எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே. என்ன காரணமாக இருக்கும்? இந்த ஆதாரக் கேள்வியை முன்வைத்து இந்தப் புத்தகத்தை கட்டமைத்திருக்கிறார் என். சொக்கன். காந்தி மீது ஒரு சாரார் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சியின் அடிப்படை என்ன? அந்த வெறுப்பு உணர்ச்சி கோபமாகவும், பின் வெறியாகவும் மாறிய தருணம் எது? கோட்ஸேவின் வருகை, சதித்திட்டங்கள், படுகொலைக்கான திட்டமிடல்கள், படுகொலை என்று பதைபதைக்க வைக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து கண்முன் விரிகின்றன.
வழக்கு தொடர்பான வெவ்வேறு ஆவணங்களின் அடிப்படையில் காந்தி கொலை வழக்கு எவ்வாறு விசாரிக்கப்பட்டது, எப்படிப்பட்டச் சிக்கல்களை எதிர்கொண்டது, எப்படித் தீர்ப்பளிக்கப்பட்டது போன்றவற்றைப் புத்தகத்தின் இன்னொரு பகுதி விவரிக்கிறது.
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தெளிவான எழுத்தும் ஆழமான ஆய்வும் நிறைந்த தன்னுடைய நூல்களுக்காகத் தமிழகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளவர். புனைவு, வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.
"காந்தியை கொன்றது இந்துவா முஸ்லிமா என்பது மவுண்ட்பேட்டனுக்கு அன்று தெரியாது. ஆனால் காந்தியை கொன்றது ஒரு இந்து என்று அறிவிப்பு வெளியிட்டார். மிக பெரிய மதக்கலவரம் அன்று தடுக்கப்பட்டது."
காந்தியை கொன்ற கோட்ஸேவையம், இந்து மகாசபா(?!) மற்றும் கோட்ஸேவின் கூட்டாளிகள் பற்றியும் காந்தி கொலை வழக்கை ஆராய்ந்து எழுதப்பட்ட புத்தகம். :)
A very good book. The author has given much info about the assassination background. Even where the killing weapon originated and how it came to the hands of Godse., the people behind the killing, the court proceedings etc.
காந்தியின் படுகொலை தொடர்பில் நிறைய விடயங்களை எளிய மொழிநடையில் திரட்டித் தருகின்றார் ஆசிரியர்.தனிநபர் துதி பாடாமை,தேவையற்ற விடயங்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமை மற்றும் கால ஒழுங்கில் குழப்பமின்றிய வகையில் நிகழ்வுகளை தொகுத்து தந்தமையால் திருப்திகரமான வாசிப்பனுபவமொன்றை பெறக்கூடியதாக இருந்தது :)
காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து, காவல்துறை உயர் அதிகாரி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கேட்டுக்கொண்ட போது காந்தி அதை மறுத்து விட்டார்.
மகா ஆத்மாவின் மனதில் என்ன இருந்திருக்கும் என்பதை நான் இவ்வாறு புரிந்துகொண்டேன்.
"பாதுகாப்பை பலப்படுத்தினால் தன்னோடு சேர்ந்து நிறைய உயிர்களும் பறிபோகலாம் என்ற எண்ணத்தில்தானோ?"
காந்தியின் அஸ்தி ஏற்க்கனவே இந்தியாவின் அனைத்து நதிகளிலும் கலக்கப்பட்டுவிட்டதால். தனது அஸ்தியை பாவப்படாத சிந்து நதியில் கலக்குமாறு கேட்டுக்கொண்டார் கோட்ஸே. (காந்தியின் அஸ்தி, பாகிஸ்தானில் இருந்து பாயும் சிந்து நதியில் கலக்க அனுமதி கிடைக்கவில்லை)