ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், மனிதாபிமானத் தோடும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. புத்தனைத் தேடிய பயணியாக சீன யாத்ரீகர் யுவான் சுவாங் இந்தியாவில் பயணித்ததில் தொடங்கி கல்விக்காக நூறு கிராமங்கள், நீண்டு செல்லும் சாலை, இந்தியப் பருத்தியின் அழிவு, ரகசிய ரேடியோ, பார்ஸி இனம், ஜந்தர் மந்தர், உமர் கய்யாம், நேதாஜியின் டோக்கியோ கேடட்ஸ், தாகூரின் கல்விமுறை, இண்டிகோ புரட்சி, அவுரியின் வீழ்ச்சி, மணமகனுக்கு வலைவீசிய கப்பல்கள், மொகலாய ஓவியங்கள், புகைப்படக் கலைஞர்கள், இந்தியாவில் ஆர்மீனியர்கள், வங்காள தேசம் உருவான கதை, காலிஸ்தான் வன்முறை, பஞ்சாபிகள் படுகொலை, காந்திக்கு முந்தைய மகாத்மா, கொடுங்கோல் ஜமீன்தார்கள் என்று வரலாற்றின் கால அடுக்கின் உள்ளே புதைத்து மறைத்திருக்கும் நிகழ்வுகளை தன் பேனா முனையால் வெளிக்கொண்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் கனமான எழுத்து, உலகம் கொண்டாடப்பட வேண்டிய, கவனிக்கத்தக்க, பாதுகாக்க வேண்டிய படைப்பாக உள்ளது. எத்தனையோ பல நூற்றாண்டுகளை ஒரு சில வரிகளுக்குள் வார்த்திருக்கிறார். இவருடைய பல ஆண்டுகளின் உழைப்பு, பல்வேறு விதமான இழப்புகள், எழுதி சேகரித்து வைத்திருந்த குறிப்புகள் எல்லாம் சேர்ந்துதான் இந்த நூலை இவ்வளவு அழகாக எழுத வைத்திருக்கின்றன. கொஞ்சமும் கூட்டியோ குறைத்தோ கற்பனை கலந்து எழுதாமல் உண்மையான வரலாற்று நிகழ்வுகளுக்குள் வாழ்ந்தவர்களைப்போல் நம்மை ஊடுருவி வரச் செய்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இயல்பான எழுத்து நடை. தமிழில் இப்படி ஒரு நூல் இதுவரை வரவில்லை என்றே சொல்லலாம். சுதந்திரத்துக்காக ரகசிய ரேடியோ நடத்தி சித்திரவதை செய்யப்பட்ட உஷா மேத்தா, நேதாஜியின் கடைசிப் பயணம், ஆர்மீனியர்களின் அமைதி, வங்க தேசத்தின் முஜிபுர் ரஹ்மான், மகாத்மா ஜோதிராவ் புலே, யவனர்கள், ஜப்பானில் போராடிய நாயர் ஸான், லண்டனில் போராடிய வீரேந்திரநாத் சட்டோபாத்யாய ஆகியவர்களின் பல அரிதான தகவல்களும் இந்த நூலில் விரவிக்கிடக்கின்றன. ஜூனியர் விகடனில் ‘எனது இந்தியா’ தொடராக வரும்போதே பரவலான கவனத்துக்கு உள்ளான இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’ நூல், நவரத்தினங்கள் நிரம்பிய வரலாற்றின் தங்கப் புதையல்!
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
பள்ளிப் பாடப் புத்தகங்களில் தேதிகளாகவும், ஆண்டுகளாகவும் மட்டுமே மனப்பாடம் செய்யப்பட்டு நாம் மறந்து போன இந்திய வரலாற்றின் பக்கங்களை அரிய பல தகவல்களுடன், இன்னும் தெளிவாக விளக்குகிறது இந்த புத்தகம்.
பொதுவாகவே எஸ்.ரா. வரலாற்றை அணுகும் விதம் வித்தியாசமானது. இந்திய நிலப்பரப்பினூடே பயணித்து இந்நிலத்தின் பன்மைத்துவத்தை அனுபவித்து உணர்ந்த ஒரு வரலாற்றாசிரியரின் செறிவான அணுகுமுறை அது. இந்தியாவின் வண்ணங்களை ஒரு கலைடாஸ்கோப்பின் வழியே பார்த்து ரசிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது இந்த கட்டுரைத் தொகுப்பு.
‘இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு பகுதி அதன் இயற்கையியல் வரலாறு’ எனச் சொல்கிறார் ஆசிரியர். இந்தியாவில் காலனியத்தின் தாக்கம், இங்கிருந்த இயற்கை வளங்களை அழித்ததையும், பாரம்பரிய விவசாய முறைகளைச் சிதைத்து உற்பத்தி உறவுகளை மாற்றி அமைத்ததையும் தெளிவாக விளக்கி இருக்கிறார். ‘உழைப்பவனிடமிருந்து நிலத்தைப் பறித்து, இந்தியாவின் ஏழை விவசாயிகளின் கடைசி சொட்டு இரத்தம் வரை உறிஞ்சி எடுப்பதற்கு பிரிட்டிஷ் வகுத்த நிலவரி வசூல்முறைகள்’ பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.
தாகூரின் சாந்தி நிகேதன் பற்றிய கட்டுரைகள் ‘பண்பாடும், அறமும், சுய ஒழுக்கமும் கற்றுத்தரப்படாமல் நடைமுறைப்படுத்துகிற கல்வி முழுமையானதாக இருக்காது’ என்பதை வலியுறுத்திச் சொல்கிறது. இந்திய தேசிய ராணுவத்தின் 45 வீரர்களைத் தேர்வு செய்து, வான்படைத் தாக்குதலில் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக டோக்கியோ கேடட்ஸ் என்ற பெயரில் ஜப்பானின் இம்பீரியல் அகாடமிக்கு அனுப்பிய நேதாஜியின் நெஞ்சுரம் வியக்க வைக்கிறது.
வெள்ளையனை வெளியேறு இயக்கத்தின் ஒரு பகுதியாக உஷா மேத்தா முன்னெடுத்த சுதந்திர ரேடியோ ஒலிபரப்பு பற்றி வாசிக்கையில், நாம் ஒரு ஊடகத்தை கையாள்வதில் எவ்வளவு சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பது விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய மனிதப் பேரழிவாகக் கருதப்படும் ஆர்மீனிய படுகொலையைப் பற்றிய பதிவுகள் ஆர்மீனியர்களின் துயரத்தை வாசகனுக்குள்ளும் பரவ விடுகின்றன. ஜோதிராவ் புலே, சாவித்திரி பாய் புலே ஆகியோர் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கல்வியால் மட்டுமே சமூக ஏற்றத்தாழ்வுகளை களைய முடியும் என்பதை உணர்த்துகின்றன.
சுதந்திர போராளி வீரேந்திரநாத் சட்டோபாத்யாய பற்றிய கட்டுரையில் ‘ஒருவன் தேசவிரோதி ஆவதும் தேசபக்தன் ஆவதும் ஆள்பவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அமைகிறது. ஆளும் அதிகார வர்க்கம் தன்னை எதிர்ப்பவர்களை தேச விரோதிகளாக மாற்றுவது காலம்காலமாக நடந்து வரும் ஒரு வன்செயல்’ என்று எழுதியிருப்பதை வாசிக்கையில் சமகால நிகழ்வுகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
எஸ்.ரா. இந்த கட்டுரைகள் எழுத உதவிய குறிப்புதவி நூல்களின் பட்டியலை தந்திருப்பது இந்திய வரலாறு சார்ந்து மேலும் வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிவில் சர்வீசஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்காக தயாரித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் கண்டிப்பாக இந்த புத்தகத்தை ஒருமுறை வாசிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.
This is an excellent book, showing some glimpse or collection of of many stuffs on Indian History, Politics which are not familiar to us. Author also referred some books related to the chapters he discussed, which is catchy!
I list out the themes of some chapters which I barely knew before reading this book.
1. History behind choosing Indian National Anthem, National Flag and National Emblem. 2. Animals Elephant as gift to Kings and its history 3. Grand Trunk road in Pakistan 4. Dhaka Muslin and Cotton Textiles 5. Indian flora of the Western Ghats region (Hortus Malabaricus) & Forestry in British India 6. Brahmo Samaj and its effect 7. Secret Radio Broadcast (Usha Mehta) & Azad India Radio 8. Zoroastrianism (Parsi Community) 9. Jantar Mantar and Ancient Indian's Knowledge in Astronomy 10. Nethaj's Indian National Army (INA) and Japan 11. Tagore's Shanthi Niketan Education system 12. Indigo Revolution (Blue Mutiny) 13. Russians who traveled India (Alexei Saltykov) 14. Fishing Fleet (British Ladies Journey to find to groom in India) 15. Persian's and Mughal's Period Miniature Paintings 16. Stone Age in India and artifacts (Robert Bruce Foote) 17. Indian Photography in 19th Century (Samuel Bourne, Lala Deen Dayal) 18. Armenians migration to India (Ottomon Empire-Armenia) 19. Bangladesh-Pakistan Conflict (Mohammad Ali Jinnah) 20. Calcutta Riot 21. Khalistan Violence (Sikhism, Indira Gandhi's operation blue star) 22. Jyotirao Govindrao Phule - The Mahatma before Gandhi 23. Yavana History (Rome trading in India) 24. Arikamedu excavation and Civilization of Ancient Tamilnadu (Sangam Literature) 25. Zamindar history and Tax (Permanent settlement) 26. Aiyappan-Pillai Madhavan Nair & Virendranath Chattopadhyaya (Revolutionary worked to overthrow British Raj in India using support from foreign)
‘யார் தேசபக்தர், யார் தேசவிரோதி என்பது ஆள்பவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அமைகிறது’
‘எஸ்.ராமகிருஷ்ணன்’ எழுதிய ‘மறைக்கப்பட்ட இந்தியா’ நூலிலிருந்து…
பள்ளிக்கூடத்தில் படிக்கிற வரலாற்றை விடவும் வெளியில் வந்து படிக்கிற வரலாறு என்பது ஒரு பெரும் திறப்பை தரும் என அனைவருக்கும் தெரியும். ஆனால், எதில் வரலாறு படிப்பது? அந்த வரலாறை எதனடிப்படையில் நம்புவது? என்ற கேள்விகளும் வருகிறது.
அதுவும் வாட்ஸ்அப் மட்டும் சமூக வலைத்தளத்தில் ஏதேனும் ஒரு பதிவுகளை படித்து விட்டு இதுதான் வரலாறு என நம்பி, அந்தப் பொய்களின் அடிப்படையில் பொய்யான வாழ்க்கையை வாழ்கின்ற இந்த நேரத்தில் இந்த புத்தகங்களின் தேவை மிக அதிகமாக இருக்கிறது.
காந்தி வருவதற்கு முன்னரே இந்தியாவில் ஒரு மகாத்மா இருந்திருக்கிறார். ஜோதிராவ் பூலே. மகாத்மா என அழைக்குமளவிற்கு அவர் என்ன செய்து விட்டார்?. காந்தி எடுத்த ஆயுதம் நமக்கு தெரியும், ஆனால், அவரது முதல் இந்திய போராட்டம் எதற்காக நடந்தது? ஜமீன்தாரி முறை என்றால் என்ன? எப்படி இந்திய தேசத்தில் ஒரு சாராருக்கு மட்டும் நிலங்கள் உள்ளது? எப்படி உழைக்கும் மக்களிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்பட்டது? உண்மையிலேயே மூவேந்தர்களின் காலம் பொற்காலம் தானா? இன்னும் பல கேள்விகளை கேட்க வைக்கிறது? அதற்கு பதில் சொல்கிறது.
அதிலும் குறிப்பாக ‘இண்டிகோ புரட்சி’ மற்றும் ‘அவுரியின் வீழ்ச்சி’ போன்ற அத்தியாயங்களில் கிடைக்கிற வெளிச்சத்தில் இருந்து சேவை சார்ந்த பொருளாதார கொள்கை (Service Based Economy) நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற நமது தேசத்தின் எதிர்காலம் குறித்து ஒரு பயம் உண்டாகுகிறது.
இந்த நூலில் ஒரு பக்கம் எழுதுவதற்காக ஆசிரியர் இரண்டு புத்தகங்களை வாசித்திருக்கிறார். அவரது ஆராய்ச்சி இந்த பிரதியில் நன்கு வெளிப்பட்டிருக்கிறது.
பள்ளியில் நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாறு வெறும் ஆவணங்களாகவும், நிகழ்வுகளின் தொகுப்புகளாக மட்டுமே இருந்து இருக்கிறதே தவிர அதைத்தாண்டி ஏன்? எதற்கு? என்ற கேள்விகளையும் அதன் பிண்ணணிகளையும் அறிந்துகொள்ளும் அளவிற்கு சொல்லித்தரப் படவில்லை. ஹுவான் சுவாங் சீனாவிலிருந்து இந்தியா வந்தார் என்ற அளவில் மட்டுமே நம்முடைய வரலாற்று அறிவு இருக்கிறது. எதற்காக வந்தார் என்பதில் த��டங்கி, வியாபார நோக்கதிற்காக ஆங்கிலேயர்கள் பருத்தி விவசாயத்தை ஒழித்தது, ஜந்தர் மந்தர் ஒரு அறிவியல் நினைவுச்சின்னம் , சுதந்திர போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ரகசிய ரேடியோவான - ஆசாத் இந்தியா ரேடியோ, அக்பர் காலத்து மினியேசர் ஓவியங்கள், இந்தியாவில் புகைப்படக்கலை உருவான விதம், என சொல்லப்படாத பல சுவாரசியமான வரலாற்றுப் பக்கங்களை எஸ்.ரா தனக்கே உரித்தான பாணியில் திருப்பிச் செல்கிறார். வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 16 வயதுப் வீரன் குதிராம் போஸ், சிறையில் இருந்து ஒரு பாடலை எழுதினார்.
"விடைகொடு அம்மா! என் அருமை அம்மா! நான் மீண்டும் பிறப்பேன் சித்தியின் வயிற்றில்... பிறந்தது நான்தான் என்பதையறிய குழந்தையின் கழுத்தைப் பார் அதில் சுருக்குக் கயிற்றின் தடம் இருக்கும்"
குதிராம் போஸ் தூக்கிலிடப்படும் போது, அவரது சித்தி கருவுற்றிருந்தார்.
2023இல் முதல் வாசிப்பு. ஒரு நல்ல வாசிப்பு. பொழுதுபோக்காக மட்டும் அல்லாமல் நாம் இன்னும் கற்க, படிக்க வேண்டிய அறிவுபூர்வமான விஷயங்கள் அதிகம் இருக்கின்றன என்று உணர்த்திய நூல்.
எந்த ஒரு புத்தகம் படித்தாலும் அது மூளைக்கு வீண் வேலை இல்லை என்றாலும் அவ்வப்பொழுது புதினங்களில் இருந்து விடுபட்டு இம்மாதிரியான புத்தகங்களையும் நான் வாசிக்க வேண்டும் என்று புரிந்து கொண்ட நூல்.
விடுதலைக்காக நாம் எவ்வளவு போராடியிருக்கிறோம், மூட நம்பிக்கைகளை அகற்றி சமுதாயத்தை மேம்படுத்த எவ்வளவு மனிதர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள் என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறார். ஆங்கிலேய அதிகாரிகளில் பலர் நம்முடைய பண்பாட்டையும், வரலாறையும் பதிவு செய்திருக்கிறார்கள்.தாவரங்கள், மருத்துவம், கலை என பலவற்றை பற்றியும். காந்திக்கு முன்னரே நம் நாடு இன்னொரு மஹாத்மாவை கொண்டிருக்கிறோம் என்பதெல்லாம் அறிய தகவல்.
ஆங்காங்கே சில தொய்வுகள் இருந்தாலும் நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் ஏராளம்.
This is the second part of his first book, எனது இந்தியா. A very well, written and a good collection of eye-openers of the Indian Freedom movement. These should have been part of the history in the curriculum or schools and colleges, but somehow it has been prejudicial to have not included in the educational curriculum. At least the readers of the book would get to know how the Indian people have been exploited, tortured and murdered by the rulers of the pre-Independence era. If people are not aware of these and not able to realise the signs of the past, history is definitely going to repeat itself. Both the books are must reads for those who would like to understand the true history of India.
What a book! S. Ramakrishnan Sir is a verstalie writer. He is well known through his speeches. But the way the articles are written in the book about the historical happenings in India, it's amazing how he compiled these essays. Engaging, interesting, informative, emotional, inspiring, motivational, and so on. The range of subjects is also very wide. I am not sure how many hours he would have spent collecting the information before writing it. It's a small book, but the range it touches is amazing to me. Especially with my deep interest in the subject of history, this book kept me fresh till I completed it, as 90% of the contents in the book were new to me. Must read for History buffs.
The author has done a meticulous research from various sources and produced this excellent work on the often forgotten, overlooked and ignored chapters of the Indian history.
Assorted essays on unknown incidents, places, personalities that shaped the India... Good for beginners. Have detailed references in each chapter for further reading makes it an excellent work...
Truly fantastic, well researched content but written like a boring high school history textbook. Be prepared to handle a prosaic hemorrhagic stroke in every page of the book.
Lot of information raises your curiosity. I wish to visit those places. This is my second book of S Ramakrishnan; I wish to read all his work. He gives new perspective to the history.
இந்திய வரலாற்றில் தன்னலம் கருதாமல் செயலாற்றிய பலரை நாம் கண்டுக் கொள்ளாமல் விட்டிருக்கிறோம். அவ்வாறு பலரும் பெரிதும் அரிய பெறாத பல நிகழ்வுகளை ; பல மனிதர்களை ஆவணப்படுத்தி இருக்கிறது இந்நூல்
எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எழுதப்பெற்றது. ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த ச��்பவங்களின் அடிப்படையிலான கட்டுரைகள். இதுவே சாராம்சம். தனித்தனியாக வெளிவந்ததால் ஒட்டுமொத்த புத்தகத்திற்கு என்று ஒரு கச்சித வடிவம் கிடையாது. ஓர் ஆரம்பகால அல்லது இதுவரை வாசிப்பு பழக்கம் இல்லாத ஒருவருக்கான புத்தகம். ஏனெனில் வெறுமனே தட்டையான எழுத்து நடை. ஏற்கனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சலிப்பையே தரும். அதிலுள்ள தகவல்களும் அப்படியே. எந்த தகவலும் தினசரி செய்தித்தாள்களில் வரக்கூடிய அளவிற்கானவையே. ஆழமற்ற செறிவற்ற தகவல்கள். அதனால் வரலாற்றினை விரும்பி படிக்கும் ஒருவருக்கும் சலிப்பே தோன்றுகிறது. இருப்பினும் ஒர�� விதத்தில் இதன் பயன் என்னவெனில், நமக்குத் தெரியாத ஒரு தகவலினை ஏதாவது ஒரு கட்டுரையில் படிக்கும்பொழுது அவற்றை பற்றித் தெரிந்துகொள்ள முயல ஓர் வாய்ப்பு உண்டு. அதாவது அந்த தகவலினை இப்புத்தகத்தில் தேடாமல் வேறு எங்காவது படிக்கலாம். மற்றொன்று கட்டுரைகளோடு தொடர்புடைய பல்வேறு புத்தகங்களினை கட்டுரைகளின் நடு நடுவே பிரசுரித்திருப்பதனால் அப்புத்தகங்களைப் படிக்கலாம். இது மற்றோர் பயன். மற்றபடி இப்புத்தகத்தில் பிரமாண்டம் என்பது தலைப்பு மட்டுமே.
நம் சுதந்திர போராட்டத்தின் போது நடைபெற்ற எவ்வளவு நிகழ்வுகள் நம்மிடம் சரியாக சென்றடையாமல் இருட்டடிப்பு செய்யபட்டிருக்கிறது என்பதை இந்த புத்தகம் பதிவு செய்கிறது. சுதந்திரம் ஒரு குடும்பத்தின் உழைப்பு என்றே இன்றளவும் நம் மாணவர்களுக்கு புகட்டப் படுகிறது ...பண்டைய இந்தியர்களின் சிறப்பு அறிவியலில் அவர்களின் ஏற்றத்திற்கு சான்றாய் விலகும் ஜந்தர் மந்தரை இந்த புத்தகம்தான் எனக்கு அறிமுகம் செய்தது ...நீலச்சாயம் பெறுவதற்கு விவசாய நிலங்களை அழித்து இன்டிகோ செடியை பயிரிட செய்ததும் பல ஏக்கரில் அபின் பயிரிட்டு சீனாவின் வளர்ச்சியை தடுக்க முயற்சி செய்ததும் வெள்ளைகாரனின் கோர முகத்தை வெளிபடுத்துகிறது ...ஆசாத் ரேடியோ அதில் உஷா மெஹ்தாவின் பங்கு மெய் சிலிர்க்க வைத்தது ...இவை அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு சரியாக கொண்டு சேர்க்காதது என்னை பொறுத்த வரையில் தேச துரோகம் ..
Its a must read for all the youth who fly away saying that India has become worst and so on. Its a must read to tell them India is a great country one as we thought it was. The sad truth is we don't know anything about it.
A sort of disjointed, but accounts pertaining to Nair san [ last episode], Bose, Operation Blue star [ though with too many details], Jyotirao Phule, Story behind Bangladesh, The Bengal Riot were good
அரிக்கமேட்டில் இருந்து ஐ.என்.ஏ வரை, பல சுவாரஸ்யமான தகவல்களை அற்புதமாக செதுக்கியிருக்கிறார். இத்தனை விஷயங்ளையும் இவ்வளவு நேர்த்தியாக எஸ்.ரா வை விட வேரு யாரும் எழுத முடியுமா என்பது சந்தேகமே.