வெற்றிக் கதை... வெற்றியின் கதை... ராணிப்பேட்டையிலிருந்து இயக்குனராகும் கனவுகளுடன் புறப்பட்ட ஒரு இளைஞன் பல வருட உழைப்புக்கும் தேடலுக்கும் பின் எப்படி தன் விசாரணை படத்துக்காக வெனிஸ் உலகத்திரைப்பட விழாவில் விருது வாங்கும் சிறந்த இயக்குனராக வெற்றி பெற்றான் என்ற கதையை தன் மொழியில் சுவாரஸ்யமாக இந்நூலில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றியைத் தேடுபவர்களுக்கும் வெற்றியை நேசிப்பவர்களுக்கும் இந்த வெற்றி மாறன் கதை ஒரு எனர்ஜி டானிக். தன் அப்பா அம்மாவில் துவங்கி இயக்குனர் பாலு மகேந்திரா, நடிகர் தனுஷ் மற்றும் அவரது பாதையில் எதிர்கொண்ட நட்பு, காதல் என பல வகையில் கிளை பிரித்து திரைக்கதைக்கான சுவாரஸ்யத்துடன் எழுதி வார்த்தைகளாலும் வசப்படுத்தி விடுகிறார் இயக்குனர் வெற்றி மாறன்.
I am a big fan of director veterinarian. So, it was engrossing for me personally to read his career journey, movies he has made and his thought process. It stops with his journey just before vadachennai. Would be fantastic to read a sequel that continues that journey about vadachennai, asuran, and now viduthalai.
இன்று தமிழில் இருக்கும் முன்னணி இயக்குநர்களில் தன்னுடைய திரைப்படைப்புகளில் அமைந்திருக்கும் அழுத்தமான கதைக் கரு, சமூக அரசியல் சார்ந்த கருத்துக்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைக்காகவே பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள். அவர் துணை இயக்குநராக இருந்த காலம் தொடங்கி வெனிஸ் சர்வதேசத் திரைப்படவிழாவில் தன்னுடைய படைப்பிற்கான சாதனை புரிந்த பயணம் வரையிலும் சுவைப்படக் கூறுகிற புத்தகம் 'மைல்ஸ் டு கோ'
தான் ஓர் இலக்கிய மாணவர், தனக்குச் சினிமா என்றால் உயிர், ஆகவே தன்னால் சிறந்த திரைப்படைப்புகளை உருவாக்க முடியும் என்ற அதீதத் தன்னம்பிக்கையுடன் சினிமா உலகில் நுழைந்தவருக்கு வாழ்க்கை என்னென்ன பரீட்சைகளுடன் காத்துக்கொண்டிருந்தது என்பதை நம்மிடம் எதார்த்தமாகவும் வெளிப்படையாகவும் பகிர்கிறார் வெற்றிமாறன்.
பாலு மகேந்திரா போன்ற ஆளுமைகள் தன்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிய வருவோருக்கு இருக்கும் தகுதிகளில் இலக்கிய அறிவை குறிப்பாகத் தமிழ் இலக்கிய அறிவை ஒரு Basic requirementஆகக் கருதினார்கள் என்பதை வெற்றிமாறன் பாலுமகேந்திரா அவர்களுடைய முதல் சந்திப்பு உணர்த்தும்.
தன்னம்பிக்கை ஒரு படைப்பாளிக்கு அதீத அளவில் இருந்தாலும், அதே அளவிற்கு முன்கோபமும் திடீரென உணர்ச்சிவசப்படும் குணமும் இருந்தால் அது அவர்களுக்கு எவ்வளவு பாதிப்பைக் கொடுக்கும் அல்லது அவர்களின் வெற்றியை எவ்வளவு தாமதம் செய்யும் என்பதற்கு வெற்றிமாறனின் வாழ்க்கை ஓர் உதாரணம்.
நிதானத்தைச் சந்தர்ப்பங்களில் நாம் இழக்க நேரிட்டாலும், அந்தச் சம்பவம் நடந்து முடிந்த சில காலத்தில் நாம் அந்தச் சமயங்களில் எவ்வாறு நடந்துகொண்டோம் என்று ஒரு introspection மேற்கொள்வது எவ்வளவு அவசியம் என்பதற்கு வெற்றிமாறனின் சினிமா பயணம் ஒரு சான்று. ஒரு திரைக் கலைஞருக்கு மன நிதானம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவருடைய உடல் நலமும் என்பதை உணர்த்த அவர் கொண்டிருந்த புகைப்பழக்கத்தை எப்படித் தூக்கி எறிந்தார் என்பதையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் வெற்றிமாறன்.
நம்மை சுற்றி நல்ல மனிதர்கள் அமைந்துவிட்டால் அதைவிட அதிர்ஷ்டம் வேறு எதுவும் இல்லை அதுவே நம் வெற்றிக்குப் பல நேரங்களில் உறுதுணையாக இருக்கும். அப்படிப்பட்ட நிறைய நல்ல மனிதர்கள் வெற்றிமாறன் அவர்களது சினிமா வாழ்வில் இருந்திருக்கிறார்கள் என்பதை வாசிக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.
ஆங்கிலத்தில் எனக்குப் பிடித்த ஒரு quote "Venture outside of your comfort zone, the rewards are worth it". நகர வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட ஓர் இயக்குநருக்கு மதுரை வாழ்வியல் சார்ந்த ஆடுகளம் போன்ற கதைக்களமானது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும். ஆனால் தன் முயற்சியிலிருந்து பின் வாங்காமல் மதுரை மக்களின் வாழ்வியலை கற்பதற்கும் மற்றும் அதனை எந்தவொரு சமரசமின்றித் திரையில் காட்சிப்படுத்துவதற்கும் அவர் விதைத்த உழைப்பு என்ற ஒரு விதையானது, ஆறு தேசிய விருதுகள் என்ற விருட்சங்களாக அவர் சினிமா வாழ்வில் முத்திரை பதித்திருக்கிறது.
விருதுகள் படைப்பாளிகளுக்கு ஓர் ஊக்கமாக இருக்குமே தவிர அவர்களின் படைப்பாற்றலை அளக்கும் கருவிகளாக அது ஒருபோதும் இருக்காது என்ற கருத்தைக் கொண்டிருக்கும் வெற்றிமாறன் தன் சினிமா பயணத்தில் செல்லவிருக்கும் இடம் இன்னும் 'மைல்ஸ் டு கோ' என்று கூறியிருப்பது அவரை ஓர் அயராத கலைஞராக வெளிப்படுத்துகிறது.
சினிமா துறையின்றி வேறு எந்தத் துறையிலும் சாதனை புரிய வேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பவர் கண்டிப்பாக வளர்த்துக்கொள்ளக்கூடிய குணங்கள்: நிதானம், சுய ஒழுக்கம், உடல்நலம் பேணுதல், நல்ல மனிதர்களின் சேர்க்கை என்பதனை இந்த 'மைல்ஸ் டு கோ' உணர்த்தும்.
இப்புத்தகத்தில் வெற்றிமாறன் குறிப்பிட்டிருக்கும் புத்தகங்கள் மற்றும் சிறுகதைகள் பின்வருமாறு: • To k*ill a mockingbird- Harper Lee • One flew over the cuckoo's nest- Ken Kesey • Roots- Alex Haley • The rain maker- John Grisham • கூட்டாஞ்சோறு- வேல ராமமூர்த்தி • லாக்கப்- சந்திரகுமார் • அம்மா வந்தாள்- தி. ஜானகிராமன் • இருவர்- அசோகமித்திரன் • மரப்பசு - தி. ஜானகிராமன் • கிளிக்காலம் - ஜெயமோகன் • மோகமுள் - தி. ஜானகிராமன் • மூங்கில் மூச்சு - சுகா • போஸ்ட்*மார்ட்டம் - டாக்டர். கே. ஆர். சேதுராமன் • சிறுகதை 'பாதுகாப்பு' - பட்டுக்கோட்டை பிர*பா*கரன் • சிறுகதை 'நிஜத்தை தேடி' - சுஜாதா
எதார்த்தமாக எடுத்து படிக்க ஆரம்பித்த புத்தகம் "மைல்ஸ் டு கோ". இவ்வளவு தூரம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் புத்தகம் நகரும் என்று நினைக்கவில்லை.
Youtube-ல் ஒரு அழகான இன்டர்வியூ பார்த்து அனுப்பவும். Spotify-யில் ஒரு அழகான பாட்காஸ்ட் கேட்டா அனுபவம். இதே மாதிரியான அனுபவம் வேண்டுமா உங்களுக்கு! படியுங்கள் இந்த புத்தகத்தை.
எப்படி உதவி இயக்குனர் ஆனார் என்பதில் இருந்து "விசாரணை" படம் வெற்றி பெற்றது வரை இப்புத்தகத்தில் உள்ளது. இந்த புத்தகம் படித்த பிறகு தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் இடையில் உள்ள நட்பு புரிந்தது.
குறைந்தது 10 புத்தகங்களின் பெயர்கள் இப்புத்தகத்தில் வந்திருக்கும். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை இம்மூன்று படங்களின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளனர். வெற்றிமாறன் ஊதிதல்லிய சிகரட் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
தனது குடும்பம் அவருக்கு பக்கபலமாய் இருந்த காரணத்தினால் மட்டுமே அவரால் திரை உலகில் ஜெயிக்க முடிந்தது, உயர முடிந்தது, வெற்றி பெற முடிந்தது என்று நான் நம்புகிறேன்.
I will recommend this to anybody who is looking for a brief read. Vetrimaran has ensured he clearly wrote about the journey he took to achieve the state he is in right now. I liked how candid and down-to-earth the overall book was. Few things that I liked about the book,
He openly discussed how he used to take monetary help from his then-girlfriend (now wife) when he was an AD.
He acted impulsively and has hurt people and has acknowledged this on many occasions.
He didn't establish unrealistic expectations anywhere that you too can succeed or any of that crap usually used around books related to cinema.
Through and through, it was like watching Vetri give an extended interview about various aspects of his film journey
In Miles to Go, Vetrimaaran shares recollections of his early days as an assistant to Balu Mahendra, the journey to his first directorial opportunity, his struggles, friendships, love, and the people who shaped his path. The book was a quick read for me—I finished it in just two days. Vetrimaaran is one of my favorite directors, and the book provides a compelling narrative that takes readers from his early years up to the release of Visaranai. Some of the stories may be familiar to those who have followed his interviews or masterclasses. I highly recommend this book to anyone who wants to be an aspiring director in Tamil Cinema.
Director Vetrimaaran's Rags to Riches story. His personal life and life as an assistant director with his Guru Balumahendra. I always thought that his Adukalam movie was overrated with 6 national awards but Visaranai got what it deserved.
Not only about movies he also shares how he quit smoking and his short temper attitude. But Not sure why he just stopped with a sentence about the Director Bala who was also an assistant of Balu Mahendra and national award winner. It would have been interesting to him from Vetri about him.
வெற்றிமாறன் என்றவுடன் அரசியல், இலக்கியம், உலக சினிமா இதையெல்லாம் பற்றி எழுதி இருப்பார் என்று நினைத்திருந்தேன். ஆனால், மைல்ஸ் டு கோ புத்தகத்தில், அவர் தனது சினிமா பயணத்திலிருந்து சில முக்கிய தருணங்களை பகிர்ந்திருக்கிறார். பாலுமகேந்திராவிடம் துணை இயக்குனராக தொடங்கி, அங்கிருந்து இயக்குனராகவும், பல விருதுகள் வென்ற விசாரணை படம் வரைக்கும் அவர் அனுபவங்களை எழுதியிருக்கிறார்.
படிக்க feel good ஆகவும் சுவாரசியமாகவும் இருந்தது. சினிமாவில் வேலை செய்யும் சூழலை அவர் சொல்லியிருக்கும் விதம் மிகவும் இயல்பாக இருந்தது.
பாடலாசிரியர் நா.முத்துக்குமார், இயக்குனர் ராம், மிஸ்கின் போன்றவர்கள் இந்த புத்தகத்தில் இடம் பெறுவதும், அதை படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. வெற்றியின் காதல் திருமணம், நண்பர்கள், அவர் எடுத்த சரியான மற்றும் தவறான முடிவுகள், வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள், சிகரெட்டை கைவிட்ட சம்பவம் – இப்படியாக, ஏராளமான விஷயங்களை எளிமையாகவும் ஆழமாகவும் பகிர்ந்திருக்கிறார்.
ஒரு சாதாரண மனிதனாகவே இருந்து சினிமாவை மையமாகக் கொண்டு பயணம் செய்த வெற்றியின் பார்வையைப் படிக்கும் போது, புத்தகம் சினிமா மாறியே விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது!
This is my best read so far. Not exaggerating. As I was already inspired by Vetrimaaran and I got hooked on to the series instantly. Man!! I laughed, I cried, I feared and more importantly I got inspired. He has gone completely naked and let his life open to the world. For every aspiring film makers in Tamil Nadu, this is a reminder that it's a hard grind. This man hustled for real.
Disclaimer: TBH, I’ve never watched Vetrimaaran's movies. It’s not because I think his movies aren’t good, but rather because I have a very specific and weird taste in the movies I choose to watch. Besides, I’m not really a movie buff.
வெற்றிமாறனுடன் என் முதல் அனுபவம். பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தது தொடக்கம் விசாரணை வரையிலான அவர் வாழ்க்கையின் தொகுப்பு. அசாதாரணமான; அசாத்தியமான விடயங்களை சாதித்தது பற்றிய எளிமையான பகிர்தல் நம்மிடையே அபரிமித நம்பிக்கை விதைக்கிறது என்பதில் ஐயமில்லை. மிகைப்படுத்தல்கள் இல்லாத நடை, மிகவும் இயல்பான வார்த்தையாடல்கள் புரிதலை அதிகப்படுத்துவதுடன் இலகுவான விரைந்த வாசிப்புக்கும் வழிவகுக்கிறது. ⭐️⭐️⭐️⭐️
One of my fast read. I completed this in a single sitting. My fav director Vettrimaran says how he made into cinema and more about his personal issues, lover,smoking habit and Balu sir too.
Loved the chapters which includes Balu Mahendra Sir. Loved Na.Muthu,many directors whom came into his life as assistants which includes Myskkin too.