Jump to ratings and reviews
Rate this book

பூனை எழுதிய அறை

Rate this book
மொத்தத் தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை. பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன். அவள் வந்து பூ விரும்பினாள். தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன். இரு கை நிறைத்த தாமரையை ஏந்தி அவள் முகர்கையில் அவளிடம் ஒரு தாமரை தடாகத்தில் ஒரு தாமரை தவிர என்னிடமும் ஒன்று மலர்ந்திருந்தது. இப்போது.

64 pages, Paperback

First published January 1, 2013

4 people are currently reading
31 people want to read

About the author

கல்யாண்ஜி

21 books12 followers
கல்யாண்ஜி (வண்ணதாசன், சி.கல்யாணசுந்தரம்) (பிறப்பு: ஆகஸ்ட் 22, 1946) தமிழின் நவீன கவிஞர், எழுத்தாளர். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும், வண்ணதாசன் ( Vannadasan) என்ற பெயரில் புனைவுகளையும் எழுதியவர். கனடா இலக்கியத்தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
21 (48%)
4 stars
14 (32%)
3 stars
6 (13%)
2 stars
1 (2%)
1 star
1 (2%)
Displaying 1 - 10 of 10 reviews
Profile Image for Selva.
370 reviews60 followers
March 12, 2021
First things first: It is not poetry that talks about love (as in romantic love), loss and intimacy. I don't know if that is a good or a bad thing. Actually, I bought a volume of the author's poems named 'Nilaa Paartthal' at a second hand bookshop and I liked it a lot. But that volume is not listed on GR. But the availability of obscure volumes as Kindle editions is really a blessing considering it is pocket friendly too. So, bought this copy. It didn't disappoint. It is about everyday observations of things that happen around you. But the words, elegance and depth is not something you and I can do. Like he himself has mentioned in one of the poems, I had a few 'Intha kavithayil enna irukkirathu' moments. Guess that happens with any collection by any author. Otherwise, it was fantastic. Will certainly read more by the author.
Profile Image for Gowsalyaa.
78 reviews29 followers
July 1, 2025
தமிழ் மொழி என்னும் அழகியல் ♥️
Profile Image for Gowtham.
249 reviews50 followers
April 17, 2021
இது வரை பேச்சளவில் மட்டும் கல்யாண்ஜி யின் பெயரை கேட்ட எனக்கு நேற்று அவரின் கவிதை தொகுப்பை படிக்க நேர்ந்தது. தர்பூசணி விதைகள், பட்சி கூட்டம், மண் கட்டி, சூரிய ஒளி என புறம் சார்ந்த அனுபவங்களும் அதனூடே அகம் சார்ந்த எண்ண ஓட்டங்களை பிணைத்து கவிதைகளாக எழுதியுள்ளார்.

56ல் 50 அசத்தலான கவிதைகள் என்றே சொல்லாம் மிச்ச ஆறும் சக வாசகனுக்கு பிடிக்கலாம்.

உங்கள் மனம் கவர்ந்த கல்யாண்ஜி யின் கவிதை தொகுப்பை பரிந்துரைக்கவும்.
நன்றி.
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books179 followers
September 18, 2024
#306
Book 67 of 2024- பூனை எழுதிய அறை
Author- கல்யாண்ஜி

“அசையும் இந்த மரத்தின் கீழ் புல்போல நிற்கும் என்னை சற்று நேரம் பார்த்துக்கொண்டு இருங்கள். அந்தச் சற்று நேரம் முக்கியமானது என்னை விட உங்களுக்கு.”

சென்ற மாதம் அடுத்தடுத்து இவரது கவிதை புத்தகங்களை வாசிக்க நேர்ந்தது எனக்கு. பொதுவாகவே கவிதை தொகுப்புகள் மட்டும் ஒரே ஆசிரியருடைய படைப்பை அடுத்தடுத்து படிக்கையில், இது அதுவோ,அது இதுவோ என்ற ஒரு யோசனை எனக்குள் ஓடும். ஒரே விஷயத்தைத் தான் வெவ்வேறு மாதிரியாக இரு புத்தகங்களிலும் எழுதியிருக்கிறார் என தோன்றும். ஆனால், இந்த படைப்பு அப்படி இல்லை.

அது என்ன பூனை எழுதிய அறை? இவருக்கு பூனை பிடிக்கும் என தெரியும், ஆனால் ஏன் இந்த தலைப்பு என்ற ஒரு ஆர்வத்தின் காரணமாகத் தான் இதை படிக்கத் தொடங்கினேன். இதில் மொத்தம் 56 கவிதைகள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் ஒரு ஜீவன் உண்டு, நிழலாக இருந்தாலும் சரி, கல்லாக இருந்தாலும் சரி, உலகில் உள்ள அனைத்திற்கும் ஜீவன் உள்ளது. அந்த ஜீவனைத் தான் எல்லா கவிதைகளிலும் நமக்கு அடையாளப் படுத்துகிறார்.

அவரின் அன்றாட வாழ்வு, சந்திக்கும் மக்கள், நேசிக்கும் விஷயங்கள், அவரது ஆழ் உணர்வுகளின் பிரதிபலிப்பே தான் இந்த புத்தகம். இதை எழுதி முடித்து அவர் ஒரே இரவில் வாசித்த போது அவருக்கு என்ன நிறைவை இந்த புத்தகம் தந்ததோ அதே நிறைவைத் தான் வாசிப்பவர்களுக்கும் இது தருகிறது.

Rating- ⭐️⭐️⭐️⭐️
Available on- Amazon
Profile Image for Unmaththan உன்மத்தன்.
Author 3 books18 followers
January 4, 2021
"சிவப்பு அலகு

பச்சைச் சிறகு தவிர

வேறு ஒன்றும் தெரியாது நமக்கு.

கிளி மெலிந்துவிட்டது

என்று தெரியும் கிளிஜோஸ்யக்காரருக்கு

மட்டும்"
Profile Image for Kumaresan Selvaraj.
23 reviews4 followers
February 6, 2023
பூனை எழுதிய அறை என்ற கவிதைத் தொகுப்பு கல்யாண்ஜி அவர்களால் எழுதப்பட்டது. இந்தக் கவிதைகளை எழுதி வெளியிட ஐந்து மாதங்கள் தாமதமாகியிருக்கிறது அதற்குக் காரணம் அதற்கு முன்னதாக அவரின் மீனைப் போல இருக்கிற மீன் கவிதைத் தொகுப்பு மிகக் குறைவாக விற்பனை ஆயிருந்த நிலையில் இனி என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, சந்தியா பதிப்பகம் அவர் மீது வைத்த நம்பிக்கை இந்த 56 கவிதைகள் நமக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையாக இருக்கிறது. நான்கு பக்கம் அடங்கிய முன்னுரையில் கூடக் கவிதை மயமாகவே தென்படுகிறது.

கல்யாண்ஜி வண்ணதாசன் என்று வரக்கூடிய கவிதைத் தொகுப்புகளில் இது ஒரு நம்பிக்கை விதை என்றே சொல்லலாம், ஒரே தொகுப்பில் அடுத்தடுத்து தொடர்பற்ற கவிதைகள் வெவ்வேறு திசைகளில் பாய்வதும் அது எப்படி முந்தைய கவிதைக்கு முற்றிலுமாக மாறுபட்டு இருக்கிறது என்ற ஐயத்துடன் இந்தக் கவிதைத் தொகுப்பு ஒரு மையப் புள்ளியைத் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கிறது. எழுதிப் பதிப்பிக்கும் முந்தைய இரவின் ஒரே இருப்பில் அத்தனை கவிதையும் வாசித்து விட்டு ஒரு மன நிறைவை அந்த எழுத்தாளர் பெறுகிறார், அதே மனநிலையை வாசித்து முடிக்கும் நிலையிலும் ஒரு வாசகனுக்கும் கடத்துகிறார் கல்யாண்ஜி.

மேலும் படிக்க - https://kumareszh.wordpress.com/2023/...
Profile Image for Niveda.
14 reviews
January 6, 2026
மற்றுமொரு விடியலுக்கான உந்துதல்..!!
பூனை எழுதிய அறை!

🍂"முக்கால் வாசிப் பேர்
ஞாபகமாக
மூடியைக் கழற்றிய
பேனாவைக் கொடுத்துதான்
கையெழுத்துக் கேட்கிறார்கள்
கவிதைப் புத்தகத்தில்.
இதற்குக் கூட
நம்பாது போன
இவர்களை நம்பியே
இத்தனை வரிகளும்."

🍂"தேக்கும்
பூக்கும்"

"மல்லிகை பூக்கும், மாம்பூ பூக்கும், தேக்கும் பூக்கும்.
“தேக்கும் பூக்கும்” அவ்வளவு தான் கவிதை.

பெருமாள் நகர் புறநகர்ப் பகுதியில் காலை நடை பயிற்சி செல்லும் போது நெடிய தேக்கு மரங்களைப் பார்க்கிறேன். சுவர்களுக்கு வெளியே தேக்குச் சருகுகள் உதிர்ந்து கிடப்பதைக் காண்கிறேன். முதிர்ந்த தேக்கு இலைச் சருகுகளில் மழைத் துளி விழும் போது எழும் அதிர்வுகள்; தென்னை ஒற்றைக் கிடுகு ஆடும் போது வரும் ஓசை – இவற்றை என்னைப் போன்றவர்கள்,சுகுமாரன் போன்றவர்கள் அடுத்த நாள் கவிதையாக எழுதி விடுகிறோம்.

‘தேக்கு’ உறுதிக்குச் சொல்கிறோம்.
“தேக்கும் பூக்கும்” இது இன்னும் நெறைய சொல்கிறது.”

- கல்யாண்ஜி

"மேலும்" வெளியீட்டகம் நடத்திய “பாராட்டும் படைப்பாளியுடன் சந்திப்பும்” நிகழ்வு.
நெல்லை ஜானகிராம் ஹோட்டல் அரங்கம்.
29 மார்ச், புனித வெள்ளி, 2013
Profile Image for Subalakshmi Mohanrarj.
107 reviews3 followers
January 12, 2025
மொத்தம் 56 கவிதைகளை அடங்கிய தொகுப்பு. தினம் தினம் ஒரு மனிதன் கடந்துசெல்லும் விஷயங்களை கூர்ந்து கவனித்து அதை வாசகர்கள் ரசிக்கும் விதமாக கவிதைகள் எழுதி இருக்கிறார் ஆசிரியர். அனைத்து கவிதையுமே புரிந்ததா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன் ஆனால் புரிந்த கவிதைகள் மனதை வருடியது என்னவோ உண்மை.

எனக்கு மிகவும் பிடித்த கவிதை இதோ,

இந்த பௌர்ணமி இரவில் தனியாக எந்தக் குளத்தின் கரையிலாவது அமர்ந்து கல் எறிய வேண்டுமென இருக்கிறது. எந்தக் குளமும் இல்லை அருகில். மனக்குளம் தவிர. ஏற்கனவே எறிந்த கற்களால் அலையடித்துக் கொண்டிருக்க��ம் அது இந்த நிலவிரவில் சற்று அடங்கினால் நல்லது. போக, கல்லெறிகிற ஆசை இருக்கும் வரைக்கும் கலங்கும் தானே எல்லாக் குளமும்.
This entire review has been hidden because of spoilers.
51 reviews2 followers
July 5, 2020
நீண்ட நாட்களுக்குப் பிறகு பக்கத்திற்குப் பக்கம் அடிக்கோடிட்டு வைக்கும் விதமாக அமைந்த தொகுப்பு.
Profile Image for Marudhamuthu.
68 reviews13 followers
September 25, 2022
தவரவிடக்கூடாத கவிதை தொகுப்பு💙💙💙💙
Displaying 1 - 10 of 10 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.