என்னிடம் இருப்பது ஒரே ஒரு உடம்புதான் கோடை என்றாலும் கூதிர் என்றாலும். இன்றிரவு தைப் பனி சற்றுக் கூடுதல். மாற்றுடை என்று யோசிப்பதற்கு இல்லை. என்னைக் கழற்றினேன். திருப்பிப் போட்டு மறுபடி அணிந்தேன். குளிராவது ஒன்றாவது?
கல்யாண்ஜி (வண்ணதாசன், சி.கல்யாணசுந்தரம்) (பிறப்பு: ஆகஸ்ட் 22, 1946) தமிழின் நவீன கவிஞர், எழுத்தாளர். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும், வண்ணதாசன் ( Vannadasan) என்ற பெயரில் புனைவுகளையும் எழுதியவர். கனடா இலக்கியத்தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.