பழையபுத்த கடைகளின் உலகையும் அங்கே கிடைத்த அரிய நூல்களையும் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே வீடில்லாப் புத்தகங்கள். தி இந்து தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி பரந்த வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்றவை இக்கட்டுரைகள்
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
நூலின் பெயர்க்கு ஏற்றார்ப்போல் நாம் அறிந்திராத பல அரிய புத்தகங்களை அறிமுகம் செய்துவைக்கிறது இந்நூல். இந்த நூலின் மூலம் குறைந்தது 170 புத்தங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருக்கு முதற்கண் நன்றி. முக்கியம் என்னவெனில் இப்புத்தங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு துறைகளில் இருந்து இருக்கின்றன. ஆதலால் நாம் பல துறைகளில் ஆழந்த அறிவு வளர்த்துக்கொள்ள இவை மிக சிறந்த வாசலாக அமைகின்றது. மேலும் எழுத்தாளர் நமக்கு அந்தந்த புத்தகத்தை பற்றியும் எழுத்தாளர் பற்றியும் விரிவாகவும் சுருக்கமாகவும் ஒரு சித்தரத்தை கூறுகிறார் அல்லது அவர்களை பற்றிய நல்ல ஒரு அறிமுக புத்தகத்தை பரிந்துரை செய்கிறார். இது புதிதாய் வாசிக்க கூடியவர்களுக்கு அந்த எழுத்தாளனின் படைப்புகளை உள்வாங்கிக்கொள்ள ஏதுவாக இருக்கும். பல படைப்புகளுக்கு தமிழாக்கத்தையும் கூறப்படுகிறது. இவற்றில் 50 புத்தகங்கள் web.archive.org போன்ற தளங்களில் pdf வடிவிலேயே கிடைக்கின்றன.
I have listed down the various areas (on essay wise) on which this book covers upon 1 Old Bookshop / Moore Markets / Platform Book shops etc 2 Building Library, Readings books to blind people, kids. Also about Madras Education System that was implemented in UK 3 Relationship with books, Memories with books 4 Books on Travel Experiences. About travelling in India 5 Relationship with old book shop owners 6 Science 7 Short Stories, Vanna nilavan 8 Photographs 9 Tamil Cinema 10 Tipu Sultan Dreams 11 China/Japan's Dragon Art 12 Gulliver Travels / Comics / Kids Books 13 Mahabharatha 14 Russian literature 15 How to teach Tamil to kids in foreign kids 16 Rabindranath Tagore 17 The Wonder that was India - AL Basham 18 About Tamil Drama - Avvai Shanmugam 19 About Plants, Trees - How kids should be part of Nature Tour and involve in plantation of trees 20 About Ne.Thu.Sundaravadivelu who contributed in free education for TN 21 About writer's food habits tastes 22 About Teaching to Kids 23 About writers (Ki.Ra) wife's 24 About a 16yr old boy's observation skills and life lessons 25 Agriculture / Natural / Organic Farming 26 Health Medicine Life - Ayurveda Medicine Vs Allopathy Medicine 27-1 Montessouri Teaching method 27-2 History of Gold and the madness on Gold 28 About good fox / Kids Story 29 Bio War using Insects 30 Books bridging the relationship between grandparents and grandchildren. 31 Indian cinema - Mriunal Sen 32 About Encyclopedia (skip it) 33 About Tribal World. How to tell stories (to kids) 34 Leo Tolstory as Hadji Muraad / Writer's last book/work 35 About Sculptures / Statues / Mahabalipuram 36 About Narikuravaas 37 About Differently abled kids (mainly Cerebral Lapsy) 38 Tamil Nadu - Achievers 39 World cinema 40 How to read a book 41 Detective / Thrillers 42 Pinocchio / KIDS 43 Pierre Loti - Travel experiences in India 44 Pierre Loti - Travel experiences in India (contd) 45 World War 46 Villages 50yrs ago and 100yrs ago 47 Ramanujam 48 India-Pakistan Split 49 About Lighting for Dramas 50 Madhaguru - a swedish novel that won Nobel prize 51 Denied education for Blacks. Impact of disrespect. Upliftment of Blacks through education 52 About Pudumaipithan and his relationship with his wife 53 About Gandhi 54 About Pada-yathras. Walking journeys to temples 55-1 About Writer Mauni 55-2 About struggles of women
புத்தகம் : வீடில்லாப் புத்தகங்கள் எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன் பதிப்பகம் : தி இந்து வெளியீடு பக்கங்கள் : 192
🔆தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த சுழலில், பல்வேறு மாற்றங்களையும் / முன்னேற்றங்களையும் நாம் அடைந்திருக்கிறோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை . அதே சமயம் வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது என்னும் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை .
🔆“வீடில்லாப் புத்தகங்கள் “ என்னும் தொடர் - எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் தான் படித்த புத்தகங்களில் , அதில் குறிப்பாக பெரிதும் கவனம் பெறாத புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
🔆58 கட்டுரைகளில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை அறிமுகம் செய்திருக்கிறார். அனைத்து புத்தகங்களும் அறிய மற்றும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய புத்தகங்கள் .
🔆இன்னொரு ஒரு பெரிய சிக்கல் , புத்தக உலகில் இருப்பது கள்ளப் பிரதிகள். குறிப்பாக ஆங்கில நாவல்கள், சுய முன்னேற்றப் புத்தகங்கள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டு இந்தியாவிற்கு விற்பனைக்கு வருகிறது .
🔆இன்று இணையத்தில் புத்தகங்களை வாங்குவது மிகவும் எளிதான செயல் . பழைய புத்தக கடைகளில், புத்தகம் வாங்குவதில் இருக்கும் இன்பம் அலாதியானது . எழுத்தாளர் தனக்கும் புத்தக கடை நடத்துபவருக்கும் இருக்கும் நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். படிப்பதெற்கே மிகவும் ரம்மியமாக இருக்கிறது .
🔆பழைய புத்தகங்களில் , அப்பொது படித்தவர்கள் , எழுதிருக்கும் செய்திகள் , குறிப்புகள் , யாரென்று தெரியாத ஒருவரிடமும் நாமும் உறவுக் கொள்ள முடியும் .
🔆 எழுத்தாளர் ஒரு சமயம் , ரயில் பயணத்தில் ஒரு குடும்பமே தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மகள் 5 பேரும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாக கூறியிருப்பார் . இப்பொதும் நான் யாராவுது புத்தகம் வாசிப்பதை கண்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் .
🔆புதிதாக புத்தகம் வாசிக்க போதிறவர்களும், ஏற்கனவே வாசித்துக் கொண்டிருப்பவர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் . இந்த ஆண்டு நான் வாசித்த சிறந்த புத்தகங்களுள் இதுவும் ஒன்று .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
பழைய புத்தகக் கடைகளில் இன்னும் வாங்கப்படாமல் இருக்கும் நூல்களையே ஆசிரியர் வீடில்லாப் புத்தகங்கள் என்று அழகாய் பெயர் சூட்டி இருக்கிறார். பல்வேறு ஊர்களில் அவர் வாங்கிய பழைய புத்தகங்களைப் பற்றியே இந்நூல்.
இக்கட்டுரைகளில் அவர் வாசித்த பல்வேறு வகையான புத்தகங்களையும், அனுபவங்களையும் கோர்வையாய் விவரிக்கிறார். "Non Fiction" நூல்களில் இவ்வளவு வகைகளும், பிரிவுகளும் உண்டோ என்று என்னை ஆச்சிரியத்திற்கு உள்ளாகியது எஸ். ரா'வின் இப்படைப்பு. அறிவியல், சமையல், நாடகங்கள், அன்றைய இந்தியா, கிராமங்கள், குழந்தைகள், ரஷ்ய நூல்கள், மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம், உலக சினிமா, தாவரங்கள், காந்தி, புதுமைப்பித்தன், சுனாமி, நரிக்குறவர்கள், போர்கள், வேளாண்மை, சிலைகள் என பல்வகையான களங்களை 56 அத்தியாகங்களில் முன்னிறுத்தி இருக்கிறார். நாள் ஒன்றிற்கு என்னால் 30 பக்கங்களேயே வாசிக்க முடிந்தது. அவ்வளவு விஷயங்களை ஒவ்வொரு தலைப்பும் கொண்டிருக்கிறது.
கோட்பாடுகளை மட்டுமே சொல்லாமல் சுவையான அனுபவங்களையும் கூட்டியிருப்பது நூலின் ஓர் தனிச்சிறப்பு. பேரக்குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கிச் செல்லும் தாத்தா, மழைக் காலங்களில் வியாபாரம் இல்லாமல் கஷ்டப்படும் பழைய புத்தகக் கடைக்காரர்கள், கடற்கரையில் சிறுவனுக்கு கதை வாசிக்கும் தாய், நூல்களை இலவசமாகத் தர முயன்ற ஆசிரியரின் அனுபவம் என சிரிக்க, சிந்திக்க, மனதை கனக்க வைக்கும் அனுபவங்கள்.
தமிழர்கள் அனைத்து களங்களிலும் முன்னோடிகளாகவே இருந்திருக்கிறோம். ஆனால் நம் அறிவினை, கண்டுபிடிப்புகளை ஆவணப்படுத்தாமல் விட்டு விட்டோம். எனவே இப்பொழுது மேற்கத்திய வழக்கங்களே மேல் எனக் கருதி நம் வழக்கங்களையும், தாய் மொழியையும் மறந்து கொண்டிருக்கிறோம்.
"232" பக்கங்களில் ஆசிரியர் "113" புத்தகங்களைக் குறிப்பிட்டு இருக்கிறார்! ஆசிரியர் பரிந்துரைத்த நூல்களை கட்டாயம் வாசிக்க வேண்டும் என்பதே என் ஆசை.
1. தீப்ஸ் ஜெர்னல் - ழான் ஜெனே 2. 12 மணி நேரம் - நீலவண்ணன் 3. Memories of Madras - Sir Charles Lawson 4. The Illustrated Weekly - (Binded Book) 5. Farenheit 451 - ரே பிராட்பரி 6. Around India in 80 Trains - Monisha Rajesh 7. ஜப்பானியப் பயணம் - தி. ஜானகிராமன் 8. பர்மா நடைப் பயணம் - சாமிநாத சர்மா 9. காட்டில் என் பிரயாணம் - பிலோ இருதய நாத் 10. The Great Railway Bazaar - பாதெரோ 11. Around the World in 80 Days - ஜூல்ஸ்வெர்ன் 12. 3rd class ticket - ஹீதர்வுட் 13. The Burial of the count of Orgaz & Other Poems - Picasso 14. What Einstein told his cook - Robert Wolke 15. Riddles in your tea cup (Quiz Book) 16. You Are Joking Mister Feynman - Feynman 17. The Brief History of Time - Stephen Hawking 18. எஸ்தர் - வண்ண நிலவன் 19. 400 Photographs - அன்சல் ஆடம்ஸ் 20. திரைப்படம் உருவாகிறது - கலைஅன்பன் 21. திப்பு சுல்தானின் கனவுகள் 22. பேபல் டவர் - ஏ.எஸ்.பயட் 23. சீன, ஜப்பானியயாளியின் ஓவியக் கலைத் தத்துவம் - லாரன்ஸ் பின்யன் (Translated by ஆ.பெருமாள்) 24. Gullivers Travels - Jonathan Swift 25. பஞ்ச பாண்டவர் வன வாசம் - புலவர் புகழேந்தி 26. உபபாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன் 27. யுகாந்தா - Irawati Karve 28. War and Peace - Leo Tolstoy 29. ரூடின், குப்ரினின் யாமா, கார்க்கி - துர்கனே 30. Lev Tolstoy - Victor Shklovsky 31. Charlie and the Cholocate Factory - Roald Dahl 32. Da Vinci Code - Dan Brown 33. Stray Birds - Rabindranath Tagore 34. The Wonder that was India - A.L.Basham 35. எனது நாடக வாழ்க்கை - அவ்வை ஷண்முகம் 36. பிரம்மாஸ் ஹேர் - மேனகா காந்தி 37. நினைவு அலைகள் - நெ.து.சுந்தரவடிவேலு 38. ஆனந்தத்தை அறிந்தவன் - ராபர்ட் கனிகல் (பி.வாஞ்சிநாதன்) 39. The Immortals of Meluha - Amish Tripati 40. வாழ்விலே ஒருமுறை - அசோகமித்திரன் 41. பால்சாக்ஸ் ஆம்லேட் - ஆன்கா 42. The Road to Life - Anton Makarenko 43. Makarenko: His Life & Work - Anton Makarenko 44. கி.ரா.இணைநலம் - எஸ்.பி.சாந்தி 45. Free from School - Rahul Alvares 46.வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - நம்மாழ்வார் 47. மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் - நம்மாழ்வார் 48. தாய் மண்ணே வணக்கம் - நம்மாழ்வார் 49. இனி விதைகளே போராயுதம் - நம்மாழ்வார் 50. வேளாண் இறையான்மை - பாமயன் 51. மண்ணுக்கு உயிருண்டு - பூவுலகின் நண்பர்கள் 52. ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானவு ஃபுகோகா 53. An Agricultural Testament - Sir Albert Howard 54. த்ரீ மென் இன் போட் - ஜெரோம் கே ஜெரோம் 55. ஆரோக்கிய நிகேதனம் - Tara Sankar Banerjee 56. பகல் கனவு - ஜூஜூபாய் பதேக்கா 57. மஞ்சள் பிசாசு - அ.வி.அனிக்கின் 58. Gold: The Real Ruler of the World - Franklin Hobbs 59. ஆச்சர்யம் எனும் கிரகம் - தாஜிமா ஷிஞ்ஜீ 60. Six Legged Soldiers - Jeffrey A.Lockwood 61. நல்ல நிலம் - பியர்ள் எஸ் பக் 62. Fire on the Mountain - Anita Desai 63. The Inheritance of Loss - Kiran Desai 64. இன்று புதிதாய்ப் பிறந்தேன் - மிருணாள் சென் 65. சிற்றன்னை - புதுமைப்பித்தன் 66. சாசனம் - கந்தர்வன் 67. Film as Art - Rudolf Arnheim 68. The Know it All - A.J.Jacobs 69. கால் முளைத்த கதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் 70. உலகம் குழந்தையாக இருந்த போது - வெரியர் எல்வின் 71. Hadji Murat - Leo Tolstoy 72. The Garden of Eden - Hemingway 73. அர்ச்சுனன் தபசு - மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் - சா.பாலுமணி 74. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் - எட்கர் தர்ஸ்டன் 75. சப்பெ கொகாலு, ஒடியன் - லட்சுமணன் 76. நரிக்குறவர் இனவரைவியல் - கரசூர் பத்மபாரதி 77. Does he know a mother's heart? - Arun Shourie 78. பெரும்புள்ளிகள் - குகன் 79. உலகச் சினிமா - எஸ்.ராமகிருஷ்ணன் 80. Interview with Albert Hitchcock - Francois Truffaut 81. The Flims of Akira Kurosawa - Donald Richie 82. Shot by Shot - Steven D. Katz 83. Our films Their films - Sathyajit Ray 84. The Films in My Life - Francois Truffaut 85. How to Read a Book - Mortimer J. Adler 86. The Name of the Rose - Umberto Eco 87. A Study in Scarlet - Arthur Conan Doyle 88. அற்புதக் குற்றங்கள் - பண்டித நடேச சாஸ்திரி 89. The Complete Adventures of Feluda - Sathyajit Ray 90. புலனாய்வாளரின் குறிப்புகள் - லெவ் ஷெய்னின் (Translated by முஹம்மத் செரீஃப்) 91. உலகப் புகழ் பெற்ற மூக்கு - முகமது பஷீர் 92. The Adventures of Pinocchio - Carlo Collodi 93. ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா - பியர் லோட்டி (Translated by சி.எஸ்.வெங்கடேஸ்வரன்) 94. ஓர் இந்தியக் கிராமத்தின் கதை - தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை 95. கிராமத்துத் தெருக்களின் வழியே - ந.முருகேச பாண்டியன் 96. Hunger - Elise Blackwell 97. டோபா டேக் சிங் - சதத் ஹசன் மண்டோ 98. இருமுறை பிறந்து, இருமுறை இறந்து - Kartar Singh Duggal 99. பௌர்ணமி இரவு - துக்கல் குல்ஸீம் 100. ஒளியின் வெளி - செ.ரவீந்திரன் 101. மதகுரு - செல்மா லாகர்லெவ் 102. கரமசோவ் சகோதரர்கள் - தஸ்தா யேவ்ஸ்கி 103. உனக்குப் படிக்கத் தெரியாது - கமலாலயன் 104. டாம் மாமாவின் குடிசை - பி.ஏ.வாரியர் (Translated by அம்பிகா நடராஜன்) 105. புதுமைப்பித்தனின் சம்சாரப் பந்தம் - கமலா புதுமைப்பித்தன் 106. கண்மணி கமலாவுக்கு - புதுமைப்பித்தன் 107. காந்தியின் ஆடை தந்த விடுதலை - பீட்டர் கன்சால்வஸ் 108. பாதயாத்திரை - ஆ.பெருமாள் 109. மௌனியோடு கொஞ்ச தூரம் - திலீப்குமார் 110. மௌனியின் மறுபக்கம் - ஜே.வி.நாதன் 111. மௌனியின் சிறுகதைகள் - தொகுத்தவர் கி.அ.சச்சிதானந்தம் 112. The Man without Qualities - Robert Musil 113. மண்கட்டியைக் காற்று அடித்துப் போகாது - பாஸீ அலீயெவா (Translated by பூ.சோமசுந்தரம்)
கரும்பு தின்னக் கூலியா என்பதுபோல் புத்தகப் பிரியர்களுக்காகவே புத்தகங்களைப் பற்றியே எழுதப்பட்ட சிறப்பான படைப்பிது! I thorughly enjoyed reading this Non-fiction! Highly recommended to all the book lovers! :)
நூறு நூல்கள் வாசித்த அனுபவம் இந்த ஒரு நூலை வாசித்து முடிக்கும் போது.பழைய புத்தக கடையில் வாங்கிய நூல்கள் பற்றிய விமர்சனம்,அங்கு கிடைத்த அனுபவம்,புத்தக வாசிப்பின் நிலைகள் என மிகவும் சிறப்பாக தொகுத்து கொடுத்துள்ளார் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன்.இந்த நூலில் நிறைய நூல்களை பரிந்துரை செய்துள்ளார்.ஒரே நூலில் நிறைய நூல்களை பற்றி தெரிந்து கொள்ள இதை உறுதியாக படிக்கலாம்.
"எத்தனையோ அரிய புத்தகங்களை ,இலக்கியங்களை தற்செயலாக பழைய புத்தக கடைகளில் கண்டெடுத்து இருக்கிறேன்.அந்த தருணங்களில் நிலவில் கால் வைத்தவர் அடைந்த சந்தோஷத்தை விடவும் கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன்"
"புத்தகத்தால் என்ன பயன் நேரம்தான் விரயமாகிறது என அதன் அருமை தெரியாதவர்கள் புலம்புகிறார்கள் ஆனால் சரியான ஒரு புத்தகம் ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும்.ஆசிரியர் ஒருவருக்கு செல்லும் புத்தகம் அவருக்கு பிடித்தமான இருந்துவிட்டால் எத்தனையோ மாணவர்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிடும்"
பழைய புத்தக கடைகளின் உலகையும் அங்கே கிடைத்த அரிய நூல்களையும் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு வீடில்லா புத்தகங்கள்.புத்தகம் சிலருக்கு தோழமை,சிலருக்கு வழிகாட்டி,சிலருக்கு அது ஒருவகை சிகிச்சை,இன்னும் சிலருக்கு புத்தகம் மட்டும் தான் உலகம்.புறஉலகைவிட புத்தக உலகில் வாழ்வதற்கே அவர்கள் விரும்புகிறார்கள். புத்தகங்களே உலகிற்கு ஒளியாக இருக்கின்றன❤️
மிக முக்கியமான புத்தகம். இதை இவரின் கதாவிலாசத்தின் தொடர்ச்சி என்றே சொல்வேன். எனக்கு பிடித்த புத்தகங்களாக
ஒரு இந்திய கிராமத்தின் கதை சந்தியா பதிப்பகம் தோட்டகாடு ராமகிருஷ்னன் கிராமத்து தெருக்கலின் வழியே உயிர்மை மொனியின் மறுபக்கம் விகடன் மண் கட்டி ncbh பாத யாத்திரை காலச்சுவடு காந்தியின் ஆடை தந்த விடுதலை விகடன் மதகுரு பவுர்ணமி இரவு சாகித்திய அகடெமி அனந்தத்தை அறிந்தவன் nbt பசி பாரதி புத்தகாலயம் ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா santhiya pathippagam ஹாஜி முராத் Author: லியோ டால்ஸ்டாய் Publisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் உலகம் குழந்தையாக இருந்தபோது வெரியர் எல்வின் nbt
The author talks about the second hand book shops that we can find at important places in major cities and towns in India.. That's how this book starts..
He talks about the story behind the old book shops, the incidents that happened there and what book he got and about the book..
Lots of unknown books in different language literature was introduced by the author, this list covers all fields and there is an interesting story on how.he got the book in the earlier pages and in the next set of pages,.he talks about those things which was.the reason behind the books.and.about the author..
The way in which this book introduction was written, would make.you to grab that book and read it..
Came to know about books written by Meneka Gandhi, Arun Shourie etc. A book written by 16 year old ( Free from school) Book titled ' how to read a book' by Mortimer, Books in life history of writers and poets of Tamilnadu (puthumeipithan and ki. Rajanaraynan) Lot of Russian literature, Two books on education ( Montessori education by Gujarati writer) and about education by Russian writer
So many such books, it's very interesting to know many famous books in other literature was translated in Tamil, which most of us weren't aware off
So saddening to see the habit of reading is getting detoriated day by day..
While completing this book, i just remembered the lines by an anchor in a talk show " The people in West (America) are not worried about not knowing about other countries ( they know completely about their states and their country). However we Indians boast about talking many things happening in the west, but don't have the basic knowledge and opinions about what's happening in our country, state or city"..
❤ புத்தகங்களோடு மனிதர்களுக்கு உள்ள உறவு ரகசியமானது. “எதற்காக புத்தகம் படிக்கிறாய்?” என்று கேட்டால் ஆளுக்கு ஒரு காரணம் சொல்வார்கள். என்னதான் ஆயிரம் காரணம் சொன்னாலும், அதனடியில் சொல்லாத காரணம் ஒன்று இருக்கத் தான் செய்கிறது. அதுவே ஒருவரைத் திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கிறது.
ரஷ்யாவின் தெருக்களில் ஆண்டன் செகாவின் சிறுகதைகளோடு ஒரு கிழவன் தான் சந்திக்கிற எல்லோருக்கும் அந்தக் கதைகளை சொல்லிக் கொண்டே தன் வாழ்கையை கழிப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி அந்த புத்தகத்தில் அந்த மனிதருக்கு ஏதோவொரு அனுபவம் கிடைத்திருக்கக் கூடும்.
அந்த அனுபவம் தருகிற ருசி தான் இன்று பல வாசகர்களை உருவாக்கியிருக்கிறது.
அந்த வகையில் எஸ்.ராவின் வீடில்லாப் புத்தகம் உங்களுக்கு 55 புத்தகங்களை அறிமுகம் செய்து எண்ணிலடங்காத அனுபவங்களைத் தருகிறது.
புத்தகத்தின் முடிவில் உங்களைப் பழைய புத்தகக் கடைகளைத் தேடித் தேடி அலைபவராக மாற்றும் ஆற்றல் வாய்ந்த எழுத்து எஸ்.ராவுடையது.
பழைய புத்தகம் : யாரோ ஒருவனுக்கு அது வாசித்து முடித்த பழைய புத்தகம் , இன்னொருவருக்கு அது அப்போது தான் வாங்கியுள்ள படிக்காத புதிய புத்தகம் . S. ராமகிருஷ்ணன் உண்மையில் இது ஒரு புத்தகத்தை படித்த அனுபவத்தை தரவில்லை பல புத்தகங்களை படித்த அனுபவத்தை தருகிறது. பல அறிமுகம் இல்லாத மறு பதிப்பு செய்யாத புத்தகங்களை அறிமுகம் செய்ததோடு நில்லாமல் ஒரு சிறு முன்னோடத்தையும் கொடுத்து வாசிக்க தூண்டுகிறது.. இறக்கும் வரை இறந்த பின்னர் ம் பிறருக்கு பரிசாக கொடுத்த நபர். புத்தகத்தை வாங்க காசில்லாம் இருந்தவரை புத்தக கடையில் நாற்காலியில் அமர வைத்து படிக்க வைத்த கடைக்காரர் என பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை கோர்த்து சிறப்பு செய்துள்ளார் ஆசிரியர்.
புத்தகத்துக்குள் ஏராள புத்தகத்தையும் அது பற்றிய விவரங்களையும் அழகாக அறிமுகப்படுத்திய ஆசிரியருக்கு நன்றி 🙏.. உலக சினிமா, பதிப்பகம் பற்றிய தகவலும் அருமை.. இறுதி பக்கம் வரை ஆவலாக புரட்டி வந்தேன். உறுபசி, இந்திய வானம் வரிசையில் வீடில்லா புத்தகங்களுக்கு பிறகு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை மேலும் படிக்கவே ஆவல்!!
A book gives you information but what if a book gives you an intro about other books, that's interesting right, in this book author gives an intro to nearly 100+ books and pieces of information regarding that i.e. sometimes spoilers too.
புத்தக வாசிப்பிற்கான மிகப்பெரிய கதவுகளை திறந்து வைத்திருக்கிறார் ஆசிரியர்.புத்தகங்களின் ஊடாக பல நல்ல மனிதர்களையும் நமக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.