S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
குழந்தைகளுக்கான புத்தகம் என்று வரையறுக்கப் பட்டிருந்தாலும், இதில் எஸ்.ரா சொல்கிற விஷயங்கள் நமக்கானவையுமே! எலிகள் காலம் காலமாய் அஞ்சி வாழ்ந்த பாம்புகளிடமிருந்து தப்பித்து எப்படி வாழ வேண்டும் என்று யோசிப்பதும் மற்றும் எப்படி காத்து கொண்டார்கள் என்பதுமே இந்த கதை.
ஓரிடத்தில் சட்டத்தை இயற்றி, நீதி விசாரணை செய்து, தண்டிப்பது முழுவதும் பாம்புகள் செய்தால் எலிகளுக்கு நீதி எப்படி கிடைக்கும் என்ற கேள்வி சிறார்களுக்கானது மட்டுமாய் எனக்கு தெரியவில்லை. இந்த சமூகத்தின் கட்டமைப்பை எப்படி, சமுத்திரத்தில் பெரிய மீன் ஒன்று சிறிய மீன் ஒன்றை விழுங்க முற்படுகையில் எந்த கேள்விகளும் அற்றுப்போகுமோ, அப்படியே சொல்ல முற்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.
ஓர் இனத்தின் விடுதலைக்காக டோம் என்ற எலி படிக்க செல்வதாகவும் மேலே படித்து எப்படி அந்த இனத்தை காக்க சிரமங்கள் பட்டது என்பதையும் சூசகமாக சொல்லி இருக்கிறார்.
ராக் என்ற பாம்பு எப்படி படித்து வந்து அதனுடைய இனத்தை காக்க என்னென்ன அவ வேலைகள் செய்தது என்பதையும் சொல்லியிருக்கும் விதம், எல்லோரும் படிக்க வேண்டிய நூலை மாற்றி இருக்கிறது. பெரிய சொல் ஜோடிப்புகளோ, நீண்ட கதை பக்கங்களோ இல்லாமல் நின்று நிதானமாக ஒரு கதை சொல்லி சென்றிருக்கிறார் எஸ்.ரா அவர்கள்!
🐀குழந்தைகளுக்கான அற்புதமான கதை. "எலியின் பாஸ்வேர்ட்" என்ற தலைப்பை பார்த்தவுடன் ஏதேதோ கற்பனைகள் தோன்றியது. ஆனால் அதை அனைத்தையும் விட கதை முற்போக்காகவும் அறநெறி கொண்டதாகவும் இருந்தது.
🐀பல இடங்களில் டோம் என்ற எலியை எலியாகவே பார்க்க தோன்றவில்லை. சம உரிமை வேண்டுமென்று போராடும் மனிதனாகவே பார்க்க தோன்றியது.
🐀அனிமேஷன் படத்தை பார்ப்பது போல் தான் இருந்தது கதையை படிக்கும் பொழுது. அதுவே கதையின் வெற்றி என்று தோன்றுகிறது.
🐀அனிமேஷன் படமாகவும் எடுத்தாலும் அற்புதமாக இருக்கும்.
🐀எலிகளுக்கும் பாம்புகளுக்கும் உள்ள பிரிவினை பற்றியும் வாழ்வாதார பிரச்சனைகள் பற்றியது இந்த கதை.
🐀பல இடங்களில் ஒரு எலி இதை செய்கிறதா என்று சிரிப்பு வரும்படி கதை நகர்கிறது.
🐀பாம்பிடமிருந்து எலிகள் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன செய்கிறது என்பதே கதை.
A good read for kids. SRa's intention was to make kids enjoy reading and take-up this as a hobby. The intention has to be applauded. Seeding at the right time will help us to harvest better.
இந்த புத்தகம் மிகவும் நன்றாக இருந்தது. எலியின் கடற்பயணம் எனக்கு பிடித்திருந்தது. டாமின் புத்திசாலித்தனத்தால் எலிகள் வம்சம் பாம்பிடம் இருந்து தப்பித்தது.