Jump to ratings and reviews
Rate this book

நெடுஞ்சாலை

Rate this book
அரசுப் ​போக்குவரத்துக் கழகம் ஒன்றில் தற்காலிகப் பணியாற்றும் மூன்று இ​ளைஞர்களின் பாடுக​ளை மண்​மொழியில் சித்தரிக்கும் நாவல்.

536 pages, Kindle Edition

First published December 1, 2009

19 people are currently reading
94 people want to read

About the author

From Wiki:
கண்மணி குணசேகரன் (பிறப்பு: 1971) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
26 (63%)
4 stars
13 (31%)
3 stars
1 (2%)
2 stars
0 (0%)
1 star
1 (2%)
Displaying 1 - 5 of 5 reviews
183 reviews17 followers
January 2, 2020
Once Jeyamohan when he spoke about the chief characteristic that modern literature shares over ancient literature is how it borrows/captures life from various other fields. In old ancient literature we don't see this knowledge from other fields/works reflected. Kanmani Gunasekaran the novelist works in the transport department in TamilNadu. This novel is the life of people who are working in a transport department the drivers, mechanics, conductors. The major strength of the novel first of is the in depth details that the writer brings through his working years, they are very specific and can only be written by someone who had spent many years observing the people working with lot of affection and warmth. It is this warmth and affection that the writer transports us to through his humane portray.

The whole life is so new to us, we rarely know so much of things happen in the background and we are totally floored by how little we know about the buses that transport us. Take for instance the fact that how the Diesel is carefully measured and how drivers are measured for efficiency through metrics such as KMPL(Kilo Meters Per Litre) or how earning efficiency is computed through EPKM(Earnings Per Kilo Meter) etc. In another case we see how conductors need to be on their feet to give tickets before the ending of a particular stage, or how they need to fight with Private transport vehicles to compete for passengers. It is through these details we get to feel the world and start to live the lives of people in this world.

The second fundamental aspect for me is the subtle sense of humor that fills the pages of the novel. Take for instance in the first chapter we see a newly appointed CL(casual labor) conductor is faced with a problem where there are 21 passengers in the bus but only 20 tickets are sold. He keeps looking at everyone and asks the unknown person to buy the ticket repeatedly. At last when a guy rushes to get down in the bus stop after sleeping through the whole journey, he asks him if he had got ticket when the passenger casually says he is 'staff' referring to the fact that staff working in transport department need not take ticket. He is livid with him as he has been struggling for the whole journey to know who is evading from taking ticket. There are moments like this whole through the novel which makes us laugh but with a tinge of sadness.

As the novel runs it end we are left wondering how we tend to judge people in the modern world with little understanding of what they are undergoing. This is a fundamental aspect that alienates every person from modern life.
Profile Image for Elayaraja Subramanian.
129 reviews8 followers
August 12, 2022
முழுக்க முழுக்க பேருந்து, பேருந்து நிலையம் சுற்றியே நகரும் கதையில் உயிரோட்டமுள்ள மனிதர்களை உலவவிட்டிருக்கிறார் எழுத்தாளர் கண்மணி குணசேகரன். நக்கலும் நையாண்டியுமாய் கடைசி பக்கம் வரை விறுவிறுப்பாக செல்கிறது. சிஎல் என்றழைக்கப்படும் Contract Labours எத்தனை அலட்சியமாக கையாளப்படுகிறார்கள், நிரந்தர தொழிலாளி ஆவதற்கு எத்தனை சிரமங்களை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பது வேதனையளிக்கிறது.
21 reviews2 followers
May 13, 2021
நெடுஞ்சாலை வாகனங்களும் அதன் மனிதர்களும்

தினம் தினம் நம் நெடுஞ்சாலைகளில் ஊரந்து செல்லும் அரசு போக்குவரத்து கழக வாகனங்களும் அதன் ஓட்டிகளும் பல நூறு கதைகளை தன்னுள்ளே கொண்டுள்ளார்கள் என்பதை எண்ணி பார்க்க வைத்த புத்தகம். அய்யானர், தமிழ் ஏழை என்ற மூன்று சி எல் என்று சொல்லப்படும் போக்குவரத்துதுறை ஊழியர்களுடன் கதை இனதே பயணிக்கிறது. தமிழக போக்குவரத்து துறை நம் மாநிலத்தின் முற்னேற்றதில் பெரும்பங்காற்றிய ஒரு நிறுவனம் அது இன்றும் கூட தொலை தூரகிராமங்களிலும் இன்றைய முன்னேறிய தமிழக வசதி வாய்ப்புகளையும் கொண்டு சேர்த்துகொண்டே தான் தானும் வாழ்கிறது. அருமையான கதைசொல்லி கண்மணி குணசேகரனின் நடுநாட்டு எழுத்துகளில் அதன் கதை இன்னும் சுவையாக உள்ளது. விருத்தாச்சலம் டிப்போவை என்னால் வாழ்வில் மறக்கே இயலாமல் செய்துவிட்டார் எழுத்தாளர்.
Profile Image for Arunmozhi Ganesan.
108 reviews23 followers
September 3, 2016
சி.எல் எனப்படும் அத்துக்கூலிகளின் வாழ்வினூடே 90 களின் அரசு போக்குவரத்து கழகத்தின் மீதான ஒரு பார்வை தான் நெடுஞ்சாலை. எந்த இடத்திலும் மிகைப்படுதலே இல்லாத ஒரு சுகமான பேருந்து பேச்சை போன்றதொரு நாவல். மிக முக்கியமாய் கண்மணி குணசேகரன் எந்த இடத்திலும் அவரது நிலைப்பாடையோ கருத்துக்களையோ நம் மீது திணிக்கவில்லை. கடைசி நூறு பக்கங்கள் ஒரு செயல்பாடில்லாத பேருந்து எப்படி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை வரை சென்று வருகிறது என்பது தான். இதை கொஞ்சமும் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார்.

மற்றபடி நகைச்சுவை என்ற பெயரில் வரும் சில வரிகள் தவிர எந்த குறையுமில்லை.
1 review3 followers
December 21, 2015
பேருந்துகளும், பேருந்துப் பயணங்களும் நமது பலரின் வாழ்வில் இரண்டறக் கலந்தவை. பேருந்துகளுக்குப் பெயர்கள் இருந்த போது, அப்பேருந்துகளுடன் நமக்கு ஒரு நெருக்கமும் உறவும் இருந்தன. பாண்டியன் வருகிறான், தீரன் சின்னமலை வருகிறான், ராணி மங்கம்மாள் காரன் போகிறான் என்று சொல்லி நம் குடும்பத்தில் ஒருவராக நாம் அன்றாடம் பயணம் செய்யும் பேருந்துகளும் இருந்தன.அதே உணர்வு தானோ என்னவோ, விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு, பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தினை இரண்டாகப் பிரித்து உருவான வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகத்தினை, தாழ்த்தப்பட்டவன் பேரை வைத்த பேருந்தில் பயணம் செய்யமாட்டோம் என்று தீயிட்டுக் கொழுத்தினர் ஆதிக்கச் சாதியினர். பேருந்துகளுக்கும், மாவட்டங்களுக்கும் பெயர்களை நீக்கும் தீர்மானத்தில் கண்ணீருடன் கையெழுத்திடுகிறேன் என்று அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்தார். பெயர்கள் கோட்டங்களாக மாறின.
என்னுடைய இந்தப் பழைய நினைவுகளை எல்லாம் கிளறிவிட்டது கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை. நான் வெகு நாட்களாகப் படிக்க வேண்டும் என்று நினைத்து, வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து படித்த நாவல் கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை. முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை, கீழே வைக்காமல் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க ஏதுவான கதை. குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பேருந்து வந்து, பயணிகளை ஏற்றி, சரியான இடத்தில், சரியான நேரத்திற்குப் பயணிகளைப் பாதுகாப்பாக கொண்டுச் செல்லும் பேருந்துகளை இயக்க ஒரு பணிமனையில் இயந்திரம் எவ்வாறு சுழலுகிறது என்பது தான் கதைக்களம். நாவலின் தொடக்கத்தில் நிறைய டெக்னிக்கல் சொற்கள் வருவதால் சிறிய தடங்கல்களும், தேவையற்ற திணிப்புகலுமாகத் தெரிகின்றன. ஆனால் பக்கங்கள் செல்லச் செல்ல , நாவல் நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்து போல தடங்கலின்றி பயணிக்கிறது.
தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகத்தில் சி.எல் (Casual Labor) எனப்படும் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரியும் அய்யனார், தமிழரசன் மற்றும் ஏழைமுத்து ஆகியோரைச் சுற்றியே இக்கதை நிகழ்கிறது. அய்யனார் டெக்னிக்கல் எனப்படும் மெக்கானிக்காகவும்,ஏழைமுத்து ஓட்டுனராகவும், தமிழரசன் நடத்துனராகவும் பணிபுரிகிறார்கள். இந்த மூன்று வாலிபர்களில் ஏழைமுத்துவைத் தவிர மற்ற இருவரும் திருமணமாகாதவர்கள். ஏழைமுத்துவிற்குக் குழந்தை கிடையாது என்பதைக் காரணம் காட்டி அவனின் தாய் அவனின் மனைவி பார்வதியைப் பாடாய்ப் படுத்துகிறாள். தமிழரசன் வசதியான செட்டியார் வீட்டுப்பையன், மளிகைக் கடையில் உட்காராமல் பெரியாருக்கு வேலைக்கு வருகிறான். பேருந்தில் வரும் கலைச்செல்வி என்ற பெண்ணின் மீது காதல் வந்து, அதனால் பணி இடைநீக்கம் பெறுகிறான். ஏழைமுத்து திருமணம் ஆகும் முன் காதலித்த கனகாவிற்கு அதரவாக அவளின் கணவனிடம் சண்டைக்குப் போக, அவனும் பணி இடைநீக்கம் பெறுகிறான். வேலையில் புலியாக இருக்கும் அய்யனாருக்கும் ஒரு காதல் வருகிறது.
அய்யனார், போக்குவரத்துக் கழகத்தில் பணி செய்ய வரும் முன் கொத்தனாராக வேலை செய்கிறான். அப்போது சந்திரா என்ற பெண்ணுடன் ஒரு உறவு வருகிறது. இருவரும் ஒன்று சேரமுடியாது என்���து தெரிந்தும்,ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் பாசத்தின் காரணமாக உறவு கொள்கிறார்கள். அய்யனார் பழுது பார்த்த ஒரு பேருந்து தடத்தில் பழுதாவதால், அய்யனாருக்கு பணி இடைநீக்கம் கிடைக்கிறது. அவ்வேளையில், மீண்டும் கொத்தனார் வேலைக்குச் செல்கிறான், சந்திராவைச் சந்திக்கிறான். சந்திரா திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி நிற்கிறாள். இருந்தும் அவர்கள் மீதான காதல் அவர்களுக்கு விட்டுப்போகவில்லை. மீண்டும் உறவு கொள்கிறார்கள். கைப்பிடி இல்லாத , இரண்டு பக்கமும் கூரான கத்தியைப் போன்ற இந்த இடத்தை, மிக லாவகமாக கையாண்டிருக்கிறார் கண்மணி.
ஆஸ்பத்திரிக்கு போனவன்கிட்டையும், ஊருக்குப் போயிட்டு வந்தவன் கிட்டேயும் "உம்" கொட்டி மாளாது என்பது போன்ற வாக்கியங்களும், ஏராளமான வட்டாரப் பழமொழிகளும், நகைச்சுவைகளும் நாவல் முழுதும் பரவிக் கிடக்கின்றன. கோணான்குப்பம் பெரியநாயகி மாதா கோவில் திருவிழாவிற்கு ஏற்பாடுச் செய்யப்படும் சிறப்புப் பேருந்துகளில் ஒன்றாக "ஷெட் இன்" ஆகப் போகும் ஏழைமுத்துவும், தமிழரசனும் போன பேருந்து, சென்னைக்கு அனுப்பப்படுகிறது. பாடாவதியான வண்டி, ஏற்கனவே ஒரு நாள் பணி பார்த்துவிட்ட களைப்பு ஆகியவற்றைத் தாண்டி பேருந்தைச் சென்னைக்குச் செலுத்துகிறார்கள். சென்னைக்குச் சென்றார்களா, பேருந்து என்னென்ன கோளாறு பண்ணது என்பதை நாவல் ஒரு 70 பக்கங்களுக்குக் குறையாமல் சிறப்பாகப் பேசுகிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளும், சோர்வும் நம்மையும் வாட்டி வதைகின்றன. அதைப் படித்து முடித்த பிறகு ,
மனரீதியாக நாம் நமது ஊரிலிருந்து சென்னை சென்ற எண்ணம் மெலெழுகிறது .
தற்காலிகப் பணியாளர்கள், வேலையில் எவ்வளவு சிறப்பாகச் செயல் பட்டாலும், டெப்போ மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் அவர்களை முதலாண்டு மாணவர்களை ராகிங் செய்வது போல் செய்கிறார்கள். நாவலில் ஏகப்பட்ட நடத்துநர்களும், ஓட்டுநர்களும் சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களாக வந்து போகின்றனர்.
ஏழைமுத்து பேருந்து ஓட்டுவதற்கு முன், டிராக்டர் ஓட்டியவன். தமிழரசன் தனியார் பேருந்தில் துணைக் கண்டக்டராக ஓடியவன். தனியார் பஸ் முதலாளி வீட்டு வேலை செய்து, கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொடுத்து அந்த வேலையை வாங்குகிறான். கதை விருத்தாசலத்தை ஒட்டியே நடக்கிறது, அந்தப் பகுதி மக்களுக்குப் பெரியாரில் வேலை செய்வது பெரும் மதிப்பாக இருக்கிறது.
இந்த நாவலில், பெரிய சமூகக் கருத்துகளோ, ஆழமான தத்துவங்களோ, செறிவான மொழியோ கிடையாது, எனினும், இந்நாவல் ஒரு புதிய உலகத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது. இந்த நாவல் படித்து முடித்தால், நடத்துநர்களையும், ஒட்டுநர்களையும் நாம் வைத்திருக்கும் நிலையிலிருந்து ஒரு படி மேல வைக்கவே தோன்றும்.
போக்குவரத்து துறை ஊழியர்களின் பணிச்சுமைகளையும், மன அழுத்தங்களையும், சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் பதிவு செய்துள்ள தன்மையில், நெடுஞ்சாலை மிக முக்கிய பதிவு
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.