நவீனத் தமிழக உருவாக்கத்தின பின் புலத்தில் சமூகப் பண்பாட்டு மாற்றங்களை ஆராயுமு் கட்டுரைகள் இவை. தற்காலத்தைப் பரிந்துகொள்வதற்குக் கடந்த காலத்தை விமர்சன் நோக்கோடு பார்க்க வெண்டம் என்பதை வறு:பறுத்தமு் ப்வை இவற்றின் ஊடு சரடு. காப்பியும் புகையிலையுமு் தமிழ்ச் சமூகத்தில் எதிர் கொள்ப்பட்ட முறை: திராவிட இயக்கத்தின மொழி சார்ந்த அரசியல் : பாரதியனி எழுத்து வாழ்க்கை பற்றிய சமூகவியல் நோக்கு : கருத்துப்படங்கள். பகடி ஆகிய கலை வடிவங்கள் தமிழ் மரபில் பெறுமு் இடம் முதலானவை ஆராயப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரை என்றால் சாரமற்றிருக்குமு் என் றநினைப்பை முறியடித்து சுவையும் விறுவிறுப்பும் மிக்க நடையில் இவை எழுதப்பட்டிருக்கின்றன.
A.R. Venkatachalapathy, a professor at the Madras Institute of Development Studies, Chennai, has held the Indian Council for Cultural Relations’ Chair of Indian Studies at the National University of Singapore. He is published widely, both in English and Tamil, on the social, cultural and intellectual history of colonial Tamil Nadu.
வரலாறு நம்முடைய வாழ்வியலோடு ஒரு அங்கமாக இருப்பதாகவும், முந்தைய வரலாறு கால் நம்முடைய நிகழ்கால வாழ்வு கட்டமைக்கப்படுவதாகும் தான் இக்கட்டுரைகளை வாசித்து முடித்த பின்னர் உணர முடிந்தது. எங்கோ எப்போதோ செய்த ஒரு செயல்களின் பாதிப்போ/தாக்கமோ இன்றும் நம்முடன் நிலவி வருகிறது.
ஒரு எழுத்தாளின் கட்டுரைக்கும் வரலாற்றாசிரியர்கள் கட்டுரைக்கும் உண்டான வித்தியாசத்தை நூலின் முதற்கட்டுரையை வாசித்த போது உணர்ந்து கொண்டேன். வரலாற்றின் தரவுகளை தேடி ஆராய்ந்து அந்த தெளிவின் மூலமாக உருவாக்கப்படும் இவ்வெழுத்துக்கள் பல உலகத்தை நம்முடைய மனக்கண்ணில் விரிவடைய வைக்கிறது. நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் காப்பியை பற்றி இருக்கும் முதல் கட்டுரை, காப்பி நம்முடைய நாட்டிற்கு எப்படி வந்தது பல காலங்களில் அதன் பயணம் எப்படி இருந்தது இப்போது அது இருக்கும் இடத்திற்கு அந்த பயணம் என்னவாக அதை வைத்திருக்கிறது என ஒரு இருபது பக்க கட்டுரைக்கு எழுவதற்கும் மேற்பட்ட சான்றுகளை வைத்து இயற்றி இருக்கிறார். அந்த சான்றுகள் எல்லாம் பல வரலாற்று ஆசிரியர்களின் எழுத்து ஆராய்ச்சியும் அதே போல பல எழுத்தாளின் நாவல்களும் கட்டுரைகளும் சலபதி அவருக்கு பேருதவியாக இருந்திருக்கிறது. இந்த ஒரு கட்டுரையின் வாயிலாக பல நாம் அறியாத விடயங்களை அறியக்கூடும். வியக்கத்தக்க வகையிலும் அது இருக்கக்கூடும்.
அதேபோல புகையிலை எப்படி நம்முடைய மக்களின் வாழ்வியலோடு நுழைந்தது என்று விரிவான கட்டுரையும், பாரதியின் காலத்தில் பதிப்புத்துறை எவ்வாறு இருந்தது என்றும் அதனால் பாரதி எந்தெந்த நிலைக்கு தள்ளப்பட்டான் என்ற ஒரு கட்டுரையும், பாரதியின் கருத்து படங்கள் என்ற கட்டுரையை வாசிக்கையில் தமிழில் முதன் முதலில் 'இந்தியா' என்று கருத்து படத்தின் பத்திரிக்கையை பாரதி தான் நிறுவினான் அதனால் நடந்த புரட்சியும் எழுச்சியும் வீழ்ச்சியும் யாதென அறியக்கூடும், மொழியின் நவீனமயமாக்குதலில் பாரதியின் பங்கு அலாதியானது முதன்மையானது என லுஃமான் எழுதிய கட்டுரை விமர்சித்து அதில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டி விவரிக்கும் ஒரு கட்டுரை, அப்படியே வ.உ.சி யின் சைவ சித்தாந்தத்தை பற்றிய ஒரு கட்டுரை, புதுமைப்பித்தன் பாடிய ஒரு வசை பாடல் எப்படி உருவானது என்பதை தெளிவுபடுத்தும் ஒரு கட்டுரை, தமிழ் கலை சொல்லாக்கம் நடந்த போது இருந்த சூழலும், அரசியலும், அதிலிருந்து மீண்டு தமிழ் எப்படி கையாளப்பட்டது என்பது பற்றிய ஒரு கட்டுரை, கடைசியாக, தமிழில் பகடி இலக்கியம் யாவை என்பதை ஒரு பெரிய கட்டுரையில் விவரித்து கொண்டே செல்கிறார்.
சலபதியின் எழுத்தும் அவர் அறிவாற்றலையும் கண்டு வியந்தேன். ஒரு கட்டுரைக்கு மட்டும் எவ்வளவு உழைப்பு தேவையாக இருக்கிறது என்பதை உணர முடிந்தது. அருமையான அனுபவத்தை தந்தது. மென்மேலும் பல வரலாறுகளை தேடி வாசிக்க மனம் எத்தனிக்கிறது. கட்டாயம் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
Enjoyed it immensely. I have read AR Venkatachalapathy before, in anthologies and elsewhere, but reading him here in some kind of arrangement is almost like sitting through a short course you are totally into. This is by all means a scholarly work, but it is also a kind-of historical record for the common reader like me, who just can't go through all the primary research that is cited in this book.
The range is breathtaking, and for a Tamil who is interested in history, pleasurable and vertigo-inducing at the same time. From the Tamil literary canon (incredibly important to Tamil identity and imagination) to coffee and tobacco consumption, to Pudumaipithan's writing, to the Dravidian-Saivite clash in colonial India, the essays are diverse. With each sentence, you are coming to terms with either something you did not know before, or are discovering anew something you thought you knew.
For me, this may be a gateway to more of AR Venkatachalapathy. Brilliant scholarship, excellent writing.
I am a big fan of Chalapathy and his work. Over the last year, I have spent a lot of time listening to his YouTube talks and reading his books and essays, mostly in Tamil and some in English. Both languages show his clarity, depth, taste and elegance as a writer.
I have read the original Tamil version of this book that was published some decades back. But when this book was republished in English and it is rewritten by Chalapathy himself, it felt like a treasure that cannot be missed. I loved both the English and Tamil versions of the same book. It gives a peek into what Chalapathy thinks when he is addressing to the English readers.
This book opens up the political, social, and cultural history of Tamil Nadu in a way that is both scholarly and deeply engaging. Chalapathy is a rare kind of historian. He brings strong academic rigor, yet his writing is accessible and enjoyable. In that sense, I see him as one of the foremost public historians of Tamil Nadu.
Like the public historians like Manu Pillai, Anirudh Kanisetti, or Sam Dalrymple, he makes reading history a joy. Like Ramachandra Guha, he bridges academic history and public writing. But Chalapathy does something even more special. His academic texts themselves feel alive and authentic.
This book is a treasure trove for anyone interested in Tamil Nadu. However in this reading one thing stood out for me. An essay on Tamil canonical works. We usually assume that texts like Thirukkural, Silappadikaram, Sivaka Chintamani, Periyapuranam, and the Alvar and Andal works have always held their current status. Chalapathy shows that this “canon” was shaped only about 200 years ago. It emerged from debates, conflicts, and negotiations between different groups in the late 18th and 19th centuries.
That was a powerful reminder. Much of what we treat as timeless culture or fixed identity is actually recent and constructed. It makes you take culture seriously, but not too rigidly. It brings a sense of humility and freedom in how we see our traditions.
This is a delightful and thought-provoking book. If you are from Tamil Nadu, it will deepen how you see your own culture. If you are not Tamil and want to understand the social, political, and cultural fabric of Tamil Nadu, this is one of the best places to start.
A very educative and enlightening cultural history of Tamil Nadu, especially the late colonial era and the modern era. So many facets of current day life that we take for granted had very different origins not too long ago! Coffee, or kaapi, from name to consumption practices, diffuses into Tamil society in a very unique way. Entertainment, politics, identity, language, writing genres...all have been influenced by, and in turn, influenced Tamil society and it's different strata.
வரலாறை இவ்வளவு சுவாரசியமாகவும் அதே சமயம் விரிவான தரவுகளுடனும் எழுத முடியுமா? என்று இந்நூலை வாசித்த பின் தான் உணரத் தொடங்கினேன். “In those days there was no coffee(2006)” பல பிரமிக்கவைக்கும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.
தமிழ்நாட்டில் காபி வந்த கதை, புகையிலை நுழைந்த அதை, சென்னை என்ற நகரம் உருவாக தொடங்கிய சமயத்தில் மக்களின் பொது புத்தியில் எப்படி பதிந்திருந்தது, விடுதலைக்கு முன் செய்தித்தாள்களில் கேலிச்சித்திரம்(Cartoons) பரிணமித்த கதை, புதுமைப்பித்தனின் இலக்கியமும் அது அணுகப்பட்ட விதமும் என முதல் பகுதி அமைந்துள்ளது. இதிலிருக்கும் ஒருவொரு கட்டுரை பற்றியும் ஒரு பதிவை எழுதலாம் அவ்வளவு ஆழமான கருத்துக்களை வாசகனுக்கு கடத்தும் தகவல் பெட்டகம் இந்நூல் .
இரண்டாவது பகுதி முழுக்க முழுக்க காலனிய காலத்தில் தமிழ் இலக்கியத்தையும் அதை சுற்றி நடந்த அரசியலையும் மையமாக வைத்து நான்கு அத்தியாயங்களில் விளக்க முற்படுகிறதுக்கு. சங்ககால நூல்கள் 19 ஆம் நூற்றாண்டில் எப்படி அணுகப்பட்டது என்பதில் தொடங்கி சமஸ்கிருத மொழி நீக்கம், மொழி சீர்திருத்தத்தில் தனி தமிழ் இயக்கத்தின் பங்கு , திராவிட இயக்கத்தின் நவீனம்- மொழியியலில் செலுத்திய தாக்கம் எத்தகையது, திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமா?, சுயசரிதை நூல்கள் குறிந்தளவிலேயே கிடைப்பதற்கு உளவியல் மற்றும் சமூக காரணிகள் எவை என்பது வரை இந்த பகுதி நீள்கிறது.
இதில் இடன்பெற்றுள்ள அனைத்து கட்டுரைகளும் தரவுகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு நோக்கில் எழுதப்பட்டவை. ஆனால் இலக்கியத்தன்மையும் கதைசொல்லும் விதமும் ஒரு சிறந்த புனைவை போலவே மிக அழகாக எழுதப்பட்டிருந்தது.
காபி பற்றிய கட்டுரையை மிகவும் சிலாகித்து இரண்டு ��ுறை வாசித்தேன், புதுமைப்பித்தன் பற்றிய கட்டுரையை படித்த பின் தினம் ஒரு சிறுகதை என புதுமைப்பித்தனை வாசித்து கொண்டிருகிறேன். பிற கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் இதற்கு முன்பிருந்த புரிதலை மேம்படுத்திக்கொள்ளும் விதத்திலேயே இருந்தது. எத்தனை காலம் கடந்து படித்தாலும் இந்த கட்டுரைகள் உயிர்ப்புடன் இருக்கும்.
வரலாறு என்பது இப்படி தான் எழுதப்பட்டிருக்கவேண்டும், அன்றாடம் வாழ்வில் எதிர்கொள்ளும் விசயங்களை தரவுக்குகளின் துணையுடன் அணுகுவது வாசிப்பு அனுபவத்தை மெருகேற்றுகிறது.
ஒரு சமூகமாக நாம் முன்னேற அறிவை ஜனநாயகப்படுத்த வேண்டும், மக்களிடம் ஒரு கருத்து பரவலாக பேசப் படும்போது மாற்றங்கள் சாதாரணமாக நிகழும். இத்தகைய புத்தகங்களை வெங்குஜன மக்கள் வாசிக்கும் விதத்தில் எழுதுவதே, ஜனநாயகப்படுத்தலின் ஒரு பகுதியாக நான் பார்க்கிறேன்.
இந்நூலை வாசித்துக்கொண்டிருந்த சமயத்திலேயே இவரது பிற புத்தகங்களை சேமிக்க தொடங்கிவீட்டேன். அனைத்து புத்தகங்களுக்கும் அறிமுகம் எழுதுகிறேன். "அந்த காலத்தில் காபி இல்லை"(காலச்சுவடு வெளியீடு என்ற தலைப்பில் தமிழிலும் கிடைக்கிறது, வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.
Interesting but unlike what the title suggests, this book is a niche within the niche and unpacks colonial heritage of Tamil Nadu (only). The chapter on coffee is easily the most enjoyable bit in the book and people's reaction to ongoing culture shift (the reluctance, social churning, caste dynamics, 'modern' coming of age,) is well documented across chapters.
Must read for anyone interested in the colonial cultural history of Tamil Nadu in particular and South Indian literary history in general. The first half of the book was quite interesting especially the chapter on coffee was wonderfully penned down by the cultural historian.
அந்த காலத்தில் காபி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள் 1. அந்த காலத்தில் காபி இல்லை
சலபதியின் ஆய்வு நூல் , ஆய்வு நூல் போன்றே கறாராக சரளமற்ற நடை , அலங்கார வார்தைகளின்மை , நிறைய மேற்கோள்கள் கொண்டு அமைந்துள்ளது. காப்பியானது ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது , அரேபியா வழியாக இந்தியா வந்து சேர்கிறது , எனினும் அது தமிழகம் வர 20 ஆம் நூற்றாண்டுவரை எடுத்துக்கொள்கிறது. முதலில் அரேபியர்கள்தான் பருகுகின்றனர் , பின்னர்தான் நடுத்தரக்வர்க்கம் அதை கைக்கொள்கிறது. அந்நாளில் காபி அருந்துவது மது அருந்துவதற்கு ஈடாகப் பார்க்கப்பட்டது . பல எழுத்துக்களில் காப்பி ஒரு உருவகமாக காட்டப்பட்டுள்ளது. 2. புகையிலை பயன்பாடும் , பண்பாடும் புகையிலையும் தமிழகத்திற்கு ஒரு ஐரோப்பிய இறக்குமதிதான் , சுருட்டு , சிகரெட்டு , பீடி , மூக்குப்பொடி எனப் பலவற்றிலும் புகையிலையே மூலப்பொருள். புகைக்கப் பயன்படுவதால் புகையிலை எனப் காரணம் பெற்றிருக்கலாம். 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனிச் சர்க்க்கரை புலவர் "புகையிலை விடு தூது" என தூது நூலை எழுதியுள்ளார். 3. நமக்குத் தொழில் கவிதை பாரதியார் தன் இறப்பு வரையே வறுமையில் வாழ்ந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பல நூல்கள் எழுதி எழுத்தையே தன் தொழிலாக அறிவித்து கொண்ட பாரதியால் எதனால் எழுத்தின் மூலம் சுகமாக வாழமுடியவில்லை என்பதை ஆராய்வதே இக்கட்டுரை. முதன்மையாக அக்கால எழுத்துலகம் பற்றி ஆராய்கிறார் . அந்நாளில் எழுத்து பதிப்பு என்பது புரவலர்கள் வழியாகவே நடந்துள்ளது. பாரதி பதிப்பிக்க முன்னெடுத்த 1906ஆம் ஆண்டானது , புரவலர்கள் முடிந்து , காலனியாதிக்கம் துவங்கியது. மேலும் இரத்தல் என்பதை விரும்பாதவன் பாரதி . இறுதியில் தன் சுயத்தை விட்டொழித்து எட்டயபுர ராஜாவிற்கு , பாராட்டி கவிதைகள் எழுதியபோதும் எந்த உதவியும் கிடைக்க பெறவில்லை . ஒரு கட்டத்தில் பாரதி இலாபம் தரக்கூடிய ஒரு புத்தக பதிப்பு திட்டத்தை முன்வைக்கிறார் , அதற்கும் இறங்குவோரில்லை. 4. பாரதியின் கருத்து படங்கள் அந்நாளில் பத்திரிக்கைகளில் கருத்துக் படம் வெளியிடப்படுவது குறைவாகவே இருந்துள்ளது . இதிலும் பாரதியே முன்னோடியாக இருந்துள்ளார் . அவ்வாறான படங்கள் அவர் ஆசிரியராக இருந்த 'இந்தியா ' பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது . 1908 ஆம் ஆண்டு கைது செய்ப்படுவோமென புதுச்சேரி சென்று அங்கேயே பத்தாண்டு காலம் வாழ்ந்தார். இந்தியா பத்திரிக்கையை நடத்தியவர்கள் மண்டயம் குடும்பத்தினர். 5. பாரதியும் மொழியின் நவீனமயமாக்கமும் இதில் எம்.ஏ .நுப்பான் என்பவர் எழுதிய "பாரதியின் மொழி சிந்தனைகள் " என்ற நூலின் விவாதமாக அமைந்துள்ளது. முதலில் எம்.ஏ . நுப்பான் என்பவர் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழறிஞர் , இதற்குமுன் இவரின் பெயரையோ , படைப்புகளையோ பற்றி அறிந்ததில்லை . ஆசிரியரே இது பெரிதும் அறியப்படாத நூலென்றே ஒப்புக்கொள்கிறார். தற்காலத்தில் பெரிய விவாதமில்லாத ஒன்றை எடுத்து அதற்க்கு விவாதமாக இருக்கும் கட்டுரை , உபயோகமாகப்படவில்லை. 6. வ.உ.சியும் சைவ சிந்தாதமும் வ.உ.சி பெரும்பாலும் செக்கு , கப்பல் இந்த இரண்டிலேயே அறியப்படுகிறார். அவரின் சைவ சமைய ஈடுபாட்டைப் பற்றியது இக்கட்டுரை. சைவத்தில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக , சிவஞான போதம் என்னும் சைவ நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். பொதுவுடைமை இயக்கம் , தொழிலாளர் இயக்கம் எனப் பல்முக ஆளுமையாக இருந்த காரணத்தினாலே , வ.உ .சி ஒரு மித சைவராகவே இருந்துள்ளார். இதன் காரணமாக தீக்கை பெறாத ஒருவர் சிவஞான போதத்திற்கு முன்னுரை எழுதுவது எப்படி என கடுசைவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். 7. புதுமைப்பித்தனின் வசைபாடல் புதுமைப்பித்தன் மூனாவருணாச்சலமே என்ற ஒரு வசைபாடலை எழுதியுள்ளார். இது மு.அருணாச்சலம் என்ற ஒருவரை வசைப்பாடுவது. இக்கட்டுரை அதன் பின்னணியை ஆராய்வது. 1940 களில் தினமனி ஒரு பதிப்பகம் துவங்கி நூல்களை பதிப்பிகின்றனர் , அதில் மு. அருணாச்சலம் எழுதிய "இன்றைய தமிழ் உரைநடை' என்ற நூலும் ஒன்று . அந்நூலானது அக்காலத்திலிருந்த மறுமலர்ச்சி குழாம் எழுத்தாளர்களை கடும் விமர்சனம் செய்தது . அதில் ஒரு பகுதியாக தினமனி ஆசிரியர் பீ.ஸ்ரீயும் விமர்சிக்க படுகிறார். தான் விமர்சிக்க பட்டதை நூல் வெளியான வரை பீ.ஸ்ரீ அறியவில்லை , அதற்கு காரணம் அதில் உதவியாசிரியராக பணியாற்றிய ரகுநாதனும் , புதுமைப்பித்தனும் அவர் அறியாமல் பார்த்துக்கொள்கின்றனர். பின்னர் அதே புத்தகத்தில் பீ.ஸ்ரீ எழுதிய மறுப்பும் வெளிவருகிறது. அந்நூல் பற்றி அறிந்திருந்த புதுமைப்பித்தன் மூனாவருணாச்சலமே என்ற வசைப்பாடலை எழுதுகிறார்.
8. கலைச்சொல்லாக்கமும் தமிழ் அடையாளமும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் கலைச்சொற்கள்(Tamil Glossary) உருவாக்க ஏற்படுத்தப்பட்ட முயற்சிகளை கூறுகிறது இக்கட்டுரை. பார்ப்பன தமிழறிஞர்கள் பலரும் வடமொழி வேர்ச்ச்சொற்களை கலைச்சொல்லாக்கத்தில் பயன்படுத்த வேண்டுமென்கின்றனர். இதில் குறிப்பிடும்படியான ஒருவென்றால் அது உ.வே.சா தான், அவர் வடமொழி வேர்ச்சொற்களை அவ்வாறே பயன்படுத்தலாம் என சொல்கிறார். 1941 ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் அவருக்கெதிரான தீர்மானமும் நிற���வேற்றப்படுகிறது. 9. தமிழில் பகடி இலக்கியம் ஆதிசங்கரரின் மோகமுத்திரத்தை முன்வைத்து இராஜாஜி பஜகோவிந்தம் எழுதினார் , அதை பகடி செய்யும் விதமாக ஒருவர் பசிகோவிந்தம் எழுதினார். இதுதான் பகடி இலக்கியம் என்றொருமுறை . மிகையான எழுத்து , காலச்சென்ற கருத்துக்கள் , நடைமுறை மனித சிக்கல்களுக்கு தொடர்பில்லாமல் எழுதுவது , இவையே பெரும்பாலும் பகடி செய்ப்பட்ட நூல்கள். உதாரணம் வைரமுத்துவின் அவசியமற்ற அலங்காரநடை , "வயதான ஒரு பெண் நடந்து வருகிறாள் " என்பதை ,"அந்தச் சிங்கார கிழவி ஒய்யாரமாக நடந்து வருகிறாள் " என்பது போன்ற அவசியமற்ற அலங்கார நடைகளை சுட்டும் விதமாக எழுதப்பட்ட "காக்கை நரி கதை " இரசிக்கும்படியாக உள்ளது . தமிழகத்தில் உள்ள ஊர் கோவில்கள் அனைத்திற்கும் ,தலபுராணம் ஒன்றிருக்கும் , அதில் அக்கோவில்களுக்கு வந்துச்சென்று சாபவிபோசனம் பெற்ற தேவர்கள், முனிவர்கள் பற்றிய கதைகள் உண்டு . சில தலபுராண கதைகள் ஒருபடி மேலச்சென்று , வனவாச காலத்தில் , பஞ்ச பாண்டவர்கள் வந்து வணங்கிச்சென்றதாக உரிமையும் கொண்டாடுகின்றன. சுருக்கமாக இவை பெரும்பாலும் டெம்ப்லேட் கதைகளே . இதன் காரணமாக பெரியபுராணம், கந்தபுராணம் தவிர்த்து பெரும்பான்மையான புராணங்கள் பகடிச் செய்ப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் புதுநானூறு என்ற பகடிநூல் பற்றிய குறிப்புள்ளது , இதை எழுதியவர் கோவேந்தன் . இது திராவிட இயக்கம் என பொதுவாக குறிப்பிட்டாலும் , கலைஞர் கருணாநிதியை குறிப்பதாக தெரிகிறது. "அறிஞர் இடத்தில் அறிவிலி அமர்த்தினோம் " அனால் இந்நூல் அதிகம் கவனம் பெறாத ஒன்று என தெரிகிறது . இந்நூலை பற்றிய குறிப்புக்கள் எதுவும் இணையத்திலில்லை . கோவேந்தன் அவர்களின் , விக்கி இணையப் பக்கத்தில் இந்நூல் பற்றி எந்த குறிப்புமில்லை.
In Those Days There Was No Coffee started off on a strong note. The initial chapters were engaging, thoughtful, and offered fascinating insights into cultural history and everyday practices. The writing was accessible and made me curious enough to keep turning pages.
However, as the book progressed, the essays began to feel repetitive, circling around similar themes without adding much new depth or perspective. What could have been a sharp and concise collection felt stretched, making a relatively small book of 250 pages take longer than expected to finish.
That said, it’s not a bad book — just one that works better when read selectively rather than cover to cover. Ideal for readers interested in cultural history essays, but patience is required.
எனக்கு தெரிந்த வரையில் வரலாற்றின் பக்கங்களை இவ்வளவு கோர்வையாகவும், மெல்லிய நகைச்சுவையோடும், வாசிப்பவருக்கு திகட்டாத வகையில் அதே நேரத்தில் வாசகர்கள் கூர்ந்து அவதானிக்க வேண்டிய செய்திகளை படைக்கும் ஒரு நடை சலபதி சார் இன் ஆகப்பெரும் தனித்துவம் ! இந்த புத்தகத்திலிருந்துதான் நான் சலபதி Sir ய் கண்டெடுத்தேன் ! அதன் பிறகே சலபதி சார் இன் அற்புத புத்தக உலகத்துக்குள் நுழைந்து இன்று வரை திளைத்து கொண்டிருக்கிறேன் !
அவர் பெருமுயற்சி எடுத்து பல வருடங்களின் உழைப்பை குடுத்து தொகுத்த புதுமை பித்தன் களஞ்சியத்தை சுட சுட முன் வெளியீட்டு திட்டத்தில் பதிவு செய்து நேற்று தான் பெற்றேன் ! மற்றுமொரு பரமானந்த வாசிப்பவனுவத்துக்கு தயாராகிறேன் !
Reading ARV is like listening to your grandfather's stream-of-consciousness stories of "how it used to be" - except extremely well-researched and NOT ahistoric. Somehow extremely niche but also an incredibly diverse range covered, the best kind of history book!
Read this in Tamil. The range of topics is covered is diverse and one may not always be interested in that particular topic. But AR's research is meticulous and his writing always compelling!