நாவலின் சில அத்தியாயங்களை படித்தது போலிருக்கிறது. நாவலின் சாரம் கதை முகத்துக்கு முரணாக உள்ளது. கபாடபுரம் பழம்பெரும் துறைமுகம் அதை பற்றிய கதை என்று சொல்லி சாரகுமாரன், ராஜதந்திரம், தமிழிசை ஆகியவை பற்றியதாக நாவல் அமைந்து விட்டது.
வரலாற்று புதினம் எனும்போதே எழும் எதிர்பார்ப்புகளை தவிர்க்க முடியாது. நான் எதிர்பார்த்த ஒன்று கூட இக்கதையில் இல்லை. இராஜகேசரி மாதிரி பாண்டிய இளவரசனின் வாழ்வில் வந்து போகும் காதல் பற்றியது. அந்த காதலையும் அழுத்தமாக சொல்லவில்லை. குடும்ப நாவலாக கூட எழுதியிருக்கலாம். ஏன் பாண்டிய இளவரசன் தேவை?
ஆசிரியரின் தமிழ் நடை நன்றாக உள்ளது. ஆனால் கதை மனதில் நிலைக்கவில்லை. கபாடபுரம் என்றதும் ஏற்பட்ட எதிர்பார்ப்பு இறுதியில் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்து.