மம்முட்டி என்கிற ரசனைக் கலைஞனின் வாழ்வியல் அனுபவங்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். மம்மூட்டி என்கிற பெயர் பிடிக்காமல், எகிப்து நடிகர் ஓமர் ஷெரீஃபின் பெயரை வைத்துக்கொண்டு அலைந்தது, வக்கீலாக வாழ்ந்தது, முதல் தர நடிகர் ஆனது வரை வாழ்வில் சந்தித்த மனிதம், அன்பு, நேரம், நட்பு, பாடம் என எல்லாவற்றையும் பாசிட்டிவ் கோணத்தில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார் மம்முட்டி.
விவாகரத்து வழக்கில் அன்பான கணவனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல முடியாமல் கோர்ட்டில் மயங்கி விழுந்த மனைவி, மம்முட்டியால் காப்பாற்ற முடியாமல் போன முதல் ரசிகன் என அவரது வாழ்க்கைச் சம்பவங்கள், அது கற்றுக்கொடுத்த பாடம் ஆகியவற்றைக் குட்டிக் கதைபோல சுவாரஸ்யமாக சொல்லிச் செல்கிறார்!
These are more in the line of interesting tidbits from the life of Mammooty.
Mammooty can certainly write well. In Malayalam it should have sounded all the more nice.
When Mammooty tries to appropriate a life lesson from an event, he sometimes looks very bland. The incidents themselves are very interesting. He should have left them at them - just incidents.
புத்தகம் எனக்கு பிடித்திருந்தது. மம்முட்டி ஒரு சிறந்த வாசிப்பாளர் என்று அவரது எழுத்தில் தெரிகிறது. சைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது. என்னுடைய ஒரே விமர்சனம் பெரும்பாலான கட்டுரைகளின் முடிவில் ஒரு அறிவுரை அல்லது பிரச்சார நெடி தெரிகிறது.
Mammootty goes through his life experiences in multiple chapters, but in a humble way. Unlike typical biographies, this one isn’t linear—just handpicked moments from his journey.
He writes with humility throughout, but certain perspectives on humanity stand out. He never misses a chance to express gratitude to those who helped him. The Tamil translation by Sailaja is pretty good too.
Some of my favorite lines:
சாப்பிடுவது நானாக இருந்தாலும், ருசியை உணர்வது அவளாயிருந்தது என்பது முகத்திலேயே தெரிந்தது.
பெரியதொரு தங்கச்சுரங்கத்திலிருந்து தேவைக்கு மட்டும் வெட்டி எடுத்துக்கொள்ளும் மனது, தங்கத்தை விட வசீகரமானது.
I’d recommend giving this a read if:
1. You like Mammootty.
2. You want to read the thoughts of a sensible actor in a world full of flashy, empty ones.
3. You always thought Mammootty is a jerk—this might just change your mind.
The book is an assorted collection of essays by the Mollywood superstar Mamootty on variegated memories and topics. While Indian film stars try to create an indestructible aura around them both off and on the screen (The master of it is MGR as researched by M.S.S.Pandian in the scholarly "The Image Trap"), Mamooty emerges out of this book as a fallible and normal human being like how everyone else is. He candidly admits his arrogance and coolly admits that he has no right to question politicians as he has never even cared to check the voter list at times. The politically incorrect tone makes this memoir special and also ensures that one looks forward to his full-fledged autobiography in the coming years.
My favourite actor in Malayalam cinema is Mohanlal. However i become his fan only during later part of my life. Mammooty was introduced to me during school days. His diction in Tamil and his kind of straight forward speeches ( both reel and real) had a immediate attraction for him..
It was so surprising to see his writing ( part of that credit should go to KV Shailaja who has translated it in Tamil..
Through this book he talks about his various experiences wit people and land and what did he learn from them..
He doesn't shy away from talking about his flaws of being arrogant, not voting, shouting at people who disturb them during his work.. நெகிழ்வான மம்முட்டியின் பக்கத்தையும் இது காட்டியது.
There were 23 of such experiences written of various kinds of people - be losing his close friend Rathish and not going for his funeral ( as he is not strong to see him that way).. his first rasigan who identified he can be a good actor even before his profession started, Old lady he met at a village who gave him milk and cashews ( he was reminded of his parents), the soldier who helped the cast and crew during snowtime when the vehicle got stuck, 2 rupee he got from an old.man for his.help.to.save the pregnant granddaughter and so on..
He also touched on social issues on being a good citizen exercising your voting rights and doing something for the society.. Taking care of your health by avoiding technology and.machines as much as possible by keeping it under control, the importance of culture and food
The book ended with talking about Ramzan - the need for helping each other without any motives..
நிஜமாகவே மம்முட்டி அழகன் தான் என்று இப்புத்தகத்தை முடிக்கும்போது உணர முடிந்தது..
மம்முட்டியின் மூன்றாம் பிறை - ( வாழ்வனுபவங்கள் ) புத்தகம் பற்றிய அறிமுகம் / மதிப்புரை
மம்முட்டி எழுதி மலையாளத்தில் வெளியான காய்ச்சப்பாடுகள் எனும் நூலிற்க்கு ஏன் மூன்றாம் பிறை என்று பெயர் வைக்க வேண்டுமென்கிற கேள்விக்கு மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா அவர்கள் முன்னுரையிலேயே விளக்கமளித்திருப்பார். தவிர புத்தகத்தின் அறிமுகம் கிடைத்தது என்னவோ "பவா செல்லதுரை"-யின் கதையாடல் வாயிலாகத்தான்.
மிகச் சரியாக நினைவில்லை. ஏதோவொரு வெறுமை அப்பியிருந்த ஓர் மாலை வேளையில் , மலையிறக்க பாதைவழியாக பயணித்த ஓர் இருசக்கர வாகன பயணத்தில் தான் பவாவின் கதையாடலை கேட்டுக் கொண்டே இப்புத்தகத்தை பற்றி அறிந்து கொண்டேன். என்ன..? மம்முட்டி புத்தகம் எல்லாம் எழுதியிருக்கிறாரா.? என்று வியப்பில் வாங்க வேண்டிய புத்தகப் பட்டியலில் மூன்றாம் பிறையை வைத்துக் கொண்டேன்.
முதன்முதலில் மம்முட்டியை திரையில் நான் பார்த்தது என்னவோ கல்யாண தேன் நிலா பாடல் வாயிலாகத்தான். அதில் அவர் தனது அசலான தொழிலான வழக்கறிஞராக நடித்திருப்பார். அதன் பிறகு எப்போதும் போல ஓர் மலையாள நடிகனாக மட்டுமே தெரியும். சில வருடங்களுக்கு முன் முன்னாள் ஆந்திர முதல்வர் Y.S.ராஜசேகர ரெட்டியின் பயோபிக்கில் நடிப்பதாக " யாத்ரா" எனும் திரைப்பட போஸ்டர்களை வெளியிட்டிருந்தார்கள். மம்முட்டி ஏன் அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டும். வேறு ஆட்களே ஆந்திரத்தில் கிடைக்கவில்லையா என கேள்விகளை எழுப்பிக் கொண்டே படம் திரையிடலுக்காக காத்திருந்து பின் பார்த்தேன். 2013 க்கு பிறகு பிறக்கும் அல்லது கேள்விப்படும் இளைஞர்கள் YSR என்றால் மம்முட்டிதான் ஞாபகத்திற்கு வருவார் என்பதுபோல அசாத்தியமாக நிஜக் கதாபாத்திரமாகவே நடித்திருந்தார்.
உடனே மம்முட்டியின் "அம்பேத்கர்" படம் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது. இணையத்தின் வாயிலாக பார்த்தேன். ஒவ்வொரு சீனும் அம்பேத்கரை பார்த்தது போலவே ஓர் உணர்வு. வெறுமென கருப்பு வெள்ளை படங்களில், வெண்கலச் சிலைகளில் பார்த்து பழகிய அம்பேத்கரை Educate, Agitate and Organize என்று மம்முட்டியில் குரலில் கேட்கும்போது கூடுதல் பரபரப்பும், அசல்தன்மையும் தெரிந்தது. அப்படித்தான் இயக்குனர் ராமின் "பேரன்பு " படமும்.
சரி புத்தகத்திற்கு வருவோம். சிறு சிறு கட்டுரைகளாக மம்முட்டியின் வாழ்வனுபவங்களும், அவரது பார்வைகளையும் அவர் எழுதியிருக்கிறார். பிடிக்காமலிருந்த என் பெயர் எனத் தொடங்கி, மூன்றாம் பிறை, விருந்தினர்கள், சொர்கத்தின் வாசல் (லைலத்துல் கத்ர்) வரை 22கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இது.
ஷுக்கூர் பாவாவைப் பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. அவை வாசிப்போருக்கு காதலின், காமத்தின் , மோகங்களின் , வயதின், பருவங்களின் பார்வைகளை மாற்றியமைக்கும் என்றே நம்புகிறேன். எப்படி அந்த மனிதனால் புனிதம் நிறைந்த இக்காதலை முதுமையின் தொடக்கத்தில் புதுப்பிக்க முடிகிறது. இளமையில் காய்ந்து, கனிந்து , கசிந்துருகி, வெறுப்பும் விரக்தியும் நிறைந்த ஏராளமான காதல் கதைகளை நேரிலும் இலக்கியங்களிலும் வாசித்திருக்கிறோம்.
காதலுக்கு சொற்கள், வார்த்தைகள், பொய்கள் மிக முக்கியம் என நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவை வெங்காய சருகுபோல உரிந்து உரிந்து காணாமல் போகும்போது எதார்த்த காதல் அதற்குள் எந்தளவிற்கு இருக்கும்..? என மம்முக்கா கேள்வி எழுப்புகிறார். ஆனால் இளமை ததும்பும் வயதில் சொற்களற்��ு, வார்த்தைகளற்று, பொய்களற்று கரிசணத்தோடு பார்வைகளை பரிமாறி தனது காதலை அர்த்தமுள்ளதாக ஆக்கியிருக்கிறார் ஷுக்கூர் பாவா. மம்முக்காவை போலவே நாமும் களங்கமில்லாத தனித்தங்கம் போலிருக்கும் காதல் வேண்டுமென்று தோன்றும் போதெல்லாம் ஷுக்கூர் பாவாவை நினைத்து கொள்ளலாம்.
எல்லோரது வாழ்விலும் இழப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. நேசம் மிகுந்த ஒருவரின் மரணம் தருகிற இழப்பை தாங்கிக் கொள்வதில் பேரிடி இருக்கிறது. இருப்பதின் போது உணரப்படாத நேசம் இழப்பிற்கு பின் தேடி என்ன பிரயோசனம். இழந்துவிட்டோம் என்று நாம் உணரத் தொடங்கும் ஒவ்வொரு நொடியும் ரணம் உடலில் அறிந்து கொள்ள முடியாத பகுதியில் ஊசியால் குத்திக் கிழித்துக் கொண்டே இருக்கும். மம்முட்டியின் வாழ்விலும் இழப்புகள் உண்டு அதனை ரதீஷ் எனும் தலைப்பில் எழுதியிருக்கிறார்.
மூன்றாம் பிறை எனும் ஒரு கதையிருக்கிறது. பேரன்பின் ஆதி ஊற்றுதான் அக்களம். முதியவருக்கும், வயதான அவரது மனைவிக்கும் முதுமைகாலத்தில் நீதிமன்றத்தில் நடக்கும் விவாகரத்து போராட்டம் அது. நெற்றி சுருங்கி, தோல் ஒட்டி , நீதிமன்றக் கூண்டில் தாங்கிப் பிடிப்பதும், அவ்வபோது "என்னால முடியல என்ட தெய்வமே" என அப்பாட்டி மயங்கி விழுவதும் இக்கிழவன் ஓடிச் சென்று தன் தோல் துண்டால் முகம் துடைத்து தாங்கிப் பிடிப்பதும் பேரன்பு அல்லாமல் வெறென்ன. நாம் செலுத்துகிற அன்பும் பிரியங்களும் உள்ளங்கை அளவு மட்டும்தானே. அன்பெனும் கடல் வற்றாமல் இருக்கிறது என்பது அம்முதுமை தம்பதியர் உணர்த்தினர்.
பிரபலங்களை பார்க்கிற போது செல்ஃபிக்களுக்காக அலைகிற, அடிபடுகிற , குட்டிக்கரணம் இடுகிற காலத்தில் இருக்கிறோம். ஏனோ பிரபலங்களைப் பார்த்தால் தூரம் நின்று பார்ப்பதற்கோ, செல்ஃபி எடுப்பதற்கோ, அல்லது கைப்பேசியில் பதிவு செய்து அகமகிழ்ந்து கொள்வதிலோ சிறுதும் நாட்டம் இல்லாதவன் நான். மம்முட்டியை சந்திப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் தான் அவர்கள் மம்முட்டியை சங்கடத்திற்குள்ளாக்கி இருப்பார்கள், அவர்களும் மம்முட்டியால் சங்கடப்பட்டிருக்கலாம். அப்படியான ரசிகர்களான பஷீர் பற்றி, சூட்டிங்கிற்கு வாடகைக்கு வீடு தந்த உரிமையாளரின் மகன் பற்றி, தன் மகனைப் போலவே கருதி தினமும் படப்படிப்பு தளத்திற்கு வந்து ஒரு நாள் பசும்பாலும், மறுநாள் வறுத்த முந்திரியும் கொடுத்த வயதான பாட்டி பற்றியும் மம்முட்டி எழுதியிருக்கிறார்.
இப்புத்தகம் வாங்குவதற்காக கடந்த புத்தகத்திருவிழாவிற்கு YMCA சென்றிருந்தேன். வம்சி பதிப்பகத்தில் இப்புதகத்தை எழுதிய ஷைலஜா அவர்கள் அமர்ந்திருந்தார்கள். மிகுந்த களைப்பின் காரணமாக தனக்கு சாப்பாடு வேண்டாமென்றும் முழாம்பழச் சாறு மட்டும் போதும் என்று தன் மகள் மானசியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பவா, சைலஜா, வம்சி, மானசி, திருவண்ணாமலை என முன்பே பரிட்சயமானதைப் போல நான் நின்றிருந்தேன். இவை எல்லாம் எனக்கு பவா செல்லதுரையின் கதையாடலின் மூலம் தெரியும். இந்த நிகழ்வை நினைவுகளாக்கி சேமித்து வைக்க வேண்டுமென நினைத்தேன். அவரை தெரிந்ததுபோல காட்டிக் கொண்டு வளைந்து நெளிந்து பேசவோ, எழுத்துக்களை கோடிட்டு அறிமுகம் பெறவோ, அதனூடாக ஓர் சங்கடத்தை அவர்களுக்கு ஏற்படுத்தவோ விருப்பமில்லை. எனவே அவரை தெரியாதது போல அவர் அருகே சென்று அருந்ததி ராய் எழுதிய சமீபத்திய புத்தகம் ( பெருமகிழ்வின் பேரவை - The Ministry of Utmost Happiness) எனும் புத்தகம் எங்கே கிடைக்கும் என கேட்டேன். ஷைலஜா அவர்கள் ஒரு ஸ்டாலை காண்பித்து அங்கே கேட்டுப் பாருங்களேன் என்றார். நன்றி சொல்லி விடைபெற்றேன்.
மம்முக்கா எனும் மகத்தான திரைக் கலைஞனை தாண்டி அவரது காய்ச்சப்பாடுகளை-பார்வைகளை , கண்ணோட்டங்களை, வாழ்வியலை, சுகங்களை, துக்கங்களை சிறிதளவு நமக்கும் கடத்துகிறது இந்நூல்.
மலையாளத்தில் வெளியான நூலை தமிழுக்கு கொண்டு வந்த ஷைலஜா அவர்களுக்கும் , அதனை கொண்டு வரச் சொன்ன மம்முக்கா அவர்களுக்கும், பவாவிற்கும், வம்சி பதிப்பகத்தார்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
புத்தகம் : மூன்றாம் பிறை மலையாளத்தில் : காய்ச்சப்பாடுகள் ஆசிரியர் : மம்முட்டி தமிழில் : கே.வி.ஷைலஜா பக்கம் : 128 விலை : ₹100 பதிப்பகம் : வம்சி புக்ஸ்
നമ്മുടെയെല്ലാം പ്രിയനടനായ മമ്മൂട്ടി 2002-03 വർഷങ്ങളിൽ എഴുതിയ ഓർമ്മക്കുറിപ്പുകളുടെ സമാഹാരമാണ് കാഴ്ചപ്പാട് എന്ന ഈ പുസ്തകം. തന്റെ ജീവിതത്തിലെ കൊച്ചു കൊച്ചു ഓർമ്മകളും അനുഭവങ്ങളും അവയിലൂടെ താൻ മനസ്സിലാക്കിയ കാര്യങ്ങളും മമ്മൂട്ടി ഇവിടെ പങ്കുവയ്ക്കുകയാണ്. പ്രത്യേകിച്ച് എടുത്തു പറയത്തക്ക ഭാഷാശൈലിയോ വിസ്മയിപ്പിക്കുന്ന അനുഭവങ്ങളോ ഒന്നുമല്ല, മറിച്ച് ഒരു സാധാരണ മനുഷ്യൻ തന്റെ ചില ഓർമ്മകൾ പങ്കു വയ്ക്കുന്നുവെന്നു മാത്രം.
വൈക്കത്തിനടുത്ത് ചെമ്പ് ഗ്രാമത്തിൽ പാണപറമ്പിൽ ഇസ്മയിലിന്റെയും ഫാത്തിമായുടെയും മകനായി ജനിച്ച മമ്മൂട്ടി 1979ൽ ഇറങ്ങിയ വിൽക്കാനുണ്ട് സ്വപ്നങ്ങൾ എന്ന ചിത്രത്തിലൂടെയായിരുന്നു തന്റെ സിനിമാ ജീവിതത്തിലേക്കുള്ള അരങ്ങേറ്റം കുറിച്ചത്. അതിനു മുൻപ് 1971ൽ അനുഭവങ്ങൾ പാളിച്ചകൾ, 1973ൽ കാലചക്രം എന്നീ സിനിമകളിൽ തലാകാണിച്ചിട്ടുണ്ട് എന്നും പറയാം.
ഓമർ ഷരീഫ് എന്ന ഈജിപ്ഷ്യൻ നടന്റെ പേരിൽ അറിയപ്പെടാൻ ആഗ്രഹിച്ച കോളേജ് കുമാരൻ മുഹമ്മദ് കുട്ടിയെ, മമ്മൂട്ടി എന്ന് വിളിച്ചത് മഹാരാജാസ് കോളേജിലെ സഹപാഠി ശശിധരനാണ്. തന്റെ പേരിനെക്കുറിച്ചോർത്തുണ്ടായിരുന്ന അപകർഷതാബോധമായിരുന്നു സഹപാഠികളോട് സ്വയം ഓമർ ഷരീഫ് എന്നൊരു പേര് പറഞ്ഞു പരിചയപ്പെടുത്തുവാൻ മമ്മൂട്ടിയെ നിർബന്ധിതനാക്കിയത്. എന്നാൽ ആദ്യ നാളുകളിൽ തന്നെ പിടിക്കപ്പെടുകയും മുഹമ്മദ് കുട്ടിയെ ചുരുക്കി സുഹൃത്ത് "എടാ മമ്മൂട്ടി.." എന്ന് വിളിക്കുകയും ചെയ്തു. സാധാരണയിൽ സാധാരണയായ ആ പേരാണ് പിന്നീട് ലോകമാകെ അസാധാരണ പ്രതിഭയായ ആ നടനെ സ്നേഹത്തോടെ വിളിച്ചത്, ഇപ്പോളും വിളിക്കുന്നത്. ഇത്തരം ഏറ്റുപറച്ചിലുകളും അനുഭവങ്ങളും അഭിപ്രായങ്ങളും 23 ഓർമക്കുറിപ്പുകളിലൂടെ പ്രിയനടൻ നമ്മോടു പങ്കു വയ്ക്കുന്നു. ഈ കുറിപ്പുകളെല്ലാം തീർത്തും താരത്തിന്റെ കാഴ്ചപ്പാടുകളിൽ നിന്നും എഴുതിയിട്ടുള്ളതാണ്. അതു കൊണ്ടാണ് പുസ്തകത്തിന് കാഴ്ചപ്പാട് എന്ന പേര് വീണിരിക്കുന്നത് എന്നും കരുതാം. അദ്ദേഹത്തിന്റെ 'ജാട'യെകുറിച്ചും ജീവിതത്തിൽ ഏറ്റ വിമർശനങ്ങളെകുറിച്ചും സഹായിച്ചവരെയും സ്നേഹിച്ചവരെയും കുറിച്ചും മമ്മൂട്ടി തന്റെ കാഴ്ചപ്പാട് വിവരിക്കുകയാണ്.
ஒரு நடிகனாக அறிமுகம் பெற்றிருந்த மம்மூட்டி எழுத்தாளனாக அறிமுகம் செய்தது "காழ்ச்சப்பாடு" என்னும் தனது வாழ்வனுபவங்களைப் பகிர்ந்த புத்தகம் ஆகும். அதன் மொழிபெயர்ப்பு நூல் தான் மூன்றாம்பிறை. 23 கட்டுரைகள் கொண்ட இந்த நூலில் எங்கும் இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்று அறிந்திட முடியாத வண்ணம் மிகத் தெளிவாக மம்மூட்டியே நம்மிடம் உரையாடுவதுபோல் மிக நேர்த்தியாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்துள்ளார் கே.வி.ஷைலஜா.
தனது வாழ்வில் தான் பார்த்த மனிதர்கள், எதிர்கொண்ட சவால்கள், சந்தித்த நிகழ்வுகள், என எல்லாவற்றையும் வெறும் சம்பவங்களாகக் கடந்து செல்லாமல் அதன் மீதான சமூகப் பார்வையை நமக்குக் கடத்தி செல்கிறார் மம்மூட்டி. தனது வாழ்வனுபவங்களை நம் கண்முன் ஒரு திரைச்சீலை போட்டுப் படமாய்க் காட்டுகிறார்.
தனக்குப் பிடிக்காத தனது பெயரை மறைத்து மாட்டிக்கொள்ளும் அவரின் முகமது குட்டி என்ற பெயரிலிருந்து மம்மூட்டி ஆக மாறிய தருணத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். "அழைத்தலின் பின்னுள்ள அன்பும், ��ாத்ஸல்யமும்தான் பெயரைச் சந்தோஷமாக்குகிறது" என்று தத்துவார்த்தமான பரிணாமங்களையும் தரிசிக்க வைக்கிறார். மேலும் படிக்க - https://kumaresanselvaraj.in/moondraa...
How can a law graduate and movie star write so aesthetically and how can he draw philosophical inferences from his real life experiences so naturally and express it poetic style ? Is it Mr Mommooty’s version or Mrs KV Shailaja’s translation and Tamil’s literary canvas added more color to this work? It was a light but intriguing read for sure. Then I came across Bava Chellathurai’s account of his friendship with Mammooty and his admiration to world class literature. I also happened to see Mr Mammooty’s wish for his industry rival Mr Mohanlal.
In that video byte, with my limited knowledge in Malayalam I could still sense that flow, analogies that ooze cultural and kerala’s geographical nuances so beautifully and I was then convinced of Mr Mammooty’s taste enriched by years of reading and admiration to great literary works. I speculate that if the translated version has come out with this brilliance how would the original be ? Excellent read !
ஒழுகிச் செல்லும் சரளமான நடை வேகமாக வாசிக்க வைத்து விட்டது. உள்ளடக்கமும் இலகுவான நினைவு மீட்டலாக அமைந்த ஆசிரியரின் தன்னனுபவங்கள் தான். ஒரு நடிகரின் Larger than life பிம்பத்தை இதிலே பார்க்க முடியவில்லை. அகங்காரம், தலைக்கனம், பொறாமை, பயம் போன்ற குணங்கள் கொண்ட சக மனிதனாக எழுதியிருக்கிறார். பல சொற்றொடர்களை ரசித்தேன் . கேரளத்தில் வாழ்வதால் மலையாளச் சாயலை கண்டு கொள்ள முடிந்தது. மூல அழகை குலையாமல் மொழிபெயர்ப்பு அமைந்திருக்கிறது என்று தோன்றியது.
கிண்டில் மின் புத்தகமாகவே வாசித்தேன் சிறு சிறு அச்சு பிழைகள் தென்பட்டது.
புதிதாக வாசிக்க தொடங்குபவர்கள், கேரள பண்பாட்டு கூறுகள் சிலவற்றை பார்க்க விரும்புபவர்கள் வாசிக்கலாம். என் சக பணியாளர் முஸ்லிம் பெண் ஒருவர் தன் கணவனை குறிப்பிடும் போது எல்லாம் "கணவர் பெயர்+க்கா" சேர்த்து குறிப்பிடுவார் அதற்கு பொருள் இந்த புத்தகத்தில் தெரிந்து கொண்டேன்
மம்முட்டி தன் அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார். பல கட்டுரைகளில் இறுதியில் அறிவுரை சொல்வது எனக்கு கொஞ்சம் சலிப்பு தட்டியது. அவற்றை வெறும் சம்பவமாகவே சொல்லி இருக்கலாமே, அதுவே போதுமானதே என்று எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. மற்றப்படி மொழிப்பெயர்ப்பு சிறப்பாக அமைந்து இருக்கிறது.
Mamooty's candid revelations about his life, profession and people. A compilation of short essays and a readable level of translation (could have been better otherwise) make this book short and sweet.
நடிகராக மட்டுமே எனக்குத் தெரிந்திருந்த மம்முட்டி இலக்கிய நுண்மையுடன் தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நம்முடன் பகிர்கிறார். இந்நிகழ்வுகள் யாவும் எளிய மனிதர்களைப் பற்றியனவாகவே உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் நாம் எடுத்துக்கொள்ளும்படி ஏதாவதொன்று இருக்கத்தான் செய்கிறது. பலனேதும் எதிர்பாராது தனக்கு ஒரு பெரும் உதவியை ஒருவர் செய்கிறார். அவருக்கு மம்முட்டி கைம்மாறு செய்ய நினைத்தாலும் அந்த மனிதர் அதற்காகக் காத்திருக்காது இருப்பதைக் கண்டு பின்வரும்படி எழுதுகிறார் அது என்னை மிகவும் கவர்ந்தது.
தங்கச் சுரங்கத்தையே தன் முன் வைத்தாலும் அதிலிருந்து தனக்குத் தேவையான தங்கத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும் மனம் தங்கத்தைவிட மகத்தானது.
வாழ்வில் நடக்கும் ஏமாற்றங்களுக்கெல்லாம் தவறான முடிவை எடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்த பின்வரும் கவிதையைச் சொல்கிறார்.
வாழ்க்கை தரமறுக்கும் எல்லாவற்றையும் வாழ்ந்து வாழ்க்கையிடம் இருந்து பெற்றுக்ககொள்வேன்.
தன்னுடைய கர்வத்தையே கூட விமர்சனம் செய்கிறார், தான் ஒரு முதியவர்க்கு உதவியது, வழக்கறிஞராகப் பணியாற்றியது, தன்னை நெகிழச் செய்த மனிதர்கள் மற்றும் நிகழ்வுகள் என சுவைபட எல்லாவற்றையும் நம்முடன் பகிர்கிறார் மம்முட்டி. நிறைந்த மனத்துடன் உணர்கிறேன் இதைப் படித்து முடிக்கையில்.
ஏதோ ஒரு மகனுடைய நினைவில்தான் நான் இப்போது பொருந்தியிருக்கிறேன் எனப் புரிந்தது. குளோசப் காட்சி எடுப்பதற்காக அடித்த உடனே முகத்தைதிரும்பிய நான் அவள் முகத்தைத்தான் பார்க்க வேண்டியிருத்தது. நான் நிஜமாகவே அடிக்கப்பட்டேன் என்று நினைத்த அவள் துடித்துப் கோனேன். கண்கள் மெல்ல மெல்ல நிறைய அருகே வந்தாள்.
' என்ன பொழப்புடா இது? ரொம்ப வலிச்சிடுச்சா? ' கேட்டவள் அதிக நேரம் நிற்கவில்லை. மறுநாள் வரும்போது மடியிலிருந்து பொட்டலமாய் எதையோ எடுத்து என் கையில் திணித்தாள். குனிந்து பார்த்த போது கைநிறைய சுட்ட மந்திரி பருப்பு. எனக்கு முந்திரி பிடிக்கும் என்பதால் அதை முழுவதுமாய் என் பாக்கெட்டில் போட்டு வைத்துக்கொண்டு கொறிக்க தொடஙகினேன். முந்திரிப் பருப்பை வாயில் போட்டு மெல்வதை பார்த்தவாறு சிநேகமாய் புன்னகைத்தாள். சாப்பிடுவது நானாகயிருத்தாலும் ருசியை உணர்வது அவளாயிருழ்தது என்பது முகத்திலே தெரிந்த்து.