Jump to ratings and reviews
Rate this book

குடுமி பற்றிய சிந்தனைகள்

Rate this book
1860களில் தென்னிந்திய கிறிஸ்தவ சபைகளில் புதிதாக சபைக்கு வருபவர்களும், சபைக்காக வேலை பார்ப்பவர்களும் குடுமி வைத்து கொள்ளலாமா கூடாதா என்று ஒரு விவாதம் நடைபெற்றது. அருட்திரு. ராபர்ட் கால்டுவெல் அவர்கள் தனது கருத்துகளை ஒரு நாளிதழுக்காக 1867இல் எழுதினார்.
இந்த கட்டுரை வெறும் வேதாந்த உரையாக மட்டும் அல்லாது குடுமி பற்றிய வரலாறு, அன்றைய சாதி நிலை, குடுமி சம்பந்தமான சடங்குகள், கிறிஸ்துவ சபையில் சாதியின் நிலை என பல விஷயங்களையும் விவாதித்து செல்கிறது. அன்றைய தமிழ் சமூகத்தின் - குறிப்பாக, தென் தமிழகத்தின் - ஒரு தோற்றமாகவும் இந்த கட்டுரை விரிகிறது.
இதில் உள்ள இன்னுமொரு கட்டுரை கால்டுவெல் அவர்கள் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய பட்டமளிப்பு உரை. அவர் அன்றைய இந்திய இளைஞர்களுக்கு கூறிய அறிவுரைகள் இன்றும் தேவை படுகின்றன என்பது வியப்பா அல்லது வேதனையா என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும்.

40 pages, ebook

Published April 1, 2020

14 people are currently reading
18 people want to read

About the author

வானதி

35 books61 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (29%)
4 stars
12 (38%)
3 stars
5 (16%)
2 stars
2 (6%)
1 star
3 (9%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Sathish .
16 reviews8 followers
April 23, 2020
1879இல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது கால்டுவெல் நிகழ்த்திய உரை இன்றைய சூழலுக்கும் பொறுந்தும்.
Profile Image for Balaji M.
221 reviews14 followers
November 2, 2020
குடுமி
******

1867களில் திரு ராபர்ட் கால்டுவெல் என்பவரால், தமிழகத்தினரின் "குடுமி" வைக்கும் பழக்கத்தை ஆராய்ந்து எழுதிய கட்டுரையும், சென்னை பல்கலை பட்டமளிப்பு(1879) விழாவில் அவர் பேசிய உறையும் இடம்பெற்ற நூல்.

இச்சிறு நூலில் கால்டுவெல் அவர்கள் மத சம்பந்தமான ஒரு விஷயத்தை ஆராய்ந்தாலும் அவர் தொட்டு செல்லும் பல வரலாற்று குறிப்புகள் , திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த சாதிகள் மற்றும் அவர்களது பழக்கங்கள் , அப்போதைய கிறிஸ்தவ சபையில் சாதியின் பங்கு என பல விஷயங்களையும் சொல்லிச் செல்கிறார்.

மதமாற்றத்திற்காக வந்த அவர், குடுமி மழித்தால் மட்டுமே மதம் மாற்றத்தை ஏற்றுக்கொள்வோம் என்ற கிறிஸ்தவ ஊழியத்தினரின் விடாப்பிடியை, தேவையற்றது என்கிறார்., மேலும், குடுமி வைத்துக்கொள்வது என்பது இந்து மதத்திற்கான அடையாளம் அல்ல என்கிறார், அது சமூக அடையாளமாக கருதப்பட்டதால், அதில் கைவைத்தால், மதம் மாற்ற முடியாது என்பதனை அவரது கட்டுரையில் விளக்கியிருக்கிறார்(!).

ஆனால் அவரது பல்கலை உரை, சற்று பரந்துபட்ட சமூக நோக்கு உடையதாகவே இருந்திருக்கிறது.. அந்த இளைஞர்களுக்கு நல்லொழுக்கங்களை, நாட்டின் வளர்ச்சி முன்னேற்றங்களில் பங்கெடுப்பது போன்ற கருத்துக்களை கூறியிருக்கிறார்.

சிறிய நூல்.,பெரிதாக வேறொன்றும் எதிர்பார்க்க வேண்டாம்.!!!

புத்தகத்திலிருந்து ...

//இந்து மதத்திலிருந்தோ அல்லது கிறிஸ்தவ மதத்திலிருந்தோ முகமதிய மதத்திற்கு மாறுபவர்கள் தங்கள் மதம் மட்டுமன்றி தங்கள் சாதியிலிருந்தும் வெளி வருகிறார்கள். இது சமூகத்தில் எந்த அளவிற்கு புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றால் தமிழர்கள் முகமதியர்களாக மாறுபவர்களை ' குல்லா போட்டு கொண்டான் ' என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. எந்த சாதியிலிருந்து மாறி இருந்தாலும் எல்லா முகமதியருடனும் திருமணம் செய்து கொள்ளவும் , பொது கிணறு உபயோகம் முதலியவற்றில் முகமதியருக்கு இருக்கும் எல்லா உரிமையும் மத மாற்றத்தால் கிடைத்து விடுகிறது.   இது போன்று சிரியன் கிருத்துவர்களையும் , முகமதியர்களையும் , ஐரோப்பிய ஊழியக்காரர்களாகிய நாமும் பின்பற்றவேண்டுமானால் நம் சபைக்கு வருவோரை அவர்களின் சாதியிலிருந்து முற்றிலும் விலக்கி நம் ஆங்கில தேசத்தவரை போல செய்ய வேண்டும். அவர்களின் குடுமியை திருத்தி நம் ஆங்கிலேயரை போன்று முடியை அணியச் செய்ய வேண்டும். அவர்களையும் நம்மை போல சட்டை , முழு டிரௌசர்ஸ் மற்றும் தொப்பி அணிய பழக்கப்படுத்த வேண்டும். அவர்களை நம்முடைய சமூகத்தில் முற்றிலும் ஈடுபடுத்தி , நம் சொத்து பகிர்வு சட்டங்களை அவர்களுக்கும் உரியதாக்க வேண்டும். அவர்கள் இனி இந்துக்கள் அல்ல - ஆங்கிலேயர்கள் என உணர வைக்க வேண்டும். இதை நாம் செய்யத் தவறினால்  , அவர்களை குடுமியை மழிக்கச் சொல்ல உரிமை அற்றவர்களாக ஆவோம். //

//நமது ஊழியக்காரர்கள் இனி அதை மழிப்பதை ஒரு நிபந்தனையாக விதிக்க வேண்டியதில்லை என்பதே எனது கருத்து. ஞானஸ்தானம் செய்ய விரும்பும் நபர்களுக்கும் , நம் பள்ளி ஆசிரியர்கள் , நம் சபை உறுப்பினர்கள் என எவருக்கும் குடுமியை மழிப்பதை ஒரு நிபந்தனையாக வைப்பதை நிறுத்தவேண்டும். கடவுளின் ராஜ்ஜியம் ஒருவரின் உடையிலோ , உணவிலோ  இல்லை என்பதையும் நம் சமாதானத்திலும் , அன்பிலும் , சந்தோஷத்திலும் , அமைதியிலுமே இருக்கிறது என்பதையும் உணர வேண்டும். இத்தகைய விஷயங்கள் இந்துக்கள் நம்மை குறுகிய கண்ணோட்டம்  உடையவர்கள் என்று நினைக்கவே  உதவும்.//

//கடமை என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவு போன்றது. நீங்கள் எங்கிருந்து ஆரம்பித்தாலும் , அந்த கடமை வழுவாது வாழ்வீர்கள் என்றால், அந்த சுற்றில் ஒவ்வொரு புள்ளியையும் நீங்கள் தொட்டுச் சென்று வாழ்வின் இரு துருவங்களான மனிதத்தையும் , தெய்வீகத்தையும் அடைவீர்கள்.//
60 reviews6 followers
December 5, 2020
சாதரணமாக உலக அளவில் ஒவ்வொரு மதத்திற்கும் சில மத வழிமுறைகள் உண்டு. அவை எல்லாம் அந்த மதத்திற்கான அடையாளமாக பார்க்கப்படுகின்றன. உதாரணமாக திருமணத்தை கூறலாம். தாலி கட்டி திருமணம் செய்வது என்பது இந்துக்களின் திருமண முறை. அதே போல கிருஸ்துவர்கள் மோதிரம் மாற்றி திருமணம் செய்கின்றனர்.
இந்த புத்தகத்தில் இராபர்ட் கால்டுவெல் குடுமியின் அடையாளம் குறித்து விவரிக்கிறார். விடுதலை இந்தியா காலம் வரை மற்ற நாட்டுக்காரர்கள் அநேக பேர் இந்துக்கள் என்றால் குடுமிகள் வைத்துக்கொண்டு பூணூல் வைத்திருப்பர் என நினைத்திருக்கின்றனர். எனவே இதை பற்றிதான் இராபர்ட் கால்டுவெல் பேசுகிறார்.
அதாவது குடுமி என்பது உண்மையில் இந்து மதத்தின் அடையாளம் இல்லை. அது பல கூட்டத்தினரிடையே இருந்த அடையாளம் என்கிறார் ராபர்ட் கால்டுவெல். இந்த பேச்சு ஏன் வருகிறது என்றால் கிருஸ்துவர்கள் சிலர் இந்து வழி முறையை பின்பற்றுகின்றனர். அதில் இந்த குடுமியும் ஒன்று. குடுமி வைத்துக்கொள்வது என்பது இந்து மதத்தை சேர்ந்த முறையே அல்ல.
எனவே இந்திய கிருஸ்துவர்கள் குடுமி வைத்துக்கொள்ளலாம் என்கிற வாதத்தை ஆசிரியர் முன் வைக்கிறார்.
ஆனால் இதுவே இந்தியாவில் கிருஸ்துவ மதத்தின் வீழ்ச்சியாக நான் பார்க்கிறேன். இந்து மதத்தின் அனைத்து மூட நம்பிக்கைகளும் கிருஸ்துவ மதத்தில் தற்சமயம் இருக்கிறது. மாலை போடுவது, பாதையாத்திரை, முடி காணிக்கை, போன்ற விஷயங்கள் உள்ளன. இவையெல்லாம் ஒரு காலத்தில் இந்து மதத்தில் இல்லாமல் வேறு மதத்தினர் கூட பின்பற்றி கொண்டு இருந்திருக்கலாம். அதற்காக அதை இந்து மதத்தின் வழிபாடு முறை அதுவல்ல என பேச முடியாது இல்லையா.
குடுமி வைத்த பூணூல் தரித்த ஒரு கிருஸ்துவரை பொதுஜனம் இந்துவாகதான் பார்க்கும் என்பதே நிதர்சனம்.
Profile Image for Dhanaraj Rajan.
531 reviews362 followers
March 3, 2025
Is Kudumi a religious symbol? Especially the symbol for Hinduism?

Caldwell answers in the negative. It is something associated with the cultural aesthetics.
27 reviews1 follower
December 6, 2024
First to the Tamil translator: Vanathi - Thanks in showing what people can do in idle times, nanri _/\_

And now mainly to Rob Caldwell - I read his Wikipedia page after reading this book. He is no lesser than a sangam poet - so radical and the efforts to know and document the history, it's commendable to say the least. His message to the youngsters still holds good and as an Indian, I'm a bit ashamed we haven't listened to his advice as a group. Let's hope we can do it.

One of the so many English officers to contribute to modern India - another perception that young Indians should be aware when knowing India's history.

Bottom line - I'm going to read more of Mr. Caldwell !!!
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.