Jump to ratings and reviews
Rate this book

எங் கதெ

Rate this book
இமையத்தின் இந்த நெடுங்கதையில் ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது. இமையத்தின் படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களம்; வேறுபட்ட நடை.

110 pages, Paperback

First published January 1, 2015

25 people are currently reading
161 people want to read

About the author

Imaiyam

21 books93 followers
இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
91 (31%)
4 stars
108 (37%)
3 stars
59 (20%)
2 stars
17 (5%)
1 star
12 (4%)
Displaying 1 - 30 of 49 reviews
Profile Image for Sarala.
43 reviews21 followers
May 13, 2021
மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்தே ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் எப்போதும் ஒருவகை சிக்கல் இருந்து கொண்டே தான் வந்திருக்கிறது. தாய்வழிச் சமூகம், தந்தைவழிச் சமூகமாக மாறிய பிறகு, சிக்கலின் தீவிரம் இன்னும் அதிகமாகியதே தவிர குறைந்ததாகத் தெரியவில்லை. ஆணுக்குப் பெண் மீதான அதிகாரங்களும் அதன் அழுத்தங்களுமே இவ்வகைச் சிக்கல்களுக்கான அடிப்படைக் காரணம். பெண்ணை உடைமையாகப் பார்க்கும் வழக்கமே, நாளடைவில் உரிமைச்சிக்கலாக மாறியது. தொடர்ந்த காலங்களில் அது மனச்சிக்கலாக மாறி இன்று வரை பல்வேறு அனர்த்தங்களுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது.

ஆண்-பெண் உறவின் பரிமாணங்களுக்கான எல்லை இதுதான் என்ற வரையறை இன்று வரை இல்லை. அப்படி வரையறுக்க இயலாத ஒன்று காமம். அதன் அடிப்படையில் துளிர்க்கும் ஒருவகை உறவையும், அதனால் ஏற்படக்கூடிய அகச்சிக்கல்களையும், புறச்சிக்கல்களையும் ஆணின் பார்வையில், அவனது உணர்வுகளின் வழி கூறப்பட்ட கதை.

கதைச்சொல்லியான விநாயகத்தின் வாய்மொழி மூலமாகவே கதை நகர்ந்து செல்கிறது. திருமண வயது தாண்டியும் திருமணமாகாமல், வேலை எதுவும் இல்லாமல் இருக்கும் விநாயகம், அந்த ஊர் பள்ளியில் அலுவலக வேலைக்கு மாற்றலாகி வரும் கமலா என்ற பெண்ணின் மீது ஆர்வம் கொள்கிறான்.

கமலா… இரண்டு பெண்பிள்ளைகளுக்குத் தாய், கணவனை இழந்த விதவைப் பெண். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவளானாலும், தன்னந்தனியாக குழந்தைகளை வளர்த்து வருகிறாள்.

விநாயகத்தின் ஆசைக்கான எதிரொலி, கமலாவிடமிருந்தும் வெளிப்பட ஆரம்பிக்கிறது. மெல்ல மெல்ல துளிர்விட ஆரம்பித்த அந்த உறவு, நாளடைவில் வலுக்கிறது. கமலா இல்லாமல் ஒரு நாள் கூட அவனால் வாழ முடியாது என்ற நிலைக்கு ஆளாகிறான். தினம் தினம் அவர்களது உறவு இறுகிக் கொண்டே செல்கிறது.

இவர்களது இந்த உறவு, ஊரறிந்த ரகசியமாகிறது. அது தெரிந்தும், தெரியாததொரு பாவனையையே அனைவரும் தொடர்கின்றனர். விநாயகத்தின் அம்மா, சகோதரிகள் எல்லோரும் அவனது முறையற்ற உறவை விட்டுவிடுமாறு அழுது புலம்புகின்றனர். ஆனாலும், அதை மறைமுகமாக ஆதரிக்கவும் செய்கின்றனர். ஆனால், கமலாவின் மீதான அவனது பித்தால், தயவு தாட்சண்யமின்றி அவர்களை நிராகரிக்கிறான். எதற்காகவும் கமலாவிடமிருந்து அவன் விலகுவதாக இல்லை.

திடீரென்று ஒருநாள் எல்லாமே தலைகீழாக மாறுகிறது. கமலாவின் வேலை பக்கத்து நகரத்திலிருக்கும் பள்ளிக்கு மாற்றலாகிறது. அதனால், அங்கு வசிப்பிடத்தை மாற்றிக் கொள்கிறாள். அதற்கும் விநாயகம் தான் அவளுக்கான எல்லாவற்றையும் செய்கிறான். அங்கும் அவர்களது உறவு தொடர்கிறது.

காலம் எவருக்கும் ஒரே மாதிரியாக செல்வதில்லையே. அவர்களது வாழ்விலும், காலம் மாற்றத்தின் சுவடுகளைப் பதிக்கத் துவங்குகிறது. நாட்கள் செல்ல செல்ல, கமலாவிடம் மாற்றத்தை உணர ஆரம்பிக்கிறான். அவள் அவனிடமிருந்து விலகி, வேறொரு புதிய உறவில் இணைகிறாளோ என்ற சந்தேகம் அவனை அரிக்கத் துவங்குகிறது. அந்த சந்தேகம் அவனை பித்தனாக்கி அலைய வைக்கிறது. அதற்கேற்பவே சம்பவங்கள் அனைத்தும் நடக்கின்றன. அதனால், ஆத்திரத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறான்.

அவளை விட்டு விலகவும் முடியாமல், எதையும் வாய்விட்டுக் கேட்கவும் முடியாமல் இருதலைக் கொல்லி எறும்பாகத் துடிக்கிறான். ஏனெனில் அவர்களது உறவு எப்போதும் பரஸ்பர தேவையைச் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. அதை மீறிய எந்த ஒரு அவசியமற்ற சொல்லும், செயலும் இருவரிடமிருந்தும் எப்போதும் வெளிப்பட்டதே இல்லை, என்பதை அவன் காலம் கடந்தே உணர்கிறான். ஆயினும் முன்பே உணர்ந்திருந்தாலும் கூட, அவனால் எதுவும் செய்திருக்க முடியாது, என்பதே உண்மை. அந்த அளவிற்கு கமலாவின் ஆளுமை அவனுக்குள் ஒருவகை தாழ்வுணர்வை உருவாக்கியிருந்தது. இப்படியான சூழலில், “நீ எப்படி இவ்வாறு செய்யலாம்..?” என்ற உரிமையுணர்வு எழ வாய்ப்பில்லாமல் அங்கே அடிபட்டுப் போகிறது. அப்படியே எழுந்தாலும், அவளது ஆளுமை அவனைக் குன்ற செய்து விடுகிறது.

மனதிற்குள்ளாகவே புழுங்கியவனின் நிலை பார்க்கத்தரமற்ற ஒன்றாக மாறுகிறது. அவனுடைய உறவுகள், நட்புகள் என்று எவரது ஆறுதலும் தேறுதலும் அவனை அமைதிப்படுத்தவில்லை. எல்லோரிடமிருந்தும் தனிமைப்பட்டுப் போகிறான்.

இந்நிலையில், கமலாவின் புது உறவு, அவளுக்குச் சிக்கல்களைக் கொண்டு வருகிறது. சில நாட்களிலேயே அது தீவிரமடைய ஆரம்பிக்க, அதையும் விநாயகமே தீர்த்து வைக்கிறான். நாட்கள் கடந்து சென்றன. இருப்பினும் அவனது மனம் அமைதி கொள்ளவில்லை. இறுதியாக, கமலாவைக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்வது என்ற தீர்மானத்தோடு அவளது இருப்பிடம் நோக்கி செல்கிறான்.

அவளைக் கொல்ல வேண்டும் என்ற ஆத்திரம் வினாடிக்கு வினாடி அதிகரித்தாலும், அதையெல்லாம் மறைத்துக் கொண்டு, அவளுடன் கலவி கொள்கிறான். அந்த சமயத்திலேயே அவளைக் கொல்லவும் நினைக்கிறான். ஆனால், சட்டென்று ஏதோ ஒரு விரக்தியான மனநிலையில் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடுகிறான். அவள் எங்கிருந்தாலும், யாருடனிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டுமென வாழ்த்தி விட்டு, அவளிடமிருந்து விலகிச் செல்கிறான்.

கதையின் ஆரம்பத்தில் விநாயகம், இது எங்கதெ என்று ஆரம்பித்து, கமலாவோட கதையும் தான் என்று கூறுகிறான். ஆனால், இதில் கமலாவின் பார்வைகளும் கோணங்களும் உணர்வுகளும் அவ்வளவு தெளிவாக வெளிப்படவில்லை எனும் போது இது அவளது கதையாக தோன்றவில்லை.

விநாயகத்தின் உணர்வுகள், பார்வைகள், கோணங்கள் என கதை முழுவதும் அவனது அனைத்து உணர்வுகளும் சுய புலம்பல்களாக வெளிப்படுகிறது. ஆயினும், எல்லாவற்றிலும் அவனது ஆற்றாமையே பிரதானமாக இருக்கிறது.

“உன் தேவைக்கு நீ வந்தாய்.. என் தேவைக்கு நான் இணங்கினேன்..” என்ற தெளிவு கமலாவிடம் இருக்கும் போது, விநாயகத்திற்கு ஏன் இல்லாமல் போகிறது.? ஒருவேளை கமலாவைப் போல அவனுக்கும் ஒரு திருமண வாழ்வு அமைந்திருந்தால், அத்தகையத் தெளிவு அவனுக்கும் வாய்த்திருக்கலாம். அல்லது தன்னுடன் உறவு கொண்டு விட்டதனாலேயே அவளது உணர்வுகளும் அவனுக்கு உடைமையாகி விடும் என்ற சமூக எண்ணம் அந்தத் தெளிவை அவனுக்குள் உருவாகுவதற்கு தடையாக இருந்திருக்கலாம்.

கமலாவை கண்ட நாளிலிருந்து அவளிடம் தாழ்ந்து போகும் விநாயகம், அவளுடனான உறவில் சிக்கல் எழும்போது, வெறி கொண்டு அவளைக் கொன்றுவிடும் எண்ணத்திற்கு ஆட்படுகிறான். இயல்பில் சாதாரண ஒரு சராசரி மனிதனான விநாயகம் கொலை செய்யும் அளவிற்கு தூண்டப்படுவது எதனால்..?

பெண் என்பவள் எப்போதும் எந்த உறவிலும், அது மறைமுகமாக இருந்தாலும், வெளிப்படையாக இருந்தாலும் ஆணுடைய உடைமையாக, அவனுக்கு சொந்தமான பொருளாகப் பார்க்கப்படுவதே இதன் பின் உள்ள காரணம்.

கமலாவின் பாத்திரப்படைப்பு வெகு யதார்த்தம். கணவனை இழந்த பின் தான் விநாயகத்துடனான உறவில் இருக்கிறாள். ஆனால், விநாயகத்துடனான உறவில் இருக்கும் போதே அவள் ஏன் வேறொரு உறவுக்கு வழிதேடுகிறாள் அல்லது வழி கொடுக்கிறாள்..? என்று நமக்குள் எழும் சிந்தனைக்கு, அவளது வாய்மொழி வழியாகவே பதில் கூறுகிறார் ஆசிரியர்.

“இன்னும் எத்தன மாப்ள மாத்துவ..?”

“நீ சொல்றபடியே வச்சிக்குவோம். நீ பாட்டுக்கும் கல்யாணம் கட்டிக்கிட்டுப் போயிட்டா, என்னோடது மானத்தப் பாக்குமா..? அது மட்டும் மண்ணாலியா செஞ்சிருக்கு..?”

இதில் வெளிப்படுவது அவளுக்குள்ளிருக்கும் ஒரு பாதுகாப்பற்றத் தன்மையும், அவனுடனான உறவின் நிச்சயமற்றத் தன்மையுமே..

இப்படிப் பட்டென்று அவள் கேட்டும் கூட, திருமணமாகாத அவன், அவளைத் திருமணம் செய்து கொள்ளலாமென மனதாலும் எண்ணவில்லை. கமலாவும் அவனிடம் அதை எதிர்பார்க்கவில்லை. இதுவே, அவர்களது உறவு ஒரு பரஸ்பர தேவையைச் சார்ந்தே உருவாகியிருக்கிறது என்பதை தெளிவுற உரைக்கிறது.

அது அவர்களது அவசியமான தேவையும் கூட.. அதில் சரியா..? இல்லையா..? என்ற ஆராய்ச்சி தேவையில்லை. தேவை என்பது வெறும் தேவை மட்டும் தான். அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை எனும் பட்சத்தில், அந்தத் தேவைகள் தீர்க்கப்படும் வழிமுறைகள் சம்பந்தப்பட்டவர்களை சார்ந்தது.

இப்படியொரு உறவில் கமலாவை, விநாயகத்திற்கு பிள்ளைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்று நொடிக்கிறார்கள் அவனது சகோதரிகள். இதில் இந்தப் பெண்கள் தான் எந்த உறவையும் எவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள்.. என்று சிலாகிப்பதா..? அல்லது இப்படி இருக்கிறார்களே என்று வருத்தப்படுவதா..?? புரியவில்லை.

ஆசிரியர் கதையின் ஆரம்பத்திலிருந்தே கமலாவைப் பற்றிய பிம்பத்தை ஒரு கவனத்துடனேயே பதிவு செய்கிறார். அதனால் அவளது கதாபாத்திரம் எவ்வித ஏற்ற இறக்கமில்லாமல் ஒரே நேர்க்கோட்டிலேயே பயணிக்கிறது. ஆனால், விநாயகம் இதற்கு நேர்மாறான பிம்பத்தைக் கொண்டிருக்கிறான். முதலில் கமலாவிடம் ஆட்படுகிறான். பின் ஆள நினைக்கிறான். இறுதியில் எதுவும் முடியாமல் விலகிச்செல்கிறான்.

கதை, மேலோட்டமாக அவள் அப்படித்தான், இவனால் தான் எல்லாம்..? என்பது போல் தோன்றினாலும், அது ஒரு மாயத்தோற்றமே.

அடிநாதமாக விநாயகம் பரிதாபம் என்ற போர்வையில் உயர்த்தப்படுகிறான் அல்லது நியாயப்படுத்தப்படுகிறான். ஆனால், கமலாவிற்கு வேறு வழியில்லை என்ற நிலையில், நிர்பந்தம் என்ற போர்வையில் தூற்றப்படுகிறாள். இதுவே கதையினூடாக ஒரு மெல்லிய இழையாக தொடர்ந்து வருகிறது. இதுவே அதன் உண்மைத்தன்மையாகவும் தோன்றுகிறது.

கதை முழுவதும் கமலாவின் ஆளுமையையும், விநாயகத்தின் தாழ்வுணர்வையும் ஒரே சீராகக் கொண்டு வரும் ஆசிரியர், இறுதியில், “நீ எங்கிருந்தாலும் நல்லாரு..” என்ற விநாயகத்தின் வார்த்தைகளில் இருவரது பிம்பத்தையும் புரட்டிப் போட்டு விடுகிறார். ஆண்-பெண் மீதான இந்த சமூகம் கொண்டிருக்கும் பார்வையையே அதில் பிரதிபலிக்கிறது.

தேவைகள் பெண்ணுக்கும் உள்ளது என்று பேசியதால் இந்த கதை சிறப்புறுகிறது. ஆயினும், அது நியாயமா..? என்ற கேள்வியையும் மறைமுகமாக எழுப்புவதால், அச்சிறப்பு சற்றே மங்கி ஒளி குன்றி விடுகிறது.


Profile Image for P..
528 reviews124 followers
Read
March 17, 2021
A difficult one to rate.

Let's talk about the flaming misogyny in this novel. I'm torn between accepting it as a realistic depiction of our deeply misogynistic society and dismissing it as a venomous, regressive pile of crap that celebrates hatred against women. The ending is a mild saving grace and it has tilted my opinion slightly towards the former. But it can be very easily misconstrued - especially as our society still idolizes the stalking movies and the stalker heroes - and it would've been better had they prefaced the novel with an essay about the authorial intention.

The novel works well as a stream-of-consciousness rant of a man in a ten year-old noncommittal relationship with a widowed woman who is new in town. His voice is clear and effective. The woman, Kamala, has the upper hand in the relationship and she is an enigma. This is where the first person narrative falls short because she is the most fascinating character here and we know almost nothing about what goes on in her mind. Her emotions and thoughts are opaque to the reader. All we get is the protagonist's rants. His self-pity and complete incrimination of Kamala is nothing new - we're very familiar with the insipid diatribes of soup boys who have never in their lives heard the concept of taking responsibility for their own actions and place the blame squarely on women because, of course, they are to be blamed for everything - they're damned if they do, they're damned if they don't. Caste is cited as one of the factors here for the couple not marrying, but given the intensity of his affections, I just didn't understand why they did not get married. The society is obviously villainous in its relentless rebuke of outliers, but the novel doesn't so much as glance in that direction. Unintentionally perhaps, we see how women are often forced to uphold patriarchy and vilify other women who defect.

If you give Imaiyam the benefit of doubt, you can call this a good novel. But there isn't enough evidence to dispel the ambivalence. The blurbs of his other novels - especially Sedal - sound promising and I might just give him another shot.
Profile Image for Elayaraja Subramanian.
129 reviews8 followers
February 28, 2021
வேப்பூர் பக்கத்துல ஒரு சின்ன ஊரு. அங்க விநாயகம்ன்னு ஒருத்தன். படிச்சி முடிச்சிட்டு 33 வயசு வரைக்கும் வேலைவெட்டி எதுக்கும் போவாம ஊருக்குள்ள சுத்திட்டு இருக்கான். அவன் சித்தப்பா பையன் அம்பலவானன் ஸ்கூலுக்கு எதுத்தாப்புல வச்சிருக்க எஸ்டிடி பூத்ல தான் அடிக்கடி போய் குந்திட்டு இருக்கான். அப்படி ஒரு நா குந்திட்டு இருக்கும் போது தான் அந்த ஸ்கூலுக்கு கிளார்க் வேலைக்கு வந்திருக்க கமலா அங்க போன் பண்ண வரா. பாத்ததுமே அவ மேல பைத்தியம் ஆகிடுறான். கமலா அதுக்கப்புறம் அடிக்கடி அங்க போன் பண்ண வரா. அவ எப்ப வருவான்னு காத்திட்டு இருக்க நிலைமைக்கு போறான் இந்த பய. கமலாக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பொம்பள புள்ளைங்க இருக்கு. புருஷன் ஆக்சிடெண்ட்ல செத்துப் போய்ட்டாதலயும் அவன் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல வாத்தியார் வேலை பாத்துட்டு இருந்ததாலயும் கமலாவுக்கு விநாயம் ஊர்ல இருக்க ஸ்கூல்ல கிளார்க் வேலைப் போட்டு கொடுத்துடுறங்க. வயசு முப்பதுக்கும் கம்மி. புருஷன் இல்ல. அழகா வேற இருக்கா. அந்த ஸ்கூல்ல வேலை பாக்குறதல அவ மட்டும் தான் பொம்பளை. மாஞ்சி மாஞ்சி எல்லாப்பயலும் அவளுக்கு சேவகம் பண்றானுங்க. இவனும் கொஞ்சம் கொஞ்சமா அவ கூட பழக ஆரம்பிச்சி வாடி போடி வரைக்கும் உறவாகிடுது. விநாயகம் வீட்ல இருந்து அஞ்சாறு வீடு தள்ளி இருக்க சிதம்பரம் புள்ள வீட்டுல தான் அவ குடி இருக்கா. சுத்தி இருக்க பொண்டு பொடுசுல இருந்து கிழடு தட்டிப் போன கிழவிங்க வரைக்கும் எல்லாருக்கும் கமலா வீடு தான் சாவடி மாதிரி. அதுங்க எல்லாம் போன அப்புறம் இவன் போய் குந்திட்டு இருக்கான். இப்படியே அவ கூட 9 வருஷம் ஓடிப் போய்டுது. ஊர் முழுக்க ரெண்டு பேரு விஷயமும் தெரிஞ்சாலும் யாரும் அவளை இதை பத்தி கேக்கல. நல்ல புள்ளன்னு பேரு எடுத்து வச்சிருந்த விநாயகமும் இவள வச்சிருக்கான்னு இளக்காரமா பேசுறாங்க. வேலை எதுக்கும் போகாம சுத்திட்டு இருந்தாலும் அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணிவச்சிப் புடலாம்ன்னு அவன் அம்மா கிடந்து அல்லாடுது. ஆனா இவன் கமலா பைத்தியம் புடிச்சிட்டு திரியுறான். கமலா புள்ளைங்களும் வயசுக்கு வந்த பெரிய புள்ளைங்களாகிடுது. ரெண்டும் +2 முடிக்கவும் இவளுக்கு ப்ரோமோஷன் வந்து கடலூர்க்கு மாத்தல் வரவும் சரியா இருக்கு. ரெண்டு பேருக்கு நடுவுலயும் விரிசல் அங்க விழ ஆரம்பிக்குது. அங்க இருக்க மேலதிகரியான சிஇஓ கூட கமலா தொடர்பு வச்சிருக்காளோன்னு இவனுக்கு சந்தேகம் வருது. அவனோட கையாலாகாதனமும் அவ மேல நமக்கு என்ன உரிமை இருக்கு அப்டிங்கிற உண்மையும் சேர்ந்து விநாயகத்தை பைத்தியம் புடிச்சவன் மாரி அலைக்களிக்குது. அதுக்கு அப்புறம் என்னன்னு நீங்களே படிச்சி தெரிஞ்சிகோங்க.

நல்ல படத்தையும் நல்ல கத புஸ்தகத்தையும் படிச்சதும் அங்கேயே வாழ்ந்த மாரி இருந்தது அந்த மனுஷங்களோட நானும் சேர்ந்து சுத்தின மாரி இருந்ததுன்னு சொல்லுவோம்ல ஆனா இந்த கத உண்மையாவே அப்டி தான் இருந்துச்சி. விநாயகம் பக்கத்துல குந்திட்டு அவன் சொல்றத எல்லாம் கேட்டுட்டு வந்த மாரி இருந்துச்சி.

கமலா அழுத்தனக்காரியா இருக்கா, அதிகாரமாவே எல்லாத்தையும் பண்ணுவா பேசுவான்னு எல்லாத்தையும் சொல்றான் விநாயகம். படிக்குறப்ப நமக்கே கோவம் வருது. அவன் கஷ்டப்படுறதையும் வீட்டு ஆளுங்கள அவன் கஷ்டப்படுத்தையும் படிக்குறப்ப "எலவெடுத்தவனே.. அது தான் தெரியுதுல.. அவ அப்டி தான்னு.. அப்புறமும் யென் அவளையே புடிச்சிட்டு தொங்குற.. மூடிட்டு வேற கல்யாணமோ இல்ல அவளையோ விட்டு தொலைஞ்சிட்டு வர வேண்டியது தானே" அப்டின்னு மூக்கு மேல நம��்கே வந்து, அவன் சித்தப்பா மகன் அம்பலவானன் மாரி, மனசுகுள்ள நாம கேக்கும் போது, "நான் தான் என் சாவிய அவ கிட்ட கொடுத்துட்டேனே.. எல்லாருக்கும் ஒரு பைத்தியம் மாரி எனக்கு கமலா பைத்தியம்.. பருந்துகிட்ட என்னைய தூக்கிட்டு போன்னு சொல்ற கோழிக்குஞ்சு தானே நான்"னு சொல்லி வெறுப்பேத்துறான். கமலாவ இவன் மூலமா தான் தெரிஞ்சிக்குறோம். அதனால இவன் சொல்றத வச்சி தான் அவ இப்படி தானோ அப்படி தானோன்னு ஒரு ம��டிவுக்கு வர வேண்டியதா இருக்கு. இவனும் அவள கல்யாணம் பண்ணிக்கவான்னு கேக்கல அவளும் கேக்கல. ரெண்டு பேரும் அவங்கங்க தேவைக்கு மத்தவங்கள யூஸ் பண்ணிக்குராங்க.

நல்ல அழுத்தனக்காரின்ன்னு விநாயகம் அடிக்கடி சொல்ற கமலா ஒரே வாத்தயில அவன் வாய மூடிட்டு கிளம்பிடுறா. இவங்கிட இருந்து அவ எதையும் எதிர்பாக்கல. நல்லா சம்பாதிக்குறா. அவங்க வீட்டு நிலத்துல வர காசையும், அவ மாமனார் வீட்டு நிலத்துல வர வருமானத்தையும் அவளே தான் வச்சிருக்கா. புருஷனோட பென்ஷன், வாத்தியாரா இருந்த அவளோட அப்பா அம்மாவோட பென்ஷன் காசுன்னு நல்லாவே இருக்கா. அந்த காசுல இவனுக்கும் அவ எதுவும் பண்ணல. அவனும் இவளுக்காக எந்த செலவும் பண்ணல. காசு கொடுத்தா போய் ஏதாவது வாங்கிட்டு வந்து கொடுக்குற வேலையாளா தான் இருக்கான் இவன்.

மொத்தத்துல கமலாவோட விநாயகம் இருக்க அந்த பத்து வருஷ காலம் தான் கதெ. அதுல எப்டி எல்லாம் அசிங்கப்பட்டான், எப்டி எல்லாம் பைத்தியம் புடிச்ச சொறி நாய் மாரி திரிஞ்சான், எப்படி பசி - தூக்கம் - குடும்பம் - சொந்தபந்தம் - ஊரு - காடுன்னு எதப்பதியும் கவலப்படாம கமலாவே கதின்னு கிடந்து செத்து சுண்ணாம்பாகுறான் அப்டிங்றது தான் இந்த "எங் கதெ".

பின் குறிப்பு : யென் புஸ்தகத்தை பத்தின அறிமுகத்தை இந்த மாரி ஒரு நடையில எழுதி இருக்கேன்னா, விநாயகமும் அவங் கதெய இப்டி தான் இதுல சொல்லி இருக்கான். படிச்சிப் பாருங்க. படிச்சி முடிக்குற வரைக்கும் நாமளும் அவன் கூடயே சொறி நாய் மாதிரி அங்கயும் இங்கயும் திரிஞ்சிட்டு கிடப்போம்.
Profile Image for Mini.
19 reviews4 followers
January 28, 2025
சாதாரண மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளை நேர்மையாகவும் நுணுக்கமாகவும் சித்தரிக்கும் இந்நூல், வாழ்வின் கசப்புகளையும் இனிமைகளையும் உணர்த்துகிறது. இமையம் பயன்படுத்தும் புனைவும் இயல்பான மொழியும் சிறப்பு வாய்ந்தவை. சமூகச் சிக்கல்களை மீட்டெடுத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மனநிலை மற்றும் மனோவியல்களை சுவாரசியமாகத் திருப்பி விடுகின்றார்.

உண்மைச் சம்பவங்களை தழுவிய கதைக்களமும், ஒவ்வொரு மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் உரையாடல்களும் இந்த நூலை வாசிப்பதற்குரிய முக்கிய படைப்பாக உயர்த்துகின்றன.
Profile Image for Divya.
128 reviews25 followers
July 13, 2021
This book is a highly frustrating rant about a woman by a man who is obsessed with her. He says her name "Kamala", a mile a minute and you get tired of it after some time. They have a weird relationship that extends for almost 10 years. Kamala is a cipher and we learn everything about her from his rant. We don't know her mindset or the depth of her feelings for him. We don't know why she continues her relationship with him for so long. We don't even learn in detail about the things that they do. It is always a running complaint about the arrogance, power and beauty that kamala has over him. To be frank, I was exhausted with the novel.
Profile Image for Muthu.
27 reviews2 followers
July 29, 2022
சமூகத்தின் சூழல்ல ஒரு ஆண் பெண்ணுடைய உறவு இந்த புறகாரணிகளால் மிகவும் சிக்கலாகப்பட்டுக் கொண்டே இருக்கிறது ஒரு தமிழ் ஆண் பார்வையில் இருந்து ஒரு பெண்ணை உடல் ரீதியாகவும் பொருளாகவும் அணுகும் பார்வையை அதில் இருக்கும் சிக்கல்களையும் அவ்வாறான அன்பு செலுத்துதல் உரிமை கொண்டாடுதல் நம்மை எங்கு கொண்டு போய் நிறுத்துகிறது என்பதையும் எந்த நிறுத்தமும் இல்லாமல் ரயில் போல் ஓடி முடிகிறது கதை
பொருளாதார ரீதியாக விடுதலைப் பெற்றவள் தன்னுடைய முடிவுகள் மீது இந்த சமூகத்தை எந்த விதத்திலும் உரிமை கொண்டாட விடாத பெண்ணை கையாள்வதில் ஆண்களுக்கே உண்டான சிக்கலை மிகத் துல்லியமாக எழுதி இருக்கிறார் இமையம்
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books176 followers
January 24, 2025
#333
Book 4 of 2025- எங் கதெ
Author- இமையம்

இமையத்தின் ‘எங்கதெ’ நாவல் கிராமப்புற வாழ்க்கையின் நுணுக்கங்களையும் மனிதர்களின் மனதிற்குள்ளான சிக்கல்களையும் ஆழமாக சித்தரிக்கும் ஒரு மிக முக்கியமான படைப்பு. இந்த நாவல் மனித உறவுகளின் மெய்யான தன்மையையும், சமூகத்தின் பார்வையில் அவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதையும் ஆராய்கிறது.

காதலுக்கு வயதில்லை என்பதை போல் தான் இதில் ஒரு வித்தியாசமான, விசித்திரமான காதல் கதை. கமலா-விதவைப் பெண்,இரண்டு பெண் பிள்ளைகள். விநாயகம்-திருமணமாகாத,வேலைக்கும் செல்லாத ஒரு ஆண். விநாயகன் கமலாவை நேசிக்கிறார், ஆனால் அவருடைய செயல்கள் மற்றும் கமலாவின் மௌனம், அவனுக்கு தனிப்பட்ட போராட்டமாக மாறுகிறது. சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் அவற்றின் மேல் நிரந்தர தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

இமையத்தின் எழுத்து மிகவும் இயல்பாகவும் நெகிழ்ச்சியுடனும் நிறைந்துள்ளது. இவர் கிராமப்புறங்களின் வாழ்க்கை முறையையும், அதிலுள்ள நெகிழ்ச்சியான நிகழ்ச்சிகளையும் மிகுந்த உணர்வுடன் விவரிக்கிறார்.

இருவரின் உறவினால் உண்டாகும் குழப்பங்களும், அவற்றின் பின்னணியில் உள்ள சமூகச் சிக்கல்களும், நாவலின் முக்கியத் தகவுகளாக உள்ளது.

இந்த புத்தகம் உங்களுக்குள் நிறைய கேள்வி எழுப்பும். ஒரு ஆண்-பெண் உறவு சமூகத்தால் எப்படியெல்லாம் பார்க்கப்படுகிறது, அந்த உறவில் இருக்கும் ஆண் பெண்ணின் தேவை என்ன என்ற பல பரிமாணங்களை இது காட்டுகிறது. சிலருக்கு இந்த கதை பிடிக்காமல் கூட போகலாம். எனக்கு இது பிடிக்கக் காரணம் அந்தந்த கதாபாத்திரங்களின் உண்மையும்,நியாயமும் அப்படியே எழுதப்பட்டிருக்கும் விதம் தான்.
Profile Image for Sidharthan.
331 reviews1 follower
April 30, 2021
This was such a difficult book to get through. The only reason I did was because it was so short.

I have read books where literal serial killers have been the protagonists and I think I empathized more with them than with the protagonist of this novel. He is toxic masculinity personified. Everyone around him goes over and above to make sure that he is happy and he makes a huge scene out of doing the bare minimum in return. I was just so angry at him the whole time.

My sympathies from start to end where with the female lead, Kamala. I was wondering if Imaiyam had wanted the reader to feel this way too - if his sympathies also lay with Kamala. But having crafted a novel that is so centered on the male protagonist and his incessant whining, I doubt if that were the case. Even if it were, it is so easy to misconstrue this novel as being supportive of the male lead, and that feels unforgivable.

It is well-written and is an easy read. I liked that he went with a completely conversational tone. If Imaiyam's quest was to write a novel that tried to understand a toxic man's behaviour, this book has definitely achieved that. I only question the necessity of writing such a novel.
Profile Image for Deepti Srivatsan.
Author 1 book47 followers
July 5, 2021
The thing with Imaiyam's novels is (and I have read 'Sellatha panam' and 'En kadhe'), you don't feel an iota of empathy towards any of the characters. In fact we wonder why they behave the way they do - we want to call them and slap them and send them away. The protagonist of this book is one such character you get exasperated with. What is wrong with him and why is he so fricking useless is all you can think of when reading this book.
Ironically there's something magnetic about Imaiyam's writing that keeps you hooked till the end.
Profile Image for Haran Prasanna.
28 reviews11 followers
October 2, 2015
எங் கதெ என்னும் கதையைப் படித்தேன். ஆம், இது முதலில் நாவலல்ல. சிறிய கதை. சிலாகிக்க ஒன்றுமே இல்லாத மிகச் சாதாரணமான கதை. பலமுறை பல விதங்களில் சலிக்கப்பட்டுவிட்ட ஆண் பெண் முறை மீறிய உறவின் இன்னொரு புலம்பல். சரியான வார்த்தை, புலம்பல் என்பதுதான். கதையின் நாயகன் முதலில் இருந்து கடைசி வரை புலம்பிக்கொண்டே இருக்கிறான். ஒரே புலம்பலை எத்தனை முறை கேட்பது? கதை நெடுகிலும் முறை மீறிய உறவை வித விதமான எடுத்துக்காட்டுகளோடு சொல்லும் ம��ந்தர்கள் வந்து போகிறார்கள். “காப்பி குடிக்கலாம், கடையை வாங்கலாமா” ரக உதாரணங்கள். சகிக்கவில்லை. ஆண் பெண் உறவின் சிக்கலின் எந்த ஒரு அம்சத்தையும் நுணுக்கமாக சித்திரிக்க முடியாததாலேயே, மிகத் தெளிவாக நாயகன் தன்மொழியில் சொல்லிச் செல்கிறார் எழுத்தாளர் இமையம். கதை முழுக்க பெண்களைத் திட்டித் தீர்க்கும் ஆண் வன்மம். அதற்கு ஒரு சமன்குரல்கூட கிடையாது. கள்ள உறவு, வெறி, கழிவிரக்கம், கொலை செய்ய முயற்சி, பின்பு திடீர் ஞானோதயம். இத்தகைய புத்தம் புதிய கருத்துடன் இக்கதையைப் படிப்பேன் என நினைத்தும் பார்க்கவில்லை! நாவலின் மொழி பல இடங்களில் வைரமுத்துவை நினைவூட்டுகிறது. தேவையே இன்றி வரும் திடீர் கவிதைத்தனமான வரிகளுக்காகவே நாயகனை கவிதை வாசிப்பவன் என்று ஆக்கிவைத்துவிட்டார் புத்திசாலி எழுத்தாளர். நான் ரசித்த ஒரே பகுதி, நாயகனின் தங்கைகள் அவன் மேல் காட்டும் அன்பை விவரிக்கும் வரிகளை மட்டுமே. மற்றபடி இந்நாவலில் ஒன்றுமே இல்லை.
Profile Image for Vignesh Vijay.
2 reviews12 followers
August 22, 2017
loved the flow of events... A very normal story we heard many times is said with a deeper psychology of the characters and with many beautiful lines in between...
Profile Image for Elankumaran.
141 reviews25 followers
November 14, 2023
எங் கதெ ❤️

இமையத்தின் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் படைப்பு இது. ஆண் பெண் உறவின் ஒரு பரிமாணத்தை மையமாகக் கொண்டு காதல், காமம், காழ்ப்பு என உணர்வுப் பறவையை ஆவேசமாகவும் சுவாரசியமாகவும் பறக்கவிட்டு, அந்த ஊருக்கான அழகியல் அடங்கிய பேச்சுவழக்கிலேயே கதையை சொல்லிச் செல்கிறார்.

கையாண்ட எழுத்தின் தன்மையும், பேச்சுவழக்கின் இயல்பழகும், அங்கங்கே என்றில்லாமல் அடுத்தடுத்தென அலையும் உவமைகளும், அதன் பொருத்தப்பாடுகளும், தூண்டிலில் மாட்டிய மீன் போல வாசகனை எழுத்தின் பின்னாலேயே இழுத்துச் சென்று பக்கங்களைத் தாண்டி பாய வைக்கிறது. இந்தக் கதையில் பயன்படுத்தப்பட்ட உவமைகளுக்கு நான் ரசிகன். இயற்கையுடன் கூடிய வாழ்பனுபவத்தின் ரசனை வெளிப்பாடுகளாகவே அவற்றை பார்க்க முடிகிறது.

இமையத்தின் படைப்புகள் அனைத்திலிருந்தும் இது வேறுபட்ட கதை, வேறுபட்ட நடை என்கிறார்கள். ஏனையவற்றையும் வாசித்து தெரிந்து கொள்வோம்.

“எங் கதெ, எங் கதெ’ன்னு சொல்லிக்கிட்டே இருக்கன். கேக்குறவங்களுக்கும் இது எங் கதெ மாரிதான் இருக்கும். நெசமா நெனச்சிப்பாத்தா இது என்னோட கதெ இல்லே. கமலாவோட கதெ. அவ இல்லன்னா எனக்கு ஏது கதெ? கமலாதான் கதெக்கான வெத நெல்லு. நெலமும் அந்தச் சண்டாளிதான்.”
Profile Image for Vadivel C.
24 reviews1 follower
August 10, 2022
இது எங்கதே. பத்து வருஷத்துக்கு கதெ. என் ரத்தம். என்
கண்ணீர்.

இப்படித்தான் ஆரம்பிக்கிறது எங் கதெ.

கதை சொன்ன விதம் அருமை. கதையும் தான்.

ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல், கமலா - விநாயகம் இவர்கள் இருவருடைய குணங்களை, இடையிலான உறவை தகுந்த ஏற்ற இறக்கங்கள் உடன் சொல்கிறது கதெ. எந்த மிகைப்படுத்தாலும் இல்லை. கதாநாயகன் கதை சொல்கிறான் நாம் கேட்கிறோம். அவ்வளவு எளிதான நடைமுறை வாழ்க்கையின் கதை இது.

படிப்பவரின் அந்தரங்க மனதையும் ஆட்டிப் பார்க்காமல் இருக்காது இந்த கதை. எல்லோருமே யாரோ ஒருவரிடம் கதையின் நாயகன் போல குழைந்து நெளிகிறோம், பிரிய மனமின்றி சுய மரியாதையை தூரப் போடுகிறோம், சபலப் படுகிறோம், சபலைத்தையும் தாண்டி அவர்களே வேண்டும் என்றும் விடாமல் நிற்கிறோம்.....
கமலா போல திறந்த குணமும், ரகசிய மனமும் கொண்டிருக்கிறோம், இருப்பதைவிட உயரியது கிடைத்தால் அதற்கு அசைப் படுகிறோம், போனால் போகட்டும் என புறக்கணிக்கவும் செய்கிறோம்....


கமலா பாத்திரம் மனம் கவரும்....
Profile Image for Harikrishnan.
74 reviews8 followers
March 3, 2022
ஒருவனின் மனக்குமுறல்களை விறுவிறுப்பாக்க பேச்சுவழக்கில் எழுதியுள்ளார்.
கதையின் பெயரே 'எங் கதெ' ஆதலால் கமலாவின் பார்வையை சொல்லவில்லை.
Profile Image for Uma.
6 reviews2 followers
Read
January 4, 2025
This book is so hard to rate. I started with 3 stars, then changed it to 2. At one point, I felt it deserved 5 stars, yet at the same time, I considered giving it just 1 star.
Profile Image for Sivasankaran.
60 reviews9 followers
July 23, 2021
இந்த புத்தகத்தை பார்த்தால்
வாங்கி விடுங்கள்.
என்றாவது ஒரு நாள், அந்த ஒரு நாளில் முடிக்க வேண்டும் என இதை எடுங்கள்.

இது ஆண், பெண் உறவுகளுக்கிடையே ஆன மனப் பிறழ்வை பேசுகிறாத பேசுகிறார்கள். இதையும் தாண்டி, இது பலருக்கு நம் கதையில் நடக்கும் சிலவற்றை; இப்படித் தான் கடந்திருப்போம் எனவும் யோசிக்க தூண்டும்.

கதையென பார்த்தால், ஒரு வாலிப ஆண், கல்யாணம் ஆகி கணவன் இல்லாத இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறான்!!
கொஞ்சம் பித்தனாகவும் திரிகிறான், அவள் மேலே.

இப்படி, அவன் சொல்வான்: " பணம் சம்பாதிக்கிறதுக்காக எத வேணாலும் செய்யுற பைத்தியம் இருக்கு. ஊரு, காடுன்னு சேக்குற பைத்தியம் இருக்கு. பொட்டச்சிவுளுக்கு விதவிதமா நக வேணும், சில வேணும். ஒருத்தனுக்குச் சாராயம். ஒருத்தனுக்கு பீடி, சிகரெட்டு, எம்.எல்.ஏ ஆவணும். எம்.பி, மந்திரி ஆவணுங்கிற பைத்தியம். நாடு நல்லா இல்லன்னு சொல்ற ரகம். நான்தான் நாட்ட திருத்த போறேன்னு இரயிலுக்கு குண்டு வைக்கிறவன் இருக்கான். சினிமாவுல நடிக்கிறதுதா வாழ்க்க லட்சியம்னு திரியுறவன், நல்ல சினிமா எடுக்கப் போறன்னு சோத்துக்கு இல்லாத அலயுறவன். காதல் தோல்வினு சிகரெட்ட கையில் சுட்டுகிரவனும் இருக்கான். காதலனோட பேர மார்புல பச்சக் குத்திக்குற பொட்டச்சிவளு இருக்கு. சாமி இருக்குனு சொல்ற பைத்தியம் இருக்கு. சாமி இல்லன்னு தீச்சட்டிய ஏந்திகாட்டுற ஆளும் இருக்கு. இப்பிடி ஒலகத்தில இருக்கிற ஒவ்வொருத்தனுக்கும் ஒரு பைத்தியம். இந்த மாரி பைத்தியம் புடிக்காதவன் பொணந்தான். ஒலகமே பைத்தியமாத்தான் இருக்கு.
எனக்குக் கமலா பைத்தியம். "

என சமூகம் கட்டமைத்து வைத்திருக்கிற விடயங்களை தகர்த்து பேசுகிறது, இந்நாவல். இன்னும் சொன்னால், நாவல் முழுக்க காதலில் சிக்குண்டவனின் மனநிலை ஆழமாக பதிகிறது. யாருக்கு காதல் வரலாம், யார் மீது காதல் வரலாம் போன்ற கட்டுபாடுகள் எல்லாவற்றையும் தகர்த்து காதல் மட்டுமே என பயணிக்கிறது நாவல். கேள்வியையும் முன்னிறுத்துகிறது.
இது பல பேருடைய ரகசியத்தை பேசும்,, பேச்சு மொழியாக. ஏனென்றால், நாவல் முழுக்க பேச்சு, பேச்சு; மன ஓட்டம், மன ஓட்டம் என தான் போகிறது. இது, பல வகையில் பலம் சேர்க்கிறது.

முக்கிய கதாபாத்திரமாக இருப்பது, விநாயகம் என்னும் கதாபாத்திரத்தின் மன ஒட்டங்களே. அவளின் உடம்பு, பேச்சு, பாவனை, செயல், பதற்றம், வெறுமை, சிரிப்பு, காதல், காமம், கொண்டாட்டம், தவிப்பு என எல்லாவற்றையும் தன் பேச்சிலையே நம்மையும் கமலாவோடு பயண��க்க இழுத்துக் கொண்டு செல்கிறான்.

கண்டிப்பாக வாசிக்கவும்.
This entire review has been hidden because of spoilers.
22 reviews2 followers
September 18, 2021
எங் கதெ - இமையம்
⠀⠀
தற்போதைய எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர் இமையம் அவருடைய மற்ற கதைகளிலிருந்து எங்கதெ சற்று மாறுப்பட்ட நடையில் எழுதப்���ட்டுள்ளது பல ஆழமான வரிகளையும் உணர்வுகளையும் அடக்கியுள்ளது நாவல்.

விநாயகம் வேலையில்லா பட்டதாரி அப்போது கணவனை இழந்த கமலா தன் இரு பென் பிள்ளைகளுடன் கிராமத்திற்கு வருகிறாள் அவள் மீது காதல் கொள்கிறேன் விநாயகம். பத்து ஆண்டுகளுக்கு மேல் இருவரும் உறவில் இருக்கிறார்கள் ஒர் நாள் கமலாவுக்கு கடலூர்க்கு பணி மாற்று வருகிறது பின்பு இவர்களின் உறவு என்னவாயிற்று என்பதை கதை.
⠀⠀
ஆண் பெண் உறவு பொதுவாகவை சிக்கலானது அந்த உறவு சிக்கலில் தான் கதை பயணிக்கிறது.விநாயகதின் பார்வையில் கதை சொல்லப்பட்டுள்ளது ஆனால் கமலாவுக்கும் சேர்த்தே விநாயகம் பேசுகிறான்.
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews19 followers
February 8, 2020
கமலா, புருசனை இழந்தவள். புருசன் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும்போது மரணமடைந்ததால், அவளுக்கு கருண அடிப்படையில் அராசங்க வேலை தேடி வருகிறது. தனது இரு மகள்களுடன் அரசாங்க வேலையில் சேர கமலா வேலை செய்ய போற இடத்துக்கே இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு வருகிறாள். வசிகரிக்கும் தோற்றம் கொண்டவள் கமலா, இளம் வயதில் கனவனை இழந்தவள். அந்த ஊரில் உள்ள விநாயகம், இவள் மீது காதல்கொள்கிறான். இவர்களின் வாழ்க்கையில் அடுத்த பத்து வருடங்களில் நடந்த நிகழ்வுகளே என் கதெ. -கலைச்செல்வன் செல்வராஜ்.

எங் கதெ நாவலில் இருந்த சில உண்மை வரிகள்,

வெதக்கிற அன்னிக்கிக் காட்டுக்குப் போவன். அப்பறம் அறுக்கிற அன்னிக்கித்தான் போவன். மத்த நாளுல எங் காலு காட்டுல படாது. மீறிப் பட்டாலும் ‘படிச்ச புள்ள வெயிலுல வதங்கலாமா. போடா ஊட்டுக்கு’ன்னு எங்கப்பா, அம்மா அனுப்பிடுவாங்க. அவுங்க மறந்தாலும் என்னோட மூணு தங்கச்சியும் வுடாதுங்க. ‘ஊட்டுக்குப் போண்ணா’ன்னு தொரத்திடுங்க.

எங்கம்மா என்னோட ஜாதக நோட்ட எடுத்துக்கிட்டு ஒவ்வொரு ஊரா ஜோசியக்காரனப் பாக்கப் போச்சி. அலஞ்சிச்சி. ஒவ்வொரு ஊரு ஜோசியக்காரனும் ‘இந்த ஜாதகம் ஏ-ஒன் ஜாதகம், கொடிகட்டி வாழ்வாரு. ஈசன் நெனச்சாலும் வர்ற தையில இவருக்கு நடக்கிற கல்யாணத்த நிறுத்த முடியாது. கொணத்தில தங்கம்னு சொல்ற மாரிதான் பொண்ணு அமையும். ஆசக்கி ஒரு பொட்டப் புள்ளெயும் ஆஸ்திக்கு ரெண்டு ஆம்பள புள்ளெயும் பொறக்கும். நான் சொல்றது நடக்குதா இல்லியான்னு பாரு’ன்னு சத்தியம் செய்யாம இல்லெ. ஜோசியக்கானுவுள நம்பிக்கிட்டு எங்கம்மாவும் ஜாதக நோட்டத் தங்கம்போல சொமந்துக்கிட்டுத் திரிஞ்சிச்சி. தம்பிக்கித் தாழ்வாரத்திலதான் படுக்கணுமின்னு தலயில எழுதியிருக்குன்னு அதுக்குத் தெரியில. கடசியில எங்கம்மாவும் இந்த மாடு உழவுக்கு ஆவாதின்னு வுட்டுடுச்சி.

எங்க ஊருல இருந்த எல்லா ஆம்பளகளுக்கும் கமலாமேல ஆச இருந்துச்சி. பொம்பளகளுக்குப் பொறாமை இருந்துச்சி. அவ ஒடம்பு வாட்டத்து மேல, அவ ஒடம்போட நெறத்துமேல, மொக வாட்டத்துமேல. மொகந்தான் அவளுக்கு செத்தா இருந்துச்சி.

‘ஆம்பள மயக்கி’. இதான் எங்க ஊருல கமலாவுக்குப் பேரு.

ரொம்ப சந்தோசமா இருந்தா “இன்னிக்கி என்னா என் கன்னுக்குட்டி ரொம்பத் துள்ளுது”ன்னு சொல்லிச் சிரிப்பா. இல்லன்னா “என்னா இன்னிக்கி என்னோட கன்னுக்குட்டி துள்ளாம படுத்துக்கிச்சின்னு?” சொல்லிச் சிரிப்பா. அது சிரிப்பில்ல. காவு கொடுக்கப் போற ஆட்டுக்குத் தலயில தண்ணி தெளிப்பாங்க இல்லெ, அந்த மாரி. நான்தான் தானா போயி தலயக் கொடுத்தன். சாமி கெடா மாரி. அப்ப அவ எனக்குச் சாமிதான். குலச் சாமி.

மண் புழுவால நெளியத்தான முடியும்? சீற முடியாதுல்ல?

பணம்ங்கிற சாமி அவகிட்டெ இருந்துச்சி. அந்தச் சாமியால முடியாதது ஒலகத்தில என்ன இருக்கு?

“நானே மனசு வறண்டுபோயி கெடக்குறன். கட்டுனவன் எங்கூட இருந்தா நான் எதுக்கு ஒங்கிட்டயெல்லாம் தேவிடியா பட்டம் வாங்கப்போறன்? என்னெ யாருமே புரிஞ்சிக்க மாட்டன்ங்குறாங்க. ஏன் எல்லாரும் என்னெ சாவ அடிக்கிறீங்க? இந்தக் குட்டிங்க ரெண்டும் இல்லன்னா நான் என்னிக்கோ செத்துப்போயிருப்பன். தாலி கட்டுன புருசனா இருந்தா பத்து நாளா என்னெ வந்து பாக்காம இருப்பானா? என்னெ வெட்டிப்போட்டாலும் அன்னிக்கே செஞ்சியிருப்பனில்ல.”

காதல். புருசன். பொண்டாட்டி. புள்ளெ. எல்லாம் பொய். சும்மா. நாடகம். ஏமாத்துறது. நடிப்பு. உண்மையில்ல. எதுவும் நிசமில்லெ. காரியத்துக்கான நடிப்பு. கொடுக்கிறது. வாங்கறது. வியாபாரம்.

பொம்பளங்க வைக்கிற பூவெல்லாம் பூத்ததும் கொட்டிப்போறதுதான? காயா ஆவாமா. பழமா ஆவாம.

ஊருலயிருந்த ஏழு அய்யர் ஊடும் ஒங்வொண்ணா மெட்ராசுக்குப் போயிடிச்சி. அய்யர்களோட புள்ளைங்க எல்லாம் அமெரிக்கா, கனடான்னு போயிட்டாங்க. பாப்பாத்தித் தோட்டத்துக்குப் போனா, அய்யர் தெருவுல நடந்தா ‘என்னா எனம்’ன்னு அய்யர்வுகளும் சரி, அவுங்க பொண்டாட்டிவுளும் சரி கேக்காம இருக்க மாட்டாங்க. மெட்ராசில, அமெரிக்காவுல, கனடாவுல அப்பிடிக் கேப்பாங்களான்னு தெரியல.

“புடிச்சவன் எளங் கன்னுக்குட்டியா பாத்துப் புடிக்க வேண்டியதுதான? எதுக்காக ரெண்டு கன்னு உள்ள மாட்டெப் புடிச்சான்?”னும், “அந்தக் குளத்திலெ ஏற்கெனவே ஒருத்தன் குளிச்சி மொழுவிவிட்டுப் போயிருக்கான்”னும், “அது வெடிச்சிப்போன வெள்ளரிப் பழமாச்சே”ன்னும், “அது ஏற்கனவே அடிப்பட்ட சொம்பாச்சே”ன்னும் இப்பிடி பலதும் பேசுனாங்க. கேலி செஞ்சாங்க ஊருல. கமலாவுக்கும் எனக்கும் பழக்கமான ஆரம்பத்தில.

பக்கத்து அறையில வயசுக்கு வந்த ரெண்டு புள்ளைங்க படுத்திருக்கு. நான் அவுங்க அப்பன் இல்லெ. அவங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு ஆளு அவங்கம்மாகூடப் படுத்திருக்கான். அதெ அந்தப் புள்ளெங்க தாங்கல? எவ்வளவு பெரிய மனசு. கடல விடப் பெருசு.

-இமயம்

Profile Image for Alamelu  Janaki.
13 reviews
April 12, 2023
Though Imayam is my favourite writer, I am not sure if I like this novella. En katha, is about a guy’s obsession with a young widow, kamala for 10 years. They are into a non-committal relationship. Through his misogynistic rants, we understand Kamala, otherwise her feelings and comprehension about this relationship is abstruse. He is basically, a good for nothing guy without a job and doesn’t incline towards anything productive. Kamala is educated and works in a government school, she has two daughters. He does all the errands and caters to Kamala’s needs 24/7. As she progresses in her career and life, he is stunted. He is recklessly entangled in her. The delusion and obsession he has for her, makes her a fascinating character, but her side of the story is muddled.
There are numerous questions that goes unanswered or unattended to. Still it pushed me to know what is next. The climax calmed me down, as I travelled with rage across the pages to get some sense about the entirety of their relationship.
Profile Image for Dinesh.
128 reviews9 followers
April 8, 2022
கணவனை இழந்த இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான பெண்ணிற்கும், திருமணமாகாத ஆணிற்கும் இடையில் உறவு ஏற்படுகிறது.

கதை பெரும்பாலும் ஆணின் மனம் போராட்டங்களை சுற்றியே நிகழ்கிறது. கதையில் எந்த திருப்பங்களும் இல்லை பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கதையின் முடிவு கூட சுலபமாக கணிக்கக் கூடிய வகையில் உள்ளது.

இருப்பினும் ஆர்வத்தை குன்றச் செய்யாமல் பயணிக்கிறது கதை. கொச்சைத் தமிழில் இந்நாவல் அமைத்திருப்பது பொருத்தமாக உள்ளது.
Profile Image for Marudhamuthu.
68 reviews13 followers
October 27, 2022
என் ex-love ல நான் correct அ நடந்துகிட்டேனா அப்படின்ற கேள்வி இந்த நாவல் நெடு�� எனக்குள்ள ஒடிட்டுஇருஞ்சு. சில எடங்கள்ள என்னையும் மீறி அழுதேன். விநாயகத்துக்காக இல்ல கமலாவுக்காக. இங்க இருக்க எல்லா ஆண்களும் அவங்க வாழ்கையோட ஏதோ ஒரு நிலைல விநாயகமா இருந்து கமலாகல கஷ்டபடுத்திகிட்டு தான் இருக்கோம்.
Profile Image for Univer Sun.
10 reviews1 follower
October 16, 2023
விநாயகம் என்னும் கதாநாயகன் அவனது எண்ணங்களை புலம்பும் புத்தகம்.
பிறர் மனதை வாசிப்பது (Mind reading) வரம் அல்ல சாபம் என் உணர்த்தியது இந்த புத்தகம்.

இது எங்கதெ, என்கதெ மட்டுமில்ல கமலாவோட கதையும் தான் என ஆரம்பிக்கும் புத்தகத்தில் கமலா வருகிறாளே ஒழிய அவள் கதையோ அவளது கண்ணோட்டமோ எங்கும் வரவில்லை.

கமலா இப்படிபட்டவள் என ஆரம்பத்திலேயே முடிவு செய்யும் விநாயகம் அவளுக்கு அதை தவிர வேறு குணாதிசயம் தரவிரும்பாமல் நமக்கும் அதை காட்ட தவிர்க்கிறார்.
அன்பான தாய், படித்த பிள்ளை எதற்கு வயலில் வேலை செய்ய வேண்டும் என் வீட்டிற்கு அனுப்பும் தந்தை, குழந்தையை போல பார்த்துக்கொள்ளும் அன்பான மூன்று சகோதரியின் நல்ல வீடு, வாசல், உணவு, மாடுகள், பண்ணை என இருக்கும் வினாயகத்திரு இவை எவற்றின் அருமையும் புரியாத ஒரு டிபிகல் ஸ்பொய்ல்ட் கிட் (typical spoiled kid) ஆக வளம் வருகிறார்.

Hell is the mind of a misogynistic, entitled man, என்பதே விநாயகம் மீதான என் கருத்து. ஒரு நடமாடும் red flag.

ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்பர் இவருக்கு மட்டும் மோகம் 3650 நாட்கள் இருந்தது.
வேலைக்கும் செல்லாமல், வீட்டிற்கும் உதவாமல், பெற்றோரயும் மதிக்காமல், விதவை பெண் பின் அலையும் விநாயகம், அது காதல் என்றால் ஏன் அவளை திருமணம் முடிக்கவில்லை? ஜாதி குறுக்கே நின்றது காரணம் இல்லை எனில் ஏன் 10 வருடம் அழக்கழிப்பு ? 10 வருட முடிவிலும் எதுவும் செய்யவில்லை அது வேறு.

தங்கை பிள்ளைகள் பொங்கல் இனாம் கேட்கும் போது பையில் வேலைக்கு செல்லாததால் பணம் இல்லாத போது வராத வெட்கம், கமலாவின் கேள்விகளால் ஏன் வருகிறது?

தங்கை பிள்ளைகள் பொங்கல் இனாம் கொடுக்க தாயும், தங்கையினரும் வைத்த பணத்தை கொண்டு தனக்கென ஒரு புது செல்ஃபோன் வாங்கியது மட்டுமின்றி அதை கோவம் வந்த உடன் உடைத்த விநாயகத்தின் மனதில் சந்தேகம், "ஏன் கமலா தூக்கி ஏறியும் அவளது செல்ஃபோன் மட்டும் உடைவதில்லை ? அது மட்டும் இரும்பில் செய்தது போல" என்று.
பதில் எனக்கு தெரியும், அது ஏனெனில் கமலாவின் செல்ஃபோன் அவளது சொந்த உழைப்பில் வந்த பணத்தால் வாங்கிய செல்ஃபோன் என்பதால் அதன் அருமை அறிந்து அதை கோவத்திலும் மெதுவாக ஏறிவாள். உழைப்பின்றி வந்த பணத்தின் அருமை தெரியாத விநாயகம் 7, 8 செல்போன்களை உடைக்கத்தான் செய்வான்.

கதையின் துவக்கத்தில் இருந்து இறுதி வரை புலம்ப மட்டுமே செய்யும் கதாநாயகன் இறுதியில் மட்டும் ஞானோதயம் பெறுவது ஆச்சர்யம். ஆனால் அதற்கும் நான் ஒரு கோட்பாடு வைத்துள்ளேன், இறுதியில் கமலாவின் கழுத்தை அறுக்க செல்லும்போது ஒருவேளை விஷம் அறுந்தியும் பிழைத்துக் கொண்டால், சிறையில் எப்போதும் மூன்று வேலையும் தேடி வந்து அம்மாவை போல உணவு யாரும் தர மாட்டார்கள் என்ற தெளிவே அது.

இந்த விமர்சனத்தை படிப்பவர்கள் நான் ஒரு அந்நியாய பெண்ணியவாதி என எண்ணலாம் ஆனால் இக்கதையை வாசித்தால் அது ஏன் என உணர்வர். ஒரு ஆணாக மட்டுமல்ல ஒரு மகன், அண்ணன், நண்பன், மாமா, சித்தப்பா, ஏன் ? ஒரு நல்ல மனிதனாக இருக்க கூட கதாநாயகன் தவறியிருப்பான் என.

தன் சகோதரிகள் கமலாவின் வீட்டில் சென்று எங்க அண்ணனுக்கு ஒரு புள்ள பெத்து குடு என தகராறு செய்யும் போது அவர்களுக்கும் இவர்கள் இருவரும் திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை என நன்றாக தெரிந்தாலும், அவர்கள் செய்ததை நினைத்து விநாயகமும் பெரிதாக கவலை கொல்வதாக தெரியவில்லை.

கமலாவே வாய்திறந்து விநாயகம் வேலைக்கு சென்றால் ஒரு பொருளாதார பாதுகாப்பு (financial security) இருக்கும் என கூறியும் அதற்காக எதுவும் செய்யவில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் அன்பைவிட வெறுப்பையே கமலா மீது அதிகமாக காட்டுகிறார் விநாயகம். பெண்கள் மீது அதிக வெறுப்பை மட்டும் காட்டும் இந்த கதை ஏன் ஒரு இடத்திலும் கமலாவின் கதையை அவள் மூலமாக காட்டவில்லை ?

கமலா தன் கணவன் இறந்ததால் தான் இந்த ஊருக்கு வருகிறாள், தனக்கும் சம்பாதித்து தன் இரு மகள்களையும் வளர்க்கும் பொறுப்பை சுமக்கும் ஒரு பெண் தைரியமாக தான் இருத்தல் வேண்டும் ஆனால் அந்த துணிச்சலான குணமே கதை முழுவதும் விமர்சிக்க படுவது முகம் சுழிக்க வைக்கிறது.

"கிழவனாயிருந்தாலும் அவுரு ஆம்பள. இவ பொட்டச்சிதான? புத்தி இருக்க வாண்டாம்? என்னாத்த படிச்சாளோ? இவளுக் கெல்லாம் அரசாங்கம் வேல கொடுத்திருக்கு பாரு." - என வரும் வரிகள் ஆணாதிக்கத்தை விமர்சிக்கிறதா அல்லது யதார்த்தமான சூழலை காட்டுகிறதா என தெளிவு செய்யாதது இந்த புத்தகம் தனது கருத்தை சரிவர உணர்த்த தவறுகிரது என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது.

புத்தகத்தின் கடைசி 10 பக்கங்களில் உள்ள சுவாரசியம் மற்ற பக்கங்களில் வர தவறுகிறது. கதை முழுவதும் தவறுகள் மட்டுமே செய்து இறுதியில் குடி போதையில் மனம் மாறும் ஒருவனை பற்றி எழுதும் கதை எவ்வகையில் உசிதம் என நான் அறியேன்.

கதை அமைந்திருக்கும் முறை உண்மையில் ஒருவரின் புலம்பலை அருகில் இருந்து கேட்டது போன்ற அனுபவம் தந்தது. ஆங்காங்கே ஒரு வரி உவமைகள் வருவது அழகு.
கிராமத்தை அழகுற கண்ணெதிரே நிறுத்தும் ஆசிரியர் இமையம், இது போன்ற கதாபாத்திரத்தை கதாநாயகனாக இயற்ற வேண்டிய காரணத்தை சரியாக உணர்த்தவில்லை.
Profile Image for Hema.
129 reviews16 followers
April 18, 2025
Book Content Trigger Warnings: Physical abuse, suicidal thoughts, murderous thoughts

This is a book about the period in the protagonist, Vinayagam’s life, where he was obsessed with a woman. The author presents Vinayagam’s story in stream-of-consciousness format.

At the start of Vinayagam’s love story, he is 33 years old, unmarried, educated but has no interest in a career or job or anything, and he meets Kamala, a 28-year-old, beautiful woman working as a clerk and a widow with two children. Many families in Vinayagam's area look up to her and send their kids for tuition and men are enamored.

Slowly Kamala becomes Vinayagam’s world, his only thought and his obsession. He forgets his career, his family, and any responsibility towards them and the community. She is his priority, and he likes to be at her beck and call. Kamala does not seem to be as emotionally available as he expects. She is financially stable, takes care of her children, and takes care of her family and her in-laws' family business. They both have mutual desire, and she seems to expect nothing more and nothing less. And he does not seem to want anything monetary but wants to be treated like a husband even though they do not seem to have considered marriage. When the one-time marriage comes up in discussion, he says she will stop getting her husband’s pension money if she remarries. He seems to shy away from any kind of responsibility, and it is difficult to like him. And he always thinks she has an affair. He keeps insulting her, hits her horribly once and at last wants to kill her. What happens then is the rest of the story. At that point, I could not stop reading as I wanted to see if Kamala was safe.

This kind of obsession is terrifying. I think he liked feeling special that he was the chosen one for the affections of a beautiful woman and a woman who is looked up to by the people surrounding him. So, when he sees there could be other men, he loses it. He is insecure, feels inferior, knows exactly what he is losing, what he ought to do to solve it, and he is capable, but never wants to do anything. He is frustrating to read about.

Ultimately, the protagonist’s expectations and single-minded obsession are responsible for his detachment from his family, friends, and community and his downfall in the eyes of others. To me, this feels like a cautionary tale of letting an obsession consume you, blind you and the absurdity of it all.

This is a 150-page novella. But within those short number of pages, we get to read about a whole village, different characters, and their mentality. Though I would have liked a few more words about how violence is not the answer. Because we got at least 10 chapters of terror. I appreciate how Kamala's character was used in narration(not sure about technical words). In protagonist's relationship, she is basically emotionally unavailable and just uses Vinayagam for desire and running errands. She could have been made unlikeable and a villain by the author to elicit sympathy for Vinayagam but we are given enough information about her to like her and even want to learn more of her thoughts. As someone else here described her, she is an enigma here. I also loved the usage of regional dialect that helps readers connect to the place and its people. I am looking forward to reading other works by the author.
Profile Image for Prakash Ravichandran.
6 reviews
January 16, 2025
இந்த ஆண்டின் முதல் வாசிப்பு எழுத்தாளர் இமயம் எழுதிய "எங் கதெ" என்ற குறுநாவல் தான். விநாயகம் என்ற ஆணின் வாழ்வில் 10 வருடம் நடக்கும் சம்பவங்களே இந்த நாவலின் கதையாகும் இந்த கதை என் மாவட்டமான கடலூரின் ஒரு எல்லையில் தொடங்கி பின் கடலூரிலேயே முடிகிறது இது தெரிந்து நான் இந்த புத்தகத்தை படிக்கவில்லை கதை போகும் போக்கில் தான் தெரிந்து கொண்டேன் பின் எனக்கு இதில் ஒரு ஆர்வம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.

சிறிய நாவல் தான் 110 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது 


விநாயகம் மற்றும் கமலா இந்த இருவரே கதையின் முக்கிய கதாபாத்திரங்களாகும் விநாயகத்தின் ஊருக்கு அரசு பள்ளியில் கிளர்க்காக வரும் விதவைப் பெண் தான் கமலா அவளின் அழகில் மயங்கி அவளை எப்படியாவது அடைய விநாயகம் முயற்சிக்கிறான் அதில் ஒரு கட்டத்தில் அவன் வெற்றியும் பெறுகிறான் ஆனால் இதுவல்ல இந்த கதையின் கரு.


கதைச்சுருக்கம்:-


விநாயகத்தின் ஊருக்கு அரசு பள்ளிக்கு வேலைக்கு வரும் கமலாவை பார்த்ததும் அவன் பரவசமடைகிறான். அவனுள் அத்தனை நாளாக ஏற்படாத மாற்றங்கள் அப்பொழுது நிகழ்வாக அவன் எண்ணுகிறான் பின் அவளை எப்படியாவது கவர அவள் முன் பல வேலைகளை செய்கிறான். 


விநாயகம் எவ்வளவுதான் கமலாவின் பின்னே நாய் போல் சுற்றினாலும் அவனை அவள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டாள்.

ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பேசிக்கொள்ள ஆரம்பித்த பின் அவனால் அவளுக்கு தேவையான அனைத்து காரியங்களையும் இவனை பயன்படுத்தி செய்து கொள்வாள்.

அவளுடன் விநாயகம் நெருக்கமான  நிலையில் கமலாவுக்கு முன் யாரும் தனக்கு முக்கியமில்லை என்ற மனநிலைக்கு விநாயகம் செல்கிறான் அவள் மேல் பைத்தியம் கொள்கிறான் ஒரு கட்டத்தில் கமலாவுக்கு கடலூருக்கு மாற்றம் வருகிறது அவளும் அங்கு செல்கிறாள் இவனும் அங்கு இங்கு சென்று அவளுக்கு தேவையான உதவிகளையும் செய்கிறான் இப்படியே நாட்கள் செல்கின்றன ஒரு கட்டத்தில் கமலா விநாயகத்தை தவிர்க்கிறாள் இதை தாங்கிக் கொள்ள முடியாத விநாயகம் கோபம் கொள்கிறான் அவளுடன் சண்டை இடுகிறான் அப்பொழுதும் ஒரு சில நேரத்தில் விநாயகத்தை கமலா தவிர்க்கிறாள் அதற்கு காரணம் புரியாமல் இவன் குழம்பி போகிறான் அதன் பின் நடக்கும் சம்பவங்களை இக்கதையின் கரு என்ன என்பதை நமக்கு உணர்த்துகிறது...!

-----------------------------------------------------

இந்தக் கதையில் ஆண் பெண் இரு பாலினத்தவரின் உணர்ச்சிகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்ற ஒரு கருவை எழுத்தாளர் நன்கு எழுதியிருக்கிறார். கோபத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் நிதானம் தான் எப்போதும் சரியான முடிவை கொடுக்கும் என கூறியிருக்கிறார் பெண்கள் காமத்திற்காக மட்டுமே பயன்படுத்தும் பொருட்கள் அல்ல பெண்களுக்கும் உணர்வுகள் உள்ளன அவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான் என்று மிக அழுத்தமாக கூறியிருக்கிறார். ஒரு பெண் தனித்து வாழ்ந்தால் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க நேரிடும் என்று தெளிவாக இக்கதையின் மூலம் கூறியுள்ளார். 


பெண்களை வதைப்பது என்பது மிகவும் தவறு ஆண்கள் எளிதில் பெண்களின் மேல் வன்முறையை கையாளுகின்றனர் என்பதையும் அது ஒரு கட்டத்தில் எந்த எல்லை வரை செல்லும் என்பதையும் மிக நன்றாக கூறி இருந்தார்.


இந்த கதையின் இறுதி கட்டம் என்னவாகும் என்ற விறுவிறுப்பை கொடுத்தாலும் கதை முடிந்த பிறகு நமக்குள் ஏதோ ஒரு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.


இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்தது எனது ஊரின் வழக்கு மொழியில் உரையாடல் பகுதியை மிக அழகாக எழுதியிருந்தார் எழுத்தாளர் இதனால் இக்கதையுடன் நான் மிகவும் ஒன்றில் போய் விட்டேன்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Prateeksha.
188 reviews2 followers
July 21, 2025
தூண்டுதல் எச்சரிக்கை: இந்தப் புத்தகம் உங்கள் இரத்தத்தைக் கொதிக்க வைக்கும், உங்கள் இதயத்தைத் துடிக்க வைக்கும் மற்றும் உங்கள் சதையை எரிக்கும்.

எங் கதெ ஒரு பெண்ணின் மீதான பைத்தியக்காரத்தனத்தைக் பற்றியது. ஒரு காதல், இல்லை எதன் மீதும் உள்ள வெறி, ஒரு நபரை எப்படி ஒன்றுமில்லாதவராக மாற்றுகிறது என்பதை இது காட்டுகிறது. கமலா ஒரு விதவை மற்றும் தனது 2 மகள்களுக்கு ஒற்றைப் பெற்றோராக உள்ளார். அவள் ஆரம்பத்தில் ஒரு பஞ்சாயத்து பள்ளியில் நிர்வாகியாக பணிபுரிகிறாள். இது நம் கதாநாயகன் விநாயகம் கதையின் திருப்புமுனை. திருமண வயதை தாண்டிவிட்டாலும் விநாயகம் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவன் வேலையில்லாமல் இருந்தாலும், அவன் தன் பெற்றோருக்கு வயலில் உதவ மாட்டான். அடிப்படையில், அவன் ஒரு நோக்கமற்ற வாழ்க்கையை வாழ்கிறான். கமலாவை சந்தித்தவுடன் காதல் அவனைத் தட்டுகிறது. காதல் என்பது ஒரு சிக்கலான அம்சம், கமலா மற்றும் விநாயகத்தின் விஷயத்திலும் அது அவர்களின் குடும்பம் மற்றும் சமூகத்தின் காரணமாக மேலும் சிக்கலாக்குகிறது.
காதல், ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்து மாறுபடும். உண்மையில் நாம் அன்பை எந்தக் கட்டமைப்பின் கீழும் கொண்டு வர முடியாது. நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு அனுபவத்திலும் அது நம்முடன் சேர்ந்து வளர்கிறது. ஆனால் இதை மக்கள் அரிதாகவே புரிந்துகொள்கிறார்கள். அன்பு என்றால் சொந்தமாக்குவது என்று நம்மில் பலர் நினைக்கிறோம். இதன் காரணமாக நாம் எப்போதும் வாழ்க்கைத் துணையை விட உரிமையாளராகவே செயல்படுகிறோம். இது விநாயகத்தின் கதை. காதல், காமம் பற்றிய அவரது பார்வையும், கமலா மீதான அவரது வெறி அவரை ஒரு மிருகமாக எவ்வாறு மாற்றுகிறது என்பதும்.
இது கமலாவின் வலி, சிரமங்கள் மற்றும் உணர்ச்சிகளைப் பற்றி அரிதாகவே பேசுகிறது, இது எந்த வகையான கதையையும், குறிப்பாக காதல் கதையை சித்தரிப்பது தவறான வழியாகும். எனக்கு இந்தப் புத்தகம் பிடிக்காததற்கு அதுதான் முக்கியக் காரணம். இந்த ஆசிரியரின் புத்தகத்தை மீண்டும் தேர்ந்தெடுப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பெண்கள் குறித்த அவரது பார்வையை அறிய ஆர்வமாக உள்ளேன்.
Profile Image for Sangamithra.
58 reviews26 followers
April 19, 2022
முதல் பக்கம் ஆரம்பித்து கடைசி பக்கம் வரை கதாநாயகனே கதையைச் சொல்லிச் செல்கிறான். உரையாடல்  வடிவம் போல கதை நகரவில்லை. எந்த வேலைக்கும் போகாத கதாநாயகன், கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழும் கதாநாயகி கமலா இவர்களுக்குள் நடக்கும் காதல், இரகசிய சந்திப்புகள், கல்யாணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை இவையே கதைக்களம்.
கமலாவை திமிர் பிடித்தவளாகவே காட்ட முயற்சிப்பதும், கதாநாயகன் எவ்வளவு மனஸ்தாபம் வந்தாலும் திரும்பவும் கமலாவிடம் போய்ச் சேரும் ஒரு நபர் எனவும் காட்டியிருப்பதுமே கதை முழுவதும் நிரம்பி இருந்தன. சில வார்த்தைகள், ஒரே மாதிரியான பொருள் தரும் காட்சிகள் திரும்பத் திரும்ப வரிக்கு வரி பத்திக்குப் பத்தி வந்து பெரும் சலிப்பை ஏற்படுத்தின. ஒரு நீண்ட புலம்பல் போலவே இக்கதை இருந்தது.
இக்கதைக்களம்  மூலம் ஒரு கருத்தை வாசிப்பவர் மனதில் விட்டுச் சென்றிருக்க முடியும். விதவை வாழ்க்கை, இரண்டாம் கல்யாணம், இதன் மீதான சமூகத்தின் பார்வை இவற்றை எல்லாம் இன்னமும் அழகாக எடுத்துக் கூறி இருக்கலாம். ஆனால் அப்படி ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த இக்கதை தவறியுள்ளது என்பதே என் எண்ணம். 
Profile Image for ishhreads.
226 reviews15 followers
January 27, 2025
“கண்ணீருல பொம்பள கண்ணீரு, ஆம்பள கண்ணீருன்னு இருக்கா? வலியில பொம்பள வலி, ஆம்பள வலின்னு இருக்கா? ஆனா ஒலகம் அப்படித்தான் சொல்லுது. தனக்கு வந்தா சோகம். கவல. துயரம். அதே மத்தவங்களுக்கு வந்தா வெறும் சும்மா. காத்துப்போல.”

எங்கதெ - இமையம் அவர்கள் எழுதிய புத்தகம்.  விநாயகம் என்ற இளைஞன், தன் 10து வருட கதையை அவன் povல் அமைந்த கதை இது. அவன் வேலைக்கு போகலை, அவன் சித்திப்பா மகன் அம்பலவாணன் STD  கடையில் குந்தி இருந்தான். கமலா, ஒரு விதவை பெண் அவலுக்கு இரு மகள்கள். விநாயகன் ஊர்க்கு கிளர்க்கு வேலைக்கு குடிபெயர்ந்துள்ளார். 

ஒரு ஆண் எப்படி காதல் வலையில் சிக்கி, அவன் எவ்வளவு தூரம் பயித்தியம் அடைந்து இருக்கிறான் என்பதை இந்த கதை சொல்கிறது. அவன் எப்படி யோசிக்கிறான். கதை எனக்கு பெருச பிடிக்கல ஆனா எழுத்தாளர் ஒரு திரில்லர் கதையை எப்படி எழுதுவாங்களோ அது மாதிரி தன் இந்த கதையை எழுதி இருக்கிறார். இவனை மாதிரி ஒரு ஆள் என்னுடைய வாழ்க்கையில் real ஆ பார்த்து இருக்கிறேன். இப்படியும் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிறைய வேறுபாடு இருக்கிறது. விநாயகன் ஓட அந்த thought process கண்டிப்பாக நமக்கு கோவத்தைத் தான் தரும். 

எழுத்தாளர் one pov-வில் எழுதி இருக்கிறார். எனக்கு multiple pov வில் எழுதி இருந்த இன்னும் சுவராஸயிமா இருந்திருக்கும். ஆனால், இந்த மாதிரி ஒரு pov la நான் படித்தது இல்லை. இந்த கதை எல்லோருக்கும் பிடிக்காது. 
20 reviews1 follower
May 2, 2021
எங் கதே : இமையம் (அண்ணாமலை)

இமையம் அவர்கள் தற்கால எழுத்தாளர்களில் மிகச்சிறந்த எழுத்தாளராக விளங்குகிறார். 43 வயதில் உள்ள ஒரு ஆண்மகன் தன் பத்து வருட கதையை சொல்வதே 'எங் கதே' . கடலூர் பேச்சு வழக்கு நடையில் முழு நாவலையும் எழுதி உள்ளார். திருமண உறவில் இல்லாத ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் வாழ்க்கையின் ஆசை, வலி, கோபம், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் என்று அனைத்து உணர்ச்சிகளையும் ஒரு ஆணின் பார்வையிலிருந்து சொல்லி இருப்பது அருமை. உரிமையில்லா உறவின் போராட்டத்தை , வரம்பு மீறிய வாழ்க்கையின் எண்ண ஓட்டத்தையும், சமூகம் அங்கீகரிக்க தயங்கும் வாழ்க்கை முறையையும் மிக அழகாக படம் பிடித்து காட்டுகிறார்.. இந்த கதையை படித்தேன் என்று சொல்வதை விட கதையில் பயணித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். இவரின் சாஹித்ய அகாடமி விருது பெற்ற செல்லாத பணம் நிச்சயமாக மிக விரைவில் படிக்கப்படும். உணர்வுபூர்ணமான இந்த கதையை நிச்சயமாக வாசியுங்கள்.
Profile Image for சலூன் கடைக்காரன் .
44 reviews2 followers
December 15, 2023
இக்கதை முழுவதும் கமலாவே நிறைந்து இருக்கிறாள் ஆனால் இக்கதையை அவள் சொல்லவில்லை. அவள் சொல்லி இருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கலாம். ஆசிரியராய் இருந்த கணவன் இறந்து விட்டதால் கிடைக்கும் வேலையில் சேர்வதற்காக தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு ஒரு கிராமத்தில் வந்து குடியேறுகிறார் கமலா. அந்த ஊரில் படித்து விட்டு வேலைக்கு போகாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கும் கமலாவுக்கும் உறவாகி விடுகிறது. நம் ஒன்றாக இருக்கும் போது மட்டுமே கணவன் மனைவி மற்ற நேரங்களில் ரோட்டில் போகும் ஆயிரம் பேர்கள் நீயும் ஒருவன் என்று சொல்லும் கமலா கடைசிவரை அப்படியே இருக்கிறாள்.
ஆனால் அவனால் அப்படி இருக்க முடியவில்லை.
ஊரில் துணி வெளுப்பவரை அனைவரும் வண்ணான் என்று அழைக்கும் போது கமலா மட்டும் வெங்கடேசன் என்று பெயர் சொல்லி அழைக்கிறாள். ஒரு கிராமத்தையும் அங்குள்ள மக்களையும் அவர்களின் பழக்க வழக்கங்களையும் மிக எதார்த்தமாக பதிவு செய்துள்ளார் எழுத்தாளர்.
Displaying 1 - 30 of 49 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.