எப்போதும் சொல்வதுதான். இதுவரை எழுதியவற்றில் மட்டுமல்ல இனிமேல் எழுதப்போவதிலும் எனக்குப் பிடித்த என் படைப்பு பழிதான். கிண்டிலில் வெளியிடுவதற்காக நேற்றும் இன்றுமாய் பழியை முழுமையாய் வாசித்தபோதும் இதே எண்ணம்தான் மேலோங்கி இருக்கிறது. முதல் நாவல் என்பதால் மட்டுமல்ல இந்த நாவல் தரும் உணர்வு வேறொரு உச்சம். மிக அதிகபட்ச பித்தின் வெளிப்பாடுதான் இந்நாவல். பழியின் மொழியும் இந் நாவலில் பேசப்பட்ட காமமும் காதலும் வன்முறையும் பரபரப்பும் என்னை எப்போதும் பைத்தியம் பிடிக்க வைக்கும். எத்தனையாவது முறையாகவோ முழுமையாய் வாசித்து முடித்த இப்போதும் அதே உணர்வு எஞ்சியிருக்கிறது.
பழியின் நேரடியான விவரணைகளும் அப்பட்டமான உடல் மொழியும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. போர்ன் நாவலாகிவிடும் என எச்சரித்தார்கள். அப்படி ஆனால்தான் என்ன என்கிற தைரியமும் எனக்கிருந்தது. கதாபாத்திரங்களின் நகர்வுகளுக்கேற்ப சந்தர்ப்பத்தை உருவாக்கினேன். மொழியை முடிந்தவரை அப்பட்டமாகவே எழுதினேன். மது பழியின் பக்கங்களில் கரைபுரண்டோடியது. பெண்ணுடல் அத்தனை ஆவேசமாய் பழியின் பக்கங்களை ஆக்மிரத்தது உடன் இரத்தமும் ஆறாய் ஓடியது. மிகப் பெரிய திளைப்பில் கிடந்த நாட்கள் அவை. இனி ஒரு போதும் திரும்ப இயலாத நாட்கள்
திருவண்ணாமலையைச் சொந்த ஊராகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத் கவிதை, சிறுகதை மற்றும் நாவல் என புனைவுகளிலும் இலக்கிய விமர்சனங்கள், சினிமாக் கட்டுரைகள் என புனைவல்லா எழுத்திலும் எழுதி வருபவர். மலையாளத் திரைப்படங்களிலும் சர்வதேச மாற்றுத்திரைப்படங்களிலும் திரைக்கதைகளில் பணியாற்றியுள்ளார்.
அய்யனார் விஸ்வநாத் 2007 முதல் தனது வலைப்பதிவுகளில் கவிதைகள், நாவல்கள், ரசனை குறிப்புகள் மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். அவரது நூல்கள் வம்சி, கிழக்கு, சீரோ டிகிரி ஆகிய பதிப்பகங்களின் மூலம் வெளியாகி உள்ளன. திருவண்ணாமலையை பின்னணியாகக் கொண்டு தொடர் நாவல்களை எழுதுகிறார். மனிதர்களையும் வரலாற்றையும் பிறழ்வுகள் மற்றும் கூறப்படாத களங்கள் வழியாக எழுதும் பின்நவீனத்துவ பாணி எழுத்தாளராக அறியப்படுகிறார்.
அதீதமான வன்முறையும் அதீதமான காமமும் கொண்ட த்ரில்லர் நாவலாக இருக்கிறது. காமத்தை ஏன் இவ்வளவு வெளிப்படையாக எழுத வேண்டும். அதற்கான தேவை என்ன என்று புரியவில்லை.
many have posted about abuse languages and sexual content that takes place in this novel, yes it is but at the same time, this book is not a fairy tale!... it goes with the story of how would be the lives of criminals and killers, and their daily basis life... how they speak and how they think about the world and he have portraited it good!... this book is not to change the society or to make digital India! this book is on its own way! and I really appreciate it!
பல கதைகள் சமூகத்துக்கோ, தனி மனிதருக்கோ அறிவுரை சொல்லும். சில கதைகள் தன் வேலையை மட்டும் பார்க்கும். இக்கதை அந்த சிலவற்றில் ஒன்று. தகாத வார்த்தைகள், நிகழ்வுகளை அப்படியே எழுத வேண்டிய அவசியம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. பொதுச் சமூகம் பயப்படும் அந்த கூட்டத்தை பற்றி ஆராய்ந்து எழுதியது தானா?
ஊழ்,குன்றா பகை, தீராப்பழி இவையனைத்தும் ஒருவனை எப்படி பெருஞ்சுழலில் சிக்க வைத்து அவனுக்கு ஒரு மீட்ப்பை தருகிறது என்பதை முதல் நாவல் என்று தெரியாத அளவு மொழி அடர்த்தியுடன் எழுதியிருக்கும் அய்யனார் விஸ்வநாத்துக்கு பாராட்டுகள்.
காமம், கொலை, கோபம், நட்பு என்று மனித அடியாழத்தில் உள்ள ஆதார குணங்கள் வழியாக மட்டும் பயணிக்கிறது இந்த பழி. படிக்கும் சிலருக்கு மிக அதிக வன்முறையாக தெரியலாம்.
நம்மை சுற்றி இருக்கும் நிலஉலகம் அங்கு எந்த வருத்தமும் எந்த குற்றஉணர்ச்சியும் இல்லாமல் குற்றங்கள் செய்யும் மனிதர்களென..அவர்களின் வாழ்க்கையை, காமத்தை, மணகுழப்பத்தை,ரத்தம் தெறிக்கும் கொலைகளை ஒரு dark subject படம் பார்ப்பது போல் சிறப்பாக எழுதியிருக்கிறார். விஜியிடம் இருந்து விலகிய அய்யனாரின் மனநிலை அவனுக்குள் அவனே நடத்தும் உரையாடல் என நிறைய சிறப்பு அம்சங்கள் உண்டு. ""இந்தப் போதை மிகுந்த பின்னிரவில் நானும் நானுமாய் சப்தமாய் சண்டையிட்டுக் கொள்ள துவங்கினோம்.""
This entire review has been hidden because of spoilers.