Jump to ratings and reviews
Rate this book

ஜல தீபம் #3

ஜல தீபம் 3 [Jala Deepam]

Rate this book
க வர்னர் ஏஸ்லாபியிடம் நடந்த அந்த அரை மணிப்பேட்டி முழுவதும் உணர்ச்சிகளைப் பெரிதும் அடக்கிக் கொண்டும் தனது சித்தத்தில் ஓடும் எண்ணங்களைச் சிறிதும் காட்டாமலும் வெகு சாமர்த்தியத்துடன் தனது தூதுப்பணியை நிறைவேற்றிய இதயசந்திரன், கவர்னர் கடைசியாக பானுதேவியின் பெயரை உச்சரித்ததும் அத்தனை நேரம் கையாண்ட எச்சரிக்கையை அடியோடு உதறி முகத்தில் அதிர்ச்சி தாண்டவமாட, “என்ன, பானுதேவியா! ஷாஹுவின் மருமகளா!” என்று வினவினான், அதிர்ச்சியின் பிரதிபலிப்பு குரலிலும் பூரணமாக துலங்க.
கவர்னர் ஏஸ்லாபியின் உதடுகளில் புன்னகை விரிந்தது, கண்களில் விஷமம் சொட்டியது. “ஆம்” என்ற அவர் பதிலில் ஆயிரம் அர்த்தங்கள் தொனித்தன.
இதயசந்திரன் உணர்ச்சிகள் கட்டுமீறிச் சென்றதால், “மகாராஷ்டிர அரச மகளிர் இத்தகைய நடன விருந்துகளுக்கு வரமுடியாதே. அது அரசகுல கட்டுப்பாட்டுக்கும் விரோதமாயிற்றே?” என்று கூறினான்.
கவர்னர் தமது ஆசனத்தைவிட்டு எழுந்திருந்து இதயசந்திரன் அருகில் வந்து அவனைச் சில விநாடிகள் உற்று நோக்கினார். பிறகு சற்றுச் சங்கடத்துடன் கூறினார். “இதயசந்திரா! சாதாரணமாக ஒரு கவர்னர் சொல்லக் கூடிய விஷயமல்ல இது; இருப்பினும் நீ பெரிய வீரன். ஒரு மகாவீரனின் தூதுவன் என்பதால் கூறுகிறேன்...” என்று. பிறகு கவர்னர் சற்று நிதானித்தார்.
“சொல்லுங்கள் பிரபு!” என்று கேட்டான் இதயசந்திரன் அவர் நிதானத்தைத் தாங்க முடியாதவனாய்.
“ஷாஹுவின் மருமகள் தனித்து வரவில்லை இந்த விருந்துக்கு...” என்று கூறி மறுபடியும் ஏதோ சிந்தித்தார்.
கவர்னர் தன்னிடமிருந்து எதையோ மறைக்கப் பிரியப்படுகிறார் என்பதை உணர்ந்த இதயசந்திரன், “கவர்னர் பிரபு! எதுவாயிருந்தாலும் சொல்லுங்கள், மறைக்க வேண்டாம்” என்று சற்று வலியுறுத்தி வினவினான். வினவிய 'குரலில் பணிவுமிருந்தது, கெஞ்சலுமிருந்தது. கெஞ்சலில் பெரும் சந்தேகமும் ஊடுருவிக் கிடந்தது.
கவர்னர் அவன் உணர்ச்சிகளின் திருப்பம் எதையும் கவனிக்கத் தவறவில்லையென்றாலும், தான் கவனித்ததற்கு அறிகுறியாக முகத்திலோ பேச்சின் தோரணையிலோ எந்தவித மாறுபாட்டையும் காட்டாமல், “பானுதேவியுடன் இரண்டு தோழிகளும் வருகிறார்கள் விருந்துக்கு” என்றார்.
“அது இயற்கைதானே” என்றான் சற்று ஆசுவாசப் பெருமூச்சு விட்ட இதயசந்திரன்.
கவர்னர் தொடர்ந்தார், “அது இயற்கைதான். ஆனால் ஹிந்து மகளிர் வெள்ளைக்காரர் விருந்துக்கும் நடனத்துக்கும் வருவது அபூர்வம். எங்கள் நடன முறைக்கும் ஹிந்துக்களின் வாழ்க்கை நோக்குக்கும் வேறுபாடுகள் உண்டு. அதுவும் ஒரு ஹிந்து அரசகுல மகள் வெள்ளைக்காரர் விருந்துக்குப் போனாளென்றால் வதந்தி விரும்பத் தகாததாயிருக்கும். அப்படியிருக்க இந்த விருந்துக்கு பானுதேவி வர ஒப்புக்கொண்டது விசித்திரம். தோழிகள் உடன் வருவது சம்பிரதாயம். அதனால் சமுதாய ஆட்சேபணை அதிகமாக நீங்கிவிடா...”'. இந்த இடத்தில் சற்றுப் பேச்சை நிறுத்தினார் கவர்னர், தான் சொல்வதன் பொருள் தமிழன் இதயத்தில் நன்றாக உறைக்கட்டுமென்று.
அவர் சொல்வதன் பொருள் முழுவதும் விளங்கிற்று இதயசந்திரனுக்கு. மன்னர் ஷாஹுவின் மருமகள் வெள்ளைக்காரர் விருந்துக்குச் சென்றாள் என்றாலே ஹிந்துஸ்தானத்தில் பெரும் அபவாதம் அவளுக்கு ஏற்பட்டுவிடும் என்பதை அவன் சந்தேகமற உணர்ந்தான். அத்தகைய அபவாதம் ஏற்படுமென்று கவர்னருக்குத் தெரிந்துமா கண்ணியவானான கவர்னர் அவளை விருந்துக்கழைத்தார் என்று சிந்தித்தான் கனோஜியின் உபதலைவன். அவர் அழைத்தாலும் இத்தகைய அபவாத அலுவலுக்கு பானுதேவி எப்படி ஒப்புக்கொண்டாள் என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவும் செய்தான் அவன்.
இத்தகைய சிந்தனை அவன் மனத்திலோடுவதைப் புரிந்துகொண்ட கவர்னர் கேட்டார்: “ஒரு பெண்ணுக்கு அபவாதம் விளையக்கூடிய செயலில் நான் ஏன் இறங்கினேன். எதற்காக அழைப்பு விடுத்தேன் என்று யோசிக்கிறாயா?” என்று.
வியப்பு மண்டிய இதயசந்திரன் விழிகள் அவரை நோக்கி எழுந்தன. “ஆம் பிரபு! அதைத்தான் யோசிக்கிறேன்” என்று உதிர்த்தன சொற்களை அவன் உதடுகள்.
“நானாக அழைக்கவில்லை அரச மகளை. அவள் வேண்டுகோளின் மேல் அழைப்பு விடுத்தேன்” என்றொரு பெரு வெடியை எடுத்து வீசினார் ஏஸ்லாபி.
“நீங்களாக அழைக்கவில்லையா?” இதயசந்திரன் கேள்வியில் வியப்பு இருந்தது

480 pages, Paperback

14 people are currently reading
662 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
141 (44%)
4 stars
93 (29%)
3 stars
67 (21%)
2 stars
13 (4%)
1 star
5 (1%)
Displaying 1 - 14 of 14 reviews
Profile Image for Kumaran Vellaisamy.
37 reviews38 followers
January 24, 2015
சிங்காரவேலன் திரைப்படத்தில் ஒரு மயிரைக் கொடு என்றொரு வசனம் வரும். அதைப்போலவே ஒரு சில வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி சாண்டில்யனிடம் கூறினால் போதும் போலிருக்கிறது. மகாராஷ்டிரத்தின் சில வரலாற்று நிகழ்வுகளை வைத்துக்கொண்டு ஐந்து முக்கிய கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி சிறிதும் சுவாரஸ்யம் குறையாமல் காதல் உணர்வுகளும் காம உணர்வுகளும் வறண்டுவிடாமல் நல்ல வரலாற்றுக் கதையை கூறியிருக்கிறார். இதை ஒரு வரலாற்றுக் கதை என்பதைவிட இதயசந்திரன் என்ற ஒரு சாதாரண மனிதன் சிறந்த மாலுமியாக, படைத்தலைவனாக வரலாற்றுச் சிறப்புமிக்க பாத்திரமாக உருவாகிறான் என்பதை கூறும் நாவல் எனலாம். ஜலதீபம் மஞ்சுவினால் என் மனதில் அணையாத தீபமாக இருக்கும்
Profile Image for Jeni Gabriel.
52 reviews3 followers
February 24, 2023
This 3rd part isn’t a drag like 2nd part. Interesting plot stirs up anticipation even though the same old story of the beginning and the reason of hero’s presence and fate keeps repeating as thoughts in most chapters. Not a mere fictional dialogues in the actual history, it reminds us of the dedication and the conscience of every character given their circumstances towards their nation. Out of the three parts of the story, I cherish this the most.
Profile Image for Tamil Isai (தமிழிசை).
34 reviews5 followers
October 20, 2021
Twist and turns, Love, Affection, Respect as always in sandilyan books. Manju & Idhayachandran character is superb. Idhayachandran was very good man in keeping his promise. At the end the story is superb and I'm satisfied with the time I've spend for this book.
Profile Image for Aargee.
163 reviews1 follower
July 8, 2024
Many similarities between...
Many similarities between கடல் புறா & ஜல தீபம் like both are the names of their respective ships. Their purposes are different, one for கடாரம் another for Maharashtra, both heroes are almost pirates, both have several affairs with women, happy endings. The last 4-5 chapters of ஜல தீபம் could've been much shorter without a need to drag unnecessarily, nevertheless very much enjoyed the novel
This entire review has been hidden because of spoilers.
Profile Image for MANISH.
69 reviews1 follower
December 20, 2024
Sandilyan is extremely talented in weaving his stories with intricate details and interesting characters around real important historical events.
This is a historical novel that revolves around Kanhoji Angre and his time in India around early 18th century but follows fictional Idhayachandran who is tasked with finding a missing young prince and ends up meddling in far bigger matters that concerns nations and can alter the history of India
2 reviews
April 13, 2025
Fitting finale with all loose ends closed. After the slow 2nd book, pace picked up in this book and was engaging till the end.
Profile Image for Antony Jerline.
27 reviews
July 10, 2023
It was very interesting with unexpected twists and turns. On the whole I enjoyed reading this book.
Profile Image for Chiththarthan Nagarajan.
344 reviews9 followers
October 17, 2015
Best historical fiction to know about Indian pirate Sarkhel Kanhoji Angre with the unexpected twist and turns of love, war, affection, respect, betrayal.

Sandilyan is the king of classic historical fiction. I don't have a luck to meet him, but I'm blessed to read his words.
Profile Image for Saravanan.
356 reviews20 followers
December 7, 2012
இதயசந்திரனால் தேடபட்டவன் என்னானான்? மஞ்சுவின் பிறப்பின் ரகசியம், கனோஜி ஆங்கரேவுக்கும் மகாராஷ்டிர அரசுக்கும் இடையேயான போர், கனோஜி ஆங்கரேவுக்கும் மகாராஷ்டிர அரசுக்குமான உடன்படிக்கை யாரால் எப்படி ஏற்படுகிறது? என்பதையெல்லாம் எதிர்பார்க்க முடியாத திருப்பங்களோடு இக்கதையை முடிக்கிறார்.
Displaying 1 - 14 of 14 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.