே வலிமை வாய்ந்தவனாக சித்தரிக்கப்பட்டருப்பான்.(ஒரே கையில் இரயிலை நிறுத்தும் வலிமை அவர்களுக்கு இருக்கும் 😉) மிகைப்படுத்தப்பட்ட Heroism தான் பெரும்பாலும் காட்டப்படுவது.
வேள்பாரியில் அதெல்லாம் இல்லை. வேள்பாரிக்கு என ஒருசில தனித்திறமைகள் இருக்கும். அதே போல அங்குள்ள அனைத்து வீரனுக்கும் ஒவ்வொரு தனித்தன்மைகள் இருக்கும். அதை கையாள தெரிந்து பரம்பை வழிநடத்தும் தலைவனே வேள்பாரி.
பொன்னியின் செல்வனில், குந்தவையை கல்கி ஒரு பக்கத்திற்கு வர்ணித்திருப்பார்..அவர் வர்ணிப்பதை தனி தனியாக காட்சிப்படுத்தினால் முதல்வன் படத்தில் அர்ஜுன் அவர் காதலியை வர்ணிக்கும்போது அதை அவர் தந்தை வரையும் கார்ட்டூன் போலத்தான் இருக்கும்.
சு.வெங்கடேசன் அவர்கள் எதையுமே மிகைப்படுத்தி கூறிவிடவில்லை. அலங்கார வார்த்தைகளும் இல்லை.
பாரியை விட வலிமை வாய்ந்த மூவேந்தர்கள், அவனுடைய செல்வத்திற்காகவும் அவனுடைய புகழுக்காகவும் பரம்பை முற்றுகையிடும் போதும் அசராமல் இருக்கும் அவனுடைய துணிவு, பாரி வீழப்போகிறானோ என ஐயமுற செய்யும்.
அடுத்த நிமிடம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். மூவேந்தர்களுடைய தாக்குதல் திறனும், யுக்திகளும் இதயத்துடிப்பை கேட்க செய்யும் மறுநொடியில் எதிரிகளுடைய பலத்தையே அவர்களை அழிக்கும் ஆயுதமாய் பயன்படுத்தி ஓட வைப்பான் பாரி. அவன் Hero அப்படித்தான் காட்சிப்படுத்த பட்டிருப்பான் என்று நினைத்தால் அதுதான் இல்லை. பாரி ஒரு பக்கம் தாக்க மறுபக்கம் பரம்பின் வீரர்களும் இதே யுக்தியை கையாண்டு எதிரிகளை வீழ்த்துவர்.
ஓர் சிறந்த தலைவன் அவனுக்கு கீழுளுள்ள அனைவரையும் தலைவனாக பார்ப்பான். ஆங்கிலத்தில்,Decision making power என்போம்.தான் இல்லாத போதும் தனது மக்கள் சரியான திசையை தேர்ந்தெடுத்து செல்லும் திறனை ஏற்படுத்துபவனையே தலைவன் என்கிறோம். தன்னிகரற்ற தலைவன் தான் வேள்பாரி.
சமவெளியில் போரிட்டு பழக்கபடாத தனது சின்னஞ்சிறு படையை, பன்மடங்கு பலம் வாய்ந்த மூவேந்தர்களின் படையை எதிர்த்து சமவெளியில் இறக்கி,எண்ணிக்கையால் மட்டுமே வலிமையான படையாகி விடமுடியாது என்பதை போர்க்களம் புகாமலே நிகழ்த்தி காட்டுவான் வேள்பாரி.
போருக்கு வகுக்கப்படும் வீயூகங்களும் அதை வீழ்த்த கையாளப்படும் யுக்திகளும் அபாரம்.
சாதாரணமாக கதாநாயகன் உட்பட இரண்டு அல்லது மூன்று கதாப்பாத்திரங்கள் தான் மனதில் பதியும். வேள்பாரியில் ஒவ்வொரு வீரனும் தன் திறமையால் அதை வீழ்த்தி உட்புகுவான்.
மகாபாரதத்தில் அபிமன்யுவை கொல்வதை போன்றே இதிலும் மனதை உறைய வைக்கும் கொலைகள் இருக்கும்.
காட்டை பற்றி, அதன் விலங்கினங்களை பற்றிய பெரிய தகவல் களஞ்சியத்தை பாரியின் வீரத்தோடும் பரம்பு மக்களின் வாழ்க்கையோடும் தூவி அலங்கரித்திருக்கிறார் சு.வெங்கடேசன்.
நான் மிக வியந்து கேட்ட ஓர் விலங்கினம் 'தோகை நாய்'.(அதைப்பற்றி தெரிந்தவர்கள் தயவுசெய்து உள்டப்பிக்கு வரவும்). கூகுளிடம் கேட்டப்போது அது அகநானூறுக்குள் நுழைந்தது.
இந்த புதினம் சங்க இலக்கியங்களில் இருந்து எடுத்து தொகுத்ததோ, அல்லது முற்றிலும் கற்பனையானதாக எழுதப்பட்டதோ, எப்படி இருந்தாலும் பாரட்டுதற்குறியது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஒரு வேளை இதற்கு முன் யாரேனும், வாசிப்பில் இன்பம் இருக்கிறதா, மொழியில் சுவை இருக்கிறதா என என்னிடம் கேட்டிருந்தால் பதிலாக என்னவெல்லாம் சொல்லியிருப்பேன் எனக்குத் தெரியாது ஆனால் இப்போது சொல்வதற்குக் கைவசம் ஒரு பதில் இருக்கிறது - அது வேள்பாரியை வாசித்துப் பாருங்கள்.
எப்படி இவ்வளவு சுவைப்பட எழுதிட முடியும், வார்த்தைகளால் இன்பத்தில் ஆழ்த்திட முடியும், எப்படி காட்சியாய் விரிந்து நிற்கும் தருணங்களைச் சொற்களாய் உருகொள்ள வைக்க முடியும். வரிகளில் திளைத்து, உருகி, கரைந்து, தொலைந்திட வைத்து விட்டது வேள்பாரி.
எம்மொழி மீது - எனக்கான காதலை பெருங்காதலாக மாற்றி பித்தனைப் போல அலைந்து திரிய வைத்து விட்டது வேள் பாரி. தீரவில்லை, திகட்டவில்லை என் மொழி மீது எனக்கான காதல், போதவில்லை, நீங்கவில்லை அது கொடுத்த கிரக்கமும், மயக்கமும்.
ஒருவேளை வரிகளையெல்லாம் அள்ளி செங்குருதியாய் உடலெல்லாம் பூச முடிந்து இருந்தாலோ, சோமபானம் மாதிரி அள்ளிப் பருகிட முடிந்து இருந்தாலோ அதையும் கூடச் செய்திருப்பேனோ என்னமோ, செய்யத்தான் முடியவில்லை.
கபிலரின் கைப்பிடித்து சங்கத்தில் நுழைந்து, நீலனின் தனைமயக்கும் கதைகளில் எனை மறந்து, பாரியின் தோல் ஏறி பறம்பின் பெரும் வனப்பைக் கண்டு, திகட்டா காதலில் திளைத்து, கொற்றவைக் கூத்து கண்டு, காடறியப் புறப்பட்டு, குடித்து, களித்து, ஆடிப்பாடி, பேருணவு உண்டு, செருக்களம் புகுந்து போர் புரிந்து, செங்குருதி சிந்தி, நான் வாழ்ந்த இப்பெருவாழ்வை எப்படி வெறும் வார்த்தைகளில் மட்டும் கடத்திட முடியும்.
எதைச் சொல்வது - யார் இந்த வேள்பாரி-னு அகந்தையின் துணை கொண்டு பறம்பு ஏறிய நானும், கபிலனும் - பாரியின் அன்பாலும், கருணையாலும் சிறுகுருவி போல அவன் கைகளுக்குள் தஞ்சம் அடைந்த தருணத்தைச் சொல்லவா, சொல் மீது ஏறி நின்று சொல்லாட்சி புரியும் பெரும்புலவர் பறம்பு தொட்ட கணம் முதல் சொற்கள் இன்றி தவித்த தவிப்பைச் சொல்லவா, விடைகளால் விருந்து அளிக்கும் பெருங்கவி கேள்விகளாய் கேட்டு நிற்கும் ஆச்சரியத்தை சொல்லவா?
குலை நடுங்கச் செய்யும் கொற்றவை கூத்தைச் சொல்லவா, கொற்றவையின் குழந்தையான தெய்வவாக்கு விலங்கைப் பற்றிச் சொல்லவா, காடரதிர செய்யும் அணங்குகளின் வெறி ஆட்டத்தைச் சொல்லவா, குலநாகினியின் வாக்கைச் சொல்லவா, சிந்தப்பட்ட குருதியின் நெடியைத் தலைமுறை கடந்து நினைவுகளில் தேக்கும் குலக்கதைகளை சொல்லவா, திரையர்களின் தினவைச் சொல்லவா, நெருப்போடு கூடி நிற்கும் குலத்தைச் சொல்லவா, நீரோடு காதல் கொள்ளும் குலத்தைச் சொல்லவா, எச்சில் ஊற்றெடுக்கும் நாவலின் சுவையைச் சொல்லவா, வாய் இனிக்கும் வெற்றிலையின் கதையைச் சொல்லவா, மனம் கசக்கும் கரும்பின் கதையைச் சொல்லவா?
காதலின் நிலமான குறிஞ்சியின�� பேரழகைச் சொல்லவா, காதலையும், காலத்தையும், இயற்கையையும் வைத்து வள்ளியுடன் முருகன் நடத்திய விளையாட்டைச் சொல்லவா, அவன் சொல் கேட்டு அவள் கரைவதும், அவள் சொல் கேட்டு அவன் உருகுவதும், காதலில் திளைப்பதுமான கதைகளைச் சொல்லவா, மனிதர்கள் காதல் கொண்டு கிடக்கையில் இயற்கையும் அதோடு சேர்ந்து தன் பங்கிற்கு நிகழ்த்தும் கிளர்ச்சியைச் சொல்லவா, யவனத்தின் வசீகரத்தைச் சொல்லவா, வைப்பூறை முத்��மிட்டுச் செல்லும் கடல் அலையின் அழகைச் சொல்லவா, சோமபானத்தின் மயக்கத்தைச் சொல்லவா இல்லை அதனையும் மிஞ்சிய பாரி, ஆதினியின் காதல் கிரக்கத்தைச் சொல்லவா, முல்லைக்குத் தேர் கொடுத்த கதையைச் சொல்லவா அதன் சான்றாய் நிற்கும் பாரியும், ஆதினியும் காதல் இன்பத்தில் மகிழ்ந்த கதையைச் சொல்லவா?
One of the best books i have ever read. Authors style of narration and the story plot is amazing. Definitely heavy home work is required to create such story plot and the knowledge of the tribals and their life style is fantastic. If you read the book once you will love to live in PARAMBU. Your perception about the Kings and kingdom may tumble.
மற்றும் ஒரு விருது பெறுவார் என நம்புகிறேன்... எளிமையான மொழி நடையில் மனதை வருடிய வரிகளோடு வடித்திருக்கிறார்.....இயற்கையின் வர்ணிப்பும்....காதல் மீது அவர் கொண்ட காதலும்... தெளிவான வீரமும் நிறைந்து இருக்கிறது வேள்பாரி 1
Oh, this is a must read! I have read only few Tamil novels: 2 novels of Kalki and 1 novel from Sandilyan.
I like Kalki's (Ponniyin Selvan, Sivagamiyin Sabadham) story telling. When reading his novels, I felt like I'm sitting on his flying carpet entering his fictional world with him as a tour guide.
With Su Venkatesan, I was living with his characters, in their villages, having their food n wine together, listening to their stories and songs. To me, it answered an important question - how did we lose all the knowledge of our ancestors. Highly recommended!
ஆதினி (பாரியின் மனைவி) அங்கவை மற்றும் சங்கவை (மக்கள்) மயிலா,
#வேந்தர் படை: குலசேகர பாண்டியன், பொதிய வெற்பன் ((பாண்டிய பேரரசன் மற்றும் இளவரசன்)) சோழ வேழன் மற்றும் செங்கன சோழன் ((சோழ அரசன் மற்றும் இளவரசன்) உதியஞ்சேரல் ((சேரன்)) மையூர் கிழார்,கருங்கைவாணன், திசைவேழார், மற்றும் அந்துவன்
பொற்சுவை ((பாண்டிய இளவரசி) சுகமதி ((அவள் தோழி))
#கதைக்களம்: பறம்பு மலை பகுதிகளான எவ்வியூர், ஆதிமலை, காரமலை, நாககரட்டு,இரலிமேடு. மற்றும் குளவன்திட்டு
பாண்டியரின் மதுரை,வைப்பூர் துறைமுகம்.மற்றும் வெங்கல் நாடு
போர்க்களம் :தட்டியங்காடு,மூஞ்சல்
#வகைப்பாடு :வரலாற்று புதினம்
#பக்கங்கள்: முதல் தொகுதி 608 பக்கங்கள் இரண்டாந்தொகுதி:800 பக்கங்கள்.
++++++++
பறம்பு மலையையும் அதன் பதினான்கு குடிகளையும், அதிலுள்ள இயற்கை வளங்களையும் நேசித்தும், சுவாசித்தும் பாதுகாத்துக்கொண்டிருந்தவன் குறுநிலமான்னன் பாரி. அவன் வேளிர் குலத்தலைவனாகையால் வேள்பாரி என்று அழைக்கப்பட்டான்.அவன் சங்க காலத்தில் வாழ்ந்தவன். சங்ககால வள்ளல்கள் மற்றெவரையும் விட சிறந்த வள்ளல் தன்மை கொண்டவன் பாரி என சங்ககால புலவர்களால் பாடி போற்றப்பட்டவன் அவன்.
************
மூவேந்தர்களான குலசேகர பாண்டியன், உதியஞ்சேரல் மற்றும் செங்கன சோழன் ஆகியோர் பாரியின் புகழ் கண்டு பொறாமை அடைந்தவர்களாக இருப்பதுமன்றி பறம்பின் இயற்கை வளங்களை எப்படியேனும் கவர்ந்து கொள்ளவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.
பறம்பின் தேவவாக்கு சொல்லும் விலங்கு, ஒரு வகை பூண்டிலிருந்து தயாரிக்கப்படும் சோமபானம், மீனை மயக்கமடையச்செய்து மீன் பிடிக்க ஏதுவாக்கும் ஒரு வித விதை, ஆட்கொல்லி மரங்கள், பசியையே தூண்டாமல்ஆற்றலைத்தரும் கிழங்கு வகைகள், இத்தனைக்கும் மேலாக பறம்பு மலையில் "பாழி" என்ற இடத்தில் தரையில் புதைத்து வைக்கப்பட்டு காலங்காலமாக வேளிர்குல தலைவர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் வைடூர்ய மணிகள் ஆகியன மூவேந்தர்களுக்கு வாணிபத்திற்காகவும், தங்கள் அரசின் கருவூலத்தை பெருக்கிக்கொள்ளவும் ஏதாவது ஒரு வகையில் தேவைப்படுகிறது.
வேள்பாரி இத்தகைய இயற்கை வளங்களை நேசிப்பவன், உயிர் மூச்சாய் சுவாசிப்பவன். "இயற்கை அள்ளி கொடுக்கிறது, நாங்கள் அதை ரசித்தும் உணர்ந்தும் வாழ்கிறோம். அந்த இயற்கையை விற்கவும், வாங்கவும் நீங்கள் யார்?" என மூவேந்தர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது மட்டுமல்லாமல், தன்னிடம் வணிகம் பேச வந்த சேர நாட்டு அமைச்சன் கோளூர் சாத்தனின் கைகளை தன் தளபதியை கொண்டே வெட்டி அனுப்புகிறான்.
பறம்பின் குழந்தைகளைப்போலவும், தெய்வங்களை போலனவும் குறவை கூத்தில் தெய்வ வாக்கு சொல்லும், தெய்வ வாக்கு விலங்குகளை ((தேவாங்கு)) பாண்டியன் வேளிர் குடிகளில் ஒன்றான திரையர்களை வைத்து கடத்தி ம��ுரைக்கு கொண்டு செல்லும்போதும், வேளிர் குடி மக்களை அடிமைகளாய் யவனர்களுக்கு பாண்டியன் விற்க முயன்ற போதும்,பறம்பின் வீரர்களை கொண்டே, பாண்டியர்களின் முக்கியத்துறைமுகமான வைப்பூர் துறைமுகத்தையும்,,அதில் நின்று கொண்டிருந்த யவன, பாண்டிய நாவாய்களை கொளுத்தி, நகரையே எரிக்கிறான்.
இதனால் கடும் கோபங்கொண்ட சேர, சோழர்கள் பறம்பு மலையின் வட, தென் திசையிலும், பாண்டியன் பறம்பின் கீழ் திசையிலும் தனித்தனியாக படையெடுக்கிறார்கள். சோழனின் யானைப்படை பறம்பின் வீரர்களால் வட்டாற்றில் முழுவதுமாக அழிக்கப்படுகிறது. செங்கனச்சோழன் உயிர் தப்பி ஓடும் நிலை ஏற்படுகிறது.
பறம்பின் இன்னொரு பக்கம் தோகை நாய்கள் என்னும் வெறி பிடித்த காட்டு நாய்களோடு களமிறங்கிய சேரனின் தோகைநாய்கள் மட்டுமல்ல,படைகளும் பெரும் அழிவை சந்திக்கின்றன. சேரர் படைத்தளபதி எஃகலாடன் பறம்பின் வீரர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுகிறான்.
மூவேந்தர்களான சேர,சோழ, பாண்டியர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். வேள்பாரி மீது தனித்தனியே படை நடத்தி தோல்வியடைவதைவிட, மூவேந்தர்கள் மூவரும் ஒன்றாக களமிறங்கி பாரியை எதிர்கொள்வது என முடிவெடுக்கிறார்கள். மேலும் பாரியை பறம்பு மலையிலிருந்து சமவெளிப்பகுதிக்கு வரச்செய்து, அவனது படைகளை முறியடித்து பறம்பு மலையை வெற்றி கொள்வது எனவும் முடிவெடுக்கிறார்கள்.
இதற்காக மூவேந்தர்கள் படைகள் தரைப்படை, தேர்ப்படை,குதிரைப்படை, வாள்படை அனைத்தும் ஒன்றிணைகிறது. அனைவரும் இணைந்த சுமார் நான்கரை இலட்சம் போர்வீர்களுக்கு பாண்டிய தளபதி கருங்கைவாணன் சேனாதிபதியாகிறான். போர் நடக்கும் இடமாக பாண்டிய நாட்டுக்கு கட்டுப்பட்ட சிற்றசை ஆளும் மையூர் கிழார் என்பவரின் பகுதியான வெங்கல்நாட்டை சேர்ந்ததும் காரமலையை ஒட்டியுள்ள, செம்மண்ணும், ஈக்கி மண்ணும் நிறைந்ததும், காவி நிற ஓணான் ஒன்று மட்டும் உயிர்வாழும் கொடும் கட்டாந்தரை பகுதியான தட்டியங்காடு எனும் பகுதி தேரிவு செய்யப்படுகிறது.
மூவேந்தர்கள் தட்டியங்காட்டிலிருந்து பல காத தூரத்தில் தனித்தனியாக தங்கள் கூடாரங்களையும், பாசறைகளையும் அமைத்துக்கொள்கிறார்கள். மன்னர்கள் கூடாரம் நிறைந்த பகுதி அரண்போல் காக்கப்படுகிறது. இதற்கு மூஞ்சல் என்று பெயரிடப்படுகிறது.
பாரிவேளையும் அவன் சிறுபடைகளையும் பறம்பு மலையிலிருந்து, சமதளத்தில் போர்புரிய வைப்பதற்காக, இரவோடு இரவாக பாரியின் தளபதிகளில் ஒருவனும், மாவீரனுமான "நீலன்" என்பவனை பறம்புமலை பகுதியான நாககரட்டு என்ற இடத்திலிருந்து, படுகாயப்படுத்தி, மூவேந்தர்களின் பாதுகாப்பு அரணான மூஞ்சலில், ஒரு கூடாரத்தில் சிறை வைக்கிறான் கருங்கைவாணன்.
கடல் போல் விரிந்த,,அனுபவமும, போர்த்தந்திரங்களும் நிறைந்த மூவேந்தர் படை ஒரு புறம்; மிகவும் சிறிய, முறையான போர் விதிகளின்படி போர் செய்யத்தெரியாத, பாரிவேளின் பறம்பு வீரர்கள் ஒரு பக்கம்; மூவேந்தர்களின் மூஞ்சலில் சிறைப்பட்டு கிடக்கும் தன் மாவீரன் நீலனை மீட்டெடுக்கவேண்டிய கட்டாயம் ஒரு பக்கம். "இரண்டிலொன்று பார்த்துவிடுவது" என களமிறங்குகிறார்கள் இரு பக்க வீரர்களும்.
நடந்தது ஆறே நாள் போர்தான். பாரிவேள் கடைசியில்தான் களமிறங்குகிறான். மற்ற நாட்களில் குளவன்திட்டு என்ற இடத்திலிருந்து படையெடுப்பை பார்வையிட்டு, கூவல்குடி என்ற என்ற ஆதிக்குடியினர் உதவியோடு பறம்பின் வீரர்களுக்கு கூவல்ஓசை மூலம் அறிவிப்புக்களை மட்டுமே செய்கிறான் பாரிவேள். மூவேந்தர் படை சின்னாபின்னமாகிறது. தட்டியங்காடு எங்கும் குருதி ஆறாய் ஓடுகிறது.
போரில் மூவேந்தர்கள் தரப்பில் சேனாதிபதி கருங்கைவாணன், வெங்கல்நாட்டு சிற்றரசர் மையூர்கிழார், பாண்டிய இளவரசன் பொதியவெற்பன், செங்கனசோழன் ஆகியோர் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். இலட்சக்கணக்கில் இருந்த வீரர்கள் எண்ணிக்கை வெறும் ஆயிரத்திற்குள்ளாக குறைந்து தேய்கிறது.குலசேகரபாண்டியனும், உதியஞ்சேரலும் உயிர் பிழைத்தால் போதும் என களத்தைவிட்டு தப்பியோடுகின்றனர்.
பறம்பு வீரர்கள் தரப்பில் ஆசான் தேக்கன், இரவாதன், வேட்டூர் பழையன், ஆகிய சில உயிரிழப்புக்கள் இருப்பினும், பறம்பு வீரர்கள் அடித்த அடியில் நீலன் வெற்றிகரமாக மீட்கப்பட்டதுடன்,,பறம்பு மலையின் இயற்கை வளங்களும், செல்வங்களும் காக்கப்படுகின்றன. மூவேந்தர்கள் சந்தித்த பெரும் தோல்வியால், இன்னும் பல ஆண்டுகள்-நூற்றாண்டுகள் பறம்பு மலை வேளிர் பற்றி கனவில் கூட எண்ணமுடியாத நிலை ஏற்படுகிறது. பாரிவேள் வெற்றிவீரனாக தன் மக்களோடு குறவை கூத்தாடுகிறான்.
பாரியின் புகழைப்பற்றி கேள்விப்பட்டு அவனைக்காணவும்,,சிலநாட்கள் அவனோடு தங்கி இருக்கவும் வேண்டி பறம்புமலைக்கு வருகிறார் பெரும்புலவரான கபிலர். வந்தது முதல் பறம்பு மலையின் இயற்கை அழகில் உள்ளம் கொள்ளையிடப்பட்டவராகவும், பாரியின் மகள்களான அங்கவை,,சங்கவை ஆகியோருக்கு எழுத்தறிவிக்கும் ஆசானாகவும், கொற்றவை கூத்தின் பெருமைகளை பார்த்தறிபவராகவும், நடைபெற்ற தட்டியங்காட்டு போரில் பறம்பின் பக்கம் நின்ற ஒரு பார்வையாளராகவும் இருக்கிறார் பெரும்புலவர் கபிலர்.
##இப்புதினத்தை படிக்கும்போதே பிரமித்து போன புதினத்தின் சில பகுதிகள்.
*எத்துணை உயிரினங்கள் : தேவவாக்கு விலங்கு ((தேவாங்கு) ), சக்கரவாகப்பறவை, காக்காவிரிச்சி ((ஒரு வகை வெளவால்)) அறுபதாங்கோழி,செம்மண்ணுளி , எரிவிரியன், ஊதுசுருட்டை,நண்டுதின்னி,கொடிமூக்கன்(( பாம்பு வகைகள்)) பேரெலி,சுண்டாப்பூனை,ஈயல் எறும்பு,அழுகுரற் பறவை.
பிரமிக்க வைக்கிறது ஆசிரியரின் தேடல். இந்த பெயர் அறியா செடிகொடிகள், விலங்குகள் ஆகியவற்றை நமக்கு கடத்தியதோடு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த பறம்புமலை காடுகளுக்குள்ளே நம்மை பயணப்பட வைத்திருக்கிறார் ஆசிரியர்.
** தெய்வ வாக்கு விலங்குகள் வேளிர் குலத்தின் குல அடையாளம். ஆனால் அவை பாண்டியனுக்கோ வணிக நாவாய்கள் திசைமாறாமல் பயணப்பட உதவும் திசைகாட்டிகள். இந்த விலங்குகள் இருந்தால் இவற்றின் உதவியோடு சரியான திசை அறிந்து பாண்டிய நாவாய்கள் கடலாடி, வணிகத்தை பெருக்க முடியும். அதன் மூலம் யவனருக்கே சவால் விடும் வகையில் பாண்டியத்தின் கடல் வணிகம் அமையும்.
எனவே இவ்விலங்குகளை பாரிவேள் அறியாமல். , அங்குள்ள "திரையர்கள்" என்னும் இன்னோர் குடிமக்களுடன் உடன்படிக்கை செய்துகொண்டு, பாண்டிய நாட்டுக்கு கொண்டுவர முயல்கிறார் குலசேகரபாண்டியன். அப்படி திரையர்கள் சுமார் இருபது விலங்குகளை தூக்கி ஓடும்போது, பறம்பின் ஆசான் தேக்கன், 'காடு அறியும்" பயிற்சி பெற தன்னுடன் வந்த மாணாக்கர்களோடு பார்த்துவிடுகிறான். அதன் பின்னர் விலங்குகளை தூக்கி செல்பவர்களை துறத்தி ஓடுகிறார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம். அந்த ஓட்டத்தை படித்துக்கொண்டிருக்கும் நமக்கு வியர்க்கிறது, மூச்சுவாங்குகிறது. புதினத்தின் மிகச்சிறந்த பகுதி இதுதான்.
***"முருகன்-முருகப்பெருமான்" என்றாலே, நாம் அறிந்தது, அவர் சிவ-பார்வதியி��் இளைய ���கன், விநாயகர் அவர் அண்ணன். மயில் அவரது வாகனம். வேலாயுதன் என்று பக்தர்களால் கொண்டாடப்படுபவர் என்பதுதான்.
இந்த புதினத்தில் முருகனின் இந்த தெய்வீக தோற்றங்களை முற்றிலுமாக உடைத்து, அவரை வேளிர் குலத் தோன்றலாக, வீரன் "முருகு"வாக நமக்கெல்லாம் அறிமுகம் செய்துள்ளது முற்றிலும் புதிய ஒன்றாகும். பாரிவேள், பெரும்புலவர் கபிலருக்கு சொல்லிக்கொண்டு வரும் "முருகன்-வள்ளி" காதல் கதைகள் ஒன்றொன்றும், அற்புதம். அதே போல் "வள்ளி"என்ற பெயர் ஏன் வந்தது? அவளது தாயார் சக்கரைவள்ளிக்கிழங்கு பயிரிடும்போது வலியெடுத்து பிறந்ததால் "வள்ளி" என்று பெயரிடப்பட்டாள், என்று ஆசிரியர் தெரிவிக்கும் தகவல் மிகவும் ருசிகரமானதும், புதியதும் ஆகும்.
**** பறம்பு நாட்டின் புகழ் பெற்ற "குறவை கூத்தை" கபிலர் பார்க்கும்போதே, புதினத்தை படிக்கும் நமக்கு பறமபில் உள்ள அத்தனை ஆதிகுடிகளும், ம���வேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஏதோ ஒரு வகையில். பாதிக்கப்பட்டவர்கள்தான் என்பதை அக்குடிகள் பாடலாக பாடும் கதைகள் வாயிலாக நமக்கு தெரிவித்துவிடுகிறார் ஆசிரியர். அதற்கேற்றார்போல் கூடல் நகரின் அகுதையின் கதை, செம்பா தேவி கதை,நாகர் குடிகள் கதை ஆகியவை சோகம் பொதிந்த கதைகளாய் நமக்கு சொல்லப்படுகின்றன.
*****புதினத்தின் இரண்டாம் தொகுதி முழுவதும் மூவேந்தர்கள் -பாரிவேளின் பறம்பநாட்டு வீரர்களுக்கிடையேயான போர் பற்றியதாகும். போரில் பறம்பு வீரர்களின் இயற்கையை முன்னிருத்தி செய்யும் போர் உத்திகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. பறம்பின் ஒரு விளிம்பில் வரும் சோழனின் யானைப்படையை, யானைகள் தாகத்தினால் நீர் பருக வரும் வட்டாற்று ஓடையில் குருதி குடிக்கும் அட்டைகளை பறம்பு வீரர்கள் போட்டு, அதை யானைகள் பருக, யானைகளின் துதிக்கைகளுக்குள் அட்டைகள் சென்று குருதியை உறிஞ்ச, யானைகளுக்கு மதம்பிடித்து அவைகளே சோழர்படையை அதகளம் செய்வது இதற்கு எடுத்துக்காட்டு.
****** "முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி" என்று நாம் இன்று வரை அறிந்த ஒரு புகழ்பெற்ற நிகழ்வுதனை, இயற்கையோடு காதலும் சேரும் வகையில் படைத்துள்ளார் ஆசிரியர்.
திருமணமான புதிதில் தன் மனைவி ஆதினியை, பகலிலே கதிரவன் ஒளியை வாங்கி இரவிலே அதை உமிழ்ந்து, எண்ணிலடங்கா விளக்குப்போல் தோற்றமளிக்கும் "இராவெரி மரத்தை" காண அழைத்துச்செல்கிறான் பாரி. மலையில் சரிவுப்பாறைகள் கொண்ட இடத்திற்கு அழைத்துச்செல்லும்போது தேரை சமவெளியில் நிறுத்தி செல்கிறான் பாரி. மேகக்கூட்டங்கள் இரு மலைகளுக்கிடையில் இறங்கி விட்டதாலும், பெரும் மழை ஆரம்பித்துவிட்டதாலும் அந்த மரத்தை காணமுடியாமல், சரிவில் உள்ள மலைக்குகையில் அன்றைய இரவை கழிக்கின்றனர். காலையில் வந்து தேரை காணும்போது, தேரின் சக்கரத்தில் முல்லைக்கொடி பற்றியிருப்பதை காண்கிறாள் ஆதினி.வேள்பாரிதான் இயற்கையயை வணங்கி நேசிப்பவனாயிற்றே. முல்லைக்கொடி தொடர்ந்து படர ஏதுவாக தேரை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தன் மனைவியோடு நடந்து தன் இருப்பிடத்தை அடைகிறான் வேள்பாரி.
***இந்த புதினத்தின் மற்றுமோர் கூடுதல் சிறப்பு, மணியம் செல்வம் அவர்களின் வண்ணமயமான மணி மணியான ஓவியங்கள்.நாம் படித்து ரசிப்பதோடு, அழகான ஓவியங்களின் மூலமாகவும் புதினத்திற்கு கூடுதல் சுவை கூட்டுகிறார் மணியம் .
என்னுரை:
"இயற்கை வளங்கள் போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டிய அருஞ்செல்வங்களாகும். அதை அழிக்க எவரேனும் முற்பட்டால், வேள்பாரி போன்ற வீரர்கள் எக்காலமும் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்" என்பது புதின ஆசிரியர், மூவேந்தர்கள் மூலமாக இன்றைய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகும்.
பிற்கால சோழர்கள், பாண்டியர்கள் பற்றிய வரலாற்றுக்குறிப்புகளான கல்வெட்டுக்கள்,பட்டயங்கள் போன்றயவே அரிதினும் அரிதாகிவிட்ட நிலையில், 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வேளிர்குல தலைவனை பற்றிய வரலாற்றை, உண்மைத்தன்மை குறையாமலும், விறுவிறுப்போடும் படைத்திருப்பது மிகவும் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரிய படைப்பாகும்.
இயற்கையை நேசிப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்..பொன்னியின் செல்வனின் விறுவிறுபிற்கு நிகரானது.. முல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் பற்றி மேலும் அறிய படியுங்கள் வீர யுக நாயகன் வேள்பாரி
✨பொன்னியின் செல்வனையும், உடையார்யையும் போல சமகாலத்தில் ஒரு நாவல் உள்ளது என்றால் அது வேல்பாரி தான்.
✨நீண்ட நாட்களாக நான் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட புத்தகம் இது.படித்து முடித்ததும் ஏன் இவ்வளவு நாட்களாக இந்த புத்தகத்தை வாசிக்காமல் இருந்தேன் என்று என்னை நானே நொந்து கொண்டேன்.ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திய படைப்பு.
✨மூவேந்தர்களும் பல குறுநில மன்னர்களும் ஆட்சி செய்த தமிழகத்தில், மூவேந்தர்களால் அழித்தொழிக்கப்பட்ட குலங்களுக்காக தன்னையே அர்பணித்தவன் வேள்பாரி.
✨தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும் ,பரந்து விரிந்த அன்பினாலும் பாரியின் புகழ் தமிழகமெங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர,சோழ, பாண்டியர்கள் பாரியின் புகழ் கண்டு பொறாமை உற்றனர்.பறம்பு மலையின் இயற்கை வளமும், நிலவளமும் மூவேந்தர்கள் கண்ணை உறுத்தியது.பாரிக்கு எதிராக மூவேந்தர்களும் தனித்தனியே செய்த போர் முயற்சிகள் கைகூடவில்லை. மூவேந்தர்களும் ஒன்றிணைந்து பாரியின் பறம்பு நாட்டை நாலா புறமும் தாக்கினர் .சின்னஞ்சிறு பாரியின் படை மீது மூவேந்தரின் பெரும்படை தாக்குதலை தொடுத்தது.
✨சங்கக்காலத் தமிழகத்தில்,குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்களை மூவேந்தர்கள் நடத்தி உள்ளனர்.
✨"பறம்புமலைப் போரின்" முடிவு ,தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழ்ந்திராத வீரச்சரித்திரம் இது.
✨முல்லைக்கு தேர் கொடுத்தவன் மட்டும் அல்ல, தனது வீரத்தாலும்,கொடைத்தன்மையாலும் வெற்றிக்கொடியை நாட்டிச் சென்றவன் பாரி.
✨இயற்கைக்கும் மனித பேராசைக்கும் இடையில் நடைபெறும் போரின் ஆதிவடிவம் தான் வேள்பாரி கதை.
✨இயற்கையை அழிக்க நினைப்பவரை இயற்கை அழிக்கும்.
✨ பனையன் மகனே! பனையன் மகனே! பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே! தினையின் அளவே பிறவுயிர் வாடினும்! துடித்து காக்கும் தொல்குடி வேந்தே!
Very well written and the imagination is very well narrated. Though a historical fiction, doesn't look like so, as many of the main characters are actually from literary references. The pace of the novel was different at different sections, but overall it was good. The characterizations, the plot and how the overall story unfolds. There are a lot of thought-provoking points raised through different characters at different points in time in the story. The one thing that was quite irritating was that there were too many irrelevant digressions at many points in the story. The flow appeared to have been broken and again caught up at some other point. Moreover, it was like forcing the reader to read something else when the situation in the story would have gone very critical and interesting. The author has done a wonderful job though!
Velpaari - a must read! I was really startled while reading this book! I am a great fan of historical novels. And all our historical novels I admire were written a generation before. But even during these recent times, where the world is digitalised, can a book be so impressive that it outbeats the books from 1900's? Yes...Velpaari did it...credit goes to author Su.Venkatesan! Amazing plot...with so many lovable characters! This book remains close to my heart that I have started longing for a life in the Parambu hills. This golden rule of Paari makes us realise how corrupted our present day society is. In short, it is a gift to read about one of the Kadai-Yelu-Valalgal! Though it is impossible to lead a great life like them, it inculcates some good values in us and thereby leaving a lasting impression in our hearts!
Loved it. பறம்பின் வலிமையும், பாரியின் வானுயர்ந்த அன்பும், பறம்பு மக்களின் திறமையும், இயற்கையின் கொடையையும் முழுதாக உணர்த்தி, வியப்பில் ஆழ்த்தும் ஒரு காவியம். குலம் அழித்து செல்வம் சேர்க்கும் வேந்தர்களுக்கு எதிரே நின்று குலம் காக்க போரிடும் பாரி ஓர் சரித்திரம். சரித்திரம் புத்துயிர் பெற்றது.
வேள்பாரி முதல் பாகம்: பறம்பின் அழகையும், பறம்பில் வாழும் மனிதர்களின் குலங்களின் வரலாறு, வீரம் ஆகியவற்றையும் பாரியின் ஆளுமை திறமையையும் தமிழ்புலவர் கபிலரின் விழி வழியோடு நம்மையும் அழைத்து செல்கிறார் ஆசிரியர்.
First part was bit slow and lots of descriptions. I didn't realize all of those information was to build the second part. I couldn't stop reading second part. This is one of the best books I have read!