தீயுறைத் தூக்கம் என்ற கவிதைத் தொகுதிக்குப் பிறகு நான் கொண்டு வந்துள்ள இன்னொரு கவிதைத் தொகுதி அழுக்கு சாக்ஸ் என்ற பெருந்தேவியின் தொகுப்பு. பெருந்தேவி வித்தியாசமான பெண் கவிஞர் என்பதோடல்லாமல் மற்ற பெண் கவிஞர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். நான் ஆண் கவிஞர் பெண் கவிஞர் என்றெல்லாம் பிரித்துச் சொல்ல விரும்பவில்லை.
பெருந்தேவி கவிதையின் முக்கியமான சாரம் என்று நான் கருதுவது, அவருடைய நவீன போக்குக்கொண்ட உள்அழகுக் கொண்ட கவிதைகள். கவிதையிலிருந்து பெரும்பாலோர் உரைநடை வடிவத்திற்கு மாறி விட்டார்கள். க நா சு உருவாக்கிய உரைநடைக் கவிதைகள்தான் எழுதுகிற சாத்தியமாய் இருக்கிற சூழ்நிலையில் பெருந்தேவி கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எழுதிச் செல்கிறார். இவருடைய முதல் தொகுதியான தீயுறைத் தூக்கம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளின் சாயல் இந்தத் தொகுதியிலும் உண்டு. ஒவ்வொரு முறையும் கவிதையை எடுத்துப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வமும், பத்திரப்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் இத் தொகுப்பைப் பார்ப்பவர்களுக்குத் தோன்றும். - அழகியசிங்கர்
கவிஞர். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சமயம், பெண்ணியம், பண்பாட்டியல் ஆகிய துறைகள் சார்ந்து ஆய்வு செய்துவருகிறார். Journal of Asian Studies, Anthropological Quarterly போன்ற இதழ்களிலும் கல்வித்துறை சார்ந்த ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பு நூல்களிலும் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. காலச்சுவடு, காலக்குறி ஆகிய தமிழ் இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது வாசிப்பும் எழுத்தும் என்று நம்பும் பெருந்தேவி, சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம் ஆகியவற்றிலும் ஈடுபாடுகொண்டவர்.
It's been a very long time since I've read any Poetry collection book. This is the first time I'm reading one written by a Woman author. The Author touched upon so many things, so heart-breaking, Sarcasm, Politics, Migration, fantasy, and whatnot. Really loved the book and I had to read the prose multiple times before moving on to the next one.