அவசிய முன் குறிப்பு : இது இளகிய மனம் படைத்தவர்களுக்கான வரலாற்றுப் புத்தகம் அல்ல. 18+ வயது கொண்டோர் வாசிக்கவும். தன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி. முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர். அடுத்த வேளை உணவுக்கு மக்கள் வழியின்றித் தவிக்கையில் தனக்குத்தானே முடிசூட்டி மகிழ்ந்த ஒரு தலைவர். இறந்துபோன ஆட்சியாளரின் பிணத்தை ரகசியமாக வைத்து அரசியல் ஆட்டம் காட்டிய ஒரு ராணி. தம் வாழ்நாளில் 1171 பிள்ளைகளுக்கு தகப்பனாகி, பெருஞ்சாதனை புரிந்த ஒரு சுல்தான். மதவாதத்தாலும் மூடநம்பிக்கைகளாலும் தேச மக்களை அடிமைப்படுத்தி அராஜகம் செய்த ஒரு சர்வாதிகாரி. இன்னும் இன்னும்.
Mugil, a renowned, best-selling Tamizh writer contributing to various platforms like Weekly Magazines, Books, Television and Cinema. Mugil's works focus on introducing History & Research based Historical content to the current generation of young readers. Born 1980, Native Tuticorin, Tamilnadu and Mugil lives in Chennai.
முகில், முழுநேர தமிழ் எழுத்தாளர். புத்தகங்கள், தொலைக்காட்சி, சினிமா என்று மூன்று தளங்களில் இயங்கி வருகிறார். 35-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சரித்திரத்தை எளிய மொழிநடையில் வலிமையாகச் சொல்லும் இவரது பாணி தனித்துவம் வாய்ந்தது. 1980-ல் பிறந்த இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. வசிப்பது சென்னையில்.
உண்மையாகவே ராஜாக்கள் பல பேர் கிறுக்குகளாக இருந்துள்ளனர். பல சுவாரசியமான சட்டங்கள், பழிவாங்கல்கள், மனநலம் பாதிக்கப்பட்ட அதிபர்கள்/மன்னர்கள் என்று புத்தகம் முழுவதும் இருக்கிறது.
ஒரு சில அத்தியாயங்கள் தவிர்க்கபட்டிருகலம். மன்னர்/ராணி யின் முடிவு வெற்று பழிவாங்கல் தானே தவிர யாரையும் கொடுமை படுத்தியதாக தெரியவில்லை. உதாரணமாக அரசி ஓல்கா அத்தியாயம்.
This is about the leaders who became insane after getting into power. Absolute power corrupts . The key point is, any ordinary person ( people like me ) can become a dictator , when we have the power or authority.
முகில், தன் தனித்துவமான நகைச்சுவை எழுத்துநடையின் மூலம் terror ராஜாக்களையே கோமாளிகளாக்கியிருக்கிறார். அதுவும் Turkmenistan அதிபர் செய்த atrocities வேற லெவல்