அறம் பொருள் இன்பம் - வள்ளுவரின் எழுத்து வழி அறிய முற்படவில்லை(சோம்பேரித்தனமும் & அச்சமும் தான் 😢). ஆனால், அதனை சாரு சாத்தியப்படுத்திவிட்டார்.
வள்ளுவரின் எண்ணம், இரண்டு வரிகளாய் மானுட நீதியை(வினா-விடையாக)சொல்லியிருக்கிறார். 21- ஆம் நூற்றாண்டில், பின் நவீனத்துவ நாகரிகத்தில் வாழ்பவர்களின், நோக்கை நெறிபடுத்த உரையாடுதலை கருவியாக்கி, அவர் வரிகளில் சொல்வதானால் "அறிவின் மூலம் அனுபவம் பெற்று, அந்த அனுபவத்தை அறிவாகக் கொண்டு ஞானத்தை அடைதல்" என்பதை உணர்த்த முற்பட்ட தருணம் தான் அறம் பொருள் இன்பமா க மாறியிருக்கறது என்பதில் கிஞ்சித்தும் சலனமில்லை.