பொதுவாக நவீனங்களுக்கு முன்னுரை தேவையில்லை. ஆனால் டாக்டர் டேனியலின் ரெட் டீ முற்றிலும் வேறு வகையானது. இது ஒரு கதை வடிவில் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிந்தவர்களின் துன்பதுயரங்களை கண்முன் நிறுத்துவதோடு தொடக்ககாலங்களில் அங்கிருந்த நிலைமைகள் குறித்த துல்லியமான விவரணையையும் தருகிறது.
தோட்டத் தொழிலாளர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் டாக்டர் டேனியல். அவர்களிடையே முதல்முதலாக தொழிற்சங்கம் அமைத்தவர்களில் ஒருவர் அவர். எனவே மற்றெல்லோரையும் விட இந்நூலை எழுதுவதற்குத் தகுதி பெற்றவர் டாக்டர் டேனியல்தான்.
நூலில் வரும் கதாபாத்திரங்கள் வேண்டுமானால் கற்பனையானவையாக இருக்கலாம். ஆனால் ஆசிரியர் விவரித்துள்ள நிலைமைகள் தோட்டங்களில் உண்மையில் நிலவியவைதான். இந்தத் தோட்டங்கள்தான் படுமோசமாக நிர்வகிக்கப்பட்டவை. அவற்றில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுக்க மிக மிகக் குறைவான முயற்சியே எடுக்கப்பட்டது.
தொடக்கக் காலங்களில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் வாழ்வையும், வாழ்நிலையையும் பற்றி நாவல்.
Henceforth whenever I drink Tea it will always remind me that it is not black tea, milk tea or green tea. It is RED Tea. The dark tea estates under British rule was really horrible. I believe the movie, Paradeshi did portray its own version of the novel well. However, Bala killed the Doctor's role by depicting him as an obsessed Christian missionary.
இங்கு படிக்கும் அத்துனை வார்த்தைகளும், திராவிட, பெரியாரிய, இடதுசாரிய சித்தாந்த கழிசடைகளாலும், கால்டுவெல் வகையறாக்களாலும், எவருக்கெல்லாம் வெள்ளைக்காரனால் உபயோகம் இருந்ததோ அவர்களாலும், தற்போது எழுதப்படும் தலித் இலக்கியங்களின் மறு உருவாக்க மூலமாகவும் (நந்தனின் பிள்ளைகள் போன்ற ) பரப்பப்பட்டுக கொண்டிருக்கும் பொய்யான பிம்பங்களை (எரியும் பனிக்காடு ) இந்நாவல் தவிடு பொடியாக்கி விடுகிறது.
இந்நாவலை வாசிக்கும் கணம் வெள்ளையர்களின் எச்சங்களாக மீதமிருப்பவைகளை பார்க்கும் போது, கடித்து உறிஞ்சும் அட்டையை போல் இரத்தம் முழுதும் உறிஞ்சிய பின்னான வடுக்களாகவே அவைகள் பிரதிபலிக்கின்றன.
எள்ளளவும் மனிதக் கருணையற்ற பாவிகளால் அறியாமையில் இருக்கும் பரிதாபப்பட்ட பல மக்களை வஞ்சித்து கொழுத்ததும் இல்லாது மனித நேயமற்ற வாழ்வை எந்தவொரு கூச்ச நாச்சமில்லாது அளித்தவர்களை பற்றியான விவரனைகளே.
கதையின் காலக்கட்டம் 20ம் நூற்றாண்டு தொடக்கம். பெரும் அறிவியல் புரட்சிகள் இந்த நூற்றாண்டில் இருந்தாலும் எப்படி ஒரு காட்டுமிராண்டி கூட்டம் மக்களை வதைத்து இன்பம் கண்டது என்பதை கதையினூடாக ஊகிக்க முடியும்.
ஒரு சமூகத்திற்கு இன்னொரு சமூகம் குறைந்த பட்ச எதிரிகள் தான். அதை விட கொடுமையானவர்கள் சொந்த சமூகத்திலிருப்பவர்கள் என்பதை கருப்பன், வள்ளி வாழ்க்கை வதைபடுதல் சங்கர பாண்டியன் மேஸ்திரியால் நிர்ணயிக்கப்பட்டு அழிவதை படித்து மனம் கலங்கி புழுங்க வைக்கிறது..
ஒரு கட்டத்தில் புத்தகத்தை வாசிக்காமல் வைத்து விடலாம் என்றே தோன்றியது. வாசிப்பதற்கான மனோதிடம் அவசியத் தேவை இந்நாவலிற்கு. மொழி நடை மிகச் சிறப்பு. ஆனைமலை தேநீர் தோட்டங்களையும், அதன் ஓயாத இயற்கை துயரங்களையும், அதில் பாடுபடும் விளிம்பு நிலை மனிதர்களையும் கண் முன் நிறுத்தி விடுகிறது கண் கலங்க வைக்கும் புதினமே.
ஒவ்வொரு முறை தேநீர் பருகும் போது மண்ணுக்குள் புதையுண்ட மனிதக்குவியல்களால் செழிப்பாக வளர்ந்திருக்கும் இந்த தேநீர் தோட்டத்தின் கதையே படிப்பவர்களின் மனக்கண் முன் நிற்கும்.
இந்த புத்தகம் நான் படித்த சிறந்த நாவல்களில் ஒன்றாகும். இது நாவல் வள்ளி மற்றும் கருப்பன் பற்றியது. தேயிலை தொழிலார்களின் கஷடம் , ஏமாற்றம் , வறுமை, காதல், கேலி , கோபம் , பயம் , இல்லாமை , அவர்கைளின் மீது நடத்தப்படும் /நடத்தப்பட்ட அடக்குமுறை என்ன பலவற்றை இந்த நூல் ஆவணப்படுத்தியுள்ளது .
இது ஒரு வரலாற்று நாவல் என்று சொல்லலாம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்கள் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களை கொத்தடிமைகளாக மாற்றி தங்களுக்கு ஏற்றார் போன்று சட்டங்களை இயற்றி வைத்துக்கொண்டு நவீன யுக முதலாளித்துவ அடிமைத்துவத்தை தொடங்கிவைத்தார்கள். அதாவது மனிதர்களின் வறுமையை பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி, கடன் வலையில் சிக்க வைத்து நிரந்தர அடிமைகளாக மாற்றுவது எப்படி என்பதன் தொடக்கம் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரைப் பலிகொண்டு தான் இந்தத் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டது என்று சொன்னால் மிகையில்லை.
தமிழ் மொழியெர்ப்பு மிகச்சிறப்பாக இருந்தது. அதேசமயம் 250 பக்கங்களில் இந்த நாவலை சுருக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தேவையற்ற சில உரையாடல்களை, அதாவது உதாரணத்திற்கு டாக்டர் ஆபிரகாம் செல்லும் மலைப் பிரயாணம் அதைப்பற்றிய வர்ணனை - எழுத்தர்களுக்கு இடையிலான நீண்ட உரையாடல்கள் இதுபோன்ற விஷயங்களை சுருக்கியிருக்கலாம். ஆனாலும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் துயரை பதிவு செய்ததில் இது ஒரு முக்கியமான நாவல்.
இந்த நாவல் மிகவும் புகழ்பெற்றது என்பதால் இதைப் பற்றி கூற பெரிதாக ஒன்றும் இல்லை புத்தகம் வாசிக்கக்கூடிய அனைவரும் அறிந்த கதைதான் ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டங்களை ஆரம்பிக்கப்பட்ட பொழுது இங்கே வறுமையில் வாடிக் கொண்டிருந்த தமிழர்களை கூலிகளாக , சொல்லப்போனால் அடிமைகளாக அழைத்துச் சென்று அந்த தேயிலை தோட்டங்களில் இரவு பகலாக வேலை வாங்கினார்கள். அவர்களுக்கு முறையான கூலியோ தங்கும் இடமோ எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் மிருகங்களைப் போல் ஒரே வீட்டில் நான்கு குடும்பம் ஐந்து குடும்பம் என்று போட்டு அடைத்து வைத்து பதினாறு மணி நேரம் பதினெட்டு மணி நேரம் என்று வேலை வாங்கி அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி இங்கிலாந்தில் இருக்கும் முதலாளிகளுக்கு அதை லாபமாக அனுப்பி வைத்தார்கள்.
அப்படி அழைத்துச் செல்லப்பட்ட கூலிகள் மலேரியாவால் கொத்து கொத்தாக மடிகிறார்கள் அதைப் பற்றிய எந்த கவலையும் இல்லாத வெள்ளை அரசு அதிகாரிகள் மேலும் மேலும் கூலிகளை கீழே இருந்து அந்த மலைகளுக்கு கொண்டு செல்கிறார்கள் ஒரு பக்கம் வெள்ளையர்கள் அவர்களின் ரத்தத்தை உறிஞ்சிகிறார்கள் இன்னொரு பக்கம் தேயிலை தோட்டங்களில் அட்டைப் பூச்சிகள் அவர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது.
ஒவ்வொரு ஐந்து தேயிலை செடிகளுக்கும் ஒரு கூலியை பலியாக கொடுக்கும் அளவிற்கு மலேரியாவிலும் நோயிலும் அந்த மக்கள் செத்து மடிகிறார்கள். ஒருவேளை தேயிலை தோட்டங்களில் இருந்து தப்பி ஓடும் கூலிகள் அகப்பட்டால் அவர்களை அடித்து கொள்கிறார்கள். அப்படி தப்பி ஓடும் கூலிகளை சட்டப்படி பிடித்து தரவும் அன்றைய சட்டம் இருந்திருக்கிறது அதனால் எந்த கூலியும் அங்கிருந்து தப்பிச்செல்ல முடியாது ஏனென்றால் சட்டப்படியே அவர்களை பிடித்துக் கொண்டு செல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது.
அந்தத் தொழிலாளர்கள் எவ்வளவு கொடூரமாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதற்கு அடையாளமாக ஒரே ஒரு இடத்தை மட்டும் சொல்லுகிறேன் அந்த கூலி தொழிலாளி பெண் ஒருத்தி கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்றால் அவளை கட்டிப்போட்டு அவரின் வயிற்றின் மீது ஏறி மிதிக்கிறார்கள் மனித கொடூரத்தின் உச்சம்.
நீங்கள் பருகும் ஒவ்வொரு கோப்பையின் தேநீரிலும் எங்கள் குருதியின் வாடை வீசுகிறது.
ஆசிரியர் : பி எச் டேனியல் தமிழில் : இரா முருகவேள் நாவல் 334 பக்கங்கள்
ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்படும் இலக்கிய படைப்புகளில் உண்மையும் புனைவும் கலந்து படைக்க பட வேண்டுமா ? அல்ல உண்மையை மட்டுமே உள்ளபடி எழுத்துவடிவில் வெளிக்கொணர்ந்தால் போதுமானதா ? என்ற தர்க்கம் இலக்கிய உலகில் நிலவுவது உண்டு . இதற்கான பதில் அதனை எழுதுவது யார் என்பதில்தான் அடங்கியுள்ளது . அந்த சம்பவத்தில் பங்கெடுத்த அல்லது அதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒருவரால் எழுதப்படும்பொழுது அதில் உண்மைகள் நிறைந்தும் புனைவுகள் குறைந்தும் காணப்படும் , அதுவே ஒரு படைப்பாளி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வைத்து அதன் பாதிப்பில் அந்த நிலத்தையும் மக்களையும் தன் புனைவுலகத்திற்குள் கொண்டுவந்து எழுதும் படைப்பில் புனைவும் உண்மையும் கலந்தே இருக்க கூடும் . பொதுவாக அடக்குமுறையை தோலுரிக்கும் படைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதோடு கதையின் பெரும்பகுதிகள் அவர்களை சுற்றியே நிகழக்கூடும் . ஆனால் , இலக்கியம் என்பது இருபக்கமும் ஒரு சேர பரந்த பார்வை கொண்டு பார்ப்பது . அந்த வகையில் இந்த எரியும் பனிக்காடு வெறும் சரித்திர பதிவாக மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த இலக்கிய படைப்பாக விளங்குவதற்கு காரணம் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதால்தான் . இதனை எழுதிய பி ஹெச் டேனியல் பாதிக்கப்பட்டவர்கள் வலிகளை நேரில் பார்த்தவர் என்பது அவருடைய படைப்பில் தெளிவாக தெரிகிறது . மொழிபெயர்ப்பு நூல் என்று எங்குமே நம்மால் சுட்டிக்காட்ட முடியா வண்ணம் சிறப்பான ஒரு மொழிபெயர்ப்பு . காடுகளை பற்றியும் , மலைவாழ் மக்களை பற்றியும் முருகவேள் அவர்கள் நன்கு அறிந்தவர் என்பதை அவருடைய முந்தைய படைப்புக்களை வாசித்தவருக்கு தெறியும் . கதையின் முதல் அத்தியாயத்திலே கருப்பன் - வள்ளி குடும்பத்தின் வறுமை நம்மையும் சூழ்ந்து கொள்கிறது . அவர்களுக்கு ஒரு வேளை கஞ்சியாவது கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் நமக்கும் ஏற்படுகிறது . அந்த நிலையில் கருப்பனுக்கு வள்ளிக்கும் ஆனைமலை எஸ்டேட் வேலைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்றாலும் நம் மனது அவர்கள் ஏமாற்றப்பட்ட போகிறார்கள் என்று புத்தகத்தின் வழி அவர்களை தடுத்து நிறுத்த துடிக்கிறது . நாம் நினைத்தது போலவே அவர்களை போல் அங்கு நூற்றுக்கணக்கில் ஏழை மக்கள் ஏமாற்றி அழைத்து வரப்பட்டு விலங்கை விட மோசமான ஒரு விதத்தில் நடத்தப்படுகின்றனர் . ஆங்கிலேய அதிகாரியின் குதிரை லாடத்தை விட அவர்களின் இருப்பிடமான லைன் வீடுகள் மோசமாக உள்ளன . உரைப்பணி , ஈரத்தில் ஊறிய கால்கள் , ஒட்டிய உடலின் மிஞ்சிய ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் , கொட்டும் மழையிலும் ஒற்றை கோணி சாக்குடன் வேலை , ரேஷன் என்ற பெயரில் தரமில்லா உணவுப்பொருட்கள் , இத்தனைக்கு பிறகும் இவர்களுக்கு காலனாக திகழும் மலேரியா காய்ச்சல் , நிமோனியா காய்ச்சல், அதற்கு மருத்துவம் செய்ய மருத்துவன் என்ற பெயரில் ஒரு கம்பௌண்டர் , மருத்துவமனை என்ற பெயரில் ஒரு பாழடைந்த குப்பைமேடு என நினைத்து பார்க்க முடியாத ஒரு சூழலில் அவர்களுக்கு தினமும் 12-14 மணி நேர வேலை . இப்படி ஒரு வருடம் முழுக்க அவர்கள் உழைத்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் கூலியோ 40 ருபாய் கூலி அதில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள் போக அவர்களுக்கு மிஞ்சுவது சொர்ப்ப பணம் , ஊர் திரும்புவதற்காக அவர்கள் ஒவ்வொரு வருடமாக தங்கள் வேலையை நீட்டித்து நீட்டித்து இறுதியில் அந்த மண்ணிற்கும் தேயிலைக்கும் உரமாக புதைக்கப்படுகிறார்கள் . உலகின் மூலையில் எங்கோ ஒரு யூதனுக்கும் , ஆப்ரிக்கனுக்கும் , நடந்த அடக்குமுறையையும் , இனப்படுகொலையையும் தேடி வாசித்து மனம் வருந்தும் நாம் இங்கு நம் தமிழகத்தில் நம்முடைய முன்னோர்கள் அதை விட அணுஅணுவாக துடிதுடித்து , எதிர்த்து போராட எந்த சக்தியும் இல்லாமல் , உதவியும் இல்லாமல் மடிந்த எண்ணற்ற மக்களின் துயரை வாசிக்க தவறிவிட்டோம் . இந்த புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை வசித்து கடப்பது மிகவும் கடினம் , ஒரு குடுபத்தில் மூத்த பிள்ளை மலேரியா காய்ச்சலால் படுத்த படுகையை கிடக்க , மற்றொரு பிள்ளை காய்ச்சலுடன் ஒரு கைக்குழந்தையை வைத்துக்கொண்டு இருக்க இவர்களி தனிமையில் விட்டு , கங்காணியின் அச்சுறுத்தலுக்கு பயந்து பெற்றோர்கள் வேலைக்கு சென்று திரும்பி வரும் தருணம் , இறந்த இரண்டு பிள்ளைகளின் சடலங்களை சுற்றி அந்த மழலை விளையாடிக்கொண்டிருக்கும் அந்த காட்சி நம்மை உறையவைக்கும் ஒன்று . இந்த கதையின் ஆழத்தை, அந்த மக்களின் துயரை ஒரு வரியில் கூறவேண்டுமென்றால் " ஒரு பெண்ணிற்கு தன் வாழ்வில் இரண்டு முறை புதுச் சேலை கிடைத்தது ஒன்று அவள் திருமணத்திற்கு மற்றொன்று அவள் பிணத்திற்கு " இந்த படைப்பு சிறந்து விளங்குவதற்கு இன்னுமொரு காரணம் , பாதிக்கப்பட்டவர்களாக கூலிகளை மட்டுமே சித்தரிக்காமல், கண்காணிப்பு பணியில் , எழுத்து பணியில் , அலுவலக பணியில் அமர்த்தப்பட்ட இந்தியர்களும் எவ்வாறு ஆங்கிலேயர்களால் அடக்கியாளப்படுகிறார்கள் என்பதையும் கதை விரிவாக விவாதிக்கிறது . அதிகாரத்தின் பக்கம் நின்றாலும் இந்தியர்கள் நிறத்தாலும் , பிறப்பாலும் எவ்வாறு வெவ்வேறு முறைகளில் அவமானப்படுத்தப்பட்டு , சுரண்டப்பட்டு , ஏவிய வேலைகளை அடிபணிந்து செய்யவும் , ஊழல் மூலம் மட்டுமே அதிகாரத்தின் விருப்ப வட்டத்திற்குள் வர முடியும் என்ற எண்ணம் எப்படி விதைக்கப்படுகிறது என்பதையும் அவர்கள் பார்வையில் கூறப்படுவது கதைக்கு உண்மைத்தன்மையை அதிகப்படுத்துகிறது . இந்த புத்தகத்தின் வாசிப்பு அனுபவத்தில் எனக்கு ஒரு சில இடங்கல் நெருடல்களாக இருந்தன . மக்களின் துயரத்தை , அதிகார வர்கத்தின் கோரமுகத்தை பதிவிடும் பொழுது இயற்கையை பற்றிய வர்ணனைகள் தேவையான ஒன்றா ? வள்ளியின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் அத்தியாயத்தை தொடர்ந்து அந்த அலுவலர்களும் - மருத்துவர் ஆப்ரஹாம் -உம் செல்லும் இன்பச்சுற்றுலா பற்றிய விரிவாக ஒரு அத்தியாயமாக எழுதுவது அவசியமா ? கதையின் பிற்பகுதியில் அந்த அடர்ந்த இருளுக்குள் சிறு ஒளி போல தோன்றிய டாக்டர் ஆப்ரஹாம் மக்களின் துயரை கண்டும் , மருத்துவ வசதிகளின் குறைபாடுகளையும் முறையிடும் பொழுது ஏன் வள்ளியை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பவில்லை , மக்களின் பக்கம் நின்று அதிகாரத்தை எதிர்க்க ஒரு சிறு முயற்சியும் எடுக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை . வள்ளியின் இறப்பிற்கு பின் கருப்பனுக்கு உண்டாகும் தனிமை ஏனோ வாசிக்கும் நம்மையும் சூழ்ந்துகொள்கிறது . இதனை வாசித்த நாட்களில் என் உடலிலும் மனதிலும் சில மாற்றங்களை உணர முடிந்தது . ஒரு புத்தகம் நம்மை என்ன செய்யும் என்ற கேள்விக்கு - அது நம்மை அறுதியான ஒரு நிலைக்கு இட்டுச்சென்று உணர்வுபூர்வமான பதிலை கொடுக்கும் . பனிக்காடுகளில் வறுமையின் தீயில் அணுஅணுவாக எரிந்த நம் மக்களின் வலி மிகுந்த நினைவுகள் இன்றும் அந்த காடுகளிடையே அலைந்துகொண்டுதான் இருக்கும் . இன்று நாம் பருகும் ஒரு மடக்கு தேநீரின் வெப்பத்திற்குள் ஓராயிரம் மக்களின் எரியும் உயிர்களின் ஓலங்களும் கலந்துள்ளன என்பதை இந்த படைப்பு நமக்கு நினைவுபடுத்தும் .
"உயிரியல் ரீதியாக பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன் தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன் தான்"
புதினம் முழுவதும் இந்த வாசகம் நீக்கமற நிறைந்திருக்கின்றது. ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, நம்மக்களும் தங்களுடைய சுயநலத்தை மட்டும் முன்னிறுத்தி அப்பாவி மக்களுக்குச் செய்த கொடுமைகள் சொல்லில் அடங்கா.
தேயிலைத் தோட்டங்கள் = பன்னாட்டு நிறுவனங்கள் கங்காணிகள் = மேலாளர்கள் கூலிகள் என்றுமே கூலிகளாகவும்
இந்தப் புதினம் புதிய பரிமாணத்துடன் இன்றும் தொடர்கிறது.
This heart breaking novel was set in Tamilnadu and Kerala during early and mid 1900s based on the experiences of Dr. Daniel, who witnessed the devastating life of poor people in the tea plantations in various parts of Tamilnadu and kerala states of India. Controlled and managed by British, the life of the workers at the tea plantations had been a most unfortunate one. The starving poor people from across the villages of the southern part of Tamilnadu state, India had been brainwashed by the brokers called "kanganies" and then forced to migrate to the Tea estates situated in the hill stations like Moonaar (now in Kerala state and Vaalpaaraai, Aanaimalai hills). They had been told by the brokers that good salary, shelter and medical facilities would be offered and the better life than the existing would be ensured in there. Since they had no other way to go, they accepted the change and ready to give up their existing wobbling lifestyle in the rural villages which always showed them struggles and vacuous for the years of famine and decided to head the better destiny for the search of better life to them and their generation. Once they reached the plantation and started to work in the fields of tea estates, they realized that their life was ruined and it had turned to be a trivial. What they had received in the tea estates in their later part of the life was so terrific and horrible.. they were trapped and enslaved. The bravest ones thought themselves tried to escape from the humiliated life style, they had been caught by the estate managers and their further life had been spilled by the astounded punishments.. As they had no choice they endured the life style.. There had been no proper shelters, medical care and even the basic needs to run their day-to-day life. Their life was filled with a hot anticipation and excruciating fear. As a whole, they had been treated as if they were animals.. some times worse than animals.. Many died of illness even at their viable ages due to the failure of the sanitation and ominous blood thirsty leeches from all around the estates. hundreds of people migrated from their villages but only a few remained alive after these struggles. At the end, the protagonist realizes if he had not chosen this life he would have not lost his little daughter and his caring wife, but the time past already and he had to get in to the slush of the tea estate for another day's life and to feed his remaining blood to the the leeches of the forest.
The novel was brilliantly written and an excellent story telling by the author.. I am sure one can never control the tears out of his/her eyes when he/she finish reading the last page.. It is a life of a poor who had a lot of so called sweet dreams about his destiny and their generation as like you and me.. It is a story of how the poor one's in the British colonial India had been treated in the history.. It is the story of their life style hailed by the dismay.
After scouring the internet for any at all copies, I'm so glad that I got one copy of this masterpiece by sheer luck.
Translation: A huge kudos to Mr. Ra Muthuvel for giving us the nitty gritties of the Southern Tamil Nadu dialect and his impeccable translation word by word. I didn't feel lost in the book even once as the language was flowing beautifully. (Tamizh vaazhga) I could literally picture the Anamalai hills with it's hairpin bends and the simple life of villagers in Tirunelveli, thanks to him.
The book: Although fictionalized, this is an important piece of literature that talks about the 'real history' where casteism in all it's infamous glory is not just discussed but actually depicted in day to day lives of those deemed as lower castes.
The movie: Unlike the movie, the book focuses on not just the lives of the protagonists 'Valli' & 'Karuppan' but provides a holistic view of life in the tea estates (an honorable term for concentration camps). Director Bala took the essence of the story and expanded it the way he visualized it on the big screen - which I don't mind either.
My verdict: A tough read, not just in parts but page by page, but that didn't stop me from completing it. I felt empowered knowing the hardships and daily struggles that our ancestors went through as indentured bonded laborers, sacrificing their entire livelihood for several generations for all of us to have a nice cup of hot tea. If you haven't read it yet, I urge you to read it. Now.
வாழ்வாதாரத்தைத் தேடி புறப்பட்ட பயணம் வாழ்வையே முடிக்க நினைக்கும் பல சிக்கல்களைக் கொண்ட முடிச்சுக்களாக அமைந்தால் அதைப் பொறுமையாக அவிழ்ப்பதற்குள் வாழ்வே முடிந்துவிடுகிறது.
சகமனிதனையே ஆளும் மிகப்பெரிய சக்தியாக மற்றொரு மனிதன் உருவாக்கும் போது இரத்த சுவடையே விட்டுச் செல்கிறான் வரலாறாக.
வானம் பொய்த்துப்போக வயிற்றுப்பாட்டுக்காக வேலைத் தேடி அலையும் கருப்பனை பசப்பு வார்த்தைகளால் கட்டி மனைவியுடன் எஸ்டேட் வேலைக்கு அழைத்துவரும் மேஸ்திரி. வந்தவுடன் முகத்தில் அறையும் உண்மைகளால் தடுமாறி அங்கே இருந்து தப்பிக்க நினைத்தாலும் ஊர் போய்ச் சேர முடியாத இயற்கை சூழலால் அமைந்த அரணும்,மனிதன் உருவாக்கிய தடுப்புகளும் உயிரைக் கொல்லும் ஆயுதமாகிறது.
எந்த வகையான வசதிகளும் இல்லாத குடியிருப்பு, உடலை உருக்கியெடுக்கும் வேலைகள், அதனுடன் சேர்ந்து உயிரை பலிக் கொள்ளும் நோய்கள். அதில் இருந்து தப்பிப்பவர்களை நிம்மதி மூச்சு விடக்கூட விடாமல் துரத்தும் இயற்கையின் அடுத்தச் செயல்பாடு.
மனிதன் வாழத் தகுதியற்ற இடத்தில் போராடி அவனைத் தங்க வைக்கும் போது உயிரின் மதிப்பு தாழ்ந்து போகிறது.
மூன்று வருடம் போராடியும் கையில் காசு சேர்க்க முடியாமல் துடிப்பவன் மனைவியையும் நோய்க்கு பலி கொடுத்த பிறகு சாவகாசமாக அழக்கூட விடாமல் கருப்பனை வேலை அழுத்தம் கொடுக்கிறது.
இனிமை கூட்டுவதற்குப் பின்னே ஒளிந்திருக்கும் கசப்பு எப்பொழுதும் மறைக்கப்படுவதிலே அதன் சுவைக் கூடுகிறது.
I wanted to read this book for a very long time because of Paradesi and read it over the weekend. The author made an enormous effort not to miss out on anyone from the tea estate. He put in a lot of effort to describe their feelings and perspectives about the happenings in the estate. Karuppan and Valli's story was the core idea for Paradesi but Bala added his own ideas to it.
In the movie, the doctor was portrayed as a Christian missionary and even there is a dialogue that says he is more dangerous than the British. In the novel, he is the only humane person. I am not sure why Bala decided to add his own bias.
In the novel, on every page, you want to know about Valli and Karuppan life but the author goes around everywhere and just to make sure nobody is left and made it drudgery. Nevertheless, if you want to have a deeper perspective of tea estate this is a must-read novel
ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாறு இது. நாம் ஒவ்வொரு முறை தேநீர் அருந்தும் போதும், ஒருசில துளிகளை அவர்களுக்காக சமர்ப்பணம் செய்ய தூண்டும் காவியம்...
"பரதேசி" படத்தில் சில மாறுதல்களை பாலா அவர்கள் செய்திருந்தாலும், இதை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல....
This book written by p.h.daniel speaks about indian servants who served for making over tea estate in the 1920s. It emphasizes about how the Indian servants called as "Coolis" treated and the difficulties they underwent to keep up the survival. For many it costed even life.The English people were very inhuman, unjust and extracted more than wat a ideal guy can deliver. Daniel crafted the work meticulously speaking about their nature, family situation due to which they get pushed to these works. Surely after reading this book we would get a flash of thot about this book b4 we gonna a take a sip for tea.
A book which has told that how lucky we are to live in a world now! How it was to be a person without Ur basic needs! The comparison of the place they lived. How inhumane people where when it comes to extract work like leeches it sucked all the blood it can and let people with just bones. Stone hearted isn't enough to describe the barbaric animals which was so called COE and how they just concentrated only on the profit of the company. It's about basic life and living.. Each and every pain they endured has created tea!! Red tea is the blood shed by those innocent souls who were trapped by the law enforced on them, betrayal, trust they had on human! It took so many years for people to realise this act and the story in 1930 is still feels fresh in the way now few organisation work...this won't change untill small small industry and organisation exist. Always believe we should work in small chunks ...!! A lesson and how sophisticated am I in this era. Thankful to the author!!
இன்றும் சமகாலத்தில் இருக்கும் பிரச்சனை என்று சொல்லிவிட முடியாதுதான். நிலபிரபத்துவ காலத்தில் இருந்து முதாளிலித்துவ காலத்துக்கு அப்படியே தூக்கிப்போட்டால் என்ன நடக்கும் என்பது இந்த கதையின் அடி நாதம் எனலாம். தூர்வை நாவல் படிப்படியாக வாழ்க்கைமுறை எப்படி மாறிவந்தது என்று சொல்லியது ஆனால் இந்த நாவல் கால மாற்றத்தினால் ஏற்படும் பஞ்சங்கள் அதன்மூலம் ஏற்படும் வாழ்க்கை தத்தளிப்புகள், அந்த தத்தளிப்புகளை பயன்படுத்த நினைக்கும் முதலாளிகள், கங்காணிகள், சாமியார்கள். இதில் சிக்கி சீரழியும் தொழிளாலியின் கதை எனலாம்.
கதை அதிக நுண் சித்தரப்புகளோ ஒரு தேர்ந்த புனைவு எழுத்தாளருக்கான எந்த அம்சமும் அதிகமாக இல்லை எனலாம் ஆனால் தேயிலைதோட்ட வாழ்க்கைபற்றி புரிந்துகொள்ள மிகவும் முக்கியமான ஒரு நூல் என்ற வகையில் இந்த நாவல் முக்கியமானது.
பரதேசி படம் இந்த நாவலை தழுவி எடுக்கபட்டது ஆனால் நாவலில் இல்லாத பல விசயங்கள் சேர்த்து உள்ளார்கள்.
நாவலில் வரும் டாக்டர் கதாபாத்திரம் படத்தில் வேறு விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கதையில் வரும் இந்து சாமியார் படத்தில் இல்லை.
எரியும் பனிக்காடு - இந்தப் புத்தகத்தை எழுதியவர் பி. எச். டேனியல், தேயிலைத் தோட்டங்களில் முதன்மை மருத்துவராகப் பணியாற்றியவர். அவர் தோட்டத்தில் கண்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இந்நாவலைப் படைத்தார், Red Tea என்று ஆங்கிலத்தில் வந்த இந்த நூலை இரா. முருகவேல் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்ட துன்பங்களைப் பற்றி விவரிக்கிறது இந்நாவல். கருப்பன் மற்றும் வள்ளி என்ற கற்பனை கதாபாத்திரங்கள் வழியாக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப் படுத்தியிருக்கிறார், அதுவே முதன்மை நோக்கமும் கூட. அவர்கள் பட்ட கஷ்டங்கள் கற்பனை செய்ய முடியாத கொடுமைகளாக இருந்தன.
இந்நாவல் படித்து இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் அதிலிருந்து மனதளவில் விடுபட முடியவில்லை; இந்நூலில் வரும் தொழிலாளர்களைப் போலவே நானும் அந்த உலகில் சிக்கியிருக்கிறேன்.
நாவலின் கரு, களம் தாண்டி அதை இன்னும் அணுக்கமாக வாசிக்க வைத்தது அதன் மொழிபெயர்ப்பு. ‘Red Tea’ என்னும் மூலநாவலின் தலைப்பை ‘சிவப்பு தேநீர்’ என்றோ ‘இரத்தத் தேநீர்’ என்றோ தலைப்பிடாமல் ‘எரியும் பனிக்காடு’ எனத் தலைப்பிட்ட போதே மொழிபெயர்ப்பாசிரியர் இரா.முருகவேளின் மெனக்கெடல் தெரிந்து விடுகிறது. நாவல் வாசிக்கும் போது ஓரிடத்தில் கூட மொழிபெயர்ப்பு நாவல் என்னும் தடங்கள் இல்லை. நாவல் தமிழர்களோடும் , தமிழ் நிலவியல், வரலாறோடும் பிணைந்துள்ளது ஒரு காரணமாயினும் மொழிபெயர்பாளரின் சீரிய சொற்திறன் அதை வாசிக்க இலகுவாக்கி நாவல் வாசிப்பைக் கூரேற்றிவிடுகிறது. அதற்காக மொழிபெயர்ப்பு ஆசிரியரை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
நிச்சயம் அனைவரும் வாங்கி படிக்கவும் இந்த தேயிலை தோட்டத்து எஸ்டேட்கள் எத்தனை இயற்கை வளங்களைக் கொண்டிருந்தாலும் அங்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தொழிலாளர்கள் இன்று வரை சுத்தமான சுவாசக்காற்றை சுவாசிக்க நேரமில்லாமல் தங்களின் வேதனை கலந்த மூச்சுக் காற்றையே மலை முழுவதும் பரப்பி வைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
It's like a journey with the author to the Tea estate and witnessing the exploitations faced by the laborers over there. Really gone deeply into the character of Karuppan and Valli. Thanks to the Author and the translator Mr. R Murugavel for this wonderful work.
Good work by translator Still have doubt , did they celebrate diwali during the story period And work ship of lord muruga is so popular as mentioned in the book
எரியும் பனிக்காடு. ஆங்கிலேயரின் கொத்தடிமை தனத்தை பற்றியே இப்புத்தகம் . புத்தகத்தின் பாதி படித்த பின்பு கதையின் கடைசியாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரைவாக படித்தேன் ஆனால் புத்தகம் முழுவதும் சோகம், அடிமைகளின் இயலாமை மற்றுமே நிறைந்து இருந்தது.
I read this book. Such a fantastic one. It brings the visuals in front of the eyes, how the people struggled in those british time. Wonderfully written. I love to give 5 stars. Everyone should read