தொலைகாட்சியிலும் “Jio” Hotstar செயலியிலும் வலையொளியிலும் பார்க்க நேரும் ஒவ்வொரு தருணமும் ஒரு திறமையான பேச்சுவன்மை பெற்ற,எதை எந்த நேரத்தில் எப்படி சொல்ல வேண்டும்,யாரிடம் எப்படி கேள்வி கேட்க வேண்டும்,எந்த மாதிரியான கேள்விகளாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் ஒரு முன் தயாரிப்பே இல்லாத மாதிரி,மிக இயல்பாக தனக்கு வந்து விழுவதைப் போல நேர்த்தியான முறையில் நிகழ்வுகளை முன்நடத்திச் செல்லும் ஒரு ஆளுமை!அப்படிப்பட்டவருடைய பதின் பருவ திறமைகளையும் அப்பொழுது ஆர்வ மிகுதியால் அவர் வரைந்த கிறுக்கல்களையும் மிகப் பெரிய கதவின் சிறு துவாரம் வழியே காட்டுவதே இப்படைப்பு!
49 கவிதைகளை தொகுத்துள்ள இப்புத்தகத்தில் அனைத்து வரிகளும் பேசும் ஒரே விஷயம் “பெண்”!