Jump to ratings and reviews
Rate this book

அஞ்ஞாடி [Agngnaadi]

Rate this book
ஒன்றரை நூற்றாண்டுக் காலம் ... தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்... சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை... மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு... மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்... பூமணியின் தனித்துவமான நடையில்... ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்... தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்...

1948 pages, Kindle Edition

First published January 1, 2012

105 people are currently reading
1049 people want to read

About the author

Poomani

11 books154 followers
From Wikipedia:

Poomani (Tamil: பூமணி) (born 1947) is a Sahithya Academy Winning Tamil writer from Kovilpatti in the south Indian state of Tamil Nadu.He won Sahithya Academy Award for his novel Agnaadi in 2014.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
87 (57%)
4 stars
45 (29%)
3 stars
12 (7%)
2 stars
4 (2%)
1 star
4 (2%)
Displaying 1 - 19 of 19 reviews
Profile Image for Arunmozhi Ganesan.
108 reviews24 followers
January 18, 2019
இந்த வருடத்தின் முதல் நாவலே.. Magnum opus.

மன்னர்களின் கம்பீரத்தையும் பராக்கிரமங்களையும் பேசிய நாவல்களே வரலாற்று நாவல்களாக கொண்டாடப்பட்ட இந்த நாட்டில் இரு நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு சமூகத்தின் வரலாற்று பதிவாக விரிகிறது.. அஞ்ஞாடி.

ஒரே சமூகம் வாழும் ஒரு கிராமத்தில் வேறொரு சமூக குடியேற்றம் எப்படி நடைபெறுகிறது, சமண நாட்டார் தெய்வங்களை இந்து மதம் எவ்வாறு செரித்து கொண்டது, Ricebag converts என்று எளிதாக நகையாடப்படும் கிருத்துவ மத மாற்றத்திற்கு பின் எத்தனை காரணங்கள் உண்டு, இன்று ஆண்ட பரம்பரை பெருமை பேசும் நாடார் சமூகம் அடைந்த இன்னல்கள் எத்தனை சமூகத்தில் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு அவர்கள் கொடுத்த உழைப்பு எத்தகையது, பஞ்சம் என்றால் என்ன அது எளிய மக்களின் வாழ்க்கையை எவ்வாறு புரட்டி போடும், பாலியல் திருமணம் சார்ந்த விஷயங்களில் சாதிய அடுக்கு முறையில் வெவ்வேறு நிலையில் உள்ள சாதிகளின் அணுகுமுறை எப்படி, சாதிய அடுக்குகளில் கீழ் நிலையிலிருந்த சமூக மக்களுக்குள் இருந்த பிணைப்பு, வெள்ளையர் காலத்தில் பாளையக்காரர்களின் வரலாறு.. இன்னும் எத்தனை எத்தனை..

கருப்பி அடிக்கடி மலைப்பது போல்.. "அஞ்ஞாடி"
Profile Image for Nagarajan.
76 reviews23 followers
September 13, 2021
அஞ்ஞாடி: கதைகளின் பொக்கிஷம், தகவல்களின் களஞ்சியம், எளிய மக்களின் வாழ்வியல், வரலாற்றுப் பேழை, அழகியல் விருந்து. மொத்தத்தில் தமிழ் மொழியின் ஆகச்சிறந்த படைப்பு
Profile Image for Nagarajan.
76 reviews23 followers
September 13, 2021
Classic in one word. Poomani's best one. 1050 pages and covering history spanning over several hundred years. Want to know about the rising of Nadars, missionaries, and their conversions, clashes arising out of different communities on temple entry, history of Ettayapura samasthanam, Paanchalunkuruchi Samasthanam, the role played by Marudu brothers, Pudukkotai Thondaiman. This book is a treasure of knowledge, history, literary aesthetics. You will for sure engrossed in their time and life. You need to isolate yourself and take this journey without any interruption.
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books177 followers
May 28, 2024
#282
Book 43 of 2024- அஞ்ஞாடி
Author- பூமணி

"அஞ்ஞாடி" என்பது சமூகம் வழியற்றவர்களாகக் கருதப்படும், நிரந்தர இடம்பெயர்ந்தவர்களை குறிக்கும் ஒரு சொல். 1948 பக்கங்கள்,பல கதாபாத்திரங்கள், பல கதைக்களங்கள், பல்வேறு கிளைக்கதைகள் கொண்ட நாவல். இத்தகைய எழுத்து முறை இதுவரை நான் படித்ததே இல்லை என்பதே உண்மை! மிகவும் ரசித்து வாசித்த புத்தகம் இது.

"அஞ்ஞாடி" நாவல் தமிழ் நாகரிகத்தின் பல பரிமாணங்களை அலசுகிறது. இந்த நாவல் பல கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றின் வாழ்க்கை வரலாறுகளை மாறி மாறி நம்மிடம் கூறுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் இயல்பில், அதன் நிலைமைகளில் உலவுகிறது. ஆண்டி மற்றும் கருப்பி போன்ற முக்கியமான கதாபாத்திரங்கள் நம் நெஞ்சை நெகிழ வைக்கும் விதத்தில் வரைந்துள்ளன. இதில் வரும் பழமொழிகளும்,பேச்சு வழக்கும் அந்த ஊரிலே நாம் வாழ்ந்து திரும்பிய மாதிரியான ஒரு அனுபவத்தை தருகிறது.

பூமணி தனது எழுத்தில் தமிழ் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளை, அவற்றின் சிக்கல்களை, மன உளைச்சல்களை வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த நாவல் ஒரு புதிய பார்வையை, தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். இது ஒரு புது அனுபவத்தை வழங்கும். இந்த நாவல் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். இதைப் படித்தவரின் மனதில் இது நீங்கா இடம் பிடிக்கும். இது ஒரு ஆராய்ச்சி நாவல்,இதன் பின் எவ்வளவு உழைப்பிருக்கும்..எழுத்தாளர் பூமணியின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையைக் கண்டு வியந்தேன்! What a craftsmanship! இத்தனை ஆண்டுகள் இதை வாசிக்காமல் போனதை எண்ணி கொஞ்சம் வருத்தம் இருக்கத் தான் செய்கிறது.

இந்த நூலை சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் மறுபடியும் படிப்பேன். மீண்டும் என்னை அழவும் வைக்கும்! இந்த நாவல் ஒரு அனுபவம்! எல்லாரும் பெற வேண்டிய ஒரு அனுபவம்! “சொகமான அனுபவம்” (in his style)
Profile Image for Balasubramanian Palanisamy.
13 reviews4 followers
September 3, 2020
A roller coaster ride into the history of south tamilnadu (Sivakasi, Kalugumalai, Ettayapuram, etc.). Poomani recorded many events in detailed and interesting manner. Life of people in village in two centuries before, Great Famine, Nayaka rulers, Raise of Nadar community, Spread of Christianity, Communal violence, etc. etc. everything with a background a few families. And those families crosses generations.

Many folk songs (themmangu, kummi) are recorded and they are nice to read.
8 reviews
May 12, 2020
Too much detail . I didn't like the flow . My concern was there are a lot of historic details but not sure to believe them as a whole since its a fiction novel . The human part was good but the historical detail was not helping the story to move forward. I was disappointed .
Profile Image for Jagan Sagaya Nathan.
26 reviews2 followers
November 9, 2020
19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் வாழ்ந்த மக்களின் தொழில், பண்பாடு, கலாச்சாரம், காதல், வீரம், சாதி, மதத்தின் பெயரால் கொலையுண்டு மாண்ட மனிதர்கள் என அனைத்தையும் எழுத்துக்கள் மூலம் கோத்து, இக்கால சமூகத்திற்கு தானம் கொடுத்துள்ளார் ஆசிரியர் ஐயா. பூமணி...
Profile Image for Panneerselvam.
11 reviews
June 8, 2020
Its a wonderful and must read novel for serious book readers.
Profile Image for கவிதா பாரதிராஜா.
Author 1 book2 followers
January 5, 2023
மாரியின் பறக்கும் கழுதை, பேசும் முயல், இன்னும் தவளை, யானை, பனைமரங்களைப் பேத்தெடுத்து ஆட்டம் போடும் பேய்களும் பூதங்களும் இத்தனைக்கும் மத்தியில் வழிகாட்டும் முனியசாமியும், இன்னும் நிறைய, நிறைய மாயக்கதைகள்.

சீவிப்போட்ட சுரைக்காய்த் துண்டு போன்ற நிலா, விடிந்ததும் கனாவை முந்தியில் முடிந்து கொண்ட கறுப்பி, பெயருக்குப் பொருத்தமான ஆனந்தி, பொறுமை, பக்குவம், கதாநாயகனுக்குரிய அத்துணை அம்சத்துடன் நட்பை சிவிகையாக இட்டு நடமாடும் ஆண்டி, பஞ்சத்தால் சுருக்கில் போட்டு கிணற்றில் வீசப்பட்ட நாய், தலையில் ரத்தம் இல்லாமல் வற்றி இருந்த பேன், கொல்லப்பட்ட மாடும் மற்றவையும்.

ஊர்கெட்டு, மக்கள் மாண்ட பின் பஞ்சம் காத்த மழை, பேயான பெண் குடும்ப வாழ்விற்கு ஆசைப்பட்டு
மனிதனை மணந்து, பின் அவளைப் பேய் என அறிந்து விட்டுப் போனவனைத் தேடியலைய, அவளை அரவணைத்து வழி சொல்லும் மற்றுமொரு மனிதன், காளி பெற்ற ஏழில் கூடைதூக்காது மடிந்த இரண்டைத் தவிர மற்ற ஐவரும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையில் அடைந்ததும்.

திருமுறை பாடலுடனான வரலாற்றுக் கதைகள், வேத நூலின், அதனுடனான மக்களின் கதைகள், கட்ட பொம்மன், ஊமைத்துரை, மற்ற மன்னர்களின் வரலாறு, இந்தியா விடுதலை பெற்ற, பாகிஸ்தான்
பிரிந்த வரலாறு, சிவகாசி உள்ளிட்ட பல ஊர்களின் உருவான, உருவாக்கப்பட்ட மக்களின் மிகத் ��ெளிவான கதைகள், சாதிச் சண்டைகள், மதமாற்றங்கள், மதங்களின் மாற்றங்கள், அதனால் மனிதனுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள், கோவிலுக்குள் நுழைந்த கதை, நுழையப் பாடுபட்ட கதை, கொலை செய்யப்பட்டு சாக்கில் இருந்த கருத்தையனின் அவனுக்காய் ஒரு கிணறு, சித்தப்பாவின் மேடு, நிறைய இறந்து தெய்வமானவர்களின் வரலாறு.

பெரிய சட்டியில் வறுக்கப்பட்ட குழந்தைகள், பெண்களில் முண்டங்கள், ஆண்களில் தலைகள்
அதிக கொலைகளும், கொள்ளைகளும், காதலும், உறவும், ரத்த சம்பந்தம் இல்லாத மதிப்பிற்குரிய உறவுகளும், சொல்லப்படவேண்டிய கணவன், மனைவி பந்தம், பிரிவு, சாமியாரான கதை, அவரும் மடிந்து போன கதை, பரம்பரை, பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகளால் பிள்ளைகளுக்கு வரும் மாற்றம். எண்ணிலடங்காப் பெயர்கள்… அம்மாடி… அவை அத்தனையும் மனிதர்கள்தானே. உண்மையாகவே பூமணி அவர்களுடைய படைப்பு பிரமிக்க வைக்கிறது.

ஒட்டு மொத்தமாக இது ஒரு பொக்கிஷப் பரிசுப் பெட்டகம். எனக்குக் கிடைத்த இந்த அனுபவப் பரிசுகளைத் தவிர நிறைய உணர்வுகள் இருக்கின்றன. சொல்ல, எழுத முடியாதவை. நீங்களும் இந்தப் பெட்டியைக் கண்டிப்பாகத் திறந்து பாருங்கள். சிறந்த பரிசுகளைக் கண்டிப்பாக எடுக்கலாம்…
56 reviews
April 16, 2021
பூமணியின் வெக்கை நம்முன் ஒரு கரிசல் பூமியை விதைத்தது . அதனூடே கதை மாந்தர்களின் உரையாடல்கள் மூலம் நம் முன்னே அப்பூமியின் சமூகக் கட்டமைப்பு, சாதிப் பிரிவினை, மன ஆழங்களை அவருடைய தனித்துவமான நடையில் விவரித்தது .

சிவசாமியும் செலம்பரமும் உலாவிய இந்த மண்ணின் சுமார் 200 ஆண்டுகால வரலாறு தான் அஞ்ஞாடி. வண்ணாக்குடி வரலாறில் துவங்கி நாடார்கள், மறவர்கள், கட்டபொம்மு, ஆங்கிலேயர், எட்டப்ப வம்சம், பறையர்கள் ஆகியவர்களின் வாழ்க்கையை பாதித்த நிகழ்வுகளின் தொகுப்பு இந்த அஞ்ஞாடி.

குறிப்பிட்ட காலத்தில் சாதி சமூக கட்டமைப்பு, கலாச்சாரம், சமூக பழக்க வழக்கங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், குடியேற்றங்கள், கலவரங்கள், மதமாற்றங்கள், அரசாங்க மாற்றங்கள், நீதி மன்ற நடைமுறைகள், வட்டார மொழி, பஞ்சம், மீட்பு, நீட்சி ஆகியவற்றின் ஆழமான ஆராய்ச்சியின் முடிவுகளை புனைவினூடே நமக்கு கடத்துகிறார் பூமணி.

ஆயிரம் பக்கங்களை தாண்டினாலும் பூமணியின் தனித்துவமான, நிகழ்வுகளை எவ்வித மேல்பூச்சுகளுமில்லாமல் உள்ளபதி செய்திகளைப் போல் தந்தாலும் அவர் நினைக்கும் உணர்ச்சிகளை, வழிகளை அதன் மூலம் கடத்துகிறார்.

சாகித்திய அகாதமி விருதுக்கு முழுக்க முழுக்க தகுதியுள்ள, நம் சமூகத்தின் ஒரு பகுதியின் மிகத் துல்லியமான ஒரு பெருஞ்சித்திரம் இந்த அஞ்ஞாடி!
14 reviews
April 20, 2021
சிவகாசி கொள்ளை, கழுகுமலை கலவரம் நடப்பதற்கு முன் பின் ஊரின் நிலைமையே கதையின் கரு .
கதையில் வரும் பெரும்பாலான இடங்கள் வரலாற்று பதிவாகவே உள்ளது.
ஒரு கதையை உணர்ச்சி தலும்ப சொல்வதே பூமணியின் சிறப்பு.
ஆனால் இதில் உணர்ச்சிகரமான பகுதிகள் குறைவு .
எண்ணற்ற கதாபாத்திரங்களால் குழப்பம் ஏற்படலாம்.
அருமையான கதாப்பாத்திரங்கள் கொண்டவை கடைசி 150 பக்கங்கள்.
புயலுக்கு முன் அமைதி போல ஒவ்வொரு கதாப்பாத்திரம் முடியும் போதும் பூமணி அறிகுறி காட்டுகிறார்.
தாது பஞ்சம் வரும் பக்கங்கள் நம் உணர்வுகள் மரத்து போகும் பக்கங்கள்.
பல வகையான தகவல்களும் மிக அதிகமான வரலாற்று பதிவுகளும் நம்மை பல இடங்களில் சலிப்படைய வைக்கலாம்.
கருத்தையன் கொள்ளை அடிப்பவர்களை விரட்டி விட்டு அவனும் கொள்ளை அடிக்கத்தான் செய்கிறான். பூமணி அதை ஞாயப் படுத்தவும் செய்கிறார்.இது எந்த அளவு முறையான விசயம் என்று தெரியவில்லை.
இதை படித்து முடிக்கும் போது ஒரு கிராமத்திற்குள் சென்று அதன் வளர்ச்சி நிலை , மனிதர்கள் அனைவரையும் கண் முன் நிற்கும் பிம்பம் அனுபவமாக கிடைக்கும்.

This entire review has been hidden because of spoilers.
Profile Image for Jana.
1 review
October 24, 2025
How two boys became friends and their lifestyle moves along and changes in society with poverty, drought and changes in Community on the basis of God & its roots . An evolutionary documentary along with main characters அஞ்ஞாடி by பூமணி
Profile Image for Nagaraj.
1 review
April 25, 2020
One of the best book which I Read..You almost need patience to complete
5 reviews
January 15, 2023
தமிழக வரலாறு

90களில் தமிழகத்தின் நிலைமையை மிகத் தெளிவாக அலசுகிறது இந்த நாவல், சிறப்பான எதிர்த்து நடையுடன் படிக்கப் படிக்க ஆர்வமுடன் கூடிய சொலவடைகளுடன் அற்புதமாக இருக்கிறது இந்த நாவல்.....
Displaying 1 - 19 of 19 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.