1936 ஆம் ஆண்டில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய முதல் நூல் கிறித்தவமும் தமிழும் எனும் இந்நூலாகும். ‘கிறித்தவரால் தமிழ்மொழிக்கு உண்டான நன்மைகளைக் கூறும் நூல்’ ஐரோப்பியர்கள் வருகையோடு கிறித்துவம் தமிழ்நாட்டில் எவ்வகையான பண்பாட்டுத் தாக்கங்களை உருவாக்கியது என்பதே இந்நூலின் பாடுபொருளாக அமைகிறது. தமிழ்ச்சூழலில் செய்யுள் மரபே பெரும் வழக்காக இருந்தபோது அம்மரபிற்கு இணையான உரைநடை வடிவத்தை காலனிய செல்வாக்கே நமக்கு உருவாக்கியது. இதில் கிறித்துவ பாதிரியார்களின் பங்களிப்பு முதன்மையானது. இத்தன்மை குறித்து விரிவான பதிவை இந்நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் செய்துள்ளார்கள். செய்யுள் நடையில் எழுதப்படும் நூல்கள் ஒருசிலரால் மட்டுமே வாசிக்
மயிலை சீனி. வேங்கடசாமி (பிறப்பு: டிசம்பர் 16, 1900 - இறப்பு: ஜூலை 8, 1980) வரலாற்று ஆய்வாளர். தமிழறிஞர். எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை, வரலாற்றை ஆராய்ந்து பல நூல்களை எழுதினார். தமிழுக்கு பௌத்த, சமண சமயங்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதிய ஆய்வுகள் முக்கியமானவை.
மயிலை சீனி. வேங்கடசாமி வரலாற்றாய்வு, இலக்கிய வரலாற்று ஆய்வு என்னும் இரு தளங்களில் செயல்பட்டவர். தமிழ், வடமொழி. ஆங்கிலம், திராவிட மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ஊர்தோறும் சென்று கல்வெட்டு ஆய்வினை மேற்கொண்டார். சுயமாகப் பயின்று கல்வெட்டுகளைப் படிக்கும் திறன் பெற்றார். கோலெழுத்து, கிரந்த எழுத்து, பல்லவர் எழுத்து, பிராமி எழுத்து எனப் பல்வகையான எழுத்து முறைகளை அறிந்தார்.பழைய ஏட்டுச் சுவடிகளை முறையாகப் படிக்கக் கற்றார். தொன்மையான சாசனங்களைச் சேகரித்தார்.
விருதுகள்: 1961-ல், தனது மணி விழாவில் ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். 1961-ல், தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது. 1980-ல், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ பட்டம் வழங்கிப் பாராட்டியது.
இருண்ட காலத்திலிருந்து தமிழை புத்துயிர் பெறச்செய்த பெருமை ஐரோப்பிய கிருத்துவ பாதரிமார்களையே சேரும் என்பதை வழக்கம்போல தன்னுடைய நுணுக்கமான ஆராய்ச்சியினால் தொகுத்திருக்கிறார் மயிலையார் . சாமானியர்களுக்கு நூல்கள் கிடைக்க காரணம் இரண்டு
1.தமிழ் மொழி அச்சேற்றம் செய்யப்பட்டதும் 2.அதனால் உரைநடை வடிவம் பிறந்ததும் காரணம் என்கிறார்
ஓலைச்சுவடிகளில் நீண்டு எழுதுவது கடினம் , அதிக செலவாகும் .ஆகையால் சுருக்கி செய்யுள் வடிவில் மட்டுமே எழுதினார்கள் தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக . அப்படி எழுதும் சுவடிகள் நகல் எடுக்கும் பொழுது வேண்டும் என்ற இடைச்சொருகல்கள் அல்லது தவறான பொருள் விளக்கம் சத்தியம் என்கிறார். இதனை ஆச்சு நிவர்த்தி செய்கிறது . நோக்கம் மதம் பரப்புதல் என்று இருந்தலும் அதன் பக்க விளைவுகள் சாமானியர்களுக்கு சாதகமாக முடிந்தது தமிழ்மருமலர்ச்சி வரலாற்றில் ஒரு எல்லைக்கல் . அச்சு வந்த பின்னர் கிருத்துவ நூல்கள் மட்டும் அல்லாமல் விஞ்ஞான நூல்களும் அச்சிடப்படுகிறது . பல நூற்றாண்டுகளாக வெகு சிலருக்கே கைக்கு எட்டிய அறிவு , எல்லோருக்கும் கிடைக்க பெற்றது.
வண்ணநிலவனின் " ரெயினீஸ் ஐயர்" நூலை படிக்கும் பொழுது அதன் தலைப்பை படித்து குழம்பி பொய் இருந்தேன். கிருத்துவ பெயராகவும் தெரிகிறது ஆனால் ஐயர் என்கிறார்கள். ஒரு வேலை கன்வெர்ட் ஆன பிரமணரோ என்று நினைத்தேன்.இந்த நூலை படித்த பிறகே அது Charles Theophilus Edward Rhenius என்கிற ஜெர்மன் பாதிரி என்று. ஐரோப்பிய பாதிரிமார்கள் ஐயர் என்று சேர்த்துக்கொண்டது ஆச்சரியம் . கல்வி அங்கே தன தேங்கி கிடந்திருக்க வேண்டும் .
ஐரோப்பியர்கள் வருகையின் காலவரிசை விளக்கம் அட்டகாசம் . போர்துகீசியர்களை தான் நாம் பறங்கியர் என்று அழைத்திருக்கிறோம் . பிரிட்டிஷை அல்ல . தமிழ் சினிமாவின் தவறு அது . எப்படி போர்த்துகீசியர்கள் பிரேசிலில் இருந்து மிளகாய் ,முந்திரிக்கொட்டை ,கொய்யா ,அன்னாசிப்பழ,சீத்தாப்பழம் மற்றும் பப்பாளியை இங்கே கொண்டு வந்தார்கள் என்பது சுவையான தகவல். அவை எல்லாம் நம் நாட்டுக்கு பூர்விகம் என்று எண்ணி இருந்தேன் . மேலும் எவ்வளவு போர்த்துகீசிய திசைச்சொற்களை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம் என்பது ஆச்சர்யம் . (வாத்து,பீங்கான் ,பேனா ,பீப்பா ,ஜன்னல் ,ஏலம் , ஆயா ,ரசீது,மேஸ்திரி ,பட்டாசு ,ஆசுபத்திரி .....)
முதல் தமிழ் நூல் தமிழ்நாட்டிலேயே அச்சடிக்கப்பட்டது 1577ல் . கிருத்துவ வேதோபதேசம் . வைப்பக்கோட்டையில் அச்சேறியது .
தமிழ் கிருத்துவ போதனைகள் ஏன் வித்தியாசமான தமிழ் மொழிநடையில் இருக்கிறது என்று நான் பலநாள் எண்ணி இருக்கிறான். இந்த நூல் அதற்கான விடையை கொடுத்துவிட்டது .
தகவல் களஞ்சியம் இந்த நூல். கண்டிப்பாக படிக்கப்படவேண்டும் .