எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையினை எழுதுகிறது. கீழத்தேய மரபின் வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தை பின் புலமாகக் கொண்ட இந்நாவல் யதார்த்தம் புனைவு என்ற எல்லைகளைக் கடந்து கவித்துவத்தின் அதீத மன எழுச்சியை உருவாக்குவதுடன் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையேயும் பெருகும் வாழ்வின் பரவசங்களையும் மகத்துவங்களையும் விவரிக்கிறது
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
எவ்வளவு நேரம் வானத்தை வெறித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேனென்று தெரியவில்லை.மேக மூட்டங்கள் தான் செல்லும் திசையில் எந்தவித சந்தேகமோ தயக்கமோயின்றி காற்று அழைக்கும் திசையில் தன் பாட்டில் நகர்ந்துகொண்டிருந்தது. எவ்வளவு மனக்கசப்பாக இருந்தாலும் வானத்தை வெறித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தால் தன் சுமையின் பாதி அறியாமலே கரைந்துவிட்டதான திருப்தி கிடைக்கிறது.
தூக்கம் கண்களை அதன் பக்கம் ஈர்த்துக்கொண்டிருந்தது.இரவும் சரியான தூக்கமின்மையால் குழப்பமாக இருக்கும் எண்ணங்களிலிருந்து கொஞ்சம் விடுதலை வேண்டியவனாக தலைசாய்த்துக் கொண்டேன்.
கனவிலும் கூட மதராப்பட்டணத்தில் அழைந்து கொண்டிருக்கும் மீர்காசிம், அப்துல் கரீம், சுரையா, வஹீதா, ரஹ்மானி, பத்ரகிரி, திருச்சிற்றம்பலம், விசாலா, தையல், கிருஷ்ணப்ப கரையாளர், எலிசபத், சதாசிப் பண்டாரம், சந்தீபா என்று ஒவ்வொரு கதாப்பாத்திமும் அவர்களுடைய வாழ்க்கை பற்றிய ஏமாற்றங்கள், என்று தொடர்ந்து கொண்டேயிருந்தது. என்ன வேலை செய்தும், எண்ணங்களை எவ்வளவு திசை திருப்ப முயன்றும், யாமத்தின் வாசம் என்னை விட்டு நீங்குவதாக இல்லை.
நேற்று அந்திபடும் வேலையில் மழை இருட்டியிருந்தது. வெளியே சென்று திரும்பிவருவதற்குள்ளாக எப்படியும் மழை வந்துவிடும் படியாகத் தெரிந்தது. யாமம் நாவல் வாசிக்களாம் என்று ஆரம்பித்தது தான். இரவு எத்தனையைக் கடந்துவிட்டது என்று தெரியல்லை. முழுவதுமாக வாசித்து முடித்தேன் என்பதை விட,அதற்குள்ளாக வாழ்ந்து விட்டுத்தான் தூங்கச் சென்றேன்.எவ்வளவு புரண்டும் தூக்கம் வருவதாக இல்லை, யாமம் அத்தர் வாடை அடித்துக்கொண்டேயிருந்தது, காடுகளுக்குளாக நடந்து, லண்டன் குளிரில் நடுங்கி, மதாரப்படணத்தில் அழைந்து திரிந்த களைப்பு, எனக்குள்ளாக.
எஸ். ராவின் எழுத்தின் வீரியம், ஆழமும் கதைக்களத்திற்குள்ளாக நம்மை நகர்த்தி அதற்குள்ளாக நாம் வாழ்ந்துவிட்டதான ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டது. வாழ்க்கை பற்றிய நம்பிக்கை எப்படியெல்லாம் நாம் எதிர்பார்க்காமல் சிதறடிக்கப்படுகிறது. நம்மைச் சுற்றி எத்தனையோ விதமான கதைகள் வாழ்ந்து மடிந்து கொண்டிருக்கின்றன. நாம் தான் அவைகளைக் கண்டுகொள்வதேயில்லை. யாமமும் அப்படித்தான். வாழ்ந்து மடிந்த கதையது. வரலாற்றுச் சமூக நாவலாக மாறியிருக்கிறது.
அத்தர் என்னும் மாய நறுமணத்தை மையமாக கொண்டு மனிதர்களை பற்றிய புதினம் தான் இந்த யாமம் . ஒவ்வொரு பக்கத்திலும் இலக்கியம் வழிந்து ஓடிக்கொண்டிருக்க அதில் நம்மை ஒரு பயணியாய் தன் உரைநடை என்னும் படகில் வைத்து சொகுசாக அழைத்து செல்கிறார் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் . புத்தகத்தின் முகப்பிலே தாகூர் இலக்கிய விருது பெற்ற புத்தகம் என்ற விளம்புரத்துடன் வரும் யாமம் , புத்தகத்தை மூடி வைக்கையில் அந்த விருதுக்கு , அந்த விருது எப்படிப்பட்ட விருதாக இருந்தாலும் , போட்டிக்கு என்ன புத்தகங்கள் வந்திருந்தாலும் . யாமம் எந்த வகையிலும் குறைந்து போயிருக்காது , விருது வாங்க உரித்தான நாவல் இதுவென்று படித்தவர் பெருமையுடன் சொல்லும் நாவலிது . இலக்கிய உலகில் , தமிழின் சிலப்பதிகாரம் தான் உலக இலக்கியத்துக்கே ஒரு சாமானியனை கதை நாயகனாக்கி அவனுடைய நிறைகுறைகளை கதைக்களமாக்கி வெற்றிகொண்ட மாபெரும் நாவல் . அந்த பாரம்பரியத்தை யாமம் போன்ற நாவல்கள் இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பதில் மிகையில்லை . யாமம் வீட்டு இட்லி போல் ஒரு மொழிக்குள் அடைந்துவிடாமல் பாய் கடை பிரியாணி போல் உலகமெங்கும் சென்றடைய தமிழ் ஆர்வலர்கள் முயற்சி செய்ய வேண்டும் .
யாமம் இரவின் வாசம்...ரகசியம், இன்பம், சுகம், திகில், ஆச்சர்யம், அதிசயம், என இரவின் அத்தனை குணங்களையும் தன் நறுமணமாய் கொண்டது யாமம் எனும் அத்தர்.
மனிதர்களுக்குள் இருக்கும் அந்தரங்கங்களை ரகசியமாக தீண்டி அல்லது கொட்டி கவிழ்த்து நறுமணங்களை பரவ செய்கிறது கதை.
இயற்கையான நிலமும் அம்மக்களும் அடைந்த வணிக மாற்றம். அதன் தேவை உருவான காலகட்டம் இன்று நம் சிந்தனைக்கும், செயல்களுக்கும் வாழ்வுமுறையை நோக்கியும் நம்மை திருப்பிய காலம். மேற்குலக மக்கள் மேல் இன்று வரை நமக்கிருக்கும் பிரமிப்பிற்கும் ஈர்ப்பிற்கும் அடித்தளம் இட்ட காலம். ஆங்கிலேயர்களோடு நமக்கிருந்த உறவை, யார் யாரெல்லாம் அவர்களை சுலபமாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்கள் என்பதை இயல்பான நடையோடு எதார்த்தமாக சொல்லி செல்கிறார் ஆசிரியர். ஆங்கிலேயர் வருகையும் மதரா பட்டினம் உருவான கதையையும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வாயிலாக எதார்த்தமும் கற்பனையோடும் பின்னி சொல்கிறது கதை.
அப்துல் கரீம் கனவில் வரும் மூதாதையர் பக்கீரின் வழிகாட்டுதல் மூலம் யாமம் என்கிற அத்தர் தயாரித்து பெரும் செல்வந்தர் ஆகிறார். தலைமுறை தலைமுறையாக ஆண் சந்ததியினருக்கு கைமாறும் அத்தர் செய்யும் ரகசியம் கரீமிற்கு மூன்று மனைவிகள் இருந்தும் ஆண் குழந்தை இல்லாததால் அவரோடு அழிந்து போய்விடுகிறது. அதனால் ஏற்படும் மனசோர்வில் குதிரை பந்தயத்தில் சூதாடி எல்லா செல்வங்களையும் இழந்து வீட்டை விட்டு ஒரு நாள் காணாமல் போகிறார். மூன்று மனைவிகளும் அவருடைய ஒரு பெண் குழந்தையோடு ஒருவேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படுகிறார்கள். மீன் விற்று, சாம்பிராணி தூள் தயாரித்து, பிஸ்கட் கம்பெனியில் வேலை பார்த்து கடைசியில் காலரா நோய் ஒருவரை காவு வாங்கிவிட திசைக்கொன்றாய் பிரிந்து போகிறார்கள்.
ஒரு பக்கம் யோசிக்கையில் கரீமை போலவே எண்ணற்ற பொக்கிஷங்கள் ரகசியம் என்கிற போர்வையில் அழிந்திருக்கலாம் மற்றுமொரு பக்கம் யோசித்தால் அது இருந்தாலும் அதனால் ஆக சிறந்த காரியம் ஒன்றுமில்லை...வாழ்க்கை எது, யார் இருந்தாலும் இல்லையென்றாலும் அதன் போக்கில் புது புது ரகசிய திறப்புகளோடு, வரவுகளோடு போய் கொண்டு தான் இருக்கிறது. இதை தான் யாமமும் சொல்கிறது.
கரீமின் குடும்பத்தின் எழுச்சியையும், செல்வாக்கையும் பின்பு அதன் வீழ்ச்சியையும் வறுமையும், இடை இடையே அப்பெண்களின் போராட்டங்களையும், யாரையும் சார்பற்று சுவைக்கும் வெற்றியையும் அது தரும் பரவசத்தையும் சொல்லி செல்கிறது கதை.
காலரா தடுப்பூசியை கண்டு மக்கள் பீதி அடைவது அதை வைத்து மிரட்டப்படுவதும் இன்றைய நிலையில் தட்டம்மை தடுப்பூசி பிரச்சனையின் பின்னணியில் படிக்கும்போது இன்னும் சுவையாக விரிகிறது கதை.
சென்னையின் ஏழு கிணறு போராட்டங்கள்...ஆங்கிலேயர்கள் சென்னையை ப்ளாக் டவுன் வைட் டவுன் என்று சுவர் எழுப்பி பிரிக்கிறார்கள். வைட் டவுனில் உள்ள ஏழு கிணறில் தண்ணீர் எடுப்பதை இந்தியர்களுக்கு தடை செய்கிறார்கள். அதற்கெதிராக போராடுகிறார்கள். பின்பு காலராவின் பரவலால் எலி கிணற்றில் விழுந்து அரசியல் செய்ய சென்னையில் இருக்கும் ஏழு கிணறு இந்தியர்கள் வசமாகிறது.
மற்றொரு கதை:
ஆங்கிலேயரின் நிலவரைபட ஆய்வு பணியில் இருக்கும் பத்ரகிரி, தாய் இறந்தத��ம் மறுமணம் செய்து கொள்ளும் தந்தையை வெறுத்து தன் தம்பியோடு சித்தியிடம் வளர்ந்தவன். தன் தம்பி திருச்சிற்றம்பலத்தை தந்தை ஸ்தானத்தில் இருந்து படிக்க வைத்து மணம் முடித்து கணிதத்தில் மேற்படிப்புக்கு லண்டன் அனுப்புகிறான். அவன் படிப்பு முடித்து திரும்பி வரும் இடைப்பட்ட காலத்தில் அவன் தம்பி மனைவி தையல் நாயகியோடு உறவு கொண்டு ஒரு குழந்தையும் பெற்று அதுவும் இறந்துவிடுகிறது. பத்ரகிரியின் மனைவியும் அவனை விட்டு குழந்தையோடு தன் பிறந்தவீட்டில் அடைக்கலமாகிறாள். கணிதத்தில் புகழ் பெற்று நாடு திரும்பும் திருச்சிற்றம்பலம் அதிர்ச்சி அடைந்து ஒன்றும் புரியாமல் திகைக்கிறான். தன் அண்ணனின் குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு திரியும்போது தன்னை தன் அண்ணன் தூக்கி கொண்டு திரிந்ததே அவனுக்கு ஞாபகம் வருகிறது. அந்த குழந்தையை தன் அண்ணன் தன்னை வளர்த்ததை போல வளர்ப்பதே தன் எதிர்கால வாழ்க்கை என ஆக்கிக் கொள்கிறான்.
இதில் பத்ரகிரியின் மனைவி விசாலத்திற்கும் தையல்நாயகிக்கும் இடையே இருக்கும் உறவை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். இளவயது திருமணங்கள் அது தரும் முதிர்ச்சிகள், வேலைக்காக அந்நிய நாட்டிற்கு சென்றிருக்கும் கணவனை பிரிந்திருக்கும் மனைவி. விசாலத்தால் மறைமுகமாக அவளுக்கு ஏற்படும் peer pressure அதை உபயோகித்து கொள்ளும் பத்ரகிரி. இறுதியில் பாதுகாப்பின்மையையும் குற்ற உணர்ச்சியையும் அடையும் தையல் மனச்சிதைவுக்கு ஆளாகிறாள்.
பத்ரகிரி எனக்கு “யு.ஆர். அனந்தமூர்த்தியின் சம்ஸ்காராவின் நாயகன் பிராணேசாச்சாரியாரை” ஞாபகப் படுத்துகிறான். சமுதாயத்தால் உண்டாக்கப்பட்ட எல்லா நியாய தர்மங்களையும் சட்ட திட்டங்களையும் பின்பற்றி நல்லவனாக இருக்க முயற்சிப்பவன் ஒரு பலகீனமான தருணத்தில் கட்டுடையப்பட்டு தான் யார் என்பதை அவனே அறிகிறான். அவனும் அவன் தந்தையும் அவன் தம்பியும் வேறு வேறு அல்ல.
திருச்சிற்றம்பலத்தின் லண்டன் வாழ்க்கை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் லண்டனை நம் கண் முன் நிறுத்துகிறது. அப்பொழுது இருந்த இனவெறி பிரச்சனை, ஒடுக்கப்பட்டவர்களின் வலிகள், சட்டதிட்டங்கள், நம்மீதான அவர்களின் பார்வை என்று அன்றைய நாட்களை நம் முன் உலவ செய்கிறது எழுத்து நடை. திருச்சிற்றம்பலத்தின் லண்டன் தோழனாக வரும் சற்குணம் ஒரு பிளேபாயாக காண்பித்து பின்பு அவனே ஒடுக்கப்பட்டவர்களின் மீதான வன்முறைக்கு எதிராக போராடி சிறைக்கு செல்கிறான். அதேவேளையில் லண்டனின் பகட்டும் பண்பாடும் தனக்கானதல்ல என நினைக்கும் திருச்சிற்றம்பலம் பின்பு தானும் அப்பிரபுக்களில் ஒருவனாக மாற முயற்சிக்கின்றான்.
சமூகம், கட்டுப்பாடு என்பதிலிருந்து முரண்பட்டு நிற்பவர்களே பெரும்பாலும் அடக்கமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களே அந்த கட்டில் இருந்து விடுபட போராடுகிறார்கள் அவர்களுக்கே அதன் வலி புரிவதாகிறது.
மற்றொரு கதை:
பங்காளிகளோடு தன் குடும்ப சொத்துக்காக கோர்ட்டில் போராடும் கிருஷ்ணப்ப கரையாளர். இதில் முக்கியமான கதாபாத்திரம் அவர் காமம் கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கும் ஆங்கிலோ இந்திய பெண்ணான எலிசபெத். வழக்கு முடிவில் தன் குடும்ப சொத்து பறிபோய் விடுமோ என்கிற பயத்தில் பங்காளிகளோடு சமாதானம் பேசி மேல் மலையை எலிசபெத்தின் பெயரில் வாங்கி விடுகிறார். அவளே ஆங்கிலேயர்கள் அம்மலையில் தேயிலை பயிரிட்டு வியாபாரத்தை பெருக்குவதற்கு துவக்கமாகிறாள்.
இன்னொரு கதை:
சதாசிவ பண்டாரம். கிட்டத்தட்ட அவரை பற்றின குறிப்புகள் ஒரு மனவளர்ச்சி பாதிப்பு ஏற்பட்ட நபரை பற்றிய சித்தரிப்பையே தருகிறது. சிறுவயதிலேயே வீட்டை துறந்து பண்டாரமாகிறார். தாய் கெஞ்சி கூப்பிட்டும் மனமிரங்காமல் கோயில் வாசலிலேயே அமர்ந்திருக்கும் பண்டாரம் பின்பு அங்கு தன்னையே பார்த்து கொண்டிருக்கும் நாயை நீலகண்டனாக நினைத்து அதன் பின்னாடியே செல்கிறார். அது சாப்பிட்டால் சாப்பிட்டு தூங்கினால் தூங்கி அதனோடே பயணித்து ஒரு கிராமத்திற்கு வருகிறார். அங்கு ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட அவள் கர்பமாகிறாள். குழந்தை பிறக்கும் சமயம் அந்த நாய் அங்கிருந்து செல்ல இவரும் வேறு வழியில்லாமல் அவளை விட்டு செல்கிறார். நாய் அவரை பட்டினத்தார் சமாதிக்கு கொண்டு சேர்க்கிறது அங்கே இருக்கும் மடத்தில் பண்டாரம் கதவை பூட்டி கொண்டு மறைந்து விடுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு திறந்து பார்ப்பவர்களுக்கு அங்கிருந்து அகல் விளக்கு ஒளிர்கிறது, அத்தரின் வாசனை கமழ்கிறது.
பண்டாரத்திற்கு இப்படி ஒரு முடிவை காட்டியது ஏன்…? ஒருவேளை இப்படிப்பட்டவரை வாழும் வரை பைத்தியமாகவும் இறந்ததும் மகானாகவும் மக்களால் பார்க்கபடுவார்கள் என்பதற்க்காக இருக்கலாம்...இருந்தாலும் அவர் முடிவை பற்றின ஒரு சிறுகுறிப்பை எங்காவது சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது. மகானாக முடித்தது அதற்குமேல் சிந்திக்காமல் அப்படியே ஏற்றுகொள்வது போலாகிறது.
தையல்நாயகியிடம் உறவு கொண்டு தாயாக்கி அவளுக்கு மனசிதைவு ஆனதும் பிரியும் பத்ரகிரியும், கிராமத்தில் ஒரு பெண்ணிடம் உறவு கொண்டு தாயாக்கி பிரிந்து நாயின் பின் செல்லும் பண்டாரமும் ஒருவராகவே தெரிகிறார்கள். ஒருவிதத்தில் தையலும் பண்டாரமும் கூட மன முதிர்ச்சியில் ஒன்றே.
உப்பளத்தில் தன் சித்தியோடு வளரும் க்ரீம் குடும்பத்தின் கடைசி பெண் வாரிசு, கடைசியில் யாருமில்லா சித்தி வீட்டில் திண்ணையில் படுத்திருக்கும் பத்ரகிரி, தனியாக அனைத்தையும் நினைத்து மண்டப திண்ணையில் அமர்ந்து விரக்தியில் அழும் திருச்சிற்றம்பலம், குடும்பமும் இல்லாது குடும்ப சொத்தையும் எலிசபெத்திற்கு எழுதி வைத்துவிட்ட கிருஷ்ணப்ப கரையாளர், பண்டாரமாகி குடும்பஸ்தனாகி திரும்ப பண்டாரமான சதாசிவ பண்டாரம் என ஒவ்வொரு கதையும் தனி தனி கதையாகவும் இருக்கிறது ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி பார்த்தால் சுவாரசியமும் தருகிறது.
அவ்வளவு எளிதாக என்னால் இந்த புத்தகத்தை கடந்த செல்லமுடியாது என்று நான் நினைக்கிறேன். நான் படித்த எஸ். ரா வின் முதல் புத்தகம் இது. அவர் முன்னுரையில் குறிப்பிட்டதை போல கதைகள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல நினைவுகளும் கற்பனையும் ரகசியமும் நிராசைகளும் வலியும் சந்தோசமும் ஒன்று சேர்ந்த தான் உருகொள்கின்றன அது தான் இந்த புத்தகம். இந்த புத்தகத்தில் நாண்கு கதைகள் உண்டு, அவை வெவ்வேறு தோற்றம் கொண்டது அதற்கு வெவ்வேறு வலிகல் இருக்கிறது.
இந்த புத்தகம் எந்த ஒரு genres குள்ளும் அடங்காதது. அவர் கூறுவதை போல இந்த புத்தகம் இரவை போல ரகசியமாகவம் ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கிறது.
இந்த புத்தகத்தின் மூலம் மனித உணர்வுகளை ஆழமாக புரிந்துகொண்டேன். எஸ். ரா வை போல இரவின் ஆழம் அறிய ஆசை கொள்கிறேன்.
Can't stop thinking about those characters and those things happened to them. I just felt as I want to ask the author why this happened to them. It was a good read. 4.5/5
எஸ். ராமகிருஷ்ணனின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக சொல்வேன் இந்த நாவலை. திருச்சிற்றம்பலம் அப்படியே ராமானுஜனை ஞாபகப்படுத்தி இருந்தார். பத்ரகிரி, தையல், பண்டாரம் மற்றும் நாய், கரீம், வகிதா, சுரையா மற்றும் சந்திபா , மேல்மலை என அத்தனை கதாப்பாத்திரங்களும் மனதில் பலநாட்கள் நிற்கக்கூடியவை. வரலாறு புனைக்கதை(Historical Fiction ) என்று எடுத்துக்கொண்டாலும் நிறைய விஷயங்களில் முரண் உள்ளது. எல்லா இந்திய கதாப்பாத்திரங்களும் கற்பனை பெயர்கள்தான். ஆனால் ஆங்கில பெயர்களில் பெரும்பாலும் நிஜ பெயர்களை பயன்படுத்தி இருக்கிறார். உதாரணமாக லாம்டன் சர்வே பார்ட்டி தொடங்கியது 1802ல். பத்ரகிரி அந்த பார்ட்டியில் இருக்கிறார். லூயிசா மேரிபிஎல்ட் (Louisa May Merrifield ) தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது 1953ல். பத்ரகிரியின் சகோதரர் லண்டனில் இருக்கும்போது இந்த தூக்கு தண்டனை நடைபெறுகிறது. ஒரு 150 வருடங்கள் இடிக்கிறது. ஆனாலும் கதையின் ஓட்டத்தில் இது ஒன்றும் குறையாக தேறியவில்லை . சற்குணம் எதோ போராளியை ஞாபகப்படுத்திகிறார். யார் என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.
*யாமம்* *********** எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்பான இந்நாவல், Tagore Literary விருதினை பெற்றுள்ளது. இவரின் எழுத்து வகை தனித்து அறியகூடிய ஒன்று, அதாவது, மரத்திலிருந்து இலை உதிர்ந்து பூமியை நோக்கி வரும் பயணத்தில் எப்படி எந்தவொரு கட்டுப்பாடு,விதிகளுக்குள் சிக்காமல், தன்போக்கில் மிக மெல்லிய சோகத்துடன் பூமியை வந்து சேரும். அது போன்றதொரு உணர்வை தரும், இவரை வாசிக்கையில். அத்தகைய உணர்வு இந்நாவலிலும் ஏற்பட்டதில் வியப்பில்லை.
ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு கதை உண்டு, அக்கதையையும் அதன் வரலாற்றையும் தேடி அறிந்து, அதனைத் தழுவி எழுதப்பட்டதாகவே இந்நாவலை பார்க்கிறோம்.
1800களின் மத்தியில் ஆங்கிலேய ஆட்சிக்கிடையே மதராபட்டணம் என்னும் சென்னை, அதனை ஒட்டிய பகுதிகள், மற்றும் லண்டனிலும் நடைபெறுவதாக கதைகளம் அமைந்திருக்கிறது.
"யாமம்" எனப்படும் வாசனைத் திரவியம்(அத்தர்), கதைமாந்தர்களின் வாழ்வில் ஒரு மௌனசாட்சியாக கதைநெடுகிலும் வந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு அத்தியாயமும் கதைமாந்தர்களின் தொடர் சிறுகதையை போல விவரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, முதல் அத்தியாயத்தில் வருபவருக்கும், அடுத்த அத்தியாயத்தில் வருபவருக்கும் தொடர்பு இருப்பதில்லை, ஆனாலும் சமகாலத்தில் நடக்கிற கதைக்களமே. முறையே இவர்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை, அத்தியாயப்படி.
கதைமாந்தர்களாக,
*அப்துல் கரிம்/ரஹ்மானி/வகிதா/சுரையா/சந்தீபா *பத்ரகிரி/திருச்சிற்றம்பலம்/விசாலா/தையல்நாயகி/நங்கை சித்தி/சற்குணம் *சதாசிவ பண்டாரம்/நீலகண்டம் என்கிற நாய் *கிருஷ்ணப்பா/எலிசபெத்
மேலும்,
*சென்னையில் காலரா தாக்கத்தால் பல்லாயிரம் மக்கள் மடிந்தது. *மேல்மலை எனப்படும் நீலகிரி மலைகளை தேயிலை தோட்டங்களாக ஆங்கிலயேர்களால் மாற்றப்பட்டது. *உலகையே ஆண்ட லண்டன் நகரானாலும், தொழிலாளர் புரட்சிகள் நடைபெற்றது. *மதராபட்டண வறுமைச்சூழல் என உண்மைச் சம்பவங்களை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. மேலும், சென்னையிலுள்ள சில இடங்களின் பெயர்காரணங்களும் இக்கதையில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
எஸ்.ரா அவர்களின் இப்புத்தகம், நிச்சயம் பலரின் மனதிலும் அடர்ந்த வாசத்தை ஏற்படுத்தத் தவறாது.
கிழக்கிந்திய கம்பனி இந்தியாவில் வணிகம் செய்ய உரிமம் பெற்றது முதல் மீனவ கிராமமாக இருந்த தற்போதைய சென்னை ஆங்கிலேயர்களால் எவ்வாறெல்லாம் உருவாக்கம் செய்யப்பட்டது என்பதை சுவாரசியமாக விவரிக்கும் புத்தகம் இது.
ஆங்கிலேயர்களில் ஒரு சாரார் தொலைநோக்கு பார்வையுடன், அரிவுக்கூர்மை கொண்ட இந்தியர்களை கௌரவபடுத்தியும் உடன் வைத்துக்கொண்டும், புரட்சி செய்தவர்களை சிறைபடுத்தியும் ஒரு இலக்கை நோக்கியே அவர்களின் பயணம் இருந்தது. தன்னுடைய சொந்த நாட்டிலும் அவர்கள் உழைக்கும் மக்களுக்கு போதுமான வசதிகளோ ஊதியமோ கொடுத்திருக்கவில்லை. தொலைநோக்கு பார்வை கொண்டு சிந்தித்து செயல்படுபவர்களின் வாழ்க்கை மேம்படுவதும் அப்படி அல்லாதவர்களின் உழப்பு அதிகமாக சுரண்டப்படுவதும் வாசிக்கையில் புரிகிறது. அது ஆங்கிலேயர்களாக இருந்தாலும் சரி இந்தியர்களாக இருந்தாலும் சரி .
இந்திய நிலவியல் வரைபடத்தை உருவாக்க ஒரு சர்வே குழு பரங்கி மலையில் தொடங்கியதை இந்தியரின் வாழ்க்கையுடன் ஒரு கதை, தேயிலை தோட்டம் உருவான கதை, நாயின் பின்னால் உரை சுற்றி அலையும் ஒரு பண்டாரத்தின் கதை, சூதாட்டத்தாலும் காலராவாலும் சிதைந்து போன ஒரு குடும்பத்தின் கதை என இந்த நான்கு கதைகளைக் கொண்டு மதரா பட்டிணத்தை சுற்றி இந்த புத்தகம் செல்கிறது.
இருளின் நறுமணத்தையும், அழகையும் எழுத்தின் மூலம் கடத்தியிருக்கிறார் ஆசிரியர்.
For some reason it was a difficult book to read. Thought the athar "yamam" is going to be part of all stories but nightime and a sadness is what common in all stories. A sad sense of loss stayed with me even after finishing the book. Couldn't shake off a feeling of "what's the point in life"
Set in the backdrop of British era, the story has a fragrance named “ Yamam” as the central theme, through which S Ramakrishnan beautifully breezes through the lives of a Muslim family, a British lady, the life of a Tamil youth who assists a British, involved in activities which later lead to certifying Mt. Everest as world’s highest peak, all set in Chennai. We also have Pandaram and his Neelakandan here. There is love, lust, betrayal, all inextricably told with history– the infamous circus fiasco in Chennai, the cholera deaths, the ice house history to name a few.
The flash back of Badhragiri and Elizabeth, though told in single episode just pierces our heart, vindicating that the helpless continue to be exploited, whatever be their nationality.
வரலாற்றை ஒரு கதையாக படிக்கும் போது கிடைக்கும் அனுபவத்திற்கு இணையானது எதுவுமில்லை.மதராசபட்டிணம் உருவானதையும் அது வளர்ந்ததையும் அழகிய வரலாற்று புதினமாக்கியிருக்கிறார்.பூர்வகுடிகளை விரட்டி விட்டே இந்நகரம் உருவாக்கப் பட்டுள்ளது அதனாலோ என்னவோ இன்னும் இந்நகரம் அவர்களை நகரத்திற்கு வெளியிலோ அல்லது ஏதாவது இடுக்குகளிலோ கொண்டு போய் போடுகிறது.அன்று வெள்ளையர்கள் black town, White town என்று பிரித்திருந்திருக்கிறார்கள் ஆனால் இன்று அது போன்ற வெளிப்படையான பிரிவுகள் இல்லையென்றாலும் அதிகாரம் உள்ளவர்கள் வாழும் பகுதிக்கும் அதிகார மற்றவர்கள் வாழும் பகுதிக்கும் ஒரு மெல்லிய கோடு இருக்கவே செய்கிறது.
Yamam is an astounding work of Ramakrishnan. The art of fiction takes us to the Madras and its life during 1800s. Lambdton Survey, Cholera Pandemic, First Tea estate, Brahmin women converted to Christianity, First tea plantation in India all these real incidents are blended along with some fictional story into a perfect cocktail.
This book is filled with emotions. Continuous text with lesser conversations, it is a serious kind of book. The many stories it carried are sure to grip the reader with its great character depictions. One fine book in the recent times.
The starting was not so interesting but then the book turned out to be brilliant. A beautiful portrayal of the life journey of the characters. The impact is still fresh even after so many days. Must read for those who love to read about life journeys.
ஆசிரியர் - எஸ். ராமகிருஷ்ணன் தேசாந்திரி பதிப்பகம் 408 பக்கங்கள் நாவல்
ஒரு ஊரின் வரைபடம் வேண்டும் என்றால் அந்த ஊரின் எழுத்தாளனை தான் நாம் கேட்க வேண்டும். ஏனெனில் அவன் ஒருவன் மட்டுமே அந்த ஊரை அங்குலம் அங்குலமாக அளந்தும், அனுபவித்தும், தனக்குள் ஆழமாக புதைத்து வைத்திருப்பான். இப்படி ஒரு கிராமமோ, ஒரு நகரமும் ஒருவன் நினைவில் இருந்தால் அது சாத்தியம். ஆனால் அதுவே ஒரு நாடு முழுவதும் ஒருவன் இப்படி தனக்குள் வரைபடமாக வரைந்து வைத்திருக்கிறான் என்றால் அது அசாதாரணம். அப்படி இந்தியாவையே தனக்குள் அளந்து, புதைத்து வைத்திருப்பவர் தான் எஸ்ரா. காலச்சக்கரத்தில் பின்னோக்கி சென்று அங்கு வாழ்ந்த மனிதர்களையும் அவர்கள் மண்ணையும் அவர்கள் உணர்வுகளையும் அப்பட்டமாக அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் இந்த நாவலில். இது எப்படி சாத்தியம்? ஒருவேளை இவர் கூடுவிட்டு கூடுபாயும் வித்தை அறிந்தவரோ? அல்லது காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் செல்லும் இயந்திரம் ஏதேனும் உள்ளதோ? எஸ் ரா விற்கு மட்டுமே அது வெளிச்சம். யாமம்- மனித மனங்களை மயக்கும் ஒரு வகை வாசனை திரவம். இந்த தலைப்பு இக்கதைக்கு மட்டுமல்லாமல் எஸ் ரா வின் எழுத்துக்கும் பொருந்தும்.
பிரிட்டிஷ் வணிக கப்பல் இந்திய கரையை தொடுவதோடு கதை தொடங்குகிறது 1600 களில். ஒரு முகலாய மன்னனின் சுயநலத்தால் இந்தியாவையே ஆங்கிலேயர்கள் கையில் தாரை வார்த்து கொடுப்பதில் தொடங்கி 200 ஆண்டுகால கதை இந்த நாவல். இதனை கதை என்றழைப்பதை விட குறுங்காவியம் என்றே அழைக்கவேண்டும். இதனுள் நான்கு வெவ்வேறு கதைகள் வேறு வேறு திசையில் சென்றாலும் அவற்றை இணைக்கும் ஒரே புள்ளி மதராபட்டினம் மட்டுமே. அந்த கதைகளுடன் சேர்ந்து கிழக்கு இந்திய கம்பெனியின் கோட்டையான மதராபட்டினமும் நம் கண் முன் விரிகிறது. யாமம் என்ற வாசனை திரவியம் தயாரிக்கும் கரீமும் அவனது மூன்று மனைவிகளும் எப்படி இந்த மதராபட்டினம் மண்ணில் வாழ்ந்து வீழ்ந்து இறுதியில் கரீம் சொத்து இழந்து காணாமல் போக, மூத்த மனைவி காலராவில் இறந்து போக, மீதி இரண்டு மனைவிகளும் தன் சொந்த ஓர் சென்று பஞ்சம் பிழைக்க, அவன் யாமம் வடித்த ஒற்றை செங்கலில் ஒட்டிய அதன் வாடையுடன் அவர்கள் கொத்தடிமைகளாக உப்பளம் சென்றடைகிறது அவர்கள் கதை. அப்பாவின் அக்கிரமத்தால் அம்மாவை இழந்து, தன் நங்கை சித்தியின் துணையோடு அரும்பாடு பட்டு தன் தம்பி திருச்சிற்றம்பலத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு சென்று, மணம் முடித்து, கணித மேற்படிப்புக்கு லண்டன் நகரம் அனுப்பிவைத்து சந்தோசமாக மதராபட்டினத்தில் வாழ்ந்து வந்த பத்ரகிரி ஒரு கட்டத்தில் தன் தம்பியின் மனைவி மேல் சபலம் கொண்டு தானும் சீரழிந்து தன் தம்பியின் கனவையும் சீரழித்து இறுதியில் அவன் சொந்த ஊருக்கே ஒரு நாடோடியாக சென்றடைகிறான். மதராபட்டினத்தில் உள்ள எலிசபெத் என்ற சட்டைக்காரிக்காக தன் பரம்பரை சொத்து அனைத்தையும் விட்டு கொடுத்து தனக்கென ஒரே ஒரு மலையை மட்டும் வாங்கிக்கொண்டு அதையும் அந்த பெண்ணிற்கே எழுதி கொடுத்துவிட்டு தன் காட்டில் தானே ஒரு துறவியாக வாழ தொடங்குகிறார் கிருஷ்ணப்பா கரையாளர்.அவருக்கு தெரியவில்லை வருங்காலத்தில் அந்த மலை தான் தமிழகத்தின் முதலும் பெரியதுமான தேயிலை தோட்டமாக மாறப்போகிறது என்று. தன்னை பெற்ற தாய் பிச்சை கேட்காத குறையாக தன்னை நோக்கி கெஞ்சியும் மண்டியிட்டு புலம்பியும் தன் சிறு வயதிலே துறவு பூண்ட பண்டாரம். தான் தினமும் வணங்கும் சிவபெருமான் தான் நாய் ரூபத்தில் தனக்கு காட்சியளித்துள்ளார் என்று நம்பி அந்த நாய்க்கு நீலகண்டம் என்று பெயரிட்டு அதன் பின் சென்றே தன் வாழ்க்கையை கழித்து இறுதியில் மதராபட்டினத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு அறையில் தன்னை தானே அடைத்துக்கொண்டு அரூபமாக மறைந்து விடுகிறார். இந்த நான்கு கதைகளில் வரும் மாந்தர்களும் எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளவேயில்லை. ஆனால் இந்த நான்கு கதைகள் மூலம் எஸ் ரா நம் வாழ்வின் நான்கு முக்கிய உணர்வுகளை விளக்குகிறார். பேராசை, சபலம் , அமைதி, ஆன்மீகம். இந்த நான்கு நம் அனைவர்க்குள்ளும் உள்ளவைகளே, ஆனால் அதன் வெளிப்பாட்டின் அளவுதான் ஒருவரிடம் இருந்து மற்றொருவரை வேறுபடுத்துகிறது. இந்த நான்கும் வாழ்க்கை வண்டியின் நான்கு சக்கரங்கள் போல அளவுக்கு மீறாமல் இருந்தால் அந்த வண்டியும் அதன் பயணிகளும் பயணத்தை சீராக பயணிக்க முடியும்.
இரவு ஒரு கிழட்டு குதிரை போல அலைந்து கொண்டிருந்ததாகத் தொடங்கி நாவல் முழுவதும் இருட்டும் அதில் தொலைந்து விட்ட மனிதர்களுமாக விரிகிறது கதை.
இரவை உரித்துக் கொண்டே போகலாம். நல்லவர்களாக இருந்த பலர் கெட்டவர்களாக உருமாறுவார்கள். ஒழுக்கம் சற்றே வழுக்கும். நெறிமுறைகள் நகர்ந்து கொள்ளும். சபலங்கள் கண்விழிக்கும்… இரவு மனதின் விருப்பத்துக்கு நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை உடையதாக இருக்கிறது. வெளிச்சம் குறைவது பலருக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.
ஞானிகளுக்கோ அதுதான் தத்துவார்த்த சிந்தனையைச் செதுக்கும் நேரமாக இருக்கிறது.
நாவலில் அப்துல் கரீமின் கனவில் வந்து பக்கீர் சொல்கிறார்.. “”கரீமே… சொல்லின் வழியாக இரவை அறிந்து கொள்ள முடியாது. பகலும் இரவும் ஒன்றுக்கொன்று எதிரானதும் அல்ல, உறவானதும் அல்ல. பகல் தீட்டும் சித்திரங்கள் யாவையும் இரவின் கரங்கள் அழித்து மறுஉருவாக்கம் செய்கின்றன.”
ஐந்து நாவல்களை கலைத்துப் போட்டுச் சேர்த்தது மாதிரியான உத்தியொன்று நாவலில் கையாளப்பட்டிருக்கிறது.
இந்த நாவல்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் தங்கள் அடுத்த நாவல் அத்தியாயத்தின் கதாபாத்திரங்களோடு ஒருபோது கலப்பதில்லை. முழுநாவலிலும் மறந்தும்கூட அது நடந்ததாகத் தெரியவில்லை.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரயில் தடம்போல போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இதை ஒரு நாவலாக மாற்றுவது இரவு… யாமம். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் இரவின் தரிசனமான காமம்.
முதல் கதையில் வரும் பிரான்சிஸ் டேவும் கிளாரிந்தா என்ற வேசையும்.
இரண்டாவதில் வரும் யாமம் என்ற அத்தர் தயாரித்து விற்கும் அப்துல் கரீமும் அவரது மூன்று மனைவிகளும்.
மூன்றாமதில் வரும் கிருஷ்ணப்ப கரையாளரும் எலிசபெத் என்ற வேசையும்.
நான்காவதில் வரும் பத்ரகிரியும் விசாலாவும், திருச்சிற்றம்பலமும் தையல் நாயகியும்.
ஐந்தாவதில் வரும் நீலகண்டம் என்னும் நாயைப் பின்தொடரும் சதாசிவ பண்டாரமும் கனகாவும் என
காமம் மெல்லிய கண்ணுக்குத் தெரியாத இழையால் கட்டப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இவற்றை ஒரு நாவலாக்குவது அதுதான்.
இந்த ஐந்து கதைகளிலும் வாரிசு தேவைக்காக, தனிமையை நிரப்புவதற்காக, இச்சைக்காக, பரிதாபத்துக்காக என்று காமம் வெவ்வேறு மனச்சித்திரமாக இந்த நாவல் முழுதும் உணர்த்தப்பட்டிருக்கிறது.
நாவலில் அதன் கவித்தனத்தோடு ஆங்காங்கே தரப்பட்டிருக்கும் சரித்திர ஆதாரங்கள் பிரமிப்பானவை.
மனித திட்டங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே இருக்கிற எதார்த்தத்தின் வலிகளுக்குச் சான்றாக இந்த எல்லாக் கதைகளிலும் ஊடாகச் செல்லும் ‘யாமம்’ என்ற அத்தரும் அதை விடவும் சுகந்தம் மிக்க ‘யாமம்’ என்ற இரவுமே சாட்சி.
நான்கு கதை களம் கொண்ட இந்த நாவல் இரவின் அமைதி மற்றும் அழகு பற்றியும் அதன் இரகசியம் பற்றியும் ரம்மியமாக வர்ணனை செய்கிறது. 1800 களில் மதராசபட்டினம் உருவான வரலாறும், பின்பு தொழில் வர்த்தகம் நடந்தேறியதைப் பற்றியும், தமிழர்களின் அன்றைய கலாச்சாரம், பண்பாடு, மருத்துவம், ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் என கலாச்சாரத்தை முற்றிலுமாக பேசியுள்ளது.
மேலும் வாசனை திரவியங்களின் விவரிக்க முடியாத நறுமணம் பற்றியும் கவிபாடியுள்ளது. நான்கு வெவ்வேறு குடும்பங்கள் சந்திக்கும் துயரங்கள் இன்பங்கள் அனைத்தும் மதராசபட்டினம் என்ற ஊரைச் சுற்றியே வலம் வருகிறது. இதைப் படித்த பின்பு எனக்கு 1800 களில் இருந்த தமிழ்நாடு குறித்த ஆர்வம் மேலோங்கியுள்ளது. மேலும் அன்றைய இங்கிலாந்தின் கலாச்சாரம், காலநிலை, உணவு, மக்கள், அங்கு இந்திய தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.
அபு கரீம் மற்றும் அவரது மனைவியர், பத்ரகிரி மற்றும் அவரது மனைவி விசாலா, தையல் நாயகி, கிருஷ்ணப்ப கரையாளர், எலிசபெத், சதாசிவ பண்டாரம், நீலகண்டம், திருசிற்றம்பலம் மற்றும் சற்குணம் ஆகியோரின் கதைகளை பிண்ணிப் பிணைக்கப்பட்ட அழகான நாவல் இது. இக்கதையை படிக்கும் போது Netflix-ல் நான் பார்த்த ரவீந்திரநாத் தாகூர் anthology கதைகளின் நினைவு பின்னணியில் இழையோடிக்கொண்டே இருந்தது. நிச்சயமாக இந்நாவலையும் ஒரு அழகான anthologyயாக Netflix/Amazon Prime-ல் எடுக்கலாம். இந்நாவலுக்கு தாகூர் இலக்கிய விருது எதற்காக கொடுத்தார்கள் என்று படித்தப்பின்தான் விளங்கிற்று. எஸ்ராவின் எழுத்துக்களை சஞ்சிகைகளில் படித்ததுண்டு, இதுதான் என் முதல் புத்தக அனுபவம்.
It has madras as the central theme. The stories include things happened around 1800's in madras. There are four different stories spiraling out around the place.
Various historical events happened around the time like the survey of India which started around the time, the cholera break out, Ice export from England where mentioned in the novel.
The book starts at a very slow pace with a philosophy of how one of the protagonist was started preparing akthar. After the first 75 pages the stories moved a at good phase. It was emotional on many instance.
எஸ். ராவின் எழுத்துகளில் எப்போதும் வடியும் ஆழ்மனதின் வெறுமையும்,கவலையும் துக்கங்களும் நிரம்ப கொண்டு மணக்கிறது யாமம். ஒரே நாவலில் ஐந்து தனி தனி கதைகளை மதுராப்பட்டினத்தின் வரலாறுகளையும் உடன் இணைத்து ஆச்சரியப்படும் அளவிற்க்கு படைத்திருக்கிறார். "இரவை தவிரத் தன் துக்கத்தை பகிர்ந்து கொள்ள யார் இருக்கிறார்கள்.😍🖤
இரவின் மௌனமான இருப்பை போல நாம் செய்யும் ஒரு காரியத்தின் தொடக்கம் எப்படி மௌனமாக முளை விடுகிறது என்று சொல்கிறது யாமம்.வாழ்க்கை எப்படி போனாலும் இரவு நம்முடனேயே வருகிறது. பண்டாரத்தின் கதை சொல்லும் செய்தி என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி இருக்கிறேன். ஏனோ விளக்குகள் நிறைய இருப்பதனால் நான் இன்னும் இரவையே அறியவில்லை என்று இந்த புத்தகத்தைப் படிக்கும்போது தோன்றியது.
ஒரு நல்ல வாசிப்பு. அத்தரின் நறுமணத்தினால் இணைக்கப் பட்ட வாழ்வுகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதைத் தொடரும் தனித்துவமான கதை மாந்தர்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. பண்டாரம், எலிசபெத், பத்ரகிரி, கரீமின் மனைவிகள் என நாவல் பரந்து விரிகிறது.
எஸ்ராவின் வெயில் பற்றிய எழுத்துக்கள் அவர் கரிசல் காட்டுக்காரர் என்பதை நினைவுபடுத்திக் கொண்டிருந்தன.
What a fantastic piece of work! The amount of research, the narrative style, the front page picture everything is world class. This is the second book after upapandavam by S Ra and he is such a brilliant writer. Wish there are good translations that would help him get world fame!!
The technique of using historical facts into the novel worked out very well. The life in earlier years of Madras well described. After finishing the novel, the characters linger in my mind for quite some time.
அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளுடன் யாமத்தை அணுகியதால் மிஞ்சியது சிறிய ஏமாற்றமே!
எதிர்பார்ப்பு:
சென்னையின் 350 வருட சரித்திரத்தை அழகியல் மிளிரும் நடையில் மறக்க முடியாத மாந்தர்களினூடே பதியும் ஒரு வரலாற்றுப் புதினம்.
நிகழ்ந்தது:
பெரிதாக ஆர்வத்தைத் தூண்டாத கதைப்போக்கிற்க்கு ஈடுகட்டும் அளவிற்கு அற்புதமான மொழிநடையும், சுவாரஸ்யமான பாத்திரங்களும் நம் கவனத்தைத் தக்க வைக்க இல்லாததால் அவ்வப்போது நம் பொறுமையை சோதிக்கிறது.
சொற்களால் செதுக்கப்பட்ட கதாகாரணம் நம்மை கதையினுள்ளே செலுத்துகிறது. அத்தர் வியாபாரி அப்துல் கரீம், ஒரு பண்டாரம், அரசு வேலையில் இருக்கும் பத்ரகிரி, லண்டனுக்கு படிக்கச் செல்லும் அவன் தம்பி திருச்சிற்றம்பலம் & மேல்மலையில் தங்கும் கிருஷ்ணப்பா ஆகியோரைச் சுற்றி யாமம் சுழல்கிறது.
ஆங்கிலேயர்கள் இந்தியா வரக் காரணமான மிளகு தட்டுப்பாட்டிலிருந்து, மதராபட்டிணத்தை கிழக்கிந்திய கம்பெனி உருவாக்குவது வரை மேலோட்டமாக வரலாற்றை பதிவு செய்து விட்டு முழு மூச்சாக யாமம் நம் மாந்தர்களின் வாழ்க்கையை கையாள்கிறது.
சென்னை நகரம் மனிதர்களை உருத் தெரியாமல் மாற்றும், கருணை காட்டாத, சொத்துக்களை சுகங்களை விழுங்கும் ஒரு ராட்சஸ black hole போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாகவே அந்நாட்களில் குறுகிய உலகங்களில் உழன்ற மனிதர்களின் வாழ்வில் இருந்த வெறுமை, சலிப்பு, பொழுதுபோக்கிற்கான பஞ்சத்தை நினைக்க இப்போது அச்சமாக உள்ளது.
கணித ஆராய்ச்சி செய்ய லண்டன் செல்லும் திருச்சிற்றம்பலம் கணித மேதை ராமானுஜத்தை நினைவு படுத்துகிறான்.
இந்தியாவை முழுவதுமாக வரைபடத்திற்க்குள் சிறைப்படுத்த மேற்க்கொண்ட முயற்ச்சிகளைப் போல பலருக்கும் தெரியாத சில ஆச்சரியங்கள் ஆங்காங்கே யாமத்தில் உண்டு.
பண்டாரத்தைப் பற்றி விவரிக்கையில் முழுவதுமாக படர்க்கையில் விவரிப்பது மிகவும் எரிச்சல் அடையச் செய்தது.
Colonialism மக்களை எவ்வாறு பாதித்தது, சென்னை எவ்வாறு ஒரு பெரிய நகரமாக உருவெடுத்தது போன்ற பெரிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஏமாற்றினாலும்; கதையின் முடிவில் இழைந்தோடும் மெல்லிய சோகம் யாமம் நம்மை பாதித்ததற்க்கான அறிகுறி.
எதிர்பார்ப்பு ஏதும் இன்றி அணுகினால் யாமம் ஏமாற்றாது என்றே நினைக்கிறேன்.
It took me two hours to type this. *Long, painful, melancholy sigh*
இரவுக்கு வாசனை உண்டோ, கனவிற்கு வாசனை உண்டோ, மனிதனுக்கும் வாசனை உண்டோ, இவை அனைத்தும் விட ஒரு நகருக்கு வாசனை உண்டோ. இவை அனைத்துக்கும் யாமம் பதில் சொல்கிறது. யாமம் என்றால் வாசனை என்று இந்நாவல் சொல்கிறது அதைப்போலவே இந்நாவலில் வரும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு வாசனை தருகிறது. கதையும், கதாபத்திரங்கள்யும் வெவ்வேறு விதமாக சென்றாலும் அவை ஒன்று இணைப்பது இந்த யாமம் என்னும் பொருளே. ஆனால் துவக்கத்தில் இருக்கும் வேகம் நடுவில் வலுவிழந்து விடுகிறது போல் ஒரு உணர்வு. காரணம் சில விசயங்களையும், கதைகளையும் பாதியிலே விட்டதுபோல தோன்றுகிறது. அதற்கான காரணமும் தெரியவில்லை. இருந்தும் திரு. ராமகிருஷ்ணன் எழுத்தை படிக்கும்போது இவை அனைத்தும் மறந்துவிடுகிறது. நினைவும், புனைவும் கலந்து வரும் யாமம் என்னும் வாசனையை அழகாக தந்துள்ளார் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள்.
பி.கு. இதில் வரும் திருச்சிற்றம்பலம் என்னும் கதாபாத்திரம் சில சம்பவங்களில் கணித மேதை ராமானுஜரை நினைவுப்படுத்துகிறது.
Close to an epic. May be I am not good at grasping things but really dont get why author wanted to add "Night tales" to every sub story in this. All these sub stories- Karim, Badragiri, Krishnappa and Elizabeth, Pandaaram and Neelagandam says something about greed/controllable yet often erring characteristics. And barring the latter rest scripts the downfall. Read.
A time travel with ethereal detail and intense sensuality. The details and flow keep you riveted to the book, the grip not slacking even at the very end. The human touch of S.Ra. is evident all over and an experience which is very lasting and sensual. The concept of Smell and Night intermingling to denote the senses and their bindings is a beautiful way of narration.