Jump to ratings and reviews
Rate this book

அஜ்வா

Rate this book
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். நவீன வாழ்வு கொண்டாடத்தக்க அம்சங்களைக் கொண்டுவந்து குவித்திருந்தாலும், கூடவே சிதறிய தலைமுறை என்கிற வகைமையையும் விட்டுச் செல்கிறது. அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்ட அந்த நவீன மனிதர்கள் தங்களது வேர்களைத் தேடி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அடியாழத்தில் உறைந்திருக்கும் பயத்தை வெல்கிற சாவியைத் தேடி மனிதர்கள் காலந் தோறும் ஒடியபடியே இருக்கிறார்கள். அவர்கள் சரணடைகிற புள்ளிகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுத்துப் பெரிய வட்டங்களாக மாறியபடியே இருக்கின்றன.



மதங்களைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்சிப்படுத்துகிற இந்த நாவல், எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து அலையும் ஒருவனின் வாழ்க்கையை அதன் அர்த்தங்களோடு முன்வைக்கிறது. மனிதர்கள் எப்போதும் தன்னை மீட்டெடுக்கிற ஒரு கையைத் தேடித்தான் காடு மலை கடந்தலைகிறார்கள்.



அஜ்வா என்பது ஓர் ஆழமான விருப்பம். ஆழமான நம்பிக்கை, அப்படியான நம்பிக்கை என்கிற மந்திரக் கையொன்று, வீழ்ச்சியின் குவியலொன்றுக்குள் இருந்து ஒரு பிஞ்சுத் தலையை மீட்டெடுத்த கதை இது. பயங்களை வெல்ல நினைப்பவர்களுக்கான சாவியை இந்நாவலின் வழியாகப் படிப்பவர்களின் கைகளுக்குக் கடத்துகிறார் சரவணன் சந்திரன்."

Paperback

Published December 19, 2016

10 people are currently reading
113 people want to read

About the author

Saravanan Chandran

23 books33 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
27 (24%)
4 stars
39 (35%)
3 stars
36 (33%)
2 stars
7 (6%)
1 star
0 (0%)
Displaying 1 - 15 of 15 reviews
Profile Image for Satheeshwaran.
73 reviews223 followers
March 11, 2019
அஜ்வா - தமிழ் நாவல் பற்றிய ஓர் அறிமுகம்.

போதை உலகில் சிக்கிக்கொண்ட ஒரு எளிய மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்கள் தரும் அனுபவங்களையும் பகிரும் எளிமையான, சுவாரஸ்யமான நாவல்.

நாவல் பற்றிய YouTube பதிவு:

https://youtu.be/V3_iplRJLKM
Profile Image for Marudhamuthu.
68 reviews13 followers
June 4, 2023
ஒரு நேர்கோட்டில் பயணிக்கும் கதையாக இல்லாமல் பல சம்பவங்களின் தொகுப்புகளாக நாவல் இருப்பதால் ஒவ்வொரு அத்தியாயமும் புதுமையாக இருந்தது. துளி கூட சலிப்பு தட்டவில்லை.
2,121 reviews1,108 followers
March 3, 2018
தான் செய்யும் செயலுக்குக் காரணமாக எதையாவது தேடுபவர்களுக்கு ஒரு மையப்புள்ளி அவர்களின் மனதிலே புதைந்து கிடைக்கும்,தேவைப்படும் நேரத்தில் அதை வெளிக் கொண்டு அதையே பற்றாக்கி மொத்த சார்பையும் அதன் மீதே நிலைக்கச் செய்துவிடுவர்.

ஒன்றில் இருந்து விடுபட நினைப்பவர்கள் அதிலிருந்து வெளியேற செய்யும் செயல் அதை மீறிக் கொண்டு வெளிவராத பட்சத்தில் மேலும் மோசமான வேறொன்றிலே சரண்புகுவர்.

தந்தையின் வாரிசாக அவரின் பயத்தையே தன்னுள் கொண்டிருப்பவன் அதை மறக்கும் அல்லது மறைக்கும் பொருட்டுப் போதை உலகில் நுழைந்தாலும் அதிலிருந்து வெளியேறும் நேரத்தை துல்லியமாக மனதில் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறான் அங்கே நடந்தேறும் நிகழ்வுகளால்..

போதை உலகின் தினசரி இழப்புகளைப் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு விரும்பியே அதில் இருக்கும் டெய்சி உடலை கெடுத்துக் கொண்டு தன் கண் எதிரிலே அவளின் வாழ்வின் முடிவு நேர்கையில் அனைத்திலிருந்தும் விடுபடுகிறான் . அதுவரை பிணத்தின் மீதான அச்சமும் விடுபடுகிறது. அப்போதை பழக்கத்திலிருந்து முற்றிலும் வெளியேற அவளின் இறப்பையே பற்றிக் கொள்கிறான்.

தவறை மன்னிக்கும் மாண்பைக் கொண்டவர்கள் இருப்பதே திருந்தியவனுக்கு ஒரு புகலிடமாகிறது பலநேரங்களில் அதுவே மேலும் மேலும் தவறு செய்யத் தூண்டுகோலாக இருப்பதும் மறுக்க முடியாத உண்மை.ஜார்ஜ் அப்படிப்பட்ட சுத்த ஆன்மாவாக அவனின் தவறுகளை மன்னித்து அடைக்கலம் அளிக்கிறான்.

தான் சந்தித்த மனிதர்களையும் அவர்கள் கடந்து வந்த பாதையையும், தான் எதிர்கொண்ட நிகழ்வுகளையும் கதையாகச் சம்பவங்களைக் கோர்த்து சராசரி மனதிற்குத் தெரிந்த அதீத உச்சத்தையும் சலனமில்லாமல் சொல்லிக்கொண்டே போகுபவனின் மனநிலையிலே நம்மையும் வைத்திருப்பதில் இருந்தது கதாபாத்திரத்தின் வடிவமைப்பு.

அஜ்வா பழத்திற்கு இருக்கும் சிறப்பை கொண்டே விவசாயத்தின் பக்கத்தையும் தொட்டு முடிகிறது. அஜ்வா பழத்தை உண்டு புதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்தவன் என்றோ ஒரு நாள் நிலத்தில் நட்டு வைத்த அஜ்வா கன்றும் துளிர்த்தெழுந்து ஒரு நம்பிக்கையை அவனுள் விதைக்கிறது புதுவாழ்விற்கு.
Profile Image for Sudharsan Haribaskar.
49 reviews37 followers
February 1, 2017
'அஜ்வா’ என்பது ஒருவகைப் பேரீச்சம்பழம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாகச் சொல்லப்படுவது. ஏழு அஜ்வா பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டால் எந்த செய்வினையும் அண்டாது என்பது நம்பிக்கை.

அம்மா அடிக்கடி சொல்கிற ஒரு பழமொழி உண்டு “ தான் செத்து மீன் பிடிக்கக்கூடாதுடா” என்று. மீன் பிடிப்பது எதற்கு ? பசியாறி உயிர்வாழ்வதற்கு. பிழைத்து வாழும் நோக்கத்தில் செய்யப்படுகிற முயற்சியிலேயே உயிரைவிட்டால் எதற்குமே அர்த்தமில்லாமல் போகுமில்லையா. ’அஜ்வா’ முழுக்க இந்தப் பழமொழி நினைவுக்கு வந்தபடியே இருந்தது.

”மூன்று தலைமுறை வாழ்ந்தோரும் இல்லை. மூன்று தலைமுறை கெட்டோரும் இல்லை” என ஊர்ப்பக்கம் சொல்வார்கள். தலைமுறைகளின் வீழ்ச்சியையும் இடிந்து தரைமட்டமான சாம்ராஜ்யங்களையும் என் கண்முன்னே எங்கள் குடும்பத்திலேயே பார்த்திருக்கிறேன். இந்த ஒன்றை மட்டும் செய்துவிட்டால் போதும். இதன் பின் நம் வாழ்க்கையே மாறிவிடும் என்று ஏதோவொரு அர்த்தமற்ற வேண்டுதலை, நேர்த்திக்கடனை செய்துவிடும் பொருட்டு அதை நோக்கியே தங்கள் வாழ்நாள் முழுவதையும் கடத்திவிடுகிற மனிதர்களையும் பார்த்திருக்கிறேன். அது நமக்குத்தான் அர்த்தமற்ற செயல்; அவர்களுக்கல்ல. There are people who hold onto something which doesn't mean absolutely anything to anybody other than themselves.

எந்த ஒரு பழக்கத்தையும் நீண்ட நாட்களாய்க் கடைபிடிக்கிற ஒருவன், அதன் உச்சங்களைத் தொட்டு ஆனந்தத்தை அடைந்தவன் , அதைப்பற்றி கண்கள்விரிய பேசுவதைக் கேட்டால் ஆகநிச்சயமாய் இதை நாம் ருசித்துப் பார்த்தால் என்னவென்று உங்களுக்கே தோன்றக்கூடும். போதையோ, குடியோ, உணவோ, காமமோ, பயணமோ, இலக்கியமோ, கவிதையோ, எதுவோ... இவை அத்தனைக்கும் இந்த வாக்கியம் பொருந்தும். அப்படியொருவன் தான் ‘அஜ்வா’வின் கதைசொல்லி.அவனுடைய பெயரை அவன் உங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் தன் கதையைச் சொல்கிறான். தனக்குப் பின்னாலிருக்கிற வலியைச் சொல்கிறான். தன் வாழ்க்கையின் மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறான். அவர்களின் கதைகளையும் சொல்கிறான். தன் ஆழ்மனதின் அச்சங்களைப் பற்றிப் பேசுகிறான்.

இந்த நாவலின் கதைசொல்லி இருக்கிறானில்லையா ? அவனும் மேற்குறிப்பிட்ட ஒரு சரிந்த சாம்ராஜ்யத்தின் மூன்றாம் தலைமுறை இளவரசன் போல் தான். ஒரு வாயில்லாப் பூச்சியாய் வாழ்ந்து மறைந்த தன் கணவனைப் போல் தன் மகனும் ஆகிவிடக்கூடாதென பார்த்துப் பார்த்து வளர்க்கிறாள் அவன் தாய். கையிலிருக்கிற சொத்தை அபகரிக்கும் பொருட்டு அடித்துத் துன்புறுத்துகிற தாய்மாமனிடமிருந்து தப்பிக்க நாடோடியாய் வாழ்ந்தலைகிறான். போதைக்குப் பழக்கப்பட்டு அதன் சுழலில் சிக்கிக் கொள்கிறான். வெவ்வேறு வகை போதைப் பொருட்களைப் பற்றி நம்மிடம் பேசிக்கொண்டே காஞ்சிரம்பள்ளிக்கும், பழனிக்கும், திருப்பதிக்கும் இன்னும் ஏதேதோ இடங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறான்.

அந்த உலகத்தில் தவறி வந்து சிக்கிக்கொள்கிறவர்களை பேசி மீட்கிறான். ஆனாலும் தான் மட்டும் தெரிந்தே அந்தச் சுழலுக்குள்ளிருந்தபடி உழல்கிறான். இவன் அம்மா , கோபம் வந்தால் தீப்பெட்டி ஒட்டும் துத்தநாகம் கலந்த பசையைத் தின்று விடுகிற பசுபதி அத்தை, தனக்குப் பிடிக்காத ’முதுகில் அடிக்கிற’ உரிமையை இவன் வழங்கியிருக்கிற ஒரே நண்பன் ஜார்ஜ் ஆண்டனி, ஜார்ஜ் ஆண்டனியின் அம்மா, கடைசியாய் டெய்சி...!! வாழ்க்கை முழுவதும் இவனைப் பாதுகாக்கிற தேவதைகளாய்ச் சூழ்ந்திருக்கிறார்கள்.

”சரி என்னதான் கதை ?” என்று கேட்பீர்களேயானால் அதற்கான பதிலைச் சுருக்கமாய் சொல்லிவிட முடியாது. இந்த நாவலுக்காக வெளியிடப்பட்ட ஒரு நிமிடக் காணொளியின் ஒரு நொடி ஃப்ரேமில் சிலுவை தாங்கிய ஏசுவின் படம் வந்து போகும். ”இது தலைமுறைகளின் கதை, சாபங்களிலிருந்தும், அச்சங்களிலிருந்தும் விடுபட நினைக்கிறவர்களின் கதை” என்று பின்னணிக்குரல் ஒலிக்கும். இந்தக் கதையை நம்மிடம் சொல்கிற அவன் தான், பிறரின் பாவங்களுக்காக தான் சி���ுவை சுமந்த மீட்பனாய்த் தோன்றுகின்றான். அந்த மீட்பனின் மீட்சிதான் ‘அஜ்வா’வின் கதை.

https://ungalsudhar.blogspot.in/2016/...
Profile Image for Ashok Chemarx.
52 reviews1 follower
June 2, 2021
பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ அதுதான் தெய்வம்.
பயம் அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டு மனிதனின் உடலில் இருந்து வெளியேறக் பலவ்வழிகளில் முயற்சித்துக்கொண்டே தான் இருக்கிறது. அதில் ஒரு வழியாகக் போதை வழியை தேர்ந்தேடுத்தவனின் கதை..நம்மை உடன் அழைத்து சென்று அவன் மனதை ஒருநிலை படுத்தி வெளிப்படையாகக் அவன் கதையை சொல்கிறான்.. நீங்களும் தயாரா? சலிக்காமல் உங்களிடமும் சொல்லுவான்..

“உச்சி என்று பயப்படுகிறீர்கள். மேலேயும் நின்றுகொள்ள ஒரு சமவெளி இருக்கிறது”

"இதுதான் வாழ்க்கை என்று விதிக்கப்பட்டு விட்டால், அதை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டால், எந்தப் பயமும் நம்மை விட்டு விலகிவிடும்"

"புத்தியைவிட நம்பிக்கைகளுக்குக் கனம் அதிகம்"
1 review
February 5, 2020
"Fear is a bad habit" - Ajwa

The story revolves around a Stoner, a ganja addict also a timid person who chose drugs for his salvation which results in damnation. Well, isn't that typical drug-addict story? But what makes this novel stand out?

The meta-narration, non-linear pattern and un-romanticized story(I wish there was word like that)
There are very few writers in tamil who have achieved meta-narration and Saravanan Chandran is one of'em.

So the protagonist enjoys his temporary escape from fear which is given by the drug. He meets stoners and other addicts in his hostel room where they socialize for booming. He has a best friend who in some point will choose life over drugs, George Antony(Reincarnation from drug). Daisy is one among them who carries responsibility for her action in drugs(Responsible for the usage of drug) and Sampath, who dies by the intake of drugs(Slave for drug). These three characters are those which questions and clashes the life of our protagonist. There are other characters which deals between the above mentioned triangle extremities. But the other main extremity which can be imagined as a big black dot inside a triangle, his father(Fear), who is timid and coward, died of fear. Whose influence on protagonist has marked a deep prints in his heart, fear.

The non-linear flow of story that joins these three points with a big dot is what makes this novel mind blowing. As I said, even though the protagonist finds a key to his lock, which is Ajwa(Dates) and a verse which has been told by the Prophet Mohammed- "He who eats seven 'Ajwa dates every morning, will not be affected by poison or magic on the day he eats them." , the story did not romanticize the climax.

I see it as the protagonist character is basically build of the urge to find a salvation. Is the salvation something that happens in a fraction of seconds? What made him to choose his salvation from Drugs to Ajwa? Is fear a primary feeling or just a bad habit? Is it Ajwa that gonna give him freedom?

Well, it's a lot more than all these, a honest story.
Author 2 books16 followers
June 13, 2019
எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவம் , அவருக்கிருந்த பயம் அதிலிருந்து அவர் மீள்வது தான் அஜ்வா. சாதாரண வாழ்க்கை அனுபவங்கள் சொல்லப்பட்ட விதத்தில நம்மை ஈர்க்கிறது . கதை இன்னும் சற்று நிலமாக இருந்திருந்தால் மனம் திருப்பதி அடைந்திருக்கும் . அஜ்வா வந்தவுடன் இந்த போக்கில் தான் கதை முடியப் போகிறது என்ற கணிப்பு மாறாமல் கதை முடிவதும் சற்று ஏமாற்றம் தான். எழுத்தாளனுக்கும் , வாசிப்பாளனுக்கும் நடக்கும் தேடுதல் போட்டியில் எழுத்தாளன் ஜெயித்தால் தான் வாசிப்பாளன் சந்தோஷமடைவான் . அஜ்வா. அருமை , ஆனால் அற்புதமில்லை .
Profile Image for Bhuvan.
254 reviews42 followers
June 14, 2024
3.5

போதை உலக ஆசாமிகளின் மாயமான ஒரு உலகத்தை சித்தரிக்கிறது.

அடிமைப்பட்டு போன ஒருவன் அதிலிருந்து எவ்வாறு மீள்கிறான் என்பதை இதன் சுருக்கம்.

சரவணா சந்திரன் எழுத்துக்களில் ஒரு தனிமை நிறைந்திருக்கிறது. உலகத்தில் இருந்து தாமே தம்மை ஒதுக்கி கொண்ட ஒருவரின் குரலாக இருக்கிறது.

அவர் பார்த்த மனிதர்கள் மிக சுவாரஸ்யமானவர்களாக உள்ளனர்.
10 reviews
March 1, 2022
கடைசிப் பகுதியில் வார்த்தைகள் என் தொண்டையிலிருந்து மனதில் இருந்தும் வரவில்லை தொண்டை அடைத்தது மனம் கனமாக இருந்தது முயன்று இறுதி அத்தியாயத்தில் முடித்தேன் இந்த புத்தகத்தில் நடை எனக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் இந்த புத்தகத்தின் டெய்லின் மார்பில் புதய வேண்டும் என்று எனக்கும் ஆசை ஒட்டிக்கொண்டது
Profile Image for Sriram Mangaleswaran.
176 reviews3 followers
March 2, 2023
Life of drug addict.

Story or life events of a drug addict, the story movies around his life events. He has a lover, mom,close friends, and many acquaintances.

Simple story with nice writing.
Profile Image for Shamshudeen J.
18 reviews4 followers
September 7, 2017
One can always find a ray of hope... In the deepest darkness.. Only, if you can embrace your fear..
Profile Image for Senthilkumar Gunasekaran.
35 reviews16 followers
December 11, 2017
The writer has done huge research on drugs that present in current scenario with youngsters. I love the daisy character. Mani info about farming was presented in the end.
7 reviews
October 18, 2018
It was totally great, the nonlinear story telling of saravanan Chandran is brilliantly workout in this when he went to met Antony after a long time.. This was a good one I liked it
Profile Image for Shanmugam Udhayan.
50 reviews10 followers
February 2, 2017
இந்த வருடத்தில் நான் படித்து முடித்த முதல் நாவல்... 20 ஆண்டுகளாக, சூழ்நிலை காரணமாக பிரிந்த நண்பனை திடீரென ஒரு நாள் சந்தித்து அவன் வாழ்வில் நடந்த அனைத்தையும் சுவையான உரையாடல் மூலம் தெரிந்து கொண்ட அனுபவத்தை தந்தது இந்த நூல்... போதை உலகத்தில் உள்ள நல்லது கெட்டது இரண்டையும் விவரிக்கிறார்... என்னதான் போதையின் மகத்துவத்தை சொன்னாலும் இனம் புரியாத பயம் ஏற்படுகிறது... நண்பனுடைய தாயிடம்(photo) மன்னிப்பு கேட்கும் இடம் உச்சம்... போதை உலகத்தை பற்றிய முக்கியமான எழுத்து... இந்த நாவலின் வாசிப்பனுபவம் எனக்கு இரண்டு திரைபடங்களை நினைவூட்டியது ...
1. Trainspotting
2. Requiem for a dream
If you like those movies am sure you will love reading this...Very positive writing... Must read ...
Profile Image for Karthikeyan  Kaliappan.
19 reviews5 followers
January 30, 2019
A slow moving story

I read this book to know the writing of Saravanan Chandra's. I feel the story is very slow and scattered.Though it speaks about the drug chain but it did not speak the actual mentality of addict. May be I have not seen any real drug addict's behaviour. But as a story it was too slow moving and not able to follow many characters behaviour.
Displaying 1 - 15 of 15 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.