Jump to ratings and reviews
Rate this book

வந்தியத்தேவன் வாள்

Rate this book
'வந்தியத்தேவன் வாள்' சோழ நாட்டின் உயர்வுக்காக பல போர்க்களங்களில் பெரும் பங்கு பெற்றிருக்கிறது. அந்த வாள் சூரிய ரச்மியைப் பிரதிபலித்து மின்னும். சந்திரன் ஒளியிலே தன் போர்க் குணத்தை மறந்து அடக்கமாக நிலவொளியை உமிழும். இராசராச சோழனே பலமுறை அந்த வாளை எடுத்து, 'விர் விர்' என்று சுழற்றிப் பார்த்தும் முகத்துக்கு நேரே உயர்த்தியும் முத்தமிட்டு மகிழ்ந்தும், “வல்லவரையரே! தங்களுக்கு வெற்றி தருவது உங்கள் கரங்களா? கரங்களில் பூரணமாகத் திகழும் வாளா?” என்று கேட்டிருக்கிறான்.

328 pages, Paperback

First published January 1, 2010

90 people are currently reading
858 people want to read

About the author

விக்கிரமன்

43 books43 followers
Subarayar Vembu (19 March 1928 – 1 December 2015), better known by the pseudonym of Vikiraman, was an Indian novelist, short story writer and a journalist who wrote in Tamil. He was also a writer of children's literature.

Vikiraman is known more for his novels, particularly historical novels, than for his short stories. He edited arguably the longest surviving Tamil literary magazine, Amudasurabhi, for well over five decades (1949–2002). He is perhaps the only Tamil writer who has tried his hand in almost every genre, in addition to novel and short story, drama, poetry, travelogue and essay. He has also written stories for children and books on history for the youth in simple Tamil.

His first historical novel, Udayachandran, appeared in 1957 and he has added 33 more in the four succeeding decades. The most famous of these has been Nandipurathu Nayagi, first serialised in Amudasurabi during 1957–59, and published in book form in 1964. Nandipurathu Nayagi is in fact a sequel to Ponniyin Selvan of his better-known contemporary and mentor, Kalki Krishnamurthy, whose influence on Vikiraman is quite significant in respect of both historical novels and short stories.

With more than 150 short stories in 62 years to his credit, Vikiraman continues to write fiction for Ilakkiya Peetam, which he presently edits. Although he has received many accolades including the Kalaimamani title from the Tamil Nadu Government and an award from Tamil University, Thanjavur, for his literary achievements, he has admittedly a grievance that he is known only as a novelist and journalist, and not as a short story writer among the Tamil readers. And hence this collection of his 70 short stories, as he reveals his mind in Kathaiyin Kathai, a sort of preface to the volume. Not an unjust grievance anyway, in this fast-track cultural ambience in which literature is loved more for its entertainment value, forcing the long, time-consuming novel to yield ground to short story as a form of literary expression. Judged from J.B. Priestley's observation that "at its best, the short story offers us a wonderfully clear little window through which we can see something of the lights and shadows, the heights and depths of life in this world," a substantial number of the stories in this collection pass the test.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
87 (35%)
4 stars
55 (22%)
3 stars
51 (20%)
2 stars
32 (12%)
1 star
22 (8%)
Displaying 1 - 20 of 20 reviews
Profile Image for Elankumaran.
142 reviews25 followers
April 4, 2023
வந்தியத்தேவன் வாள் ❤️

இராஜேந்திர சோழனின் இளமைப்பருவத்தை காலமாகக் கொண்டு, வந்தியத்தேவன், குந்தவை, இராஜராஜ சோழர் போன்ற முக்கிய கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் கதைமாந்தர்களாக்கி காதலையும் அரசியலையும் கதைக்களமாக கொண்டு புதினமாக்கப்பட்டதே இந்த வந்தியத்தேவன் வாள் நாவல்.

கதையின் சில பகுதிகள் ரசிக்கத்தக்கதாக இருந்தபோதும் ஆழமில்லாத கரு, தொடர்ச்சியின்மை, பொருத்தமில்லாத தலைப்பு போன்ற சில எதிர் உணர்வுகளையும் ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் வாளின் வீரம் வரிகளில் இருக்குமென்று எண்ணியிருந்த எனக்கு வாள் உறைக்குள்ளேயே இருந்துவிட்டதில் சின்னதொரு ஏமாற்றமே.
Profile Image for Shyam Sundar.
112 reviews39 followers
May 14, 2014
நாட்டிய பெண் இன்பவல்லியை ராஜராஜர் விரும்புகிறார்.பிற்கால சோழ ராஜ்ஜியத்தின் நன்மை கருதி அவர்களை சேர விடாமல் குந்தவை தடுக்கிறார். மேலும் இன்பவல்லியை தனியான ஒரு இடத்தில குடியமர்த்தி தக்க கண்காணிப்போடு வாழவைக்கிறார்.அங்கு இன்பவல்லி பூங்கொடி எனும் மகவை ஈன்றெடுக்கிறாள்.அழகும் அறிவும் மட்டுமலாமல் தான் கற்ற கலையையும் போதித்து குந்தவையை பழிவாங்க அனுப்பி வைக்கிறாள்.

வந்தியதேவன் வாள் என்றவுடன் அந்த வாளின் பெருமையை சுற்றியே கதை நடக்கும் என்ற என் கணிப்பு தவிடுபொடியானது.மேலும் ஒரு கதையாக சொல்லாமல் வரலாற்று சம்பவங்களின் கோர்வையாக கதையை இதிலும் விக்கிரமன் நகர்த்தி இருப்பது படிக்கும் போது ஒரு வித அலுப்பையே தருகிறது .

கல்கி ,சாண்டில்யன் படைப்புகளில் காணப்படும் ஒரு ஆர்வத்தை ,சுவையை மற்றவர்களின் படைப்புகள் முழுமையாக காண முடிவதில்லை .
Profile Image for Aditya.Karikalan.
3 reviews
July 18, 2020
மாவீரன் 'வல்லவரையன் வந்தியத்தேவனின்' வீரவாளை 'இராசேந்திர சோழன்',அவரது ஆசியுடன் பரிசாகப் பெறுவது இந்தப் புதினத்தின் முடிவு.


'வந்தியத்தேவன் வாள்' எனப் பெயரிடப்பட்டிருந்தாலும் இந்த வரலாற்றுப்புதினத்தின் கதை 'மதுராந்தக சோழன்' எனும் இயற்பெயர் கொண்ட இராசேந்திர சோழனையே முதன்மையாகக் கொண்டதாகும்.
இயற்கை எழில்,கதைமாந்தர்களின் அக உணர்ச்சிகள் போன்றவை மிகவும் ரசிக்கும்படியாக எழுத்தப்பட்டுள்ளது.
கவித்துவம் நிறைந்த வரிகளும் வர்ணனைகளும் கதை முழுவதும் காணப்படுகிறது.

முக்கிய கதாபாத்திரங்கள்:
➡️இராசராச சோழன்
➡️ இராசேந்திர சோழன்
➡️ இளைய பிராட்டி குந்தவை
➡️ வந்தியத்தேவன்

மேலும் 'நந்திப்புரத்து நாயகி' எனும் வரலாற்றுப் புதினத்தின் தொடர்ச்சியாக இந்நூல் அமையப்பெற்றுள்ளதால் அந்நூலின் கதைமாந்தர்கள் சிலர் இதில் முக்கிய பங்கு கொண்டுள்ளனர்.
Profile Image for Sridhar Babu.
208 reviews6 followers
October 22, 2022
#புதினத்தின் பெயர்: வந்தியத்தேவன் வாள்
#ஆசிரியர்: விக்கிரமன்
#பக்கங்கள்: 342 .

#கதாபாத்திரங்கள்: வல்லவரையர் வந்தியத்தேவன், இராஜராஜ சோழர், குந்தவை பிராட்டியார், மதுரன் ((பின்னாளில் இராஜேந்திர சோழர்)), பூங்கொடி, இன்பவல்லி, கோதை.

#கதை நடக்கும் இடங்கள்: உறையூர், தஞ்சை

அருண்மொழி வர்மர் இராஜராஜராக சோழத்தை ஆண்டு வருகிறார். பாண்டியர், சேரர்கள் முற்றிலுமாக அடக்கப்பட்டுவிட்டனர். சாளுக்கியர்கள் படை எடுத்துவர ஆயத்தமாகின்றனர்.

வல்லவராயர் வந்தியத்தேவர் சோழ நாட்டிற்கு ஆற்றிய தொண்டுக்காக பிரம்மதேசத்தை தலைநகராக கொண்டு வல்லவரையர் நாட்டை குறுநில மன்னராக ஆட்சி புரிந்து வருகிறார். பிரம்மதேசத்தில் தனக்கென ஒரு மாளிகை கட்டுகிறார்.

இராஜராஜ சோழரின்((இராஜராஜருக்கும்-கொடும்பாளூர் இளவரசி வானதிக்கும் பிறந்த,))மகன் மதுரன் ((பின்னாளில் இராஜேந்திர சோழராக அரியணை ஏறுபவர்)) வாலிப பருவத்தை அடைந்து அழகனாக, வீரனாக காட்சியளிக்கிறான். அவனுக்கு இளவரசு பட்டம் சூட்டி, பழுவேட்டரையர் மரபில் வந்த கோதை என்ற பெண்ணை இளவரசியாக்க எண்ணுகிறார் மன்னர் இராஜராஜர்.

வல்லவராயர் வந்தியத்தேவன்-குந்தவை பிராட்டிக்கு குழந்தை பாக்கியம் இல்லாவிடினும் மதுரனை தான் பெறாத பிள்ளையாக நினைத்து வளர்க்கிறாள் குந்தவைப்பிராட்டி. வந்தியத்தேவருக்கோ பிரம்ம தேசத்தில் தனக்கு இன்னொரு மனைவி மூலம் பிறந்த தன் மகளை மதுரனுக்கு இளவரசியாக்கி, மணமுடிக்க விரும்புகிறார்.

ஆனால் மதுரனோ, தன்னை தற்செயலாக சந்தித்த பூங்கொடி என்ற நாட்டியப்பெண்ணின் மீது காதல் கொண்டு, அவளைத்தான் திருமணம் செய்துகொள்வதாக உறுதியுடன் இருக்கிறார். இதை அறிந்த இளையபிராட்டி குந்தவை இதை எவ்வாறேனும் தடுக்க நினைக்கிறாள்.

ஏன்? பூங்கொடி உண்மையில் யார்?

இராஜராஜ சோழர், அருள்மொழி வர்மராய் இருந்த போது சோழ நாட்டிலிருந்து கடல்கடந்த நாடுகளுக்கு கடற்பயணம் செல்கிறார். அப்போது முல்லைத்தீவு என்ற இடத்தில் இன்பவல்லி என்ற பெண்ணை சந்தித்து அவளது இயல்-இசை-நாட்டியத்தில் மனதை பறி கொடுக்கிறார். அருள்மொழி ஒரு சோழ அரசர் என்பதை அறியாமல் காதல் கொண்ட இன்பவல்லிக்கு காதலின் சின்னமாக பிறந்தவள்தான் பூங்கொடி.

சோழநாட்டில், இன்பவல்லியால் வாரிசு பிரச்சனையில் குழம்பித்தவிக்கும் சோழநாட்டுக்கு மேலும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்றெண்ணிய இளையபிராட்டி குந்தவை..இன்பவல்லியையும்,அவள் மகள் பூங்கொடியையும் கொள்ளிடம் அருகே காட்டுப்பகுதியில் "கிராமச்சிறை" வைக்கிறார்.தன்னுடைய சோகத்தையெல்லாம் தன் மகள் பூங்கொடியிடம், அவள் தந்தைதான் இராஜராஜர் என்பதை சொல்லாமலே கதையாக கூறுகிறாள் இன்பவல்லி.

தாயாரின் கண்ணீர்கதையை கேட்ட பூங்கொடி, சோழ இளவரசன் மதுரனை காதலித்து, தன் தாய் இன்பவல்லி போலவே அவனையும் பிரிவுத்துயரில் தவிக்கவிடவேண்டும் என்ற சபதமெடுத்து தஞ்சை செல்கிறாள் பூங்கொடி.

பின்னர் கதை வளைந்து, நெளிந்து ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டியபின், மதுரனும், பூங்கொடியும் வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்தாலும், இருவரும் இராஜராஜரின் பிள்ளைகள், இருவருக்கும் சகோதர உறவு உள்ளது என்று உண்மையை கூறி மதுரனின் மனதை மாற்றுகிறாள் இளைய பிராட்டி. சோழநாட்டு சரித்திரத்தில் நிகழவிருந்த ஒரு முறையற்ற திருமணமானது, இளையபிராட்டியால் தடுத்து நிறுத்தப்படுகிறது. இன்பவல்லியும்-அவள் மகள் பூங்கொடியும் மதுரனின் வாழ்வில் குறுக்கிடாமல் சோழநாட்டைவிட்டுச்செல்கிறார்கள்.அவர்களைப்பற்றிய எந்த செய்தியையும் இராஜராஜ சோழரால் அறியமுடியவில்லை.

மதுரன் , பழுவேட்டரையர் மரபில் வந்த கோதையை மணக்க சம்மதிக்கிறான். எதிர்த்து போர் தொடுத்து வரும் சாளுக்கியர்களை களம்காண தயாராகிறான். வல்லவராயர் வந்தியாத்தேவர் தன் ஒளி மிகுந்த வாளை மதுரனுக்கு பரிசளிக்கிறார்.சாளுக்கிய வெற்றிக்குப்பின் "இராஜேந்திர சோழன்" என்ற பட்டப்பெயரோடு அரியணை ஏறுகிறார் மதுரன்.

என் கருத்து...

இந்த புதினத்திற்கு ஆசிரியர் எப்படி "வந்தியத்தேவன் வாள்" என்று பெயரிட்டார் என்று தெரியவில்லை..மாறாக "பூங்கொடியின் காதல்" என்றுதான் தலைப்பிட்டிருக்கவேண்டும். புதினத்தின் ஏதோ ஒரு சில பகுதிகளில் அவரது வாளைப்பற்றி சிறு குறிப்பு வருகிறது அவ்வளவுதான்.

"வல்லவராயன் வந்தியத்தேவன்" என்ற பெயர் பொன்னியின் செல்வன் புதினத்திற்கு பிறகு ((அன்றும், இன்றும், என்றும் )) பேசுபொருளாகிவிட்டதால், புதினத்திற்கு எந்த தொடர்பில்லாமல் இருந்தாலும், ஒரு "Easy reach" க்காக ஆசிரியர் பயன்படுத்திக்கொண்டாரோ? என்று தோன்றுகிறது.

வல்லவரையர் வந்தியத்தேவனுக்கு குந்தவை பிராட்டி தவிற இன்னொரு மனைவியும்,மகளும் உண்டு எனவும் இவை சரித்திர உண்மைகள் என்று கூறுகிறார். ஆனால் இதற்கு ஆதாரமாக எந்தவிதமான சரித்திரக்குறிப்புகளையோ, கல்வெட்டுக்களையோ ஆசிரியர் குறிப்பிடவில்லை

பூங்கொடி தன் மகள்தான் என கதையின் ஆரம்பத்திலேயே அறிந்திருந்தும், தன் மகன் மதுரனிடம்,"பூங்கொடி உன் சகோதரி"
என உண்மை கூறி இராஜராஜ சோழர் ஏன் தடுக்கவில்லை? இது கதையின் போக்கிற்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

வரலாறும் இல்லாமல், புனைவையும் அழகாக சொல்லாமல், ஒரு அரைவேக்காட்டு புதினத்தை தந்துள்ளார் விக்கிரமன்.

எனது மதிப்பீடு 1.5 // 5.
Profile Image for Ram M Srinivas.
91 reviews2 followers
February 15, 2023
இந்த புத்தகம் ஒரு மெகா சீரியல் போன்றது. புத்தகம் இழு இழு என இழுத்துச் சென்றது ஆனால் அத்தகைய நீட்டிப்புக்கு எந்தப் பயனும் தேவையும் இல்லை. நாவலில் பல கதாபாத்திரங்கள் மற்றும் பல துணைக் கதைகள் உள்ளன, ஆனால் அதிக இணைப்பு இல்லாமல் உள்ளன. கதையின் சில சம்பவங்கள் ஒரு காலவரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளன, இது மற்ற எழுத்தாளர்கள் மற்றும் வரலாற்று நாவல்களுடன் வேறுபட்ட காலவரிசையாக நான் கருதினேன், மேலும் எந்த காலவரிசை சரியானது என்று தெரியவில்லை. கதைக்கும் புத்தகத்தின் பெயருக்கும் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லை. கதையை புத்தகத்தின் பெயருடன் தொடர்புபடுத்த, ஆங்காங்கே வந்தியத்தேவன் வாள் பற்றி சில வாக்கியம் மற்றும் கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் கதையாக ஓரளவுக்கு சரி ஆனால் வரலாற்று நாவல் என்று நினைத்து படிப்பவர்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே.
Profile Image for Priya Jay.
15 reviews4 followers
December 2, 2020
Very boring. Better not to read if one doesn't want to ruin the Experience of Ponniyin Selvan.
Profile Image for Sasindran S.
8 reviews
May 19, 2021
Story is having many discontinuities which the readers are supposed to assume in their own.
Profile Image for Harini_vigneshAravind.
50 reviews2 followers
June 3, 2022
I have already read ponniyin Selvan and udaiyar... Now after reading this book I want to read it all again
5 reviews
December 22, 2025
வரலாற்று புதினங்கள் தரும் அழகிய வாழ்நாட்களை சற்று உணர வைக்கிறதே தவிர கதை பெரிதும் இல்லை. குந்தவைக்கு தெரிந்த உண்மையை பாதி பக்கங்கள் தாண்டும் முன்பே நமக்கு தெரிந்த விட்டது அத்துடன் படிக்கும் போது சிறிது களி, சற்றே எழுத்துகளும் கதையாடலும் நன்றாக இருந்தது தான் விக்கிரமன் விந்தை.
This entire review has been hidden because of spoilers.
1 review
July 25, 2017
This is amazing i want read repeatedly i will recommend to my friends
Profile Image for Arun A.
59 reviews10 followers
October 21, 2019
Not a good one. Don't expect much. Just an ordinary one. Lot of things are messed up.
Profile Image for Aravind Jayaram.
12 reviews
October 23, 2020
நந்திபுரத்து நாயகி கதையின் தொடர்ச்சியே வந்தியத்தேவன் வாள்
Profile Image for Mu Ra.
62 reviews1 follower
October 21, 2022
A good book with all the suspense and drama necessary for a page turner..
168 reviews1 follower
January 26, 2021
Just okish...The way story went is not much appealing... Kind of bored .... The story ends in 4-5 lines...

1. Vandhiyathevan has another wife and a daughter, whom he wanted to marry to Rajendra chozha


2. Inbavalli has a daughter with Arulmozhi varmar and she sends her own daughter to take revenge on Arulmozhi and family. Brother sister love (Forbidden relationship).Later she regrets the decision and leaves without meeting Arulmozhi varmar

3. Chalukyas plan to seize chozha Nadu and the Chozhas getting ready.. no war is shown.

4. in the end Vandhiyathevan gives his mighty sword to Rajendra chozha for Chalukya war..

Story ends.. Unnecessary conversations between Kundavai and Vandhiyathevan, Arulmozhi and Vandhiyathevan, Kundavai and Inbavalli...
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Aparna Sankar.
8 reviews
April 23, 2021
If you have high expectations, as high as “Ponniyin Selvan”lower your expectations and read this book. It covers Rajendra Chozhan’s love interest and forbidden love and how he wins over Vandhiyadevan’s sword.
1 review
December 14, 2017
Not so good compared to other chola history books. Very boring and too predictive once you understand the central theme of the story..
Profile Image for Prasanna Gopi.
1 review
March 27, 2019
Nice book

Kalki's clone. Vey great story teller and writer. No one tells who is the actual killer of Athithiya Karikala Cholan.
1 review
October 9, 2019
Excellent and interesting book

Excellent and interesting book well described each and every characters have done justice to their role. Some differences in the history
2 reviews
March 6, 2020
After Read Ponniyin selvan had a curiosity to know about Vanthiya thevan. Its a story about vanthiyathevan & kunthavai. I really liked it.
Displaying 1 - 20 of 20 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.