Dhandapani Jeyakanthan, otherwise known as 'JK' among his friends and comrades, is a multi-dimensional personality, well known in the literary circle as a prolific writer, commentator, pamphleteer, film-maker and critic. He has won acclaim for wielding his pen against social injustices and economic inequality. Jeyakanthan was born in a family of agriculturists in Manjakuppam, a suburb of Cuddalore of the erstwhile Madras Presidency. Brought up by his mother and maternal uncles, he got interested in politics at a young age as his uncles were actively involved in it. Jeyakanthan dropped himself out of school after completing fifth grade, as he thought studies would hinder his political activism.
In 1946, he left for Chennai in search of livelihood, where he performed odd jobs, before ending up as a compositor in the printing press of Communist Party of India (CPI). His association with the CPI instilled the ideas of the movement, where he got to accompany leaders such as P. Jeevanandham, Baladandayutham and S. Ramakrishnan. The leaders of the party encouraged him to write. After graduating to an active member of the party, he got to learn about topics pertaining to world literature, culture, politics, economics and journalism. It was during this time, Jeyakanthan started writing for pro-communist magazines. Over the next few years, he established himself as one of the top-most writers in the party. His early works were first published in the party newspaper Janasakthi, and soon other magazines like Sarasvathi, Thamarai, Santhi, Manithan, Sakthi and Samaran published his works. His early works focused on the plight of slum-dwellers who were settled in and around the party office.
Jeyakanthan was married to his cousin. The couple had two daughters and a son. Jeyakanthan wrote his first short story for a Tamil magazine titled Sowbakiyavathi, which got it published in 1953. Following early success, Jeyakanthan started writing for mainstream magazines such as Ananda Vikatan, Kumudam and Dinamani Kadir, who published a number of short stories, particularly in the 1960s. In 1964, Jayakanthan entered films by co-producing and directing a venture titled Unnaipol Oruvan, based on his novel.
His writings reflect his views on the morals, ethics and the societal norms as a whole. His writings are vivid portrayals of life and relationships, with all the intricacies and beauty of reality, and with a profound love for humanity. He is one among the few of the original writers of the Tamil Literature. He is a man of insight, pride and scholarship whose writings expressed with unparalleled courage and utmost honesty speaks for all the generations to come. A winner of Sahitya Acadamy Award and Fellowship, Jnanpita Award, Soviet Land Nehru Award, the Russian Federation's Order of Friendship and the Padma Bhushan.
'காதல் என்பது ஒருவரையொருவர் ஆக்கிரமிப்புச் செய்து, அதில் இன்பங் கண்டு, அன்பின் ஆழத்தினை பரிசோதித்துக் கொள்ளும் உறவுமுறை' என அனைவரும் தம அகத்தின் ஏதோ ஒரு மூலையில் நிறுவி வைத்திருக்கும் அடிப்படைச் சிந்தனையை உடைத்துப் போடுகிறது இந்த நாவல். ஜெயகாந்தனின் பார்வையில் இன்டெலெக்சுவல் காதலும் அழகு, அதனால் ஏற்படும் பிரச்னையைத் தங்களின் புரிதல் மூலம் எப்படித் தாங்களே தீர்த்துக் கொள்ள முயல்கிறார்கள், முரண்படுகிறார்கள் என்பதைத் தனது நடையில் அவர் சொல்லிய விதமும் அழகு. அதுவும் அந்தக் 'கல்யாணி' எனும் கதாப்பாத்திரத்தை அவர் நமக்குத் தந்திருக்கிற விதம்,'What a woman' என உள்ளுக்குள்ளே ஒருமுறை சொல்லிப்பார்க்க வைக்கிறது. :)
ஜெயகாந்தனைப் போல் மனித மனங்களுக்குள் புகுந்து புறப்படுவதற்கு இன்னொரு மனிதர் பிறந்து தான் வர வேண்டும். இது என்னுடைய மிகப் பிடித்த புத்தகங்களில் ஒன்று.. மனித மனங்களையும், உறவுகளையும் அழகாக படம் பிடித்துக் காட்டுவது.
என்னவென்று சொல்வது இந்த புதினத்தை பற்றி! அற்புதமான ஒரு படைப்பு. சில கதாபாத்திரங்கள் மட்டுமே இருந்தாலும் அவர்களை வைத்து ஒரு உண்மையான உலகை படைத்திருக்கிறார் ஜெயகாந்தன். மிக சாதாரணமாக ஆரம்பிக்கும் கதை எவ்வளவு சீக்கிரம் நம் மனதிற்குள் ஊடுருவுகிறது. யதார்த்தமான மனிதர்களையும் வாழ்க்கையையும் ஜெயகாந்தனை போல் யாரால் காண்பிக்க முடியும். இவ்வளவு தத்ரூபமாக! கல்யாணி, அண்ணாசாமி, ரங்கா, ராகவன், சின்ன நயினா,பட்டு, தாமு என்று சில பாத்திரங்களே இந்த கதையின் உலகத்தில் வாழ்கிறார்கள். கல்யாணி! அவர்களை பற்றி என்ன சொல்வது. உலகம் பற்றி சரியாக அறியாதவள் போல் தென்பட்டாலும் தனது சிந்தனைகள் மற்றும் வாழ்க்கையை பற்றின பார்வையில் தான் என்ன ஒரு தெளிவு! வாழ்க்கையை அவள் எதிர்கொள்ளும் விதம் அருமை. ரங்கா ஒரு முற்போக்கு வாதியாக தென்பட்டாலும் அவனும் ஈகோ என்ற மாய வலையில் சிக்கி ஒரு சாதாரமான மனிதனை போல நடந்து கொள்கிறான். அவன் ஒரு வில்லனாக சித்திரிக்கபடவில்லை ஜெயகாந்தனால். அவனுள் உள்ள நன்மையை எடுத்து காட்டவே செயகிறார். அண்ணாசாமி மற்றுமொரு சுவாரஸ்யமான பாத்திரம். கல்யாணிக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தபோதிலும்; அவள் மேல் ஆசை கொள்ள, அதை கல்யாணி நோகாமல் எடுத்துறைக்கும் தருணம் அருமை. அவர்களுக்குள் அந்த நேரம் நடக்கும் சம்பாஷணை மிகவும் தெளிவாக இருந்தது. கல்யாணி சொன்ன விதம், அண்ணாசாமி எடுத்துக்கொண்ட விதம் இரண்டுமே அழகு! பட்டு, தாமு, சின்ன நயினா இவர்களெல்லாம் சொற்ப நேரம் வந்தாலும் கதையில் ஒரு தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். கல்யாணியின் வாழ்க்கையில் நேரும் திருப்பம் மற்றும் அதற்க்கு ரங்கா நடந்து கொள்ளும் விதம் நெகிழ்ச்சி. கதையின் முடிவு என்னை மிகவும் கவர்ந்திருந்தது. இதை விட ஒருவர் கூட அழகாக இந்த கதையை முடித்திருக்க முடியாது. முடிவு என்று சொல்வதை விட மீண்டும் ஆரம்பித்தது என்று சொல்வதே சரி. ஹென்றி எப்படி என் வாழ்க்கையில் ஒரு நீங்காத இடம் பெற்று நண்பனாகி விட்டானோ அதே போல் கல்யாணி கூட நினைவை விட்டு அகலாத ஒரு தோழியாகி விட்டிருந்தாள் இந்த புதினம் முடிவதற்குள். பந்தங்களின் ஆழம் மற்றும் பிணைப்பை நேர்த்தியாக சொல்லியிருக்கும் ஒரு அழகிய படைப்பு.
#352 Book 23 of 2025- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் Author- ஜெயகாந்தன்
எழுபதுகளில் இப்படியான ஒரு கதையை, இப்படியான ஒரு கருத்தை சமுதாயத்திற்கு இத்தனை தைரியமாய் சொல்ல “ஜெயகாந்தன்” என்ற ஆளுமையைத் தவிர வேறு யாரால் முடியும். 2025-இல் கூட, இதில் பேசப்பட்டிருக்கும் கருத்து பொருத்தமாய் இருக்கிறது. இன்னும் 100 ஆண்டுகள் கடந்தாலும் இந்த கதை அந்தந்த காலத்திற்கு ஏற்புடையதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
“கல்யாணி” மேடை நாடகம் நடத்தியும்,நடித்தும் வரும் ஒரு நடிகை. “ரங்கா” என்ற பத்திரிக்கையாளர்/எழுத்தாளர்,அவரது எழுத்தும்,விமர்சனமும் பெருந்தாக்கத்தையும், கேள்வியையும் ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும். இவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்தவர்,ஒரு மகளும் இருக்கிறாள்.ஒரு நாடகத்தில் இவர்கள் சந்திக்க நேர்ந்து காதல் வயப்படுகிறார்கள். காதல் கல்யாணம் வரை போகிறது. ரங்காவின் எழுத்திற்கும் அவன் நடந்துக் கொள்ளும் விதமும் மிகவும் முரணாக இருக்கும்.காதலைப் பற்றிய இருவரின் புரிதலும் வேறு வேறாக இருக்கிறது. காதலுக்காக தற்கொலை செய்துக்கொள்ளாவிட்டாலும், பொய்யாகவது அப்படி சொல்வதில் ஒரு காதல் இருக்கிறது என்ற ரங்காவின் கருத்தில் தொடங்குகிறது இவர்களின் முரண்.
காதலைப் பற்றி கல்யாணிக்கு இருக்கும் புரிதல் முற்றிலும் புதுமையானது, தேவாயானதும் கூட. ஒருவரை அக்கறையாக பார்த்துக் கொள்வதும், நேசம்,பரிவு காட்டுவதும்,அவர்களின் விருப்பங்களை மதித்து அவற்றை ஏற்றுக்கொள்வதும்,நேர்மையாக இருப்பதும் தான் காதல்-இது தான் கல்யாணியின் கருத்து. ரங்கா தன்னை முற்போக்குவாதியாக காட்டிக் கொண்டாலும், ஒரு சாதாரண கணவனாக அவன் நடந்துக் கொள்கிறான். பூந்தோட்டத்தின் மீது கல்யாணிக்கு இருக்கும் காதலை இவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை, முயலவும் இல்லை. இவன் விவாகரத்து கேட்க அதையும் முழுமனதோடு தருகிறாள் கல்யாணி. அதன் பின் இருவரின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே கதை.
“நாம்ப ரோஜாகிட்டே எதிர்பார்க்கிறதெல்லாம் ஒரு ரோஜா தான். அந்த மாதிரி மனுஷாள் கிட்டயும் இருந்துட்டா-அவங்க இருக்கிற மாதிரியே அவங்களை ஒப்புத்துக்கறதுன்னு இருந்தா - இந்த மாதிரிப் பிரச்னையே இருக்காது.” ஒருவர் தன்னுடைய சுயத்தை இழக்காமல், காதல்/திருமணம் என்று எந்த பந்தத்தின் பெயராலும் ஒருவரது சுயத்தை இன்னொருவர் பறிக்கக் கூடாது. ஆணோ,பெண்ணோ யாராக இருந்தாலும் சரி! அது தான் இந்த கதை சொல்லும் ஆழமான கருத்து.
“ஒரு பெண் உண்மையிலேயே தன்னைத் தேர்ந்தெடுக்கிறாள் என்றால் அது எவ்வளவு கடினம்?” என்ற கேள்விக்கான நேர்மையான பதில் தான் இந்த புத்தகம். கல்யாணி உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதில்லை. அவள் ஆழமாக சிந்தித்து, தன்னைத் தான் தேர்ந்தெடுக்கிறாள். அதனால் வரும் விளைவுகளையும் நேர்மையாக சந்திக்கிறாள். கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய கதை! கதையின் முடிவு இன்னும் அழகு!
மனித மனங்களை, அதன் ஆழங்களை எல்லாக் கதைகளிலும் பாத்திரப்படுத்தி ஜெயகாந்தன் வியக்கவைக்கிறார். கல்யாணியும் ரங்காவும் நடத்தும் உரையாடல்கள், நாம் அன்றாடம் நம்மோடு நடத��துபவையே !
The relationship between a headstrong, confident rational man and a loving, independent and artistic woman. As the story progresses the man creates problems out of thin air and argues about the littlest of things. If and how the relationship progresses is the novel.
என்னை பற்றிய எனது எண்ணங்களை மற்றவர்கள் என்ன புரிந்து வைத்துள்ளார்கள் என்று தெரிய கூட விருப்பமில்லாமல் கலைத்துறையில் வெறும் ஒரு நடிகையாக மட்டுமே வாழ்க்கையின் ஆழத்தை புரிந்தவளா அல்லது எந்த ஒரு ஆழமான வற்புறுதலுக்கும் இடமில்லாமல் தன்னளவு திருப்தி அடைவதே வாழ்க்கையா ? என்ற கேள்வி வெறும் கல்யாணி கதாபாத்திரத்தில் மட்டும் நின்று பார்க்க முடியவில்லை. நான் இல்லையென்றால் என்ன என்னுடைய கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் என்னை போலவே கூட நடிக்க/வாழ முடியும் என்றால் , நான் யார் என்ற கேள்வியின் பதில் என்று ஒன்றும் கிடைத்துவிட போவதில்லை.ஆனால் அதை தேடி அலையும் உந்துதல் ஒரு வேளை வாழ்க்கையின் சுவாரஸ்யமாக இருக்கலாம். எனக்கு என்னவோ இது ஒரு கதை போலவும்,படித்து முடித்து விட்டது போலவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஜே.கே முன்னுரையில் குறிப்பிடத்திலிருந்து தொடங்கி நிறைய நிறைய இதை பற்றி யாருடனாவது பேச வேண்டும் என்ற மனநிலையிலேயே புத்தகத்தை முடிக்கிறேன் .
ஒருவரை ஒருவர் நேசிக்கும் கணவன்-மனைவியிடையே ஏற்படும் மனத்தாங்கல்களையும் அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகளையும் மிக அழகாக வர்ணித்திருப்பார் ஜெயகாந்தன்.ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்றியே அவனது கதையில் வரும் கதாபாத்திரங்களை மக்கள் மனதில் நிலைபெறச் செய்வது தான்.இந் நாவலில் வரும் கல்யாணியும் ரங்காவும் வாசகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் பாத்திரங்களை படைத்திருக்கின்றார் ஜெயகாந்தன்
ஜெயகாந்தனின் சொந்த வாழ்வில் நடந்ததைப் பிரதிலிப்பகும் தரமான நாவல். இந்த நாவல் இதே பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது. பெண்களை தன்னுடைய கதைகளிலும் நிஜ வாழ்விலும் மதித்த ஜெயகாந்தனின் உன்னத படைப்பு. கதைச்சுருக்கம் படிக்க,
The story us quite moving. I spent a lot of time angry at how Ranga was overthinking his life and making them both miserable, until I realized how that evidenced the emotive power of the text. Not always pleasant, but nice writing.
ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' மிக சில கதாபாத்திரங்கள் கொண்டவை. அவர்களின் உரையாடல் மிக நுட்பமாக , பல்வேறு relationship conflicts-ஐ விவாதிகிறது.
இந்த நாவல் முடித்த பின், சில கேள்விகள் எழுகின்றன.
1. ஆகிரமிப்பு இல்லாமல் ஒரு உறவு அமைய முடியுமா ? ஒருவர் இன்னொருவர் மீது செலுத்தும் அன்பு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டதா ?
2. இந்த நாவல்-இல் ரெங்கா (கதாநாயகன்), ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை இழந்து, அவர்களது குழந்தை , மனைவியின் தங்கை கிராமத்தில் பார்த்து கொள்கிறாள் . அவளையே இவனுக்கு திருமணம் செய்ய குடும்பம் முயற்சிக்கிறது . ஆனால்,ரெங்காவிற்கு கல்யாணியை பிடித்து , நாடக நடிகையை திருமணம் செய்கிறான். ஆனால் , சில நாட்களுக்கு பின், அவன் மனதில் உள்ள பிம்பத்தையே கல்யாணி வெளிக்காட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறான் .
அவன் கல்யாணியை விரும்பி கரம் பிடித்தாலும் , அவனுக்கு தனது மனைவியின் தங்கை போல சமூகத்திற்கு கட்டுப்பட்ட ஒரு பெண்ணையே மனைவியாக விரும்புகிறான் .
He loves Kalyani's but fears it too ... He just considered her as a character in drama ..
--
ரெங்கா பிரிய முற்பட்டாலும் , kalyani அவளாகவே இருக்க முயற்சிக்கிறாள்.
எனக்கு ரோஜா பூ பிடிக்கும் , ரோஜா செடி வளர்கிறேன். அது எனக்கு பிடித்திருக்கிறது . ரோஜா செடியிடம் இருந்து நான் எதிர்பாக்கவில்லை.
And that’s Kalyani: She exists as she is — not to fulfill another’s fantasy.
Very interesting story about how to live life. Definitely there are many things to take away from this story. I want to read more books from this author
ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" ஆண்-பெண் உறவையும், திருமணம் எனும் உறவுமுறை அமைப்பின் கட்டுப்பாடுகளையும், அதனால் ஏற்படும் விரிசல்களையும் பேசுகிறது. இந்த உறவுமுறையில் பெண் தன்னிச்சையாகவும் practical ஆகவும் இருந்து, அதே சமயம் ஆண் வழக்கமான எதிர்பார்ப்புகளுடன் இருந்தால் என்னவாகும்? இந்த ஒரு சூழலை மையமாகக் கொண்டு ஆண்-பெண் உறவில் உளவியல் ரீதியான சிக்கல்களையும், எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றத்தையும் நுட்பமாக வெளிப்படுத்துகிறது இந்நாவல்.
நாடக நடிகை கல்யாணியும், நாடக விமர்சனம் எழுதும் ரங்காவும் ஒரு அமளியின் நடுவே சந்திக்கின்றனர். பார்த்த மாத்திரத்தில் இருவருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சந்திக்க காரணம் தேடுகின்றனர். பின்னர் காதல் கொள்கிறார்கள். கல்யாணிக்குப் பாதுகாவலராகவும், அவள் நலனில் அக்கறை கொண்டவருமாக இருக்கும் அண்ணாசாமி கல்யாணி-ரங்கா இருவரும் கல்யாணம் செய்ய யோசனை கூறுகிறார். ரங்காவும் சம்மதிக்கிறான்.
கல்யாணிக்கு ஒரு சொந்த வீடு இருந்தும், திருமணத்திற்கு பிறகு இருவரும் ரங்காவின் வருமானத்திற்கேற்ப ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார்கள். இந்த பொருளாதார வேறுபாட்டிலினால் எந்த சச்சரவும் வரவில்லை எனினும் இருவரின் இயல்பும் எதிரெதிராக இருப்பதை ரங்கா உணர்கிறான். அவன் எதிர்பார்ப்புகள் அதிகமாகின்றன. ஒரு கட்டத்தில் அவள் இவனுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராய் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறான். அவளுக்கு உயிரான நாடகத்தையும் துறக்க வேண்டும் என்று நினைக்கிறான். கல்யாணியோ அவனிடம் எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் அன்பு கொள்கிறாள் - மனைவி என்ற அங்கீகாரம் உட்பட. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய சம உரிமையை எளிதாக எடுத்துக்கொள்கிறாள். இந்த contrasting இயல்புகளே இவர்களின் பிரிவுக்கு காரணமாகின்றன.
அந்த பிரிவு இருவர் மீதும் என்னன்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது மீதி கதை. கல்யாணி-ரங்கா இருவருக்கிடையே ஏற்படும் ஈர்ப்புக்கான justification சரிவர இல்லை. தங்கள் திருமண நிலையை பற்றி இருவரின் உரையாடல்கள் நீண்டு கொண்டே போவதும், ஆங்காங்கே repetition ஆவதும் தொய்வு. எனினும் இந்நாவல் மனித இயல்பின் எதார்த்தத்தை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.
#24 of 2025 Read on: 18/11/2025 ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் : ஜெயகாந்தன் நான் வாசித்து முடித்த முதல் ஜெயகாந்தன் அவர்களின் புத்தகம். மனித உணர்வுகளின் சிக்கல்கள், ஒவ்வொரு மனிதனும் அதனை அணுகும் விதம் என ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் அதற்கான அமைப்பை கொடுத்து அதிலிருந்து துளியும் விலகியிராமல் அந்தந்த பாத்திரங்களுக்கான நியாயத்தை செய்திருக்கிறார் ஆசிரியர்.. கல்யாணி: ஒரு நாடக நடிகை, ரங்கா: ஒரு கலைத்துறை விமர்சகர் இவர்கள் இருவரிடையில் ஏற்படும் காதல், அதை தொடர்ந்த திருமணம், ஆனாலும் இருவரும் அந்த உறவை அணுகும் முறையில் இருக்கும் வேறுபாடு அந்த உறவை பிரிவின் முடிவில் ஊசலாடச் செய்ய, அதை தொடர்ந்து இடம்பெறும் முரண்பட்ட உணர்வுகளின் சம்பவமே இக்கதை…
இதன் நாயகி கல்யாணி, I was able to connect to her a lot. வாழ்க்கையின் யதார்த்தங்களை அப்படியே ஏற்றுக்கொள்பவள்… She doesn’t fight, she doesn’t confront she just accepts the life as it is… எதிர்பார்ப்புக்களை திணித்து வாழ்வின் இலகுவான நொடிகளையும் சிக்கலாக்கிக் கொள்ளாதவள்…. ஆனால் காதல் என்றால் அங்கு எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் நிறைந்தது எனும் ரங்காவின் எண்ணங்களினுள் சராசரிப் பெண்ணாய் அடங்கி விட விரும்பவில்லை அவள்…
She too loves, she too yearns but she doesn’t want to trap someone using her emotions. Her expression of love is sincerity, commitment and compassion not words of love or emotional manipulation etc. 1970 களில் இப்படிப்பட்ட கதாப்பாத்திரத்தினை எழுதியது இன்னமும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது…
இந்த கதையில் என்னை இன்னும் கவர்ந்தது ரங்கனின் இறுதி முடிவு… அவள் வாழ்க்கை மீதான பார்வையை அவன் புரிந்து கொண்டானா? தெரியவில்லை…. அவள் காதலை அறிந்து கொண்டானா அதுவும் தெரியவில்லை… But still he chose to stay … அவனின் தன்முனைப்பு (ego) அவன் காதலை அழிக்க அவன் இடமளிக்கவில்லை… His love was enough for him to love her and he doesn’t expect any reciprocation…
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்; வாழ்க்கையை அதுவாகவே இரசித்திடும் அவள், வாழ்க்கையை இரசிப்பதற்காக வாழ நினைக்கும அவன்…. இருவருக்குமிடையிலான ஓர் யதார்த்தமான காதல் கதை….
This entire review has been hidden because of spoilers.
This is the novel by Jayakanthan. This story revolves around how a drama actress leads her life and what is her visualisation about life and about relationship.
Come let us see the storyline! Kalyani , a 33 year old lady is Devadasi by birth and drama actress by profession. Ranga, a widower works in media and writes review about her drama. Kalyani was previously inspired by his stories which he wrote 10 years back.Both came to know about each other by Annasaamy who helped Kalyani’s family a lot.
Kalyani had an attraction towards Ranga and wrote a letter without her name and asked him to contact if he found who wrote that. Ranga asked for an interview with Kalyani and he interviewed her.He was inspired by her intelligence.
Both started to love each other and thought of getting married.But there came a misunderstanding regarding love. Ranga asked to leave her drama company but Kalyani refused.He found that Kalyani saw the life as a drama and she was a character in that and that is why she loved persons without having any expectations from them.They applied for divorce and started to live without seeing each other. After 3 months, Ranga found that it was wrong on his side and tried to change him.At that time, he came to know that Kalyani had some disease by which she can’t able to walk.
Ranga realised that even if Kalyani doesn’t love him he loves her and why should I expect the same from her.He decided to apply for divorce and thought of living with Kalyani .For the first time , Kalyani refused for divorce and he was happy on that.They started living without expectations.Just live !Don’t complicate things much!!! This is the ultimate thing that the author suggests!
இது நான் படிக்கும் ஜெயகாந்தன் அவர்களின் இரண்டாவது புதினம். முதல் புதினம் – சில நேரங்களில் சில மனிதர்கள் – வாசித்து முடித்த பின்பு ஒரு வாரகாலம் அடுத்த புத்தகத்தை வாசிக்க இயலவில்லை. பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருந்தன. (அதைப் பற்றி பிறகு நிச்சயம் பகிர்கிறேன்) மனித மனங்களை ஜெயகாந்தன் அவர்களால் எப்படிப் படம்பிடித்துக் காட்ட முடிகிறது? இப்புதினத்தில் – காதல் செய்யும் தருணத்தில் கல்யாணி ரங்கா இடையே எந்த பிரச்சனையும் இல்லை. திருமணத்திற்குப் பின்பு கல்யாணியிடம் மனைவி என்ற ‘Role’-க்கு தகுந்தாற்போல் ரங்கா மாற்றத்தை எதிர்பார்க்கிறான். இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. முன் பின் தெரியாதவர்கள், ஏன் நம்மைப் பிடிக்காதவர்கள் நமக்கு ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளை விட நமக்கு நெருக்கமான, நாம் நேசிக்கும் ஒரு உறவு பலத்த அடியை நம் மனதில் ஏற்படுத்தி விட முடியும் அன்பு நன்மை என்ற பெயரில். இந்தப் புதினத்தை வாசித்த சிலருக்கு (பலருக்கு) கல்யாணியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இது ஒரு சோகமான முடிவைக் கொண்ட கதையாகத் தெரியலாம். ஆனால் எனது பார்வையில் இது சோகமான முடிவே இல்லை. கல்யாணி, ரங்கா இருவரது மனநிலையும் மாறி இருக்கிறது. எனவே எனக்கு இது மகிழ்ச்சியான முடிவைக் கொண்ட புதினம். இந்த இந்த உறவுகள் இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என யார் வரையறை செய்கிறார்கள்? அதுபோல எண்ணம் நமக்கும் இருக்கிறதா? இம்மாதிரியான எண்ணங்கள் ஆரோக்கியமானவை அல்ல என்ற அளவிலாவது நமக்குப் புரிதல் இருக்கிறதா? தெரிந்தோ தெரியாமலோ இது போன்ற எண்ணங்களால் எவ்வளவு பேரை நாம் காயப்படுத்தி இருக்கிறோம் என யோசிப்பதற்கு இந்தப் புத்தகத்தை ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஜெயகாந்தன் அவர்களது எழுத்து யோசிக்க வைக்கக்கூடியது. யோசியுங்கள்.
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்! ஜெயகாந்தன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவருடைய சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் , போன்ற சிறந்த நாவல்கள் என்னை மற்ற அவருடைய புத்தகங்களை படிக்கத் தூண்டின. அதில் இப்புத்தகமும் ஒன்று. இப்புத்தகத்தில் கணவன்-மனைவி உறவைப் பற்றிக் கூறியுள்ளார். இவ் உறவு என்பது வெறும் உணர்ச்சி சம்பந்தப்பட்டது, விட்டுக் கொடுப்பது, ஒருவரையொருவர் புரிந்து கொள்வது, தியாகம் செய்வது இதை எல்லாவற்றையும் உடைக்கிறார். அதற்காக இதையெல்லாம் தேவையில்லை என்று சொல்லவில்லை, இதைத் தாண்டியும் Intellectual ஆகவும், நிதானமாக யோசிப்பதின் மூலம், மற்றவர்களிடத்தில் அவர்கள் இருந்தால் என்ன செய்திருப்போம் என்று அறிவுப்பூர்வமாகவும் புரிந்து கொள்ள முடியும் என்ற வாதத்தை வைக்கிறார். இப்புத்தகத்தில் மிகவும் முக்கிய கதாப்பாத்திரம் கல்யாணி, ரங்கா. கல்யாணி கதாப்பாத்திரத்தை பொறுத்தவரைக்கும் இப்டியும் ஒரு பெண்மனி இருக்க முடியுமா! இவ்வளவு அனுபவத்துடன், Maturity யுடன் கணவரை, சமூகத்தை, மற்றவர்களை புரிந்து கொள்ள முடியுமா என்று நான் புருவங்களை உயர்த்தி வியக்கிறேன்.கல்யாணி சமூகத்தில் ஒரு புதுமைப்பெண். அவளுடைய உணர்வுகள், பேச்சுகள் மற்றவர்களை காயப்படுத்தக்கூடாது என்று நினைக்கிறவள்.. கண்டிப்பாக JK வின் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். என்றும் அவருடைய எழுத்துக்கள் பாமர மக்களின் இதயங்களில் இருக்கும். 😇🙂
ஜெயகாந்தன் தன்னுள் நிகழ்த்திக் கொண்ட தர்க்கங்களின் பிரதியாய் இருக்கிறது இந்தப் புத்தகம். காதல் என்பதை பற்றியும் சுமூகமான மற்றும் மனநிறைவான வாழ்க்கையை மேற்கொள்ளுதல் பற்றியு விவரித்துள்ளார். கல்யாணிக்கும் ரங்காவுக்கும் இடையே நடக்கும் தர்க்கங்களும் ரங்காவின் மனதுள் ஏற்படும் குழப்பங்களும் மிக நுட்பமாகவும் இயல்பாகவும் நற்சிந்தையை ஊட்டும் வடிவிலும் எளிமையாக காட்டப்படுகிறது. ரோஜா பூவை வைத்து கணவன் மனைவிக்கு அல்லது சேர்த்து வாழும் இருவருக்கு ஒரு உதாரணம் சொல்லப்பட்டு இருக்கும் அதை உணர்கையில் அனைவருக்கும் ஒரு தெளிவு பிறக்கும்.
"வாழ்க்கை என்பது அவரவர் பக்கத்து நியாயம் தான்" என்கிற ஜே.கே வின் வாக்கீயத்தின் ஊடகதான் அவரின் எழுத்துகளும் அமைகிறது. சஸ்பென்ஸ் திரில்லர் என்று ஏதன் மீதும் நம்பிக்கை வைக்காது தெளிந்த நீரோடைபோலவே இந்த நாவலை எழுதியுள்ளார். உரையாடலும், மனதில் நினைக்கும் நின்னைப்புகளாலும் ஒரு உறவை, காதலை, சமூகத்தை என்று பலவற்றை மிகவும் நுட்பமாக கையாள்கிறார்.. ""நம்ம மனசிலே இருக்கிற முடிவுகளை நிறைவேத்திக்கிறதுக்கு இதெல்லாம் ஒரு காரணமாயிடுதே தவிர ஒரு காரணத்தினாலே எந்த முடிவும் உண்டாகறதில்லை""😍🖤
The best book I read in 2018. Jeyakanthan beautifully brings out the contradictions and the tussles that come up in every marriage. The way he has constructed the characters of Kalyani and Ranga are simply superb. The 'Self' of a woman which Jeyakanthan talks about is completely relevant even today. This man is a genius! A must read for everyone!!