Jump to ratings and reviews
Rate this book

அறியப்படாத தமிழ்மொழி: Ariyappadaatha Thamizhmozhi

Rate this book
அறியப்படாத தமிழ்! மறுக்கப்பட்ட தமிழ்! மறைக்கப்பட்ட தமிழ்! இன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்! அதென்ன, ‘மறைக்கப்பட்ட’ தமிழ்? யார் மறைத்தார்கள் நம் மொழியை? நம் மரபில்/பண்பாட்டில், பலப்பல நூற்றாண்டுகளாக, நம்மை அறியாமல், பொய்யென்றே தெரியாமல் பழகிவிட்ட பொய்கள். அவற்றை விலக்கி ‘பண்பாட்டு நீதி’யை வென்றெடுக்க, ஒரு கருவியே இந்நூல்! தொல்காப்பியர் முதல் தொ.பரமசிவன் வரை...ஐயன் வள்ளுவன் முதல் மொழிஞாயிறு பாவாணர் வரை... அறிஞர்கள் அளவிலேயே தங்கிவிட்ட தமிழ் உண்மைகளை, உங்கள் வீடுகளுக்கு எடுத்து வருவதே, இந் நூலின் ‘நோக்கம்’. கால வெள்ளத்தில் ஊறி ஊறித் தூர் வாராமலேயே மண் அண்டிப் போய், குளம் குட்டை ஆகிவிடும் அல்லவா? தமிழ்க் குளத்தை, உங்களோடு சேர்ந்து, தூர் வாரும்

341 pages, Kindle Edition

Published June 29, 2018

52 people are currently reading
204 people want to read

About the author

Kannabiran Ravishankar

2 books16 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
119 (66%)
4 stars
45 (25%)
3 stars
11 (6%)
2 stars
2 (1%)
1 star
2 (1%)
Displaying 1 - 26 of 26 reviews
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews28 followers
April 9, 2021
திராவிட கண்ணோட்டத்தில் தமிழின் மீதும்,இலக்கியங்கள் மற்றும் இலக்கணங்கள் மீதான சமஸ்கிருதத்தின் திணிப்பு மற்றும் சிதைப்பைத் தோலுரித்துக் காட்டும் ஆய்வு நூலே முனைவர். கண்ணபிரான் இரவிசங்கரின் அறியப்படாத தமிழ்மொழி.
தமிழர்களான நாம் தமிழின் மீது கரைப்படிந்து இருக்கும் வெற்று மாயையில் பால் ஈர்ப்பு கொண்டு பற்பல பொய்ப்பெருமைகள் பேசி வருவதை இந்நூல் கண்டிப்பான திறவாக அமையும்.
இந்நூல் கிரந்த(சமஸ்கிருதம்) மொழியின் மீதான வன்முறை வெறும் மொழியின் மீது மட்டும் அல்லாமல் நம் பண்பாடு,பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் மீது காலம் காலமாக நடத்தப்படும் தாக்குதல்களை தரவுகளின் அடிப்படையில் சற்றும் சலிப்பு வராத வண்ணம் சுவையான மொழிநடையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் தமிழ் மக்கள் அனைவரும் அறிய வேண்டிய அறியப்படாத தமிழ்மொழி.
இந்நூலை சிறப்பாக எழுதிய முனைவர்.கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்💐.
#Must Read
Profile Image for Gowtham.
249 reviews49 followers
August 4, 2021
ஆங்கிலத்தில் “Putting centuries into capsules” என்று ஒரு சொற்சொடர் உள்ளது, அதற்கு தகுந்த சாட்சி/ எடுத்துக்காட்டு இந்த புத்தகம் தான்.பல நூற்றாண்டுக்கு சொந்தமான தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளார்.  ட்விட்டரில் முனைவரது பதிவுகளை தொடர்பவன், ஒருவொன்றும் உண்மை தரவுகளை அடிப்படையாக கொண்டிருக்கும். இந்த புத்தகம் அப்படிப்பட்ட ஒன்று தான், படிக்க  படிக்க "இன்ப தேன் வந்து பாய்ந்தது". நம் தலைமுறைக்கு இப்படி பட்ட எழுத்துக்கள்/புத்தகங்கள்  தான் தேவை, முனைவர் போன்ற எழுத்தாளர்கள் அதை தொடர்ந்து செய்ய வேண்டும். 


மொழியில் இருந்து மதத்தை பிரித்து பார்ப்பதும், அதனை அறிவியல் பூர்வமாக அணுகுவதும், நவீன சூழலுக்கேற்ப மாறி கொள்வதும் எவ்வளவு அவசியம் என்பதை "அறியப்படாத தமிழ்மொழி" அழுத்தமாக கூறிச்செல்கிறது. தமிழ் இலக்கியத்தில் இடைச்சொருகப்பட்ட கட்டுக்கதைகளை உடைத்தும்  காட்டியுள்ளார். தமிழ்மேல் ஆர்வமும், அதன் வளச்சியின் மேல் அக்கறையும் கொண்ட ஒருவரால் தான் இத்தகைய நூல்களை எழுத முடியும். (மிகைப்படுத்தவில்லை, உண்மை அதுவே!).


நூலின் அனைத்து பகுதிகளும் என்னை கவர்ந்திருந்தது, குறிப்பாக கல்தோன்றி மண்தோன்றா தமிழ்ப் பொய்யா?,  தமிழ் மறைப்பு அதிகார, தொல்காப்பியத்திலே சாதி உண்டா ?, எது முதல் தினை முல்லையா? குறிஞ்சியா?, ஆகிய பகுதிகள் எல்லாம் என் Personal Favorite என்றே சொல்லலாம். 


இது ஒரு “பேசும் புத்தகம்” என்றே நூலை தொடங்கியுள்ளார், இந்த உரையாடல் அறிவூட்டும்! கூடவே உணர்வூட்டும் உரையாடல். தமிழ் மீதுள்ள காதலை  இன்னும் மெருகூட்டும் உரையாடல், தேடல் ஊற்றை தூண்டி விடும் உரையாடல். தமிழ்மீது ஆர்வம் அற்றவர்கள் கூட இந்த நூலை வாசித்தல், தமிழை நேசிக்க தொடங்கிவிடுவார்கள். 


தமிழ் என்ற சொல்லின் அர்த்தம் இனிமை/நீர்மை, தொல்காப்பியம் தான் தமிழின் அடிப்படை. தொல்காப்பியத்தில் பல இடைச்சொருகல்கள் நடந்துள்ளது என்பதை அந்தந்த வாக்கியங்களோடு விளக்குகிறார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோமே, அந்த சங்கம் என்பது சங்கிகள் சொல்வது போல் வடமொழி சொல் அல்ல, "சங்கு முழங்கி" தொடங்கும் நிகழ்வு தான் சங்கம். வடமொழி கலப்பில்லாத தமிழ் சுகமே.  


மேலும் தமிழா? திராவிடமா? என்ற விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளும்படியான  முடிவை வரலாற்று புவியியல் காரணங்களோடு தெளிவுபடுத்தியுள்ளார். திராவிடம் என்பது ஒரு திசை சொல்லே, பழமை வாய்ந்த   கிரேக்க ஆவணம் ஒன்றில் அதற்கான சான்றுகள் இடம்பெற்றுள்ளது. சமஸ்கிருதமும் பிற உலக நாடுகள் பயன்படுத்தியதை போல் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்திக்கொண்டது . திராவிடம் சமஸ்கிருத  சொல் அல்ல. தமிழ் என்பது Endonym(மூல மொழியில் வழங்கும் பெயர்)  திராவிடம் என்பது Exonym (உலகம் வழங்கும் பெயர்). “யவனம்” போல் திராவிடமும் ஒரு திசை சொல்லே. 


கம்பரை கொண்டாடும் அளவுக்கு இளங்கோவடிகள் கொண்டாட படாமல் இருப்பதற்கு காரணம் மதம் பிடித்த சில பண்டிதர்கள் தான். சிலப்பதிகாரம் மக்களின் காப்பியம், கம்பர் எழுதியது அரச காப்பியம். கம்ப ராமாயணம் சொல்வதை விடவும் சிலப்பதிகாரம் கூறும் நீதியும்/ஒழுக்கமும் தமிழ்சூழலுக்கு முக்கியமானது. மேலும் தெளிவு பெற அண்ணாவின் “தீ பரவட்டும்” என்ற நூலை படியுங்கள். 


தமிழ் புத்தாண்டு சித்திரையா? தையா? என்ற கேள்விக்கும் விடை உள்ளது. இது தான் புத்தாண்டு என்பதற்கு தமிழ் இலக்கியத்திலும் கூட சரியான ஆதாரங்கள் இல்லை, எல்லாம் இடைச்சொருகப்பட்டவையாக தான் இருந்து வருகிறது. ஆனால் சங்க  இலக்கியங்களில் தை மாதம் அதிகம் பேச படுகிறது, சிறப்பான மாதம்,மேலும் தை 2  வள்ளுவர் தினம் என்பதாலும் தமிழறிஞர் பலர் கூடி எடுத்த முடிவு தான் தை 1 தமிழ் புத்தாண்டு என்பது.அது ஒரு கட்சியின் கொள்கை அல்ல, தமிழ் வரலாறு கூறும் செய்தி.  60 ஆண்டுகள் மட்டும் இருக்கும் சமஸ்க்ருத புத்தாண்டு நமக்கு எதற்கு. சங்க இலக்கியம் போற்றும் தை மாதமே நமக்கு புத்தாண்டு.  


சங்க காலத்தில் சாதி இருந்ததா? என்றால் இல்லை, தொல்காப்பியத்தில் சாதி என்ற சொல் அஃறிணைக் குறிப்பாகவே வருகிறது(சாதி முத்து(சிறப்பான முத்து), சாதி மல்லி, சாதி காய்  ). வடமொழியில் ‘ஜா’ என்றால் பிறப்பு என்று அர்த்தம் . தமிழில் சாதி என்பது திணிக்கப்பட்ட ஒன்றே. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”  என்று முழங்கிய  திருகுறளும் சாதியற்ற, மதமாற்ற அனைவர்க்கும் பொதுவான ஒரு நூலே. அதற்கு தமிழ் சாயத்தை தவிர  எந்த சாயமும் இல்லை. 


பகுத்தறிவு பார்வையில் தமிழை அணுகினால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்பது இந்த நூலில் மூலம் புலப்பட்டது. தமிழ் என்பது  சாதி-மதம்-சமயம் என்று எந்த அடையாளங்களுக்குள்ளும் அடைக்கப்பட முடியாத ஒரு மொழி .  நூலின் அட்டைப்படத்தில் இருப்பதை போல் நவீன/அறிவியல் தமிழ் மொழி கொண்டு சமஸ்கிருத புரட்டுகளையும், இடைபுகுந்த கட்டுக்கதைகளையும் வீழ்த்துவோம். 


பிற மொழி வெறுப்பு நமது கொள்கை  அல்ல, திணிப்பை எதிர்க்கிறோம், மொழி வழி நிறுவப்படும்  ஆதிக்கத்தை எதிர்க்கிறோம்.  இந்நூலில் இருந்து நான் கற்ற மற்றோரு முக்கிய பாடம் Reading between lines எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் முழு தகவலையும்(Holistic view) அறிந்து கொள்வது. அது எந்த பொருளில் வருகிறது, அதன் வரலாற்று சூழல் என்ன, என்பன பற்றி எல்லாம் புரிந்துகொள்ள முழு தகவலையும் அறிந்து வைத்திருக்க வேண்டும், இல்லை என்றால் ஆரியம் நம் தலையில் மிளகாய் அரைத்துவிடும்.


அனைத்து பகுதிகள் பற்றியும்  எழுத வேண்டும் என்று ஆசை தான், ஆனால் நான் சொல்வதை விட நீங்களாகவே படித்தால் இன்னும் தெளிவு கிடைக்கும். இந்நூல் ஒரு பொக்கிஷம், தகவல் களஞ்சியம். அள்ள அள்ள கிடைக்கும் அறிவு கடல். 


நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தக பட்டியல் இருந்தால் இதனையும் சேர்த்து கொள்ளுங்கள். 


மேலும் வடமொழி எழுத்து தவிர்த்து சரியான தமிழில் எழுத இந்த வலைதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் - கிரந்தம் தவிர்! (tamilchol.com)


வாழ்க தமிழ்! 

வளர்க பகுத்தறிவு !
Profile Image for Santhosh Guru.
181 reviews52 followers
May 2, 2021
A good collection of essays on some interesting things about the Tamil language and Tamil culture.

Some topics that really resonated well with me are:
- Is Tamil really the oldest language? If not, why do Tamils pride in saying "Kal Thondri Man Thondraa Kalathey Mun Thondriya Thamizh"?
- Why is Ilango and his Silapathikaaram not celebrated in the same zest as Kamban and his Kambaramayanam?
- How the Vedic culture has appropriated many of the Tamil culture, gods, and language? How different it is from the Samanar (Shramana) tradition, which was understood and accommodated Tamil instead of domination? (BTW, I never knew "Yaadhum Oorey Yaavarum Kelir" is from Aaseevakam (one of the branches of Samanam) tradition)

I would rate it as 4.5 stars because the bloggish style of writing is mildly annoying at times. I wish this book had gone through some good, professional editing before it was published.

But if you can read the Tamil language and if you are interested in the language, culture, and people of this region (South India), this is definitely a good read.
Profile Image for Cruz J.
21 reviews2 followers
December 22, 2020
Sarcastic writing's, gathered lot of new information
worth reading. Go for it
Profile Image for Madhan (மதன்).
83 reviews20 followers
December 16, 2018
“அறியப்படாத தமிழ்மொழி” இது பகுத்தறிவிற்கான புத்தகம்!

A compelling book to be read by every தமிழன்/தமிழச்சி! I was little curious about this book coz of its title “அறியப்படாத தமிழ்மொழி”. (தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை/நீர்மை என்று பொருள்!) Well It was impressive & I got great feeds for my appetite. Even though I don’t believe in gods now I found who is முருகன் so I had great respect on him, I really appreciate the work of the author it’s really a spectacular work & research of the authors. He bravely comes with the fact full and truthful book.

பகுத்தறிவு - why it is so important and where to apply is most important. Coz there is proverb “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதே மெய்” this is one of the great quote without analysing don’t be overwhelmed or surprised coz everything has reason and it is not suppose to be a story.•

Why it is a must read book? “Why” Let me ask a question what is language? Ans: language is sound and tone or a gesture any living organism creates to communicate. Look everything with perspectives. Then what makes தமிழ் different from other language தமிழ், எந்தவொரு மனித அன்பு உணர்ச்சியையும் ஒதுக்காது! வகைப்படுத்த மட்டுமே செய்யும்! பெரும்பான்மை உணர்வு மட்டும் தான் மனிதம்; சிறுபான்மை உணர்வு மனிதம் அல்ல எனச் சொல்லாது சங்கத்தமிழ்! இத்துணை ‘இயற்கை வாழ்வு’ கொண்டது, தமிழ் அகத்திணை வாழ்வு.

தமிழ் இலக்கியம் = நிலம் + காலம் + மக்கள் + காதல் + வாழ்க்கை + சமூகம். ஒரு 'கதை' எதிர்பார்க்கும் கெட்ட பழக்கம் விட்டுருவோம்! இயற்கையை, இயற்கையாகவே காண்போம்! நேசிப்போம்.•

“WHY (ஏன்)” is the word play vital role in my life that lead you to many unknown facts at the same time stress you more than anything else coz they throw you out from the class😂😁 so I always be like: எதுக்கு! Later I learned “WHY is really important, WHAT IF is not at all important”.•

•காரும் மாலையும் முல்லை
குறிஞ்சி: கூதிர், யாமம் என்மனார் புலவர் (தொல். அகத்திணையியல் 6)
•தமிழ் விதைகள் விதைப்போம் விடியலை நோக்கி!
(KRS-கண்ணபிரான் இரவிசங்கர்)
தமிழ்! என்னவென்று அறிந்த்தவனாய்
மெய்த் தமிழ்க் காதலில் திளைப்பீர்கள்! வாழ்த்துக்கள்!.
Profile Image for Vasanthan.
14 reviews
January 10, 2022
தமிழ் மொழியின் வளமையை, நெகிழ்வை இனிமையாய் எடுத்துரைக்கும் நூல். தமிழ் எனும் பெருங்கடலை அழகாக தெளிவாக காட்டிய நூலாசிரியர் முனைவர் அவர்களின் மொழி ஆளுமையும் அதற்கான ஆய்வு தரவுகளும் சான்றுகளும் மிகவும் அருமை. நூலின் இறுதிக்கு செல்ல செல்ல ஆர்வத்தை அதிகரிக்கச்செய்வதாக இருந்தது. தமிழில் எவ்வளவு கற்பதற்கு இருக்கிறதென்பது வியப்பளிக்கிறது. இனி இயன்றவரை தமிழ் மொழி சிதையாமல் பேச எழுத முற்படுவேன். பார்க்கலாம். நல்ல நூலைப்படிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
Profile Image for MANU  NEETHI  CHOLAN.
15 reviews1 follower
March 22, 2022
தமிழ், தமிழகம் மற்றும் தமிழர்கள் பற்றி பனுவும் புத்தகம் இது. தமிழ் மறைப்பு அதிகாரமும் தொல்காப்பியத்தில் சாதியா? என்ற அதிகாரமும் என்னை மிகவும் கவர்ந்தவை. தமிழ் = மனிதம், தமிழர் வாழ்வும் சமயமும் நெரியும் இயற்கைக்கு இசைந்தே அமைந்தவை என்று பகர்கிறது. And its briefly talks about how Aryans and their Vedic Culture tried/trying and achieved destroying several amount of tamil language and culture through the Sanskrit parasitism.

சாதி மத பார்வை அன்றி தமிழை அறிவியல் பாதையில் வழிநடத்துவதில் " அறியப்படாத தமிழ்மொழி" நூல் ஓர் பெரும் பங்கு வகிக்கிறது.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Parisal Krishna.
5 reviews17 followers
March 1, 2019
வெறும் புத்தகமாக இல்லாமல் ஆய்வுநூல் போல எல்லாவற்றுக்குமான தரவுகள், தெளிவுகள் என்று தொகுத்திருக்கிறார் கரச. மதப்பிடிப்பால் மொழியிலும் வரலாற்றிலும் என்னென்ன திரிபுகள் நடந்தேறியிருக்கின்றன என்று சில சான்றுகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
Profile Image for Balaji M.
221 reviews14 followers
February 17, 2019
அறியப்படாத தமிழ்மொழி
**************************
அட்டை படமே போதும், இப்புத்தகம் என்ன சொல்ல வருகிறதென்று!

கீச்சு தளத்தில் இயங்கி வருபவரும், பேராசிரியருமான Kannabiran Ravishankar எழுதிய புத்தகம்.
நாம் நமது பள்ளி பருவத்தில் படித்து மறந்த, பற்பல அருந்தமிழ் தகவல்களை, இலக்கணத்தை அநாயாசமாக சொல்லிச் செல்கிறார்.
பேச்சு தமிழ் நடையில் இருப்பதால், படிப்பதற்கு எளிமையாகவும் உள்வாங்கி புரிந்து கொள்ளும்படியும் உள்ளது.
புத்தகத்தின் அணிந்துரையில் சொல்லப்பட்டது போல தூக்கம் வருவதற்கோ, பொழுது போக்குவதற்கோ இப்புத்தகத்தை படிக்காமல், நன்கு உணர்ந்து படித்தால் மட்டுமே இப்புத்தகத்தின் முழுப்பயனை அடைய முடியும்.

பள்ளி பாடப் புத்தகமாகவே படிப்பதற்குப் பரிந்துரைக்க பட வேண்டிய புத்தகம் என சொல்லலாம்...

மொத்தத்தில்,

வீண் வெற்று தமிழ்வெறியும் வேண்டாம், சமஸ்கிருதமே 'ஒசத்தி' என்ற சரணாகதியும் வேண்டாம்.

தமிழை தொல் மொழியாக எம்மொழி கலப்பும் இன்றி, சாதி மதம் சாராது, அறிவியல் கண்கொண்டு மதித்தல் வேண்டும் என்பதே நோக்கம்.

மேலும் தப்பும் தவறுமாக, சமஸ்கிருதம், கிரந்தம் கலந்து நாம் இதுவரை எழுதி வந்த தமிழை சற்றே சீர்தூக்கி சரி பார்த்துக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் இந்நூல் பயன்படும்.


மறுமுறை வாசித்தாலொழிய என் மரமண்டையில் பதியாது...ஆகவே, இரண்டாம் முறை படிப்பதற்கென்று உள்ள எனது வரிசைப்படியில், இப்புத்தகமும் இடம்பெறும்.

Profile Image for Madharasan.
22 reviews5 followers
July 25, 2020
தமிழ் மீது அன்பும் காதலும் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
Profile Image for Saravanan.
356 reviews21 followers
March 29, 2020
தமிழை அழிக்க ஆண்டாண்டு காலமாய் நடக்கும் அரசியலை வென்றெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது. அதற்கான சிறந்த முயற்சி இப்புத்தகம். தமிழர்கள் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

சங்கத் தமிழிலேயே இல்லாத விநாயகர் மேல், "சங்கத் தமிழ் மூன்றும் தா" என்று logic இல்லாமல் பாட்டு, Jesus என்று ஆங்கிலத்தில் இருக்க ஏன் இயேசு என்று தமிழில் போன்ற பல சேதிகள் புதிது.

சரவணன் என்ற பெயர் தமிழில்லை என்பதை கண்டு வருத்தமடைந்து Google ல் தேட Quora வில் தமிழ் தான் என்று ஒருவரின் பதிலால் குழம்பியுள்ளேன்!
5 reviews
May 21, 2021
மிகச் சிறந்த புத்தகம்

மதம், ஜாதி கடந்து தமிழை, தமிழாக அணுகுங்கள் என்பது மட்டுமல்லாமல்! பிற மொழி தவிர்ப்பு, தமிழில் பெயர்கள் சூட்டுவது, தமிழில் திட்டமிட்ட சமஸ்கிருத திரிபு, புராணத்தில் தமிழ் கடவுள்கள் எப்படி புகுத்தப்பட்டார்கள், தமிழ் சொற்களின் வேறுபாடு போன்ற எண்ணற்ற தகவல்களை ஆ��ாரத்துடன் விளக்கி தமிழை பெருமையும் படுத்தாமல், சிறுமையும் படுத்தாமல் தமிழை தமிழாக விளக்கியது இந்த நூலின் சிறப்பு! கண்டிப்பாக தமிழர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்!!
Profile Image for Suyambulingam E.
7 reviews2 followers
April 28, 2020
படித்ததும் படித்துக்கொண்டிருக்கும்போது மோ நீங்கள் கண்டிப்பாக இப்படி சொல்வீர்கள்
😃😃😃😃
ஓ அப்படியா
இதுவரை எனக்கு இது தெரியலையே
எனக்கு கற்பிக்கப்பட்டதும் இங்கு படிப்பது முரண்பாடாக உள்ளது

ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து கண்டிப்பாக கிடையவே கிடையாது..

இதில் சில தலைப்புகளை பாடப்புத்தகங்களில் இணைப்பதற்கு அரசு பரிசீலனை செய்தால் மிகவும் நன்று
49 reviews3 followers
Read
December 6, 2022
இந்நூலுக்கு மிகவும் சிறு பதிவே செய்கிறேன். அதுவே போதுமென்ற காரணத்தால் அன்று. அதற்கு மேல் சொன்னால் நூலில் உள்ளவற்றை உளறிவிடுவேன் என்று 😛

என்னைத் தமிழ் போன்மிக்கள் செய்ய ஊக்கிய நூல் இதுவே. என் நண்பர்களை நாளும் ஒரு தமிழ் மொழி சார்ந்த போன்மியால் படுத்தும் பணியில் என்னை ஈடுபடச் செய்தது இந்த நூலே 😉

அறியப்படாத தமிழ்மொழி - அறியவேண்டிய தமிழ்மொழி
Profile Image for Ganesan.
8 reviews
August 24, 2018
Worth reading

I'm a regular follower of @kryes. It is written speech Tamil which makes us engaged and shows what is right and what to avoid and what to do in future for Tamil language enthusiasts like me. Hats off to your work, expecting more from you sir.
3 reviews
January 29, 2019
/அமிழ்தம் என்பது நமக்குள் அமிழ்ந்து உள்ளிறங்கிச் சுவையூட்டுவது/

அறிவியல் கருத்துக்களோடு ஒரு சிறப்பான தமிழ் மொழிப் பயணம்! வரலாற்றுத் தரவுகளோடு ஒவ்வொரு நிகழ்வுகளையும் அணுகும் விதம் மிகச் சிறப்பு!

/தமிழை அறிவியல் பாதையில், மேன்மேலும் முன்னெடுக்க முயல்வோம்!/ 😊😊😊
Profile Image for Ranjithprabu.
5 reviews
January 12, 2019
மிகவும் ஆராய்ந்து எழுதியிருக்கிறார் .. தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய நூல் ..
5 reviews
February 14, 2020
தமிழர்கள் படித்து அறிந்து கொள்ள வேண்டிய புத்தகம். தமிழ் மற்றும் தமிழர் வழிபாடு பற்றிய ஒரு புரிதல் கிடைத்தது. நல்ல வாசிப்பு.
16 reviews
August 2, 2020
ஆய்வு நூலாக இருந்தாலும் சுவாரஸ்யம் குன்றாத மொழி....
1 review
August 1, 2021
Must read book

Very very informative and honestly written. I strongly recommend all tamils read this book. Its very important to know our real history
Profile Image for Pravin.
2 reviews
Read
May 17, 2025
அனைத்து தமிழர்களும் படிக்க வேண்டும்.
Profile Image for Ashok Chemarx.
52 reviews1 follower
June 3, 2018
twitter il tweet மூலம் சின்ன சின்னதாய் அவர் சொல்லி வந்த தமிழ் உண்மையை.. இன்னும் விரிவாக பேச்சு வடிவில் தருகிறார்.. வெறுமனே கூறாமல் தரவுகள் அடிப்படையில் அவர் சொல்வது சிறப்பு.. முருகா அருமை🙏🙏🙏
4 reviews
June 19, 2018
மதவாதிகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உண்மைகளை தரவுகளுடன் தொகுத்துள்ளார் முனைவர் கண்ணபிரான். நேரில் பேசுவது போன்ற மொழி நடை. அங்கங்கே Smileyகளுடன். நன்றி.
Profile Image for Subash Balachandran.
1 review
January 21, 2020
Must read. Lots of MYTHs and TRUTHs about Tamil Language, Culture, Literature, Lands, GOD, City Name are explained
Displaying 1 - 26 of 26 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.