தமிழ் நாவல் ஒன்று உலகத் தரத்தோடு வந்திருக்கிறது. உலகத் தரம் என்று இங்கே குறிப்பிடுவது இதில் கையாளப்பட்டிருக்கும் உலகம் தழுவிய பிரச்னைகளாலும்தான். இலங்கையின் தமிழ் இளைஞன் ஒருவன் கனடாவில் தஞ்சம் அடையக் கிளம்புகிறான். தமிழர்கள் அகதிகளாக இன்று உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். தஞ்சம் அடையும் அந்தப் பயணம் எப்படி நிகழ்கிறது என்பதை உணர்ச்சிகரமாக விவரிக்கிறது இந்த நாவல். இலங்கையில் இருந்து புறப்பட்ட 19 வயது நிஷாந், உயிரைக் காக்கும் பயணத்தில் உயிரையே பணயம் வைக்கும் தருணங்கள் பதற வைக்கின்றன. பாகிஸ்தான், உக்ரைன், ரஷ்யா, துருக்கி, ஜெர்மன், பிரான்ஸ், லண்டன், ஈகுவடார், கனடா என எத்தனை நாடுகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. எத்தனை கெடுபிடி, எத்தனை போலீஸ், எத்தனை காயம், எத்தனை குளிர்... குடியுரிமை வாங்கி ஒரு நாட்டில் தம்மை ஒப்புக்குக் கொடுக்கிற வரை காலூன்ற இடமில்லாமல் தேசம்விட்டு தேசம் ஊசலாடும் இந்த மனிதப் பறவைகளின் அவலம் ஒவ்வொரு வரியிலும் உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. உயிரைப் பிழைக்க வைக்க மனிதர் எந்த அறத்தையும் மீற வேண்டியிருக்கிறது என்பதுதான் நாவலின் உயிர் நாடி. எழுத்தாளர் முத்துலிங்கம் அபாரமான எழுத்தாற்றல் மிக்கவர். ஒவ்வொரு வாக்கியத்தையும் தங்க நகை போல அலங்கரிக்கும் வித்தைக்காரர். படியுங்கள்... விறுவிறு அனுபவம் காத்திருக்கிறது. கடவுள் தொடங்கிய இடத்தைக் கண்டடையுங்கள்.
Appadurai Muttulingam (Tamil அ. முத்துலிங்கம்) (born 19 January 1937) is a Sri Lankan Tamil author and essayist. His short stories in Tamil have received critical acclaim and won awards in both India and Sri Lanka.
ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களை பலமுறை சந்தித்ததுண்டு.... நான் சிறுவனாய் இருந்த பிராயம் முதல் தமிழகத்தின் கடைக்கோடி ஊர்களில் அகதிகளாய், முகாம்களில் அடைபட்டு, சம்பந்தமே இல்லாத சிறிய வேலைகளில்; பிறகு ஐரோப்பாவின் நாடுகளில், சிறு அங்காடி நடத்துபவர்களாய், உணவகங்களில் சிற்றேவல் பணிகளில், சக பயணிகளாய்... இப்படி பல முகங்களுடன். பல நேரங்களில் நினைத்துப்பார்க்கும் முன்பே அந்த நினைவுகள் கடந்து போயிருக்கும்.
இந்த புதினத்தில் அப்படிப்பல முகங்களை மறக்கமுடியாமல் செதுக்கி வைத்துவிட்டு போயிருக்கிறார், அ.முத்துலிங்கம். முகங்கள் மட்டும் அல்ல, அந்த முகங்களின் முகவரியையும் தான்…
ஈழத்தில் துவங்கி, பாகிஸ்தான், உக்ரைன், ரஷ்யா, துருக்கி, ஜெர்மன், பிரான்ஸ், லண்டன், ஈகுவடார், கனடா என்று பயணப்பட்டு தம்மை நிலைப்படுத்திக்கொள்ள போராடும் ஒரு இளைஞனின் பயணத்தின் வழியாக அகதி வாழ்வின் போராட்டங்களையும், வலிகளையும், அதன் பல்வேரு இழைகளையும் தொட்டுச்செல்லும் பயணம் இது.
மனிதர்களின் உண்மையான முகங்களும், அவர்களின் நிறங்களும் தெரியும் வேளையில், அவர்களின் சமூகங்கள் கேள்வி கேட்கப்படும் தருணங்களாக நிறுத்தியிருக்கிறார் முத்துலிங்கம். எளிமையான வார்த்தைகளின் பின் ஒரு கனமான கேள்விகளும் பார்வைகளும் தொக்கி நிற்பதே அவரின் எழுத்தின் சிறப்பு. "தம்பி, ஒரு நாடு முன்னேறிய நாடு என்று அறிவதற்கு அவர்கள் எத்தனை விண்கலங்களை அனுப்பினார்கள் என்பதை வைத்தோ, எத்தனை அணுகுண்டுகள் சேகரித்திருக்கிறார்கள் என்பதை வைத்தோ அல்லது எத்தனை செல்வந்தர்கள் அந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை வைத்தோ கணிக்கமுடியாது. அவர்கள் மனித உயிருக்கு மட்டுமல்ல ஒரு சக உயிருக்கு என்ன மதிப்பளிக்கிறார்கள் என்பதில்தான் அது தங்கியிருக்கிறது. "
வாழ்வு வழங்கும் அனுபவங்கள் மனிதரை மாற்றமட்டும் அல்ல, சிலநேரம் வாழ்வின் ஓரத்தில் நிறுத்திவிடுகிறது என்பது அகதி வாழ்க்கையின் அவலம். அப்படி சில முகங்களை உலாவவிட்டு மானுட இனத்தை கேள்வி கேட்டிருப்பார்.
“திமிங்கிலம் செத்தாலும் அதன் எடை அதேதான். 35 வயதுக்கு பின்னர் மனிதனுக்கு ஒன்றுக்குமே அதிர்ச்சி தருவதில்லை.” “என் விதியை நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன். முடிவு என்று நாங்கள் நினைப்பது உண்மையில் ஒரு துடக்கம்தான். உண்மை விதவைக்கோலம் பூண்டிருக்கும், பொய்யோ மணப்பெண்போல அலங்காரத்துடன் காட்சியளிக்கும் என்பார்கள்.”
அந்த அனுபவங்களின் வழியில் சிலமுகங்கள் உண்மையின் நிதர்சனத்தை எந்த ஒப்பனையும் இன்றி அறைந்து சொல்வதுண்டு. அப்படிச் சொல்லும் வார்த்தைகள் சிலநேரம் நம்மை வாயடைத்து, திக்குமுக்காட செய்துவிடக்கூடும்...
‘‘உங்களுக்கு கிடைத்த வெற்றிபோல எனக்கும் கிடைக்க வேணும், நானும் பாடுபடுவேன்.’’ ‘‘வெற்றி என்ன தம்பி பெரிய வெற்றி. ஒரு நாளைக்கு காகம் வெல்லும். ஒரு நாளைக்கு சிலை வெல்லும்.’’ யாரோ முகத்தில் அறைந்தது போல இருந்தது நிஷாந்துக்கு. வெட்கமாகவும் அதே நேரத்தில் அவமானமாகவும் பட்டது. குழந்தைப் பிள்ளைபோல பாரிஸில் இருந்தார். இங்கே அவனுக்கு புத்திமதி தருகிறார். எத்தனை பொறுப்புள்ளவராக மாறிவிட்டார். தன் நிலைமையை எண்ணினான். அம்மா அவனைப்பற்றி அறிந்தால் பெருமைப்படுவாரா? தங்கை என்ன நினைப்பாள்? எப்படி இப்படி ஆனான்?
இப்படி பலமுகங்களை அறிமுகப்படுத்தி, புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலையை தட்டையாய், வெறும் பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் காட்டாமல், அவர்களுக்குள் இருக்கும் அவலங்கள் வழியே, வேறுபட்ட மனிதர்களை, அனுபவங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் பயணம் இது.
இறுதியில், அவர்கள் கையறு நிலை வழங்கிய நிதர்சனமும் அறைவது தவிர்க்கமுடியவில்லை “ஆராவது சேலையை தண்ணீரில் முங்கிவிட்டு தந்தால் அதை அப்படியே கட்டமுடியுமா? ஒன்றுமே செய்யத் தேவையில்லை. நாலு மணி நேரம் காத்திருந்தால் தானாகவே சேலை காய்ந்துவிடும். கட்டலாம். கஷ்டங்களும் அப்படித்தான். ஒன்றுமே செய்யத் தேவையில்லை. அவை தானாகவே அகன்றுவிடும்.’’
அப்படி ஓரு மறக்கமுடியாத பயணத்துக்குள் நம்மை அழைத்துப்போய், அந்த பயணத்தின் வலியையும், வேதனைகளயும் நம் முகத்தில் அறையச்சொல்லிச் சென்றிருக்கிறார்.... மறக்கமுடியவில்லை… படித்துப்பாருங்கள், உங்களுக்கும் இது முடியாத அனுபவத்தைக் கொடுக்கக்கூடும்.

இலங்கையிலிருந்து அகதியாக வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லும் நிஷாந் என்ற இளைஞனை கதாநாயகனாகக் கொண்டு அகதியாக வெளிநாடுகளுக்குச் செல்லும் ஈழத்தவர்கள் படும் இன்னல்களை விவரிக்கின்றது கடவுள் தொடங்கிய இடம்.திவ்யா, அகல்யா, லாரா என இடையிடையே வரும் காதல்களைத் தவிர நிஷாந்தின் வாழ்வில் சோகமே நிலைத்திருந்தாலும் அவனது வாழ்வில் குறுக்கிடும் பாத்திரங்கள் கதையை சுவாரஸ்யமாக கொண்டுசெல்ல உதவியிருக்கின்றன.சுருக்கமாக கூறுவதானால் அகதி வாழ்வின் வலியை அவர்கள் படும் இன்னல்களை சுவாரஸ்யமான த்ரில்லராக மாற்றுவதில் ஆசிரியர் வெற்றிபெற்றிருக்கின்றார் என்று தான் கூறவேண்டும்.
மிகவும் எளிய நடை. பல சிறு கதைகள் மற்றும் கிளை கதைகள். அழகாக கோர்கபட்டூள்ளன. ஆங்கில கலப்புக்கு பல வாய்புகல் இறுந்தும் அதை தவிற்து இருக்கிறார். அகதி என்பது எப்படிபட்ட வலி என்பதை உணர முடிகறது.
சுருக்கமாக சொல்வதென்றால் இது நாடு தேடி அலையும் நாடற்றவர்களின் கதை.
இயக்கத்தில் சேர்ந்து விடுவானோ என்ற பயத்தால் நிஷாந் அவனது குடும்பத்தார் மூலம் ஜெர்மனியில் இருக்கும் அவனது மாமாவின் சொந்தர்காரரிடம் இலங்கையில் இருந்து அனுப்பப்படுகிறான். முதலில் ரஷ்யா. அங்கிருந்து உக்ரைன். பிறகு அங்கிருந்து ஜெர்மனி என்பதாக திட்டம். ஆனால் திட்டப்படி செல்லமுடியாமல் உக்ரைனிலே சில மாதங்கள் தங்கும்படி நேர்கிறது. அங்கிருந்து எல்லையைக் கடக்க முயற்சித்து மாட்டிக்கொண்டு முதுகு தடித்துப் போகும் அளவிற்கு அடிவாங்கி மீண்டும் அவன் மற்ற அகதிகளோடு தங்கியிருந்த அதே 8-ம் எண் மாடி அறைக்கு வந்து விடுகிறான். முடிவில் அவனுக்கென ஒரு நாட்டை அடைந்தானா இல்லையா என்பது தான் "கடவுள் தொடங்கும் இடம்".
நிஷாந் என்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞனிடம் இருந்து கதை தொடங்கினாலும் அவன் வழியே உலகம் முழுக்க பல்வேறு காரணங்களுக்காக நாடு தேடி அலையும் அகதிகளின் வலியை பேசுகிறது நாவல். இலங்கையில் இருந்து அவனைப் போலவே பல்வேறு காலகட்டங்களில் பல நாடுகளில் அடைக்கலம் தேடி புறப்பட்டவர்களை சந்திக்கிறான் நிஷாந். வாழ்க்கையின் புதிர் விளையாட்டை ஒவ்வொருவரின் கடந்தகாலத்தை தெரிந்து கொள்வதன் வழியே உணர்கிறான்.
இலங்கையில் 4 மகள்களை வைத்துக்கொண்டு பசியை தவிர ஏதுமறியாத மழை பெய்தால் வீட்டின் பெரும்பகுதியை அதற்கு தாரைவார்த்து விடும் தங்கையின் குடும்பத்திற்கு கனடா சென்று கோவில்களில் நாதஸ்வரம் வாசித்தேனும் கல் வீடு கட்டி தர வேண்டுமென கூறிவிட்டு குழந்தையைப் போல ரயில் பயணத்தில் ஐஸ்கிரீம் கேட்டு வாங்கி சாப்பிட்டபடியே வரும் கனகலிங்கம், ஒரு மார்க் குறைந்து போன காரணத்திற்காக டாக்டருக்கு படிக்க வேண்டி கனடா வந்து சேரும் சபாநாதன் போதை பொருள் கடத்தல் வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்த பின்பு ஹோட்டலில் பிளேட் கழுவி வாழ்க்கை நடத்தும் அவலம், கனடாவில் தன் கணவரின் தம்பியின் பிள்ளைகளாக வளரும் தன் பிள்ளைகளை பார்ப்பதற்காக ஏற்கனவே இரண்டு முறை முயற்சித்து மீண்டும் மூன்றாம் முறை நிஷாந் உதவியோடு கனடா விமானநிலையம் வரை சென்று அதிகாரிகளிடம் பிடிப்பட்டு கதறியபடியே செல்லும் சகுந்தலா, வருமான துறை அதிகாரியின் மனைவியாக இலங்கையில் வாழ்ந்து பின்னே தான் வருவதாக அனுப்பி வைத்த கணவன் இறந்தது தெரியாமல் கனடாவுக்கு வந்து ஹோட்டலில் சமையல் செய்து பிழைப்பை நடத்தும் ஆச்சி, சுவையில்லாத மீனுக்காக சண்டை போட்டு கொலை செய்துவிட்டு உக்ரைனில் 8 வருட சிறை தண்டனைப் பெரும் புஷ்பநாதன், 8 தலைமுறைகளுக்கு முன்பு டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்ட போது அபராதமாக பிடுங்கிக் கொண்ட பணத்தை ஜெர்மனி மற்றும் ஹாலந்து இரு நாடுகளிலும் அகதியாக தன்னைப் பதிவு செய்து கொண்டு அகதிப் பணம் பெற்று வரும் மாஜிஸ்திரேட் என்ற இளைஞன் என சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு மனம் விட்டு நீங்காத கதாபாத்திரங்கள் நாவல் முழுக்க வருகிறார்கள். அவை வெறும் கற்பனை கதாபத்திரங்களாக மட்டுமே இருக்க வாய்ப்பில்லை என்பதை வாசிக்கும் போதே உணர முடிகிறது.
அ.முத்துலிங்கம் அவர்களின் சில சிறுகதைகளை மட்டுமே இதற்கு முன்பு வாசித்திருக்கிறேன். அசல் இலங்கை தமிழ் என்பதால் முற்றிலும் புதிதான எழுத்துநடையாக உணர்ந்தேன்.
"ஒரு நாடு முன்னேறிய நாடு என்று அறிவதற்கு அவர்கள் எத்தனை விண்கலங்களை அனுப்பினார்கள் என்பதை வைத்தோ, எத்தனை அணுகுண்டுகள் சேகரித்திருக்கிறார்கள் என்பதை வைத்தோ அல்லது எத்தனை செல்வந்தர்கள் அந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை வைத்தோ கணிக்க முடியாது. அவர்கள் மனித உயிருக்கு மட்டுமல்ல ஒரு சக உயிருக்கு என்ன மதிப்பளிக்கிறார்கள் என்பதில் தான் தங்கியிருக்கிறது." நாவலில் மிகவும் பிடித்த வரிகள்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்ற புத���தகத்தை படித்த பிறகு தனக்கென ஓர் நாடு இல்லாத நிலையில் மற்ற நாடுகளுக்கு எப்படி மக்கள் செல்கிறார்கள் என்பதை அரிய நினைத்து நான் தேடும் பொழுது எனக்கு கிடைத்த புத்தகம் தான் கடவுள் தொடங்கிய இடம். நிஷாந்த என்ற இளைஞன் இலங்கையில் இருந்து கனடாவிற்கு பல நாடுகளை கடந்து 5 வருடம் 2 மாதத்தில் அகதியாய் செல்கிறான் அவன் கடந்து செல்லும் கடின பாதை ஒவ்வொரு புலம்பெயர் இலங்கை தமிழர்களும் அனுபவ��த்ததே. நிஷாந்த சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் அவர்கள் கடந்த வந்த பாதைகளும் அவர்கள் சந்தித்த வேதனைகளும் அரியும் பொழுது ஓர் நாட்டின் குடியுரிமை என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை உணர முடிந்தது. அகதிகளாக பயணத்தை தொடங்கிய பல பேரில் சிலர் மட்டுமே நினைத்த இடத்தை அடைய முடிகிறது. முறையான ஆவணங்கள் இல்லாததால் பல பேர் இராணுவத்தால் கைது செய்யபடுகின்றனர் மீதி சில பேர் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக மிக மிக கடினமான பாதைகளை தேர்வு செய்து பயணம் செய்கிறார்கள். இன்றும் பல நாடுகளில் மக்கள் மிக கடினமான பயணங்களுக்கு பிறகு அகதிகளாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். மிக எளிமையான வார்த்தைகளாலும் சம்பவங்களின் கோர்வையாளும் அகதிகளின் வழியை உணர வைத்து விட்டார் ஆசிரியர். புத்தகத்தின் தலைப்பிற்கும் கதைக்கும் சம்மந்தம் இல்லை என்று சிந்தித்த நேரத்தில் கடவுள் தொடங்கிய இடம் எது எண்பதை உணர வைத்த ஆசிரியரின் எழுத்து மிகவும் பாராட்டுக்குரியது. அருமையான நாவல் அனைவரும் படியுங்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, மனதிற்கு இதமான ஒரு வாசிப்பு. ஒரு மாலையில் முத்துக்களை அழகாக கோர்ப்பது போல மிகவும் நேர்த்தியாக வார்த்தைகளை கோர்த்திருக்கிறார் ஆசிரியர். "அட" என்று அடிக்கோடிட்டு முடிக்கும் முன்னரே அடுத்த வரி "அடடே" என்று வந்து விழுகிறது. "அகதியாக" விதிப்பது மரணத்திலும் கொடுமையானது, என்று நினைக்கும்போதே வந்து விழுந்த இந்த வரி அற்புதமானது "ஒருவன் சாவதற்கு இத்தனை வழிகள். அப்படியென்றால் வாழ்வதற்கு எத்தனை வழிகள் இருக்கும்?". இந்த புத்தகம் எனக்கு விக்டர் ஃபிராங்கலின் "Man's Search for Meaning" ஐ பல இடங்களில் நினைவு கூர்ந்தது.
அடிக்கோடிட்ட மேலும் சில வரிகள் + ஒரு துணியை எடுத்து அவனுடைய முகத்திலுள்ள புத்திசாலித்தனத்தை ஆரோ அழுத்தி துடைத்து விட்டதுபோல இருக்கும் + சொல்வான் ‘நான் சாவுக்கு அஞ்சுவதில்லை’ என்று. நான் சொல்வேன் ‘அது உண்மையாக இருந்தால் பரிணாம வளர்ச்சி என்பது பொய்’ என்று. உயிர்களுக்கெல்லாம் ஆதி உணர்வு மூன்று. பசி, பயம், பாலுணர்வு. + உயிரைப் பிழைக்க வைக்க மனிதர் எந்த அறத்தையும் மீற வேண்டியிருக்கிறது.
அனைத்துக்கும் மகுடமாக, சில்லறைகளை சிதறவிட்ட இடம் + உலகத்திலே எங்கே ஒரு மூலையில் அநீதி நடந்தாலும் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவர்களுக்கும் அந்த பாவத்தில் பங்கு உண்டு.
பாறைமேல் விழுந்து தெறிக்கும் பலநூறு நுண்துளிகள் எங்கேவிழும் என்று கனிப்போற் இப்புவியலுண்டோ? அகதியின் வாழ்வையும் கணிப்பது கடினம்.
அகதிகள் எப்படி வேறு நாட்டிற்கு பயணம் செய்கிறார்கள், யார்மூலம் பயணம் செய்கிறார்கள், கள்ள பயணத்தின் சிக்கல், சவால், அகதிகளின் வாழ்வு, எப்படியாவது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்பு என்ற சித்திரத்தை வடித்துக்கொண்டே செல்கிறார் ஆசிரியர்.
மிகவும் எளிய நடை கொண்ட நூல். முற்றிலும் பொதுவாசகர்களுக்கு எழுதியதே என்று தோன்றுகிறது.
இந்நூல் ஒரு இலக்கிய படைப்பா? இல்லை என்றே தோன்றுகிறது. நூலில் நான் எதிர்பார்ப்பது பெரிய சித்திரத்தை. எப்படி மக்கள் அகதிகள் ஆனார்கள், எதன் பொருட்டு மக்கள் வேறு நாட்டிற்கு தப்பி ஓட வேண்டும் என்று நினைக்கிறார்கள்? இது ஒரு பெரும் விடுப்பு. இந்நூலில் ஒரு சாமகாலத்தன்மை உள்ளது ஏற்கனவே ஈழ அரசியலை அறிந்தவர்கள் ஒரு எளிய சித்திரத்தை அடையாளம். ஆனால் எதிர்காலத்தில் ஒரு வாசகன் இந்நூலை படிப்பானானால் அவன் அடைவது ஒரு எளிய அகதி வாழ்கை சித்திரம். ஒரு முழுமை தன்மை இல்லை.
மேலும் ஆசிரியர் மிக கவனமாக எழுத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஆசிரியர் மீறிய தருணம் இந்நூலில் இல்லை என்றே எனக்கு படுகிறது.
ஒரு இலங்கை அகதியின் வலிமிக்க பயணம். கொழும்பிலிருந்து கனடா வர எவ்வளவு பாடுபட்டான். அவன் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொருவரும் அவனுக்கு ஒரு வாழ்க்கை பாடத்தை கற்று கொடுத்தனர். கதையின் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நிச்சயமாக நிஷாந் வாழ்க்கையில் ஒளி பிறந்திருக்கும்