Jump to ratings and reviews
Rate this book

En Iniya Iyanthira

Rate this book
En Iniya Enthira (Tamil: என் இனிய இயந்திரா, English: My Dear Machine) is a Tamil science fiction novel written by Sujatha. In the late 1980s Sujatha wrote this novel as a series in popular Tamil magazine Ananda Vikatan. Following the success of En Iniya Enthira, Sujatha wrote another follow-up for this novel and named it Meendum Jeano.

Story of the En iniya Enthira revolves around a dictator who rules Indian sub continent and 3 rebels who were organising a coup against him including a girl named “Nila” and a robot dog named “Jeeno”. The film 'Endhiran' starring rajini is slightly based on this novel.

150 pages, Paperback

First published June 1, 1980

268 people are currently reading
4147 people want to read

About the author

Sujatha

303 books1,364 followers
Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.

As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
808 (45%)
4 stars
654 (36%)
3 stars
223 (12%)
2 stars
58 (3%)
1 star
49 (2%)
Displaying 1 - 30 of 116 reviews
Profile Image for A.
118 reviews3 followers
December 18, 2012
How can a man from Tamil Nadu in 80s can think this much ahead. He is a wonder. The precursor or Enthiran.
Profile Image for Prabhu R.
22 reviews32 followers
June 3, 2013
நான் சிபி , நீ நிலா இந்த வசனம் சிறு வயதில் தூர்தர்சனில் ஒரு நாடகத்தில் பார்த்த நியாபகம்.அந்த கதை எனக்கு நியாபகமில்லை.ஒரு வேலை இந்த கதையாக கூட இருக்கலாம். 2021 ல் நடப்பதாக இருக்கிறது கதையின் தளம்.நிலா என்ற பெண்ணை வாயிலாக கதை நகர்கிறது.ஜூனோ என்ற இயந்திர நாய் அவளுக்கு கிடைத்த என் இனிய இயந்திரா.
ஓர் சர்வதிகார்யின் கையில் கிடைக்கும் விஞ்ஞான வளர்ச்சி எத்தகை ஆபத்து விளைவிக்கும் , குழந்தை பெற்றுக்கொள்ள கூட அரசின் அனுமதி பெற வேண்டும் என்றளவுக்கு இருக்கிறது.இதில் சுஜாதா சொல்லும் விஞ்ஞான கரு ஏற்கனவே வேறு ஒரு சங்கர்-கனேஷ் கதையிலும் பயன்படுத்திவுள்ளார்.ஒரு மணி நேரம் படிக்கலாம் என்று துவங்கினேன்,படித்து முடித்து தான் வைத்தேன்.படிக்கும் போது தான் ரோபோ படத்திற்கு சுஜாதா எவ்வளவு அடித்தளம் அமைத்திருந்திருப்பார் என்று தோன்றுகிறது.

கதையில் சில-பல் இடங்களில் லாஜிக் இடுப்பதாக எனக்கு தோனியது,அதற்கு மீண்டும் ஜீனோ என்ற அடுத்த புத்தகத்தில் பதில் இருக்கும் என்று நம்புகிறேன்.படித்திவிட்டு பகிர்கிறேன்.
Profile Image for Balaji Srinivasan.
147 reviews10 followers
February 21, 2016
இது எழுதப்பட்ட ஆண்டு 1986 என்பதற்காக மட்டுமே இந்த புத்தகத்திற்கு five stars கொடுக்கலாம். இம்மாதிரி சிந்தனை உள்ள மற்றொறு எழுத்தாளர் கிடைப்பது கடினம் என்றே தோன்றுகிறது.

ஜீனோ என்னும் இயந்திர நாய் கதாநாயகன். உணர்ச்சிகள் அற்ற இயந்திரமாக விஞ்ஞான விதிகளை பேசித் திரிகிறது. மெதுவாக மனிதனை போல் பயம், சிரிப்பு என்று உணர்ச்சிகளை கற்றுக்கொள்கிறது. எந்திரன் படத்தின் விதையை அன்றே விதைத்திருக்கிறார் வாத்தியார்.

வாத்தியார் வாத்தியார் தான்.. :-)
Profile Image for Manikandan Jayakumar.
93 reviews19 followers
May 30, 2017
ரொம்போவே மேம்போக்கா எழுதினா போல இருக்கு. 1984 நாவல் கதையை எடுத்து அதுல ஜீனோவை சேர்த்து குடுத்து இருக்காரு. 1984 நாவல் ஒரு தரமான ஸ்காட்ச், அதுல இருந்து ஒரு மூடி எடுத்து 1lit தண்ணீர்ல கலந்து குடிச்ச போல சப்புன்னு இருக்கு. யானைக்கும் அடி சறுக்கும்.
Profile Image for Girish.
1,139 reviews249 followers
June 25, 2022
Sujatha wrote this book in 1970s - set in 2020 a dystopian dictatorship with holographic Projections, self learning Android robots and a society where everything is determined by Govt. The plot detailing is so believable and logical that a few of it is already realised.

Set as a thriller, the book does not slow down. Nila gets a letter of permission from Govt to have a child - the same day another man Ravi gets assigned to be her tenant. When her husband disappears - Ravi and his learning dog Geno help Nila to find her husband which ultimately leads to a plot to kill the dictator.

The part of Geno is obviously awesome and you can see his grasp on technology enthralls you as a reader. Things like neural networks weren't even in nascency then and hence the awe!

It does distract you from the gaping plot hole of the conspiracy. But then when you think about it, why? (did not stop me from diving into the sequel.

Asimov would have felt proud of this book.
Profile Image for Rohith.
31 reviews3 followers
May 28, 2023
This book is a sci-fi which happens in a dystopian country where the technology developed to the next level and people actually lost their thinking ability. The story revolves around Nila, Ravi, Mano, Sibi and importantly Jeeva and Jeano

1. This book is written in the 1980s so this book can't be engaging today.

2. While reading this book I felt George Orwell's 1984 vibe.

3. Though this book is sci-fi I was able to feel the absence of logic in the story itself.

4. It would take around 4 to 5 hours to complete the entire book so giving it a try will do no harm.

All my worries are that why can't there be a proper sci-fi in Tamil which is relatable to us today. I don't know if this book is worth the hype given by the people. But won't complain as this book is written in the 1980s.
Profile Image for Sampath Kumar.
86 reviews33 followers
April 13, 2017
காலத்தைத் தாண்டிய சிந்தனைகள்.
ஒரு நூற்றாண்டிற்கு அப்பால் நின்று தொலைநோக்கோடு எழுதப்பட்ட கதை.
சிந்தனையின் அளவுகோல் - சுஜாதா.
Profile Image for Vaideki Thayumanavan.
53 reviews
September 27, 2025
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியானது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாகும். நல்ல அரசாங்கமானது சமூகத்தில் எல்லா நிலையிலும் வாழும் மக்களுக்குப் பயன்படும் விதமாகவும், அவர்களின் நலன்களை அக்கறையில் கொண்டு நெறிகள் அமைத்து விஞ்ஞானத்தை வளர்த்தெடுத்தால் அது நனிநற்சமூகமே!

சர்வாதிகாரிகளால் ஆளப்படும் அரசானது தன் சுயநலத்திற்காக மக்களை அடிமைப்படுத்தும் விதமாக விஞ்ஞானத்தை வரையறையின்றிப் பயன்படுத்தும்போது அங்கு நிகழ்வது பிறழ்ந்த உலகே!

அப்படிப்பட்ட பிறழ்ந்த சமூகத்தைக் கதைக்களமாகக் கொண்டு எழுத்தாளர் சுஜாதா வடிவமைத்ததே இந்த 'என் இனிய இயந்திரா' நாவல்.

இயந்திரங்கள் எது? மனிதர்கள் யார்? என்று வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு விஞ்ஞானத்தால் வளர்ந்த நாடு அது. மனிதர்கள் அவர்களின் பெயர்களை விட அவர்களின் எண்களைக் கொண்டே (ஆதார் எண் இல்லை) அறியப்படுவார்கள் அந்நாட்டில். தங்கள் பெயர்களோடு அப்படியான எண்களைக் கொண்டு அந்நாட்டில் வாழும் மனிதர்கள் நிலா-சிபி தம்பதியினர் இக்கதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள். உடனுக்குடன் செய்திகளை அறியவும், பிறருக்கு தெரியப்படுத்தவும் அனைவரின் வீட்டிலும் holographic terminal. அந்நாட்டில் வாகனங்கள் ஓட்டுவதற்கு மனித ரோபோக்களையும், அன்றாட வாழ்க்கைக்கு companionஆக விலங்கு ரோபோக்களையும் வைத்துக்கொள்ளலாம். அப்படி இந்நாவலில் வரும் ரவி என்னும் மனித கதாபாத்திரம் வைத்துக் கொள்ளும் ரோபோ நாய் தான் ஜீனோ. அரசின் அனுமதி இருந்தால் மட்டுமே அந்நாட்டில் தம்பதியினர் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். அந்நாட்டில் வாழும் மனிதர்கள் எப்பொழுது இறக்க வேண்டும் என்று அவர்களின் வாழ்நாட்களை நிர்ணயிப்பதும் அந்த அரசே. அரசு நினைத்தால் ஆற்றல் அலைகளால் கண் இமைக்கும் நேரத்தில் ஒருவரின் உயிர் காற்றோடு கலக்கலாம். இவ்வளவு விசித்திரங்கள் நிறைந்த நாட்டை ஆளும் பிரதமரின் பெயர் ஜீவா. இந்தப் பெயரில் ஒளிந்திருக்கும் சுஜாதாவின் sarcasm நாவலின் முடிவில் வெளிப்படுவது அபாரம்.நிலா-சிபி தம்பதியினர், ரவி, ஜீவா மற்றும் ஜீனோ இவர்கள் அனைவரும் ஒரே புள்ளியில் சந்திக்கும் பொழுது நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும் அதன் பின் வெளிவரும் ரகசியங்களும் தான் இக்கதையின் போக்கு. விஞ்ஞானம் வளர வளர மனிதர்களின் தரம் எப்படியெல்லாம் குறையும் என்பதற்கு இந்நாவல் ஒரு சான்று. புத்தக வாசிப்பு பழக்கம் இருந்தால் இரும்பு இயந்திரங்களுக்கும் இருதயம் முளைக்கும் என்பதை ஜீனோவின் கதாபாத்திர பரிணாமம் சொல்லாம���் சொல்லிக் சென்றது மிக அழகு. 

விறுவிறுப்பும், விஞ்ஞானமும் நிறைந்த பக்கங்கள் கூடவே ஜீனோவின் சாகசங்கள் என வாசகர்களை ஒரே மூச்சில் இப்புனைவு நாவலை வாசிக்கும்படி செய்துள்ள சுஜாதா அவர்களின் எழுத்து மிகச் சிறப்பு. 'என் இனிய இயந்திரா', அனைவரும் வாசிக்க வேண்டிய எழுத்தாளர் சுஜாதாவின் ஒரு முக்கிய படைப்பு. 
Profile Image for Priyashini.
137 reviews4 followers
August 9, 2021
This was such an adventure! Sujatha touches on so many tropes such as science, technological advancement and dictatorship and politics in a scientific age. Reading a book like this in Tamil, I can safely say I've yet to encounter something similar in English. En Iniya Iyanthira is just another encouragement for me to continue reading Tamil books. Sujatha is genius!
Profile Image for Gowsihan N.
95 reviews1 follower
December 16, 2023
குறைபாடுகள் உள்ள தேகம். சிந்தனை மட்டும், மனம் அல்லது மூளை மட்டும் எப்படியோ படித்துக் கற்று வளர்த்துக்கொண்டு விட்டேன். இதுவே ஒருவிதமான சாபமாகப் போய்விட்டது. பேசாமல் மற்ற ரோபாட் இயந்திரங்கள் போல இருந்திருக்கலாம். சிந்தனை, இஷ்டங்கள், இண்டலெக்ட், அறிவு இவை ஏற்பட்டு இதனால் மரண பயம் ஏற்பட்டு, பொய் சொல்லக் கற்றுக்கொண்டு, தந்திரங்கள் எல்லாம் புதுசாக அமைத்துக் கொண்டுவிட்டேன்.
...
சுஜாதா எழுதிய தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது.
Profile Image for Premnath.
15 reviews5 followers
March 15, 2013
வாசிப்பவரும் விரும்பும் அளவிற்கு ஜீனோவின் பாத்திரப்படைப்பும் ,அதற்கு சுஜாதா அளித்திற்கும் குணாதிசியங்களும் மிகவும் ரசிக்கத்தக்கவை.. குறிப்பாக மனித குணங்கள் பெற்ற ஜீனோவின் பேச்சுக்கள் அனைத்தும் சுஜாதா ரகம்.
Profile Image for Sathish.
49 reviews3 followers
January 12, 2021
If not for the plot twists and ending, this would have been a disaster. Huge foreign influence, may be hard to write about robotics at that time without parent foreign concepts. Author’s immaturity was visible in how the characters and population in the story behaved.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Varun.
47 reviews2 followers
January 23, 2021
Setting is a dystopian dictatorship. Nila's husband suddenly goes missing on the same day they get permission to have a child.

A mysterious youngster, Ravi, turns up at their house with a talking robot dog called Xeno and helps her find him.

Along the way, they get embroiled in a plot to assassinate the dictator, while the robot evolves into a sentient being.

Whew what a story. I couldn't stop reading this, despite not reading a single Tamil series since Ponniyin Selvan.

Sujatha's imagination is out of the world. Asimov of Tamil writing. Really detailed settings and fantastic imagination.

Wiki says Endhiran is loosely based on concepts from here. Couldn't see much of a resemblance except the robot attaining sentience bit. Diving directly into the 2nd part of this, "Meendum Xeno (Xeno Returns)
Profile Image for Hari Vignesh.
8 reviews5 followers
September 16, 2019
Amazing sci-fi novel... a master piece from Sujatha. startled by the character evolution of Juno..Specifically on the choices of books he makes.
Profile Image for Tamizharasan.
10 reviews2 followers
August 27, 2017
சயின்ஸ் பிக்க்ஷன் கதை என்றாலும் அதிகமாக வரம்புகளை மீறாமல், முகம் சுளிக்க வைக்காமல் கதை நகர்கிறது. படித்து முடித்த மறுகணமே ஜீனோ என் செல்ல பிராணி பட்டியலில் இடம் பிடித்து விட்டது.

ஜீனோ கதை முழுக்க வந்து சில நேரங்களில் நம்மை சிரிக்க வைத்து, பல நேரங்களில் புரியாத சித்தாந்தங்களை சொல்லி சிந்திக்க வைக்கிறது. ஒரு வேலை நாமும் இந்த நாய் போல ஒரு ரோபோட் ஆஹா இருந்திருந்தால் நிம்மதியாக புத்தகங்களை படித்து கொண்டு சூரிய வெளிச்சத்தை உணவாக கொண்டு உயிர் வாழ்ந்திருக்கலாம். மற்ற உயிர்களை நிந்திக்கும் எண்ணம் இல்லாமல் எவ்வளவு விசுவாசத்துடன் உண்மையாக இருக்கிறது என்று அந்த நாயின் கதாபாத்திரத்தை வியந்து கொண்டிருக்கும் போதே கதையின் வேகமானது நொடிக்கு நொடி அதிகமாகி அடுத்து என்ன நடக்கும் என்று எண்ண வைத்து விடுகிறது.

சில இடங்களில் நாம் எதிர் பார்த்த திருப்பங்களுக்கெல்லாம், நீ எதிர் பார்ப்பதை எல்லாம் நான் எழுதி விட மாட்டேன் என்பது போல் சுஜாதா பல இடங்களில் எனக்கு நோஸ் சுட் கொடுத்ததுதான் அதிகம்.

ஜீனோ வை தவிர எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நின்று விட வில்லை. சுஜாதா தனது வசீகரமான கதை நடையில் ஒரு புதிய உலகத்துக்கு கூட்டி சென்று விட்டார். சொல்ல முடியாது அது நம் வருங்கால உலகமாக கூட இருக்கலாம். உதாரணத்திற்கு ஆதார் எண் என்ற ஒன்று அப்போதே வரும் என்று தெரிந்தது போல் கதையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு நம்பர் இருக்கும்.
Profile Image for Ramchander.
12 reviews
April 25, 2012
The equivalent of a Dan Brown novel in Tamil. A racy, political thriller set in a futuristic world where the government controls everything. Nila's husband goes missing one day and all government records seem to suggest that no such person ever existed. Nila's quest for her husband aided by a scientist and his robotic dog (that can think) forms the crux of the story. Filled with wit, philosophy and surprising twists!
Profile Image for Ram Kumar.
30 reviews8 followers
May 24, 2013
From the beginning to the end, you will never guess what's going to happen in the next chapter. Sujatha have packed every chapter with a well-crafted twist. Certainly, a 5-star rating from me for this novella.

Very entertaining read! I'm fully satisfied. Waiting to read the next part, Meendum Jeano!
Profile Image for Jagan K.
50 reviews15 followers
February 17, 2017
a very rare dystopian science fiction story in Tamil. although the science is not that radical or well researched the characterization, especially that of nila, is very well done to a greater extent. A must read book just for the brilliant narrative pace of the late great sujatha
Profile Image for Srikanth R.
123 reviews11 followers
May 19, 2012
Just okay... wasnt boring... an average novel...
Profile Image for Arun Radhakrishnan.
68 reviews18 followers
June 1, 2012
ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம், இடையிலேயே குறைந்து இறுதியில் இல்லாமல் போனது.
65 reviews1 follower
July 15, 2024
எழுத்தாளர் சுஜாதா என்றாலே தனிச்சிறப்பு தான். இவரது 'ஏன்? எதற்கு? எப்படி?' என்கிற நூலும் 'கொலையுதிர் காலம்' என்கிற நாவலும் வாசித்த அனுபவம் இன்றும் நினைவில் இருக்கிறது. அறிவியிலை தமிழ் மக்களிடம் எளிதாகவும் சுவாரசியமாகவும் கொண்டு சென்ற பெருமையும் இவரையே ச���ரும்.

1980களில் 'என் இனிய இயந்திரா' போன்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார் என்றால் இவரது வாசிப்பும் தேடலும் எவ்வளவு பரந்து விரிந்திருக்க வேண்டும். உண்மையில் சொல்ல போனால் வாசித்து முடித்த பின்பும் சில வார்த்தைகளும் அதன் அர்த்தமும் புரியவில்லை தான். ஆனால் கதையும் அது ஏற்படுத்திய தாக்கமும் அதை மறக்கடிக்கச் செய்கிறது, அது தானே ஒரு எழுத்தாளனின் வெற்றி.

நிலா- சிபி என்கிற தம்பதியின் வீட்டிற்கு வருகைத் தருகிறார்கள் ரவியும் அவனது இயந்திர நாய் ஜீனோவும். வீட்டிற்கு வருகைத் தந்தவர்கள் அவர்களது வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தினர் என்பதே இந்தக் கதை. தொடக்கம் முதலே இவர் கட்டமைத்திருக்கும் இந்த உலகமும் அறிவியல் வார்த்தைகளும் புதுமையையும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. போக போக கதை மேலும் பரப்பரப்பாகவும் நம்ப முடியாதவையாகவும் ஆச்சரியத்தில் தள்ளுகிறது. ஆனால், உணர்ச்சியால் நம்மைக் கட்டியிளுத்து மேலும் தெரிந்துக் கொள்ள ஆர்வத்தை தூண்டுகிறார் சுஜாதா அவர்கள்.

ஜீனோ என்கிற இயந்திர நாய் செய்யும் செயல்களும், இவர்களை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும், வரையறைகளும் அனைத்துமே புதுமை. நிலாவின் வாழ்க்கை என்னவானது, ஜீனோ எப்படி நிலாவின் இனிய இயந்திராவாக மாறியது, மனோ, ரவி யார் என்கிற கேள்வியுடனும் மகிழ்ச்சியுடன் இந்தக் கதையை முடித்துள்ளார் சுஜாதா அவர்கள். இதன் தொடர்ச்சியாக வெளி வந்த 'மீண்டும் ஜீனா' வை வாசிக்க ஆர்வமாக உள்ளேன். இது போன்ற கதைகளை சுஜாதாவால் தான் லாவகமாக எழுத முடியும். இந்தக் கதை தான் இயக்குனர் சங்கருக்கு 'எந்திரன்' என்கிற திரைப்படத்தை எடுக்க உந்துதலாக இருந்துள்ளது. அந்த படத்தை பார்த்து விட்டே இந்தக் கதையை வாசிக்கும் போது ஒரு புது வித அனுபவத்தைக் கொடுக்கிறது. இதில் உள்ள‌ சில காட்சிகளை வாசிக்கும் பொழுது இந்தக் காட்சி தான் திரைப்படத்தில் அப்படி வந்ததா மகிழ்வுற வைக்கிறது.

இந்த நாவலை எனக்கு அறிமுகம் செய்த அக்கா @lavanyaauthor அவர்களுக்கு எனது நன்றியும் அன்பும் ❤️🥳 வித்தியாசமான பரபரப்பான நாவலை வாசிக்க விரும்புபவர்கள் இந்த நாவலை வாசிக்கலாம்.

          

        #வாசிப்போம்_வாழ்வோம்!
Profile Image for Karthikeyan S.
94 reviews8 followers
April 14, 2021
Sujatha needs no introduction to Tamil literary world. He is renowned for his unique writing style in both fiction and non fiction. One of the most celebrated author, screenplay & dialogue writer in Tamil.

About the book

- This is a Sci-fi thriller published in 1980s, with story set to happen in 2021 !

- Story revolves around a dictator "Jiva" ruling Indian sub continent and couple of rebels "Ravi" & "Mano" setting up a revolt against him. A girl “Nila” and a robot dog named “Jeeno” gets involved in this coup due to circumstances.

- Full rating can be awarded for this book, just for the author's amazing magnitude of imagination about future (2021) way back in 1980s.

- Many of the technologies foreseen in this book as probable in 2021, are still under research / development - Simply mind blowing imagination !

- Upsurge of Artificial intelligence, Electric cars, Autonomous driving, Solar energy, 3D holography, Laser guns, Prisons without guards (Secured by Robots and Laser beams), Drones, are some of the technologies which are used in core plot.

- The author was also able to predict few political scenarios including - Indian population crossing 120 crores, Citizens becoming inert to state's happenings, Citizens being spied with the help of technology, etc.,

- Story travels in swift pace and keeps the readers hooked throughout the book. Being a thriller, it serves proper justice to the genre with a gripping narration.

- Reading this book doesn't demand literary prowess in Tamil language. Anyone who can read Tamil can easily read and understand without challenges.

- On the downside, too many logic loopholes are taken for granted. The story is rushed towards the end and the happenings at the climax are also not so believable. However, it ends on a good note with an interesting lead to its sequel - "Meendum Jeeno"
Profile Image for Jaya Chakravarthi.
51 reviews1 follower
August 29, 2025
When I watched Enthiran I loved the movie and screenplay. Then I started listening that the movie is based on En Iniya Iyandhira. Thats when i thought i should read it, but its more a than decade of the movie and more than 4 decades since the novel itself. And I was quite intrigued and as usual the story telling kept in toes.

Its always surprises me how people can think how would a future world look like and in terms of technology, economic and political conditions. While sci fi movies (atleast the those I watched) touch upon the technological bit not many touch about the other 2.

This novel touches all the 3 in good detail, you can imagine how the future world would be scientifically, how much power and independence people will have and how and who would rule it. And with novels like these, it gives the narration from an Indian perspective. But either ways we are doomed :).

This is nice fun novel. Must read.
Anyone who has read this far, please suggest me any similar books.
1 review
June 23, 2021


நிலா என்ற பெண்ணை வாயிலாக கதை நகர்கிறது.ஜூனோ என்ற இயந்திர நாய் அவளுக்கு கிடைத்த என் இனிய இயந்திரா.
ஓர் சர்வதிகார்யின் ( ஜீவா) கையில் கிடைக்கும் விஞ்ஞான வளர்ச்சி எத்தகை ஆபத்து விளைவிக்கும் , குழந்தை பெற்றுக்கொள்ள கூட அரசின் அனுமதி பெற வேண்டும் என்றளவுக்கு இருக்கிறது.

ஜீவாவை எதிர்த்து மக்களாட்சிக்காக போராடும் கூட்டம் ரவி, மனோ, ஜீனோ( இயந்திர நாய்) .
ரவி நிலா வீட்டில் குடியேற, நிலா கணவன்(சிபி) காணமல் போக , நிலா ரவி உதவி நாடி, இவர்கள் புரட்சிகாரர்கள் என தெரிந்து, நிலாவும் இணைந்து கொள்கிறாள். அறிவியல், கவிதை, கதை என அனைத்தும் ஜீனோ அறிந்து , பெரிதும் உதவியாக இருக்கிறது.

நிலா ஜீவாவை கொலை செய்ய செல்லும் போது தான், ஜீவா மாயை 3- D ஹாலோகிராம் என அறிகிறான். இதை செய்தவர் யார் என அறிந்து கொள்வாளா, மக்களாட்சி அமையுமா என்பதே மீதி கதை.
Profile Image for Prasanna Kumar.
52 reviews8 followers
December 7, 2018
2021 இல் நடக்கிறது இக்கதை.. ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியில் நடக்கும் விஞ்ஞாண வளர்ச்சி எவ்வளவு தீங்கானது என்பதை இக்கதை விளக்குகிறது... குழந்தை பெற்று கொள்ள கூட அரசாங்கம் அனுமதி பெற வேண்டும் என்று ஆரம்பித்து, எத்தனை வயது வாழ வேண்டும் என்பதை கூட அரசாங்கம் முடிவு செய்யும் சூழலை கதை கருவாக சுஜாதா அவர்கள் வைத்துள்ளார்.. சுஜாதா அவர்கள் தவிர வேறு ஒருவராலும் இக்கதை எழுதி இருக்க முடியும்... ஆனால் 1986 இல் இப்படி ஒரு விஞ்ஞாண கதை எழுதியதற்கு இந்த 5 stars. இக்கதை தொடர்ச்சியாக "மீண்டும் ஜீனோ" தொடங்குகிறேன்.... 😍
Displaying 1 - 30 of 116 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.