Jump to ratings and reviews
Rate this book

உறுபசி: Urupasi

Rate this book
யதார்த்த வாழ்வின் தோல்வியை மறைக்க தன் கட்டற்ற எண்ணங்களின் வழியே சுதந்திரமான வாழ்வை வாழ்வதாக காட்டி கொள்கிறான் சம்பத் அவன் இறப்பின் பின் நினைவுகளின் வழி மீண்டும் தொட்டு மீண்டு வரும் மூன்று நண்பர்கள் பற்றியதே நாவல். புது யுகத்தில் தமிழ் கல்வியின் வீழ்ச்சியை சம்பத் மூலம் உணர்த்தும் வகையில் கூட இந்த நாவலை எடுத்து கொள்ளலாம்

226 pages, Kindle Edition

Published November 28, 2017

47 people are currently reading
818 people want to read

About the author

S. Ramakrishnan

163 books664 followers
S. Ramakrishnan
(Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)

is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.

Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.

His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
113 (27%)
4 stars
168 (41%)
3 stars
91 (22%)
2 stars
26 (6%)
1 star
10 (2%)
Displaying 1 - 30 of 48 reviews
Profile Image for Avanthika.
145 reviews855 followers
June 13, 2014
ஏதோ சில சம்பவங்களால் சிலரை நாம் வெறுக்க துவங்கியிருப்போம். ஒரு கசப்பான அனுபவம் தவிர்க்க இயலாதது. நம்மிடம் தவறாக நடந்திருக்கலாம். சுடு-சொல் பேசியிருக்கலாம். ஆபத்து நேரத்தில் விட்டொழிந்து போயிருக்கலாம். நம்மால் ஏன் அவரை போல வாழ முடியவில்லை என்ற ஏக்கம் கூட காரணமாய் இருக்கலாம். அப்படி கசப்பு பிம்பம் விழ்ந்த ஒருவர் இறந்து போனால் ?

ஒரு சில மனிதர்களின் மன ஆழத்தை புரிந்து கொள்ளவே முடியாது. They'll be mentally sane but sub - consciously unstable . சம்பத் அதுபோல் ஒருவன். நம்மில் எத்தனை பேர் இறந்த மனிதனின், அதுவும் வாழும் போது "இவன் கசப்பானவன்" என்றதொரு முத்திரை விழுந்த ஒருவனின் வாழ்வை அவன் சாவுக்கு பின்னர் திரும்பி பார்த்திருக்கிறோம் ? உறுபசி திரும்பி பார்க்க வைக்கிறது. நம்முடன் இருந்தவன் நம்மக்காக அழுகிறானா அல்லது நாளை அவனுக்கும் அந்நிலை என்று அழுகிறானா என்று தெரியாதபட்சத்தில், நாளை நாம் செத்தப்பின் நம்முடன் இருந்தவர்கள் என்ன சிந்திப்பார்கள் என்றொரு சிதைந்த எண்ண-அலைகளை ஏற்படுத்துகிறது. எல்லாரும் ஏதோ ஒரு காரணம் இருப்பதால் மட்டுமே நம்மோடு ஒட்டியுள்ளனர். நரமாமிசம் உண்பது போல கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை உண்ணுகின்றனர். சம்பத்தின் வாழ்வும் சாவும் கனத்த இதயத்தோடு புத்தகத்தை மூட வைத்தது.
Profile Image for Jaya Sangari.
4 reviews5 followers
May 3, 2023
தன் பயத்தை மறைப்பதற்கு ஒரு மனிதன் காட்டும் பல முகங்களை பிரதிபலிக்கும் புத்தகம்..மிக மிக எதார்த்தமாக, உண்மையை சொல்லும் கதை❤️
5 reviews1 follower
June 9, 2021
சம்பத் மீது கோவமும், வெறுப்பும், பரிதாபமும், அதையெல்லாம் விடவும் அளவுக்கு அதிகமான பொறாமையுடன் இந்நாவலை முடிக்கலானேன்.
Profile Image for Shergin Davis.
42 reviews
July 18, 2021
4.25/5.
'மரணம்' என்ற சொல் நிச்சயம் அனைவருக்கும் ஒரு அச்சத்தையும், கலக்கத்தையும் தருவதாகதான் இருக்கிறது. நம் அன்பர்களின் மரணம் குறித்த எண்ணம் பல சமயங்களில் கண்களில் கண்ணீரையும், நம் இதய துடிப்பின் வேகத்தையும் அதிகரிக்கதான் செய்கிறது.
மரணம் ஒரு நாள் நம்மையும் வந்து கவ்விக் கொள்ளதான் போகிறது. அதன் பிடியிலிருந்து எவராலும் தப்ப இயலாது என்பதை பல வேளைகளில் உணராமலே வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். ஒரு நாள் இந்த பூமியில் வந்தவர்கள் இதைவிட்டு செல்லதானே வேண்டும்! அது யாராக இருந்தாலும் இப்பூமி எவருக்கும் நிரந்தரம் கிடையாதுதானே! இறுதியில் அனைவரும் இயற்கையோடு கலக்கதான் வேண்டும் என்பதை அழுத்தமாக உணர்த்தியுள்ளார் எஸ். ரா.
இந்நாவலில் எஸ். ரா. பல விசயங்களை சொல்லியிருந்தாலும், எனக்கு இந்த மரணம் குறித்த எண்ணம் தான் மிகவும் பாதித்ததாக உணர்ந்தேன்.
எப்பொழுதும் போல்தான் எஸ். ரா. சூப்பர்!💓
Profile Image for Shyam Sundar.
112 reviews39 followers
August 15, 2014
உறுபசி நாவலைப் படித்த சமயம் மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் பலவாக என்னுள் எழும்பின. அழுத்தமான கதைக்கு அழுத்தமான சொற்களின் புனைவு நெஞ்சுக்கு மிகக்கனமாகவே இருக்கிறது. முன்னுரையில் உலர்ந்த சொற்கள் என ஆசிரியர் குறிப்பிடுவது போல நாவலைப் படிக்கும் போது நாமும் ஒன்றித்து வறண்டு போகிறோம்.

உறுபசி எனும் சொல்லின் புரிதல் கலவையாக மண்டிக் கிடக்கிறது. உறுபுகளின் பசி, உறுதல்களின் பசி, தீராத உறுதல்கள் எனக் கொள்ளலாமா? நாவலின் ஆரம்ப வரியே நம்மை கட்டி இழுத்து உள்ளே போடுகிறது. இதில் மென்மை குறைவு. கோபமும், தாபமும், குரூரமும், காமமும் எழும்பி நிற்கின்றன.

சமுதாயத்தைச் சார்ந்து முகமூடி அணிந்து வாழும் வாழ்க்கையைத் தவிர்த்த ஒருவனின் கதை தான் உறுபசி. சம்பத் எனும் கதை நாயகனின் இறப்பிற்கு பின் கதைச் சொல்லிகளான அழகர், ராமதுரை, மாரியப்பன், ஜெயந்தி(சம்பத்தின் மனைவி) மற்றும் யாழினி வழி அவன் வாழ்வின் அத்தியாயங்களை அறிந்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் காமமும், கோபமும், பேராசையும், வெறித் தன்மையும் இருக்கவே செய்கிறது. குடும்ப, சமூக நலனுக்காக நாம் அதை நம்முள் புதைத்து வைத்து வாழ்கிறோம். சம்பத் எனும் கதாபாத்திரம் சமுதாயத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சித்தரிக்கப்படுக்கிறது. இதனால் சமூகம் அவனிடம் வினோதபார்வைக் கொள்கிறது.

ஒருவகையில் சம்பத் ஐப் போன்றுதான் நாமெல்லாமே. மனச்சிதைவை நமக்குள்ளாகவோ, அல்லது நம் எழுத்துக்கள், கோபங்கள், ஏன் சந்தோஷங்களின் வழியேவோ கரைத்துவிடுகிறோம். நமக்குள் நாமே உருகி புதியவனாய் மாறிக் கொள்கிறோம். சம்பத்தின் இச்சைகளைப் போன்றே நமக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் சம்பத் எந்த தவறும் செய்யவில்லை என்றேதான் நினைக்கிறேன்.

நாவலின் வழிநெடுகவும் வன்மத்தின் வண்ணம் ஊறிக் கொண்டே செல்கிறது. அது அடர்த்தி மிகுந்து கழுத்தை இறுக்குவதாகவும்கூட தெரிந்தது .நாவல் படிக்கப் படிக்க என்னோடு ராமதுரையும், மாரியப்பனும், அழகரும் அவர்கள் சென்ற மலையிடுக்குகளில் பயணித்துக் கொண்டே இருந்தார்கள். சம்பத்தோடு உண்டான நினைவுகளும் நிகழ்வுகளுமாக எழுத்துக்கள் சுற்றிக்கொண்டே இருந்தன.


சராசரி கமர்சியல் நாவலில் சொல்லப்படாத விடயங்களை மட்டுமே நாம் ஒவ்வொரு பக்கங்களிலும் வாசிக்கிறோம். சமுதாயத்தின் மறுபக்கத்தை மிக நேர்த்தியாகவே ஆசிரியர் நமக்கு திரையிட்டுக் காட்டுகிறார். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உணர்வும் பிழியப்பட்டுள்ளது. படித்து முடிக்கும் வரையிலும் மரணம் எனும் பிம்பத்தின் ஊடே நாமும் பயணித்து திரும்புகிறோம்.
Profile Image for Sruthi.
24 reviews
August 29, 2024
✨ உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன் ✨

🍂 இப்படித்தான் வாழ வேண்டும் என்று நம் சமுதாயம் ஒரு கோட்பாட்டினை வகுத்து வைத்துள்ளது. ஆனால், சிலர் அவற்றையெல்லாம் மீறி தன் மனம் சொல்வது போல் வாழ முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சியில் சிலர் வெற்றி காண்கிறார்கள். பலர் தோற்று வாழ வழியின்றி இந்த சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதன் தான் உறுபசியின் கதாநாயகன் சம்பத்.

🍂 இந்த நாவல் சம்பத்தின் இறப்பில் இருந்து தொடங்குகிறது. அதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பு. கதாநாயகனின் வாழ்க்கையை பற்றி அவனின் மனைவி மற்றும் அவனது நண்பர்களின் நினைவில் இருந்தே வாசகர்களாகிய நமக்கு தெரிந்துக் கொள்ள முடிகிறது.

🍂 சம்பத்தின் நண்பர்கள் அழகர், ராமதுரை, மாரியப்பன். இவர்கள் கல்லூரியில் ஒன்றாக இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும்போது நண்பர்களானவர்கள். இவர்களுக்கு சம்பத்தின் நடவடிக்கைகள் சரியாகப் படவில்லை என்றாலும் அவன் மீது ஒரு விதமான ஈர்ப்பு இருந்தது. அவனைப் போல நம்மால் வாழ இயலவில்லையே என்ற பொறாமையும் கூட. அவனுக்கு மிகவும் உதவியாக இருந்தது ராமதுரை தான். ஆனால், கதை பெரும்பாலும் அழகரின் வாயிலாகவே சொல்லப்படுகிறது. 

🍂 வெறித்தனமான காமம், சிறுவயது மன அதிர்ச்சி, குரூரம், பயம், அவமானம், குற்ற உணர்வு, காதல் தோல்வி, வேலையில் நிலையில்லாமை, வறுமை, குடிப்பழக்கம், உடல் உபாதைகள், மனநிலை பாதிப்பு, மரணம் என ஒரு மனிதனின் எல்லா இருண்ட பக்கத்தின் முழு உருவமாக சம்பத்தின் கதாபாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. 

🍂 சம்பத்தின் மனைவி ஜெயந்தியை பற்றி என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். உறுபசியில் வரும் ஜெயந்திக்கு உதவியாக சம்பத்தின் நண்பர்களாவது இருக்கிறார்கள். நிஜவாழ்க்கையில் பல ஜெயந்திகள் எல்லோராலும் கைவிடப்பட்டு, வெறும் கேள்விக்குறியாகவே அவர்களின் வாழ்க்கை மண்ணோடு மண்ணாக மக்கி மடிந்துபோகிறது. 

🍂 இது ஒரு வறண்ட கதைக்களம் என்றாலும் இதற்கு வாசகனை வாசிக்க வைக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. நம் கண்முன்னே நடக்கின்ற, நாம் மறக்கின்ற யதார்த்தத்தை நமக்கு உறுபசியின் வாயிலாக நினைவுப்படுத்திய எஸ். ரா. அவர்களுக்கு என் மிக்க நன்றிகள்.
Profile Image for Gowthaman Sivarajah.
17 reviews1 follower
July 25, 2018
நல்லதோ கெட்டதோ எல்லாவற்றையுமே எஸ்.ரா ஒரு பூடகமாகவே சொல்லுவார் என்றொரு கருத்து பரவலாக உண்டு. இதுவும் அவ்வாறானதொரு நாவலே. சம்பத்தின் மரணத்தில் ஒன்று கூடுகின்ற அவனது இறந்த காலப்பகுதியின் சிலபல கூறுகளில் அவனோடு வாழ்ந்த நண்பர்கள்(?) மூவரின் வாயிலாகவும் அவனது மனைவியின் வாயிலாகவும் சம்பத்தால் வாழ்ந்து முடிக்கப்பட்ட அவனது வாழ்க்கை நாவலாக எம் கண்முன் விரிக்கப்படுகிறது.

சம்பத்துக்கு லைட்டரின் நெருப்பைவிட தீக்குச்சியின் நெருப்பு அதிகம் பிடித்திருக்கிறது. "லைட்டரின் நெருப்பு தீக்குச்சி நெருப்பைப்போல அடர்த்தியாக இல்லை. உலகிலுள்ள தீக்குச்சிகள் எல்லாம் பதட்டமாகவே எரிகின்றன" என்று அதற்கு சம்பத்தின் மூலமாகவே விளக்கம் சொல்லப்படுகிறது. இதையே இந் நாவலின் அடி நாதமெனச் சொல்லலாம்.
Profile Image for Sivaramakkrishnan.S.K.
84 reviews1 follower
March 18, 2020
Loved this book so much. My second book on S.Ramakrishnan. He has handled this book extremely well in Non linear narration. He explains the depths of Human life in beautiful way. Every character has a story inside them & the writer has beautifully handled them in the book. Highly recommended to Tamil Novel readers.
Profile Image for Venkatesh Max.
15 reviews4 followers
September 7, 2022
தமிழ் இலக்கியம் படித்த ஒரு இளைஞனின் வாழ்கை கதை மற்றும் என் தனிப்பட்ட கருத்து.
ஒருவன் தன் வாழ்க்கையின் காரணத்தை அவர்கள் நியமித்த காலாண்டுக்குள் உணரவில்லை என்றால் அவன் வாழ தாங்குதி இல்லாதவன் ஆகிவிடுகிறான். அவனை இந்த உலகம் ஏற்க மறுக்கின்றது, இறுதி வரை அவனால் தன் வாழ்க்கையை தன் சுய எண்ணங்களோடு வாழ இந்த சமூகம் விடுவது இல்லை. ஒரு கட்டத்தில் அவன் தன் ஆசாலிகளையே மறந்து மற்றவர்களுக்காக வாழ கட்டாயப்படுத்த படுகிறான்.

சம்பத் எனும் இளைஞனின் நண்பர்களின் வழியாக பயணிக்கும் இந்த கதை மிகவும் ஆழமான வழியை நம்முள் கடத்தி செல்கிறது. சம்பத்தை போல் நம்மில் பலரை இந்த சமூகம் ஏற்று கொள்வது இல்லை.
பள்ளியில் நன்றக படிக்கச் வேண்டும், படித்த பின்னர் நாள் கல்லுரியில் சேர வேண்டும் கல்லுரி படிப்பை முடித்த பின் னால வேலையில் சேர வேண்டும், அந்த வேலை நமக்கு பிடிக்கிறதா இளைய என்பது இங்கே கேள்வி கிடையாது நீ நல்லவனாக இருக்க வேண்டும்.
யாருக்கு நல்லவனாக இருக்க வேண்டும்? அது இன்று வரை கேள்வியாகவே உள்ளது.
இவர்களின் இந்த கடிவாரத்துக்குள் சிக்கிக்கொண்டு வாழும் அனைத்து இளைய சமுதாயத்தின் வழியை இந்த கதையின் வழியாக ஆசிரியர் நம் மனத்திரிக்கும் ஆழமான வலி மிகுந்த உணர்வை ஏற்படுத்துகிறார்.
Profile Image for Sangamithra.
58 reviews26 followers
March 7, 2021
நூல் : உறுபசி
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
பக்கம் : 156
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்

தமிழ் இலக்கியம் படித்து மேடைப்பேச்சாளர் ஆகி பிறகு கிடைத்த வேலை செய்து சாகக்கூடாத வயதில் மரணத்தைத் தழுவும் சம்பத் உறுபசியின் கதாநாயகன். அவனது மரணத்தை எதிர்கொள்ளும் மூன்று நண்பர்களின் மனநிலையும், அவர்கள் நினைவு கூறும் கடந்த கால வாழ்க்கையுமே கதைக்களம். புதினம் உரையாடல் வடிவில் இல்லை. பெரும்பாலும் கதைமாந்தர்களே கதையைச் சொல்லிச் செல்கிறார்கள்.

ஒரு கதாபாத்திரமோ, ஒரு வசனமோ, ஒரு வரியோ நாம் வாசிக்கும் போது நம்மைக் கவரும். இப்புதினத்தில் வரும் வெறும் இரண்டு சொற்கள் கடந்த இரண்டு நாட்களாய் நெஞ்சில் தைத்தது போல ஒட்டியிருக்கிறது. “சிந்தனா அவஸ்தை” – படித்தவுடன் மூளையில் உள்ள எல்லா செல்களும் எனக்கான வார்த்தை எனக்கான வார்த்தை என்று சொல்லிக் கொண்டது போல இருந்தது. எனக்கு இவை சாகும்வரை மறக்க முடியாத சொற்கள்.

உணர்வுகளை முதன்மைப்படுத்தி பயணிப்பவர்கள் வாழ்க்கை முழுவதும் உள்காய்ச்சல் போல மனதில் நிகழும் உள் போராட்டங்களோடு போராடிக் கொண்டே இருக்கிறார்கள். 24 மணி நேரமும் தீராத யோசனை உண்மையில் இவர்களுக்குக் கிடைத்த சாபம். காற்றில் மிதக்கும் இறகைப் போல இவர்களது மனம் எங்கும் நிலை கொள்வதில்லை. இயல்பான வாழ்க்கை இவர்களுக்குச் சாத்தியமில்லாத ஒன்று. உலகத்தின் பார்வையில் ஒன்று இவர்கள் வித்தியாசமானவர்கள் அல்லது பைத்தியக்காரர்கள்.

சம்பத் முரண்களால் நிறைந்த மனிதன்.
எவ்வளவுக்கு எவ்வளவு கோபத்தை வெளிக் காட்டுகிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு அழுது தீர்க்கக் கண்ணீரைத் தேக்கி வைத்திருக்கிறான்.
பேசக்கூடாத வசை மொழிகளை எல்லாம் கொட்டித் தீர்க்கிறான். பிரியமானவர்களின் ஒரு சொல்லில் உடைந்து போகிறான்.
தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றுகிறான். அதிர்ஷ்டத்தை நம்பி பகுத்தறிவைத் தொலைத்து லாட்டரி சீட்டு வாங்கிக் குவிக்கிறான்.
தவறு செய்கிறான் பின்னால் வருந்தி அதற்கு மன்னிப்பு கேட்கிறான்.
செடிகளோடு வாஞ்சையுடன் பேசுகிறான். அதே வேளையில் தான் யாரையோ கொலை செய்துவிடப் போகிறேன் எனவும் அஞ்சுகிறான்.
செத்துப் போகவும் துணிகிறான். அதேசமயம் யார் யாரைக் கொலை செய்வது என்ற பட்டியலும் தயாரித்து வைக்கிறான்.

உலகத்தில் நடக்கும் அவலங்களை, சமூகத்தின் முன் முடிவுகளை, கட்டுப்பாடுகளை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாம் நம்மை மன்னித்துக் கொள்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. சம்பத்திற்கும் இது சாத்தியப்படவில்லை. கடந்த காலத்தை திரும்பி வேண்டுமானால் பார்க்கலாம். திருத்தம் செய்தல் இயலாத காரியம். ஒருவேளை அவனது இன்றைய நிலைக்குக் கடந்த காலத்தில் அறியாமல் செய்த இரகசிய குற்றம் கூடக் காரணமாய் இருக்கலாம். பதட்டங்கள் இன்றி நிம்மதியாய், அமைதியாய் வாழ ஓர் உலகம் இருந்தால் நன்றாக இருக்கும், இயற்கையைப் போல எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி முழு சுதந்திரத்துடன்.

மென் உணர்ச்சிகளில் இருந்து வெளிவர இந்த உலகம் கற்றுத் தரவில்லை. அவனும் கற்றுக்கொள்ளவில்லை. சம்பத் இந்தச் சமூகம் வரைந்த வட்டத்தில் வாழத் தெரியாமல் ஜெயித்தவன். அவன் மீது கோபப்படுவதா அல்லது இரக்க���்படுவதா எனத் தெரியவில்லை. ஆனால் சம்பத் போன்ற மனிதர்கள் இந்தச் சமுதாயத்தால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் ஆரம்பத்தில் இருந்தே. இல்லையேல் அவர்கள் மனச்சிதைவுக்கு ஆளாகி தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளவோ சரியான பாதையில் நடக்காமல் தடம்புரளவோ ஆயத்தமாகி விடுவார்கள் அவர்களின் அனுமதி இல்லாமலேயே. எப்படியோ நம் எல்லோருடைய நட்பு வட்டத்திலும் ஒரு சம்பத் இருக்கிறான் அல்லது வாழ்கிறான்.
Profile Image for ABIMANYU C.
11 reviews2 followers
April 18, 2024
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் விசித்திரமானது...
2 reviews
December 28, 2017
Very Realistic

Narrative style made me to walk along with the story.
Philosophical touch in most of the situation is very nice
Profile Image for viki.
6 reviews
August 10, 2019
Sampath......

Sometimes I felt like I am one of their friends........ thoroughly enjoyed from the beginning to the end.. good one
Profile Image for Dhulkarnain.
80 reviews2 followers
March 7, 2023
இவரது புனைவு அல்லாத எழுத்துக்களில் இருக்கும் ஈர்ப்பு புனைவு இலக்கிய எழுத்தில் இருப்பதில்லை.
183 reviews17 followers
January 18, 2019
உறுபசி

ராமகிருஷ்ணனின் நாவல் உருப்பசி மானுட வாழ்வின் அவலத்தை பேசுகிறது.
நாவல் சம்பத்தின் மரணத்தில் இருந்து தொடங்குகிறது. அந்த மரணத்தினால் பாதிக்கப் பட்ட அவனுடைய நண்பர்களின் நினைவுகளில் இருந்த நாம் சம்பத்தை அறிந்து கொள்கிறோம். சம்பத்தை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்வது அவனுக்கு தீப்பெட்டியின் மீதான விருப்பம். தீக்குச்சி தன்னையே எரித்து கொள்வது போல் தன்னையே எரித்து கொள்ளும் ஒரு அம்சத்தை நாவலில் அவனிடம் நாம் பார்க்கிறோம். எதிலும் நிறைவு கொள்ளாதவனாக ஏதோ ஒன்றை ஓயாமல் தேடிக் கொண்டு இருப்பவனின் தவிப்பை நாம் அவனிடம் காண்கிறோம். இந்த இயல்பை சரியாக அந்த வத்திக்குச்சி சூட்டுகிறது.

அவனை பற்றிய முதல் சம்பவமாக நாம் அறிந்து கொள்வது, சம்பத் எப்படி ஒரு முறை தன்னுடன் அழைத்து வந்திருந்த ஒரு விபச்சாரியை தன நண்பனுக்கும் அவன் மனைவிக்கும் எந்த தயக்கமும் இல்லாமல் அறிமுகம் செய்து வைக்கிறான் என்னும் இடம். சம்பத் எந்த தயக்கமும் இல்லாமல் தன் நண்பனின் மனைவி பெருத்து இருப்பதற்கு காரணம் அவள் கருத்தடை ஆப்ரேஷன் செய்து கொண்டதனால் என்று கேட்கிறான்.
இந்த கட்டற்ற தன்மை, காமம் சார்ந்த இந்த மூர்க்கத்தனம் அவனுடைய இயல்பின் அம்சமாக இருக்கிறது.

நாவலில் சமிபத்தில் வாழ்க்கை முன்னும் பின்னும் பயணிக்கிறது. ஒரு முறை சம்பத்தும் அவன் மனைவியும் பெரிய ஒரு தண்ணீர் தொட்டியை வாங்கி கொண்டு அப்படியே நீர்க்குமிழி பார்க்க போகிறார்கள். அப்போது சம்பத் தன் மனைவியுடன் சேர்ந்து கரும்பு ஜூஸ் குடிக்கிறார்கள். தாமும் அப்படி ஒரு கரும்பு ஜூஸ் பிழியும் மெஷினை வாங்கி கொள்ளலாம் என்று சொல்கிறான்.

மற்றும் ஒரு நினைவில் நாம் கல்லூரியில் படிக்கும் சம்பத்தை சந்திக்கிறோம்.நாவலின் இப்பகுதி மிகவும் எனக்கு பிடித்த பகுதி. சம்பத் தன்னுடன் படிக்கும் தோழி யாழினியின் தந்தையின் பாதிப்பால் ஒரு நாத்திகனாக மாறுகிறான். புகழ் பெற்ற மேடை பேச்சாளராக உருவெடுக்கிறான். கல்லூரியில் இருந்த நீக்க பட்டு ஒரு கட்டத்தில் அவன் சார்ந்த இயக்கத்தாலும் கைவிட படுகிறான் . கடுமையான குடி பழக்கத்தால் ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபடுகிறான்.

அவன் மனைவியின் நினைவில் இருக்கும் சம்பத் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத உணர்ச்சிகள் கொண்டவனாக இருக்கிறான். வேறு வேறு தொழில்கள் செயுது பார்க்கிறான், லாட்டரி சீட்டுகளை வாங்கி அதில் பரிசுகளில் லட்சாதிபதியாவதை பற்றி அபத்தமான கனவுகள் காண்கிறான்.

மற்றும் ஒரு நண்பனின் நினைவில் அவன் தந்தையிடம் காட்டிய மூர்க்கம் என நாம் நினைவுகளின் வழியாக சம்பத்தை அடைகிறோம். அவனுடைய இயல்புகளின் சிக்கல் அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் காமத்தில் இருந்தே எழுகிறது. அவன் தங்கையின் இறப்புக்கு பிறகு காட்டும் பயம் , யாழினியை நெருங்கும் விதம் , தன் ஒரு மூர்க்கத்தனமான நாத்திகனாக முன்வைக்கும் விதம் என அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் அடிநாதம் காமத்தை கொண்டு உள்ளது. ஒரு கட்டத்தில் அவன் வாழ்வு எதிலும் ஆழ்ந்து
செல்ல முடியாதவனாக, எதிலும் எளிதில் சலிப்பு கொண்டவனாக அவனை மாற்றி விடுகிறது.சில நேரங்கள் தன்னையே பழிவாங்கி கொள்வது போன்ற செயல்களை செய்கிறான் குறிப்பாக அவன் சேல்ஸ் வேலை செய்யும் இடம். நவீன வாழ்க்கையில் வாழ்வை தாண்டி எதையோ தேடுபவர்கள் சில நேரங்கள் ஒரு வெற்றிடத்தை சென்று அடைகிறார்கள்.அவர்களுக்கு இவ்வாழ்வு எவகையுலும் பொருள் படாத ஒன்றாக மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒருவனின் மரணம் சம்பத்துடையது.

அதை எதார்த்தமாக நினைவுகளின் வழியே திறன்பட இந்நாவல் நமக்கு அளிக்கிறது.
197 reviews7 followers
January 23, 2022
It's the story of sampath, who is remembered by his three friends and his wife after his death..

He does not fit into the regular life of a man, he is like a free bird one who cannot be controlled by regular life chores.

His friends Ramadurai, azhagar and Mariappan are so angry and sad with his life style at the same time they also feel jealous as he is not bound by any rules and regulations of typical life..

A man who had studied Tamil got triggered by his girl friend father on atheist thoughts is also an avid believer in luck when he buys and saves lottery ticket. He has so much ironies in him..

However no one is able to question his life nor say no when he asks something from them, they are always attracted to his talks.. No one know how he earns, gets money but somehow his days are closed

He suddenly thinks he needs to get married at 41 and asks a girl who works in a telephone booth, they both live a life for some time and Sampath falls ill and after a few months in hospital he passes away.. It just a normal story but the author talks so much about death, and the reality hits when his three friends thinks will they face a similar death like him???

It will take a lot of patience to read this book, some people may not like it all saying that author is brooding too much about death and a mental man.. i am a fast reader however i read through each and every single word to plunge over the meaning and beauty of the language.. I would.have read this within a few hours but took me two days to complete it..

Have I seen a person like this - not at all.. however there are few persons during college and early days of work with few traits of Sampath, but life after marriage had turned them into typical men material .

Probably he has become like this out of the guilt of.mistake committed by him at 14 years...

Such people need nothing other than acknowledgement and support at right time, not typically creating fear in their minds of falling into regular life rules. It's not wrong to live life freely but such people are also a part of society who needs support..

Reading books like this may be tiresome in terms of understanding human behaviour, it's very difficult to accept such people
However in the long run, i will be able to appreciate and empathize with them, which is what maturity and evolving is all about..
This entire review has been hidden because of spoilers.
78 reviews4 followers
March 2, 2023
எஸ்ராவின் புத்தகங்களை பல நாட்களாக வாசிக்க வேண்டும் என்று இருப்பில் மூன்று புத்தகங்களை வாங்கி வைத்திருந்தேன். உறுபசிலிருந்து துவங்கலாம் என இந்நூலை வாசிக்க து��ங்கினேன்.

சம்பத்தின் இழப்பைக் கொண்டே இந்நாவல் துவங்குகிறது. சம்பத் என்பவன் யார் அவன் அவனை சுற்றி வாழ்ந்தவர்களையும் பற்றியே இந்நூல் நம்முடன் உரையாடுகிறது. ஒரு சுயநலமானவன் சுயநலத்தின் எண்ணத்திலே வாழும்போது அது அவனை மட்டும் பாதிக்காமல் அவனின் குடும்பத்தாரை மனைவியை நண்பர்களின் வாழ்வையும் பாதிக்கிறது. நாம் வெளியே நின்று சம்பத்தின் செயல்களை பார்க்கும்போது இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்ற எண்ணமும் எழும் ஆனாலும் அவன் செய்வது தவறு போலவே தெரியாது. அவனின் எண்ணங்களை புரிந்து அவன் செய்வது சரி என்று உணர்ந்தாலும் கூட அவர்கள் அவனை வெறுத்து கைவிடுகிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு நண்பனை நம்பி ஒரு காரியத்தில் இறங்குவான் அதை அவன் வெறுக்க துவங்கியதும் இவர்கள் இவனை வெறுக்க துவங்கி விடுவார்கள்.

கதை சம்பத் தவிர மற்ற கதாபாத்திரத்தின் வழியாக தான் நம்முடன் உரையாடும் ஆனால் நாம் சம்பத்தின் வழியாக கதையை பார்த்தால் அவன் அவனின் எண்ணம் போல் நான் வாழ ஆசைப்பட்டவன், நாம் தான் பிறரின் ஆசைக்கிணங்க வாழ்கிறோம் என்ற ஒரு குற்ற உணர்ச்சி நம்முள் எழும். 'Non-linear'ஆக தான் கதை இருக்கும் ஆனால் குழம்பாது. என்னை பெரும் அளவில் கவரவில்லை என்றாலும் எஸ்ராவின் அடுத்த நாவலில் பார்க்கலாம்.
Profile Image for Karthikeyan Radha.
26 reviews1 follower
July 5, 2025
கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்துக் கொண்டிருந்த சம்பத் மற்றவர்களை கவரும் வகையில் (கெத்தாக) இருக்கிறார். சமூகம் பயணிக்கும் திசைக்கு எதிராக தொடர்ந்து பயணிக்க, அவரது இரண்டு நண்பர்கள் அவரை விட்டு விலக நினைக்கிறார்கள். ஒரு நண்பர் ராமதுரை மட்டும் சம்பத் உடனான எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கேற்கிறார்.

சம்பத் ஒரு நடுத்தர வயதில் இறந்தப் பிறகு அவருடன் படித்த அந்த மூன்று நண்பர்கள் அவருடனான தங்கள் நினைவுகளை நினைவுபடுத்திக்கொண்டும் அவற்றிலிருந்து மீண்டு வர முயற்சிக்கும் கதைதான் இந்த உறுபசி.

ஒருவன் வாழும்போது எவரும் கண்டுகொள்வதில்லை. கடுஞ்சொற்கள் சொல்லி பிரிகிறோம். அவன் இறந்த பிறகு நெஞ்சை பிடித்துக்கோண்டு அழுகிறோம்.

இந்நாவல் வாசித்த பிறகு நாம் பிரிந்த அல்லது விலக நினைக்கும் நண்பரை அழைத்துப் பேசத் தோன்றும். அதேபோல நாம் இழந்த நண்பனை பற்றிய ஆழமான நினைவுகளை நினைவுப் படுத்திவிடும்.

Profile Image for Karthikeyan B.
3 reviews
January 5, 2026
#எழுத்தாளர் #எஸ்.ராமகிருஷ்ணன்
அவர்களின் #உறுபசிநாவல்

மரணம், காதல், உறவுகள், நவீன வாழ்வின் சிக்கல்கள், மற்றும் மனித மனத்தின் ஆழமான உணர்வுகளைப் பற்றி பேசுகிறது

காமத்திற்குப் பல முகங்கள் இருப்பதையும், நவீன வாழ்க்கையின் கசப்புணர்வையும் சித்தரிக்கிறது,

நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் மனிதச் சித்திரங்களின் கசப்பையும், அதன் உளவியல் தாக்கங்களையும் ஆராய்கிறது.

இது வெறும் நாவல் அல்ல, வாழ்க்கையின் நிஜங்களை, குறிப்பாக அதன் இருண்ட பக்கங்களை, வாசகர்களுக்குத் தொட்டுணர வைக்கும் ஒரு படைப்பு

பிடித்த வரிகள் :
வருத்தபடுறதுக்கு என்னடா இருக்கு சம்பத் செத்துட்டா அவ்வளவு தான, சம்பத் மாறி நாளைக்கு நீ சாவ அடுத்து நானும் சாவ சாகுறதுக்கு எதுக்குடா பயப்புடனும் காக்கா குருவி செத்தா வருத்தமா பட்ற இல்லையே. அப்றம் ஏன்டா பதறுறே..
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Prabhu R..
Author 3 books34 followers
April 16, 2018
S. Ramakrishnan's writing has a touch of realism to the novel, write-ups etc. But when reading this novel, I had a feeling of why I took this book to read. It seems like a draggy, boring and directionless at the start and as the novel progresses, it starts to revolve around a vagabond like character with whom the author tries to portray some life experiences, lessons, but those portrays are very hazy and doesn't seem to evolve well and the messages seems to get frittered away without even forming a shape to what the author attempts to convey to the readers through the character.
1 review
Read
February 1, 2022
இந்த நாவலை இரண்டாம் முறையாக படிக்கிறேன். புதிதாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட 7 ,8 வருட இடைவெளியில். நாவல் முழுக்க துக்கமும், சோகமும் நிரம்பி வழிகின்றன. எஸ் ரா உடைய மிக பெரிய விசிறி நான். சம்பத் போன்ற நபர்களை சந்தித்திருக்கிறேனா என்றே யோசிக்கிறேன். யதார்த்தமான சம்பவங்களும், கதாபாத்திரங்களும் பிரம்மிக்க வைக்கின்றன. இந்நாவல் என்னுள் உள்ள பயத்தை அதிகரிக்கவே செய்தது. இருந்தும் படித்தேன். உணர்வுகளின் ஆழத்தில் பிசைந்த சொற்களை. சம்பத் தன் மனதை கட்டுப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தால் , நானும் மகிழ்ந்திருப்பேன்.
1 review
December 20, 2021
As a common man am able to relate the novel with my life, my friends and others whom I have met for the last 30 years. The thing is few scenarios in the book seems so weird but that's the real truth. We might thought of those scenarios in our life but never done because those are black listed thoughts by our society.

The book which helps me to realize that, am not the only person who have similar thought\feelings mentioned in the book.
3 reviews
April 17, 2018
மனித வாழ்வு எல்லோருக்கும் எல்லோரையும் போல அமைவதில்லை . சிலருக்கு வாழ்க்கை என்னும் நீரோட்டம் பெரிய மலைகளையும் பாறைகளின் ஊடேயும் ஓடி வருவதிலேயே முடிந்துவிடுகிறது . அது சமவெளியையோ கடலையோ சென்று சேர்வதே இல்லை . அவர்களும் அப்படி ஒரு சமவெளி பரப்போ கடல்வெளி பரப்போ இருப்பதே தெரிந்து கொள்ளாமல் வீழ்ந்து விடுகிறார்கள் . அது போன்ற ஒரு மனிதனின் கதை தான் உறுபசி.
Profile Image for Maheshwaran.
40 reviews7 followers
January 6, 2018
படித்து முடித்தவுடன் ஒரு கலவையான உணர்வு.

வாழ்க்கை மற்றும் சாவைப் பற்றி ...

படித்துத் தான் பாருங்களேன்.
180 reviews3 followers
August 7, 2018
An interesting story about Sampath and how he lived and died. How he was viewed by his friends and his wife. Whether he was understood by his friends and his wife?
Profile Image for Hari.
102 reviews15 followers
October 28, 2018
Padithavanin கதை

Ignorance is bliss. Too much of anything is bad even if it education either u end up as a enlightened soul or a opened up mad person.
Regular template of s.r
Profile Image for viki.
6 reviews
May 11, 2020
The way he narrated was too good.
Profile Image for GaneshPandian RK.
12 reviews3 followers
July 15, 2020
ஒருவனின் மரணத்திற்கு பிறகு அவனது நண்பர்கள் பல்வேறு கோணத்தில் அவனை கண்டடைவது பற்றிய நாவல்
Displaying 1 - 30 of 48 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.