பிரிட்டிஷ் காலத்துக்கு முன்பிருந்தே, தூத்தூக்குடி ஹார்பர் பகுதிகளில் மிகப் பெரியளவில் கடல் வணிகம் செய்துவரும் பர்லாந்து குடும்பத்தின் வாரிசுகளான பெரியவர் ஜோசப் பர்லாந்து, சின்னவர் டேவிட் பர்லாந்து ஆகிய இருவரின் அதிகார யுத்தம்தான் 'வேட்டை நாய்கள்' தொடரின் கதைக்களம்.
தூத்துக்குடி துறைமுகம் யாருக்கு என்ற பர்லாந்து சகோதரர்களுக்கு இடையோன அதிகார போட்டியில் இருவரின் அணியை சேர்ந்த பலர் வேட்டையாடப்படுகின்றனர். இந்த வேட்டையில் பெரிய பர்லாந்தின் வேட்டை நாய் சமுத்திரம், சின்ன பர்லாந்தின் வேட்டை நாய் கொடிமரம். யார் இந்த பர்லாந்து சகோதர்ர்கள், யார் இந்த வேட்டை நாய்கள், இவர்களிடையான பகை, பாசம், அதிகாரப் போட்டி என கதை விரிவடைந்து விறுவிறுப்பாகிறது இறுதியில் எந்த வேட்டை நாய் தனது எஜமானுக்கு அதிகாரத்தை கைபற்றி கொடுத்தது என்பதே வேட்டை நாய்கள் பாகம்1 ன் கதை. -கலைச்செல்வன்
வேட்டை நாய்கள் - உப்பு மனிதர்களின் பகையும் கதையும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுவீச்சில் வாசித்து முடித்தப் புத்தகமிது. பக்கங்களைப் புரட்டப் புரட்ட சுவாரசியம் குன்றாமல், நம்மை தூத்துக்குடி துறைமுகம, உப்பளங்களுக்குள் இழுத்துச் சென்று அங்குள்ள உப்பு மனிதர்களின் பகை சார்ந்த வாழ்வியலை கண்முன்னே இட்டுச் செல்கிறது.
கதைக்களம், கதாபாத்திரங்களின் படைப்பு அனைத்தும் சிறப்பு. பகை, வெறி, கொலை, காதல், நெகிழ்ச்சி, வன்மம், காழ்ப்புணர்ச்சி, ஏமாற்றம், வன்முறை கலந்த கலவையாகப் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சுவாரசியமான புனைநாவலுக்குத் தேவையான அனைத்து சாராம்சங்களும் இக்கதையில் நிறைந்தே உள்ளது. வாசிப்பின் முடிவில் நம் மீதும் சிறிது இரத்தவாடை வீசவே செய்கிறது.
"வேட்டை நாய்களின் அறம் வீட்டு நாய்களுக்குப் பொருந்தாது".
தமிழ் வந்த க்ரைம் த்ரில்லர் நாவலில் கவனிக்க படவேண்டிய நாவல்.கதைகளம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அதிகார போட்டி.வடசென்னை படப்பானியில் ஒரு நாவல்.கதாபாத்திரங்கள் அழுத்தம் நன்று ஆனால் இன்னும் சில பாத்திரத்துக்கு இடம் பற்றகுறை.வன்முறை &ஆபாச காட்சிகளை தவிர்க்க முடியவில்லை கேங்ஸ்டார் நாவலின் அவசியம் அப்படி.மொத்தில் விறுவிறுப்பான கதைகளம் நம்மை வெளி செல்ல விடாது.
பகையும் கதையும் என்று அட்டை படத்தில் எச்சரிக்கை விடுத்த ஆசிரியர் நாவலினுள் நுழையும் அனைவருக்கும் வன்முறையை வாறி இறைத்திருக்கிறார் . வன்முறை கதைகளில் வரும் கலவியும், கொலைக்கொடூரமும் இந்த நாவலில் கொஞ்சம் கம்மியாக இருக்கின்ற போதிலும் எதிர்பாரா திருப்பங்களாலும், கதாபாத்திர வடிவமைப்பினாலும் , விறுவிறுப்பான ஒரு படைப்பை நமக்கு வழங்கியிருக்கிறார் . பொதுவாக நாளிதழ்களில் வெளிவரும் கதைகளில் கதாப்த்திர வடிவமைப்பும் , கதாபாத்திரங்களின் உணர்வுகளும் , உறவுகளும் பரிமாணமடையாமல் கதைப்போக்கிற்கு கண்டமேனிக்கு சில சமயம் காணாமல் கூடப்போகும் . கதை விறுவிறுப்பிறக்காக பல கதாபாத்திரங்கள் காரணமில்லாமல் கூட பழியாகும். அப்படி எந்தவொரு பழியுமில்லாமல் இருக்கும் கதாப்பாத்திரங்களை கொண்டே அவர்களின் சூழ்நிலை காரணங்களை வைத்தே நாவலை நகர்த்தியிறுப்பது அதுவும் விறுவிறுப்பை இம்மியளவும் குறையாமல் நகர்த்தியிறுக்கும் நேரத்திக்காக ஆசிரியரை பாராட்டியே ஆக வேண்டும் . கதாபாத்திரங்களிடையேயான உணர்வுகளை மிக எதார்த்தமாக நிஜத்துக்கு மிக அருகில் வைத்து கையாண்டிருக்கிறார். முதல் பாகத்தின் முடிவு இரண்டாம் பாகத்தின் மேல் மலையளவு எதிர்ப்பார்ப்பை நம்மில் தூண்டிய வாறே முடிகிறது . படிக்க ஒரு விறுவிறுப்பான நாவல் இது , ஒரு நல்ல விறுவிறுப்பான ஆக்ஷன் கதை விரும்பிகளுக்கு பரிந்துரைகக்கு ஏற்ற நாவல் இந்த வேட்டை நாய்கள் .