Jump to ratings and reviews
Rate this book

கள்ளிக்காட்டு இதிகாசம் [kallikattu ithikasam]

Rate this book
Kallikkattu Edhihasam (the epic of Kallikkadu, in literal translation) is one of his novels. It tells the agonising tale of a marginal farmer of a riverbed region of the Theni belt in southern Tamil Nadu. Kallikattu Ithikasam" - a confluence of various emotions like sadness, sufferings and depression—crammed his mind for more than four decades. Finally, when it exploded, the natives of `Kallikadugal' found their biographies in the book. But with a silver lining. The novel won him the Sahitya Akademi award for Best Literary Work in 2003.

Hardcover

First published January 1, 2001

807 people are currently reading
10213 people want to read

About the author

Vairamuthu

55 books674 followers
Vairamuthu was born to Ramaswamythevar and Angammal of Mettur in a middle-class family. When he was four, the village gave way to Vaigai Dam and the family moved to Vadugapatti village, a farming community in Theni near Periyakulam.

The ambience of the village is said to have inspired him to write poems. According to him, Tamil and Rationalist movements of the sixties stimulated his poetic zeal. The speeches of Periyar & Anna, the writings of Karunanidhi and the works of eminent poets like Bharathi, Bharathidasan and Kannadasan and the life in the countryside shaped the young poet's thinking. At the age of fourteen, he was inspired by Thiruvalluvar's Thirukkural to write a Venba compilation of poetry, strictly adhering to the Yappu grammar rules of Tamil poetry.

He joined Pachaiyappa's college in Chennai where he was acclaimed as the best speaker and poet. While in his second year of B. A. and barely nineteen years of age, Vairamuthu published his maiden anthology Vaigarai Megangal. It was prescribed for study in Women's Christian College. Thus, he achieved the distinction of a student poet whose work was taken into the curriculum while he was still a student.

His second work, Thiruththi Yezhudhiya Theerpugal, in pudhu kavidhai (free verse) form was published in 1979. He made his film debut in the succeeding year when he set lyrics for Bharathiraja's Nizhalgal.

source : http://en.wikipedia.org/wiki/Vairamuthu

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1,151 (49%)
4 stars
736 (31%)
3 stars
229 (9%)
2 stars
106 (4%)
1 star
117 (5%)
Displaying 1 - 30 of 167 reviews
Profile Image for Karthick Subramanian.
19 reviews20 followers
May 6, 2013
ஆண்டவனும் , அரசாங்கமும் கைவிட்ட காட்டுல உழைப்பையும் , வைராக்கியத்தையும் நம்பி வாழ்ற ஒரு பெரிய மனுசனோட கத. பெத்ததுகளுக்கு உழைச்சே வத்தலாப்போன "பேயத்தேவர்" பத்துன கத .வாழ்க்கையோட கடைசி காலம் வர மண்ணுகூடையும் மனுசன்கூடையும் முட்டி முட்டி மூகருந்து போனவரு கத . இதை படிக்கும் போதும் , முடிக்கும் போதும் கண்ணீருடன் , கனத்த மனதுடனும் தவித்தேன். மிகப்பிடித்த வசனங்களில் ஒன்று :" அரசாங்கத்துக்கு வாய்தான் இருக்கு காது இல்ல "
Profile Image for Shyam Sundar.
112 reviews40 followers
February 3, 2014
கள்ளிக்காட்டு இதிகாசம்! - கண நேரம் கூட சந்தோசம் என்று ஒன்று எட்டி பாக்கத ஒரு மாமனிதரின் கதை !!
என்னுள் மீள முடியாத ஒரு ஏக்கத்தை ஏற்படுத்திய ஒரு புத்தகம் !

கதையில் பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லை ! அரிவாளோடு திரியும் வில்லன் இல்லை ! ஆனாலும் படிப்பவருக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு படைப்பு !

பேயாத்தேவர் - விதி இவரின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் சதி செய்கின்றது என்பது தான் கதைக்களம் !!

அழகம்மாள் இறந்த செய்தி கேட்டு பேயாத்தேவரை நான் மிகவும் கலங்கிவிட்டேன் !!
மனைவியின் அருமையை சொல்லிப் புலம்பும் பகுதி நெஞ்சை வருடுகிறது!!

இறுதி அத்தியாயத்தை படித்த பொழுது என்னை அறியாமல் கண்களில் நீர் !

ஒவ்வொரு சிறிய விஷயங்களை கூட எவவளவு அழகாக வர்ணித்திருக்கிறார் ! புத்தகம் படித்தது போன்ற ஒரு உணர்வே இல்லை ! கள்லிகாட்டில் வாழ்ந்தது போன்று இருந்தது !
Profile Image for Manivannan Venkatasubbu.
2 reviews23 followers
May 6, 2014
இது மனிதர்களாலும் தெய்வங்களாலும் கைவிடப்பட்ட ஒரு நாகரிகத்தின் கதை. தனக்கென எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாத சமூகம் ஒன்றின் நிதர்சனக் குறிப்பு. இந்த நாவலின் பல இடங்களில் இன்னதெனப் புரியாத ஒரு மென்சோகம் தொண்டையில் அடைக்கும். நாவலின் முதல் அத்தியாயத்தில் பேயத்தேவர் பசுவிற்கு பிரசவம் பார்ப்பதில் இருந்து ஆரம்பிக்கும் இந்த கதை இறுதியில் பேயத்தேவரின் இறப்போடு முடியும் போது எப்பேர்ப்பட்டவனும் கலங்கித்தான் போவான். ரொம்ப நட்பு, கொஞ்சம் கோபம், கொஞ்சம் பாசம், துக்கம், வலி, இத்துடன், ஒற்றை முருங்கை மரமும், ஒரு ஓட்டு வீடுமாய் இருக்கிற பேயத்தேவரின் வாழ்க்கை இது. அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
Profile Image for Ananthaprakash.
84 reviews2 followers
August 4, 2024
கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து

"இந்த மண்ணில் ராஜாக்களுக்கு இதிகாசம் உண்டு. குடியானவனுக்கு இதிகாசம் உண்டோ? இது ஒரு குடியானவனின் இதிகாசம்."

அப்படி ஒரு கள்ளிக்காட்டின், உழுதுண்டு வாழும் விவசாயிகளின், அங்கு வாழும் மனிதர்களின், வாழ்வும், உழைப்பும், வறுமையும், வஞ்சமும், சுயநலமும் அதனிலும் செழித்து வாழும் அவர்களின்  நட்பும், காதலும், அன்பும், அறமும் தான் கள்ளிக்காட்டு இதிகாசம்.

1958 இல் வைகை அணைக் கட்டுமானதிற்காக, அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் இருந்த சிற்றூர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட துயரங்களை மையமா வைத்து எழுதப்பட்டது தான் இந்த நாவல்.

தன் வாழ்நாள் முழுதும் துன்பமும், துயரமுமாய் துரத்தப்பட்டு அதனுடன் போராடி எப்படியேனும் மீண்டு வரத் துடிக்கிற பேயத்தேவர் என்கிற மகத்தான மனிதனின், கள்ளிகாட்டு விவசாயின் தீராத வாழ்க்கை போராட்டமும். அணைக் கட்ட ஏதுவாக இருக்குங்கிற ஒரே காரணத்திற்காகத் தலைமுறை, தலைமுறைகளாக நடந்து, திரிந்து, உழுது, உண்டு, வாழ்ந்து, மாண்ட - மண்ணையும், வாழ்க்கையையும் மனசுக்குள்ள பொதச்சுட்டு பிழைப்புக்காக இடம் பெயர்ந்த மனிதர்களின் வாழ்வும், அவலமும் தான் இந்த நாவல்.

படிச்சு முடிச்சதும்  நம்மள தொத்துகிற இனம் புரியாத ஒரு சோகம் கொரஞ்சது ஒரு ரெண்டு, மூணு நாளைக்காச்சும் நம்மள சும்மா விடாது.

கள்ளிக்காட்டின் வறட்சியும், வெம்மையும், அதன் கதகதக்கும் கானல் அலையும், அங்க ஊரித் திரியும் ஓணான், ஓந்தி, அரணைகளும், அடைஞ்சு நிக்கும் பொத்த கள்ளி, நெருஞ்சி, பிரண்டைகளும், கத்தாழங்காடும் அதன் பிசுபிசுப்பும், ஆவாரஞ்செடியின் வாசமும், கரை ஒட்டிய கருவேலங்காடும், பெத்த பிள்ளை போல வளர்க்கும் மாடுகளும், முருகாயியின் கானப்பயிறு துவையலின் ருசியும், அழகம்மாவின் கோழிச்சாரின் கைப்பக்குவமும், மொக்கராசின் பாசமும், அழகம்மா சேலையின் கதகதப்பும், வாசமுமே - இன்னும் என்ன விட்டு  நீங்காத போது அவர்களின் துயரம் மட்டும் அவ்வளவு எளிதா நீங்கிடுமா என்ன.

கள்ளிக்காட்டு மண் மாதிரியே அதன் மனிதர்களும். அதன் வெம்மை தாங்காது இறுகிக் கிடப்பது போல இறுகிக் கிடக்கும் மனங்களும், அப்போ அப்போ பெய்யுற மழையால் குளிர்ந்து இளகிப் போகிற மண் மாதிரி இளகிப் போவதுமாய் மனிதர்களும் அவர்களின் மனங்களும்.

அதன் இறுக்கத்தையும், தளர்வையும் தாங்குவது மட்டுமில்லாமல் தான் பெற்றப் பிள்ளைகளால் உழு படும் வலியையும் தாங்கிக் கொண்டு அதன் விளைவா விளைந்து நிக்குறே சின்ன சின்ன விளைச்சலைப் பார்த்து கொஞ்சம் பெருமூச்சு விட்டு எப்படியாது  எல்லாத்தையும் கரை சேத்துரனுமென்னு போராடுற பேயத்தேவரின் உழைப்பும், வைராக்கியமும் சொல்லிமாளாது.

கள்ளிக்காட கிடக்குறே பேயத்தேவர் வாழ்க்கையில் கொஞ்சம் நேரம் மட்டுமே வீசிட்டுப் போகிற தென்றலா வர வண்டி நாயக்கரும், அன்பா பாத்துகிட்ட அழகம்மாவும், அவரை அரணா காத்து நிற்கிற மொக்கராசும், முருகாயும் தான் ஒரே ஆறுதல்.

அழகம்மாவின் அன்பான கணவனா, தன் உசுற உறிஞ்சுக் குடிக்கிற மகள்கள் செல்லத்தாயி, மின்னல் மற்றும் மகன் சின்னுவுக்கு நல்ல தகப்பனா, மொக்கராசின் தாத்தாவா, முருகாயின் காவல் தெய்வமா, வண்டி நாயக்கரின் நண்பனா, பெற்றப் பிள்ளை மாதிரி மாடுகளைப் பாத்துகிற நல்ல குடியானவனா, கள்ளிக்காட்டை உழுதுண்டு வாழும் விவசாயியா, பிறந்த மண்ண இறுக்கிப் பிடிச்சுக்கிற மனுஷனா, வாழ்க்கை முழுக்க எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் துவண்டு விழாமல் உதறி தள்ளிட்டுப் போராடுகிற தன்னம்பிக்கைக் கொண்ட போராட்டகாரனா- என வியக்க வைக்கிறார் பேயத்தேவர் கதை நெடுகவும்.

வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டம் இருந்தாலும் துளிக் கூட கலங்காத பேயத்தேவர், தன் மனைவி அழகம்மா தனக்கு எவ்வளவு முக்கியமென்னு சொல்லி அழுது புலம்பி, கலங்கி நிற்கிற இடம் ஏற்படித்திட்டுப் போகிற வலியும், வேதனையும் மனசுல ஆறாத வடுவா மாறி நின்னுடுச்சு.

அத்தனை போராட்டத்தையும் கடந்து தன்னோடு சொந்த நிலமும் கை விட்டுப் போன அப்புறமும் தளராமல் வறண்ட நிலத்தையும் விளைச்சல் நிலமா மாத்தி எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சதுன்னு ஆசுவாசப்பட்டு நிமிர்ந்து நிற்கையில் கள்ளிப்பட்டிகுள்ளப் புயலடிச்ச மாதிரி வந்து நிக்குது சர்க்கார் வண்டி.

கடைசியில் கள்ளிப்பட்டிக்கும், சுற்று வட்டார கிராமங்களுக்கும், அதன் மனிதர்களுக்கும் என்ன தான் ஆச்சு? காலம் முழுக்க தன் குடும்பத்தைக் கரை சேர்க்க ஓடுன பேயத்தேவர் கடைசியில் கரை சேர்த்தாரா? அவ��ும் கரை சேர்ந்தாரா? காலம் பூராவும் மண்ணக் கிண்டி பொழப்பு நடத்தின பேயத்தேவரையும், அந்த மண்ணின் மனிதர்களையும் அந்த மண் காப்பாத்துச்சா என்பதெல்லாம் தான் மீதிக் கதை.

நாவலின் இறுதி அத்தியாயத்தை எழுதும் போது கண்ணில் நீரொழுக,  நீரொழுக எழுதியதா முன்னுரையில் எழுத்தாளர் சொல்லி இருப்பார். நிச்சயம் அந்த வலியின், கண்ணீரின் - கனத்தை நமக்கும் கடத்திட்டுப் போகிற ஒரு படைப்பு தான் இந்த கள்ளிக்காட்டு இதிகாசம்.
Profile Image for Kanarese.
133 reviews19 followers
September 1, 2022
1958ರಲ್ಲಿ ವೇಗೈ ನದಿ ನದಿಗೆ ಅಣೆಕಟ್ಟು ಕಟ್ಟಿ ಸುಮಾರು 12 ರಿಂದ 14 ಗ್ರಾಮಗಳು ಮುಳುಗಡೆಯಾಗುವ ಸಂದರ್ಭವೇ ಕಥೆಯ ವಸ್ತು. ಬೆಳೆದ ಮಣ್ಣಿನ ಬಗ್ಗೆ ಅವಿನಾಭಾವ ಸಂಬಂಧವನ್ನು ಅನಿವಾರ್ಯವಾಗಿ ಕಳಚಿಕೊಂಡು ಗೊತ್ತು ಇಲ್ಲದೆ ಹೊರಟ ಜನರ ದಾರುಣ ಪರಿಸ್ಥಿತಿ ಚಿತ್ರಿಸುವ ಕಥಾನಕ.
22 reviews2 followers
May 13, 2021
கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து நாம் பார்க்கும் நகரத்து கட்டிடங்களும் அணைகளும் பல அழிந்த கிராமகளின் கதைகளை தாங்கியே நிற்கின்றன அப்படி வைகை அணையின் அடியில் மறைந்திருக்கும் கிராமத்தின் கதையாகவே அமைகிறது கள்ளிக்காட்டு இதிகாசம். கதையின் நாயகனான பேய்த்தேவன் வாழ்வில் கணநேரம் கூட ஏட்டி பார்க்காமல் இன்பம் வஞ்சிக்கிறது. பேய் த் தேவன் வாழ்வில் நிகழும் சம்பவங்களை வேறும் கதை என்று கடந்து செல்ல முடியவில்லை மனத்திற்கு சிலநேரம் ஆறுதல் கூறிய பின்னே வாசிப்பை தொடர முடிகிறது. வாழ்ந்தால் பேய்த்தேவன் போல் வைராக்கியம் கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணமும் எழுகிறது!
Profile Image for Vaishnavi Natarajan.
8 reviews9 followers
October 6, 2013
As a lover, as a husband, as a father , as a devotee to his birth place, as a hard worker , as a guardian , as a model for perseverance....Very inspiring characterization of "PEYATHEVAR".

Yet another book that gives us the feeling of contentment...
Profile Image for Muthu Vijayan.
37 reviews14 followers
June 21, 2021
" இந்த மண்ணில் ராஜாக்களுக்கு இதிகாசம் உண்டு. குடியானவனுக்கு இதிகாசம் உண்டோ? இது ஒரு குடியானவனின் இதிகாசம் ".

மண் மணம் வீசும் இக்கதை,அனைவரது மனதையும் மிக இலகுவாக தொட்டு விடும் பண்பு கொண்டது.

தமிழ் தெரிந்த அனைவரும் பயில வேண்டிய இதிகாசம்...
1 review2 followers
February 15, 2014
ஒவ்வொரு வரியிலும் கிராமத்தில் நாமே வாழும் உனர்வு.
Profile Image for Dinesh.
128 reviews9 followers
August 23, 2021
கள்ளிப்பட்டியில் வாழ்ந்துவிட்டு வந்ததுபோல உணர்ச்சிப்பெருக்கோடு இந்த நூலை படித்து முடித்தேன். மனது பாரமாகி கண்கள் கண்ணீரால் நிறைந்துவிட்டது. எப்பேர்பட்ட படைப்பு!!
Profile Image for Arun A.
59 reviews10 followers
May 5, 2019
நாட்டுக்கு சுதந்திரம் வாங்க போராட்டம் பண்ணவங்க தியாகின்னா, பல ஊரோட பாசனத்துக்கும் குடிக்கிறதுக்கும் தண்ணி கிடைக்க தலைமுறை தலைமுறையாய் இருந்த ஊரைவிட்டு சொந்த வாழ்க்கையவே போராட்டம் எடுத்துகிட்டவங்களும் தியாகிகள்தானே! இந்த ஒத்த ஆளுக்கே (பேயத்தேவரு) இத்தனை கஷ்டம்னா, மொத்த ஊரும் பட்ட கஷ்டத்தை சொல்ல எத்தனை இதிகாசம் எழுதணும் !!

பழைய காதல் மனசில இருந்தாலும் புதுசா கட்டிக்கிட்டா அழகம்மா, கதையில அழகம்மாவோட அசைவோ அரவமோ அதிகமா இல்லைனாலும், பேயத்தேவரு நினைப்புலயே ரொம்ப அழகா தெரியிற அழகம்மா.. பொட்டை பிள்ளையா பிறந்து அட்டைப்பூச்சியா பேயத்தேவரை கடிக்கிற செல்லத்தாயி... பேருல வச்ச செல்லத்தை பிள்ளைமேலையும் வச்சி தன்னால முடிஞ்சதை செய்ற பேயத்தேவரு. நல்ல இடத்தில வாக்கப்பட்டு போயிட்டானு நினைக்கும்போதே, வெட்டியெறிஞ்ச வாழைமரம்மா வந்து நிக்கிற இன்னொரு மக மின்னலுனு... போதாகொறைக்கு ஒத்தை மகனா பொறந்து, வேதாளமா பேயத்தேவரு முதுகிலேயே தொங்குற சின்னு.... இத்தனை பேரு இருந்தும் எப்பவுமே பேயத்தேவரோட கஷ்டத்தில வயசுக்கேத்த வலியைத்தாங்கி நிக்கிறான் பேரன். மத்ததுகளுக்கெல்லாம் முத்து முத்தா பேரைவைச்சி, கஷ்டத்தில பங்குபோடுற பேரனுக்கும் மட்டும் "மொக்க"ராசு.... இத்தனை பேருக்கும் நடுவிலே பிறந்ததிலிருந்தே குத்துப்படும் முருகாயிங்கிற இன்னொரு சீவன் !!

இப்படி எத்தனையோ விதமா ஆளுகளோட க(னம்)தை நகரும் போதும், அவுக பேச்சை எழுத்தில படிக்க கஷ்டமா இருந்தாலும் திருப்பி திருத்தி படிச்சி புரிஞ்சிகொள்ளும் போதும், எப்படி அடிச்சாலும் எந்திரிச்சு நிப்பேன்னு எழுவதுவயசாளி ஒருத்தர் போராடும் போதும், புத்தகத்தின் பத்து பாகத்துக்கு ஒருமுறை அந்த பெரியவரோட மனசு ஒடைஞ்சு போறப்ப, தொறந்து மடையா நம்ம கண்ணில நீரு கொட்டும்போதும், எல்லாம் மோசம் போகலைப்பே நானும் இருக்கேன்னு அப்பப்ப வந்துபோற வண்டிநாயக்கரை பத்தி படிக்கும் போதும், இந்த புத்தகத்துக்கு இந்த அவார்ட் (Sahitya Academy) இல்லைனா வேற எந்த புத்தகத்துக்கு தரமுடியும்னு கர்வமா சொல்லத்தான் தோணுது...

சாதிமதங்களை கடந்து யாரையும் அதிகம் புண்படுத்தாமல் இப்படி ஒரு இதிகாசத்தை சொல்ல இவர் எத்தனை காலம் தவமிருந்தாரோ !!
"என்னை வைத்து தன்னை எழுதிக்கொண்டது வாழ்க்கை.. வாழ்க்கை என்பது காலம். நான் என்பது யார் !!" -- இங்கயே தொடங்கிரும் வைரமுத்துவின் வைர வரிகள்..!!!
Profile Image for N S MUTHU.
51 reviews7 followers
April 26, 2024
இது கவிஞர் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டு 2003 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருதினை பெற்ற புத்தகம்.

பொது நன்மைக்காக வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றும் போது ஒரு சில மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் மண்ணை விட்டும் சில நேரங்களில் வெளியேறும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். அம்மக்களின் வலியை தான் வைரமுத்து இப்புத்தகத்தில் மிக நேர்த்தியாக காட்டி இருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களும் சாதி பெயரை சுமந்து செல்வது சற்று நெருடலை ஏற்படுத்துகிறது.

இந்த புத்தகத்தினை வாசித்து முடிக்கையில் கள்ளிக்காட்டில் பயணம் செய்த உணர்வு ஏற்படுகிறது. கதையின் கதாபாத்திரங்கள் வலுவாக கட்டமைக்கப் பட்டுள்ளன. ஆகவே அவர்களின் வலியை வாசிக்கும் பொழுது நம்மால் உணர முடியும்.

வைரமுத்துவின் உரைநடையிலும் கவிதை நடை எட்டிப்பார்ப்பது அழகு சேர்க்கிறது. கதையில் வரும் அதிரடி திருப்பங்கள் கதையினை உணர்வு பூர்வமாக மாற்றுகிறது.

வட்டார வழக்குகளும் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் வாசிப்பதற்கு ஏதுவாகவே இருக்கின்றன.
2 reviews
Read
July 26, 2008
Its really superb books of vairamuthu......In that book the author described the difficulties of an village man.....the way he delivered the story is superb......The last pages of this book i saved my tear drops.....One of the greatest book....Every one Should read....
Profile Image for Sugan.
144 reviews38 followers
December 28, 2020
The book talks about migration. How migration affects people even if their life conditions are not that great. The story is about a farmer trying to make his ends meet by hard work. Then the government asks them to migrate since they want a dam to be built there.

The proposed dam is to provide drinking water to the city of Madurai and nearby towns. Its going to improve their life's and kill the life's of the village folks who have spent all their hard work in the land.

Providing a farmer an alternative land or money is not the same as his own land.
Profile Image for Sampath Kumar.
86 reviews33 followers
November 6, 2016
இந்த மனுசனோட ஒவ்வொரு புத்தகமும் ஒறைக்குதய்யா சுருக்குன்னு...

இன்றைய நாகரிகத் தமிழர் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம். வலியின் ஆழம் அறிய வழி காட்டும் புத்தகம். பட்டுமெத்தைக்காரர்களுக்குப் பகல் வெயில் சூடு காட்டும் புத்தகம்.

ஓர் சாமானியனின் இதிகாசம்.
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
July 25, 2020
கள்ளிப்பட்டியில பேய்த்தேவனும் பேரன் மொக்கராசுவும் மண்ணோட மல்லுக்கட்டி விவசாயம் செய்யறாங்க. இவுக வாழ்க்கையில துன்பம் பேய்யாட்டம் போட்டதன் விளைவு மனைவி அழகம்மாவின் இழப்பு, மகள் செல்லத்தாயின் மறுமணத்தில் போடுவதாக ஒத்துக்கொண்ட பதினைந்து பவுன் தங்கத்துக்காக கடன்வாங்குவது, மகன் சின்னு ஊதாரிதனத்தால மேலும் கடன்படுவது, பேய்த்தேவரயே நம்பி இருக்கும் முருகாயிக்காக மகள்களிடம் கண்ணீர் வடிப்பது, சின்னமக மின்னலு கணவன் வாட்டிகாரனை கொலை செஞ்ச கேசுக்கு செலவு பண்ண தோட்டத்த அடமானம் வச்சது, கடன்னுக்கு தோட்டத்த எழுதி குடுத்துட்டு அடுத்து காட்டுல கிணறு வெட்டி வெவசாயம் பாக்க முடிவு பண்ணி கிணறு வெட்ட காசி இல்லாம பேரன் மொக்கராசுவுக்கு மார்க்க சடங்கு வச்சு அதுல வந்த பணத்த கொண்டு தாத்தாவும் பேரனும் இருவருமாக கெணறு வெட்டி முடிச்சாக. இனி இதுல விவசாயம் பண்ணி கடனுக்கு இழந்த தோட்டத்த மீட்டாகனும் என வெறி கொண்டு உழைச்சாக.
இதுவரை பேய்யாட்டம் போட்ட சோதனை புயலாட்டம் போட தொடங்கியது சர்க்கார் வடிவில் இந்த புயலில் போய்தேவன் மட்டுமல்ல கள்ளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிரமாமும் இரையானது தான் இந்த கள்ளிக்காட்டு இதிகாசம். -கலைச்செல்வன் செல்வராஜ்.

கள்ளிக்காட்டு வாழ்கையின் சில துளிகள்,

மனிதனுக்கு மனிதர்கள் மட்டுமே தேவை என்பது இரண்டு பருவத்தில்: ஒன்று வாழ்த்தெரியாத இளம்பருவம்; இன்னொன்று வாழ்ந்து முடித்த முதுபருவம். இரண்டிலும் தனிமைப்படுத்தப்படுவதுதான் வாழ்வின் சாபம்.

நெல்லு நட்டா ரெண்டு நாத்துக்கு மத்தியில நண்டோடணும்; கரும்பு நட்டா ரெண்டு கரும்புக்கு மத்தியில நரியோடணும்; வாழ நட்டா ரெண்டு வாழைக்கு மத்தியில வண்டியோடணும்; தென்ன நட்டா ரெண்டு தென்னைக்கு மத்தியில தேரோடணும்.
‘நண்டூர நெல்லு
நரியோடக் கரும்பு
வண்டியோட வாழை
தேரோடத் தென்ன’
-சும்மாவா சென்னான் சொலவடை

‘ஒரு மாடு குடும்பங்காக்கும்; ஒன்பது மாடு குலங்காக்கும்’ என்பது விவசாய வாழ்வில் வேரோடிய நம்பிக்கை. ஒரு முருங்கைமரம்-ஒரு பசு-ஒரு வெட்டரிவாள் மூன்றுமிருந்தால் எண்பது சதுர அடியில் அறுபது வருடங்களைப் பத்து மைல் சுற்றளவில் வாழ்ந்துவிட்டுப் போய்விட முடிகிறது.

கள்ளிக்காட்டு வாழ்க்கை முறையில் ஆளை வெட்டுவது கூட அன்றாடம் என்று சகித்துக் கொள்வார்கள். மாட்டை வெட்டுவதை மன்னிக்கமாட்டார்கள். ஒரு கள்ளிக்காட்டு விவசாயி ஆட்டுக்கறி, கோழிக்கறி, பறவைக்கறி, பன்றிக்கறி,உடும்புக்கறி, எலிக்கறி கூடத் தின்னுவானே தவிர மாட்டுக்கறி தின்னமாட்டான்.

மாட்டை அடித்துத் தின்னுவது என்பது குடும்பத்தில் ஓர் ஆளை அடித்துச் சாப்பிடுவதுமாதிரி. எந்தக் கறிக்கும் மாட்டுக்கறி தாழ்ந்ததல்ல. ஆனால் மாட்டுக்கறி தின்ன மாட்டேன் என்னும் விரதம் மாட்டின் மீது அவன் கொண்டுள்ள பாசம்; விசுவாசம். தனக்குச் சோறு போடும் மாட்டைக் கூறுபோட விரும்பாது கள்ளிக்காட்டுக் கலாச்சாரம். மானம், வருமானம், சாப்பாடு, வீடு இதெல்லாம் விவசாயம் இல்லாமல் இல்லை. அந்த விவசாயமே மாடு இல்லாமல் இல்லை.

“ஏலா மூளி! எங்கலா ஒங்கப்பன் போடுற பத்துப் பவுனு. போலா... போயி வாங்கியாலா...”

சில பேர்தான் பிள்ளைகளைப் பெறுகிறார்கள்; பலபேர் பத்துமாதம் சுமந்து பிரச்சனைகளைப் பெறுகிறார்கள்.

“எனக்கு கல்யாணம் பண்ணி வை” - இவனுக்கு என்னாச்சோ? ஏதாச்சோ? எங்க ருசிகண்டானோ?

ஊதாரியானான்; ஊரோடு ஒட்ட மறுத்தான். தன் போக்கில் வாழத் தலைப்பட்டான். சட்டை கசங்காமல் சம்பாதிக்க ஆசைப்பட்டான்; கடைசியல் கஞ்சா விற்க ஆரம்பித்தான். அப்போதே பேயத்தேவர் உடைந்துபோனார். “ஒழச்சாத் தானப்பா ஒழக்கு நிறையும்” என்றார் அவர்.
“கழுத பேஞ்சா கம்மா நெறையப்போகுது?” என்றான் அவன்.
அவன் கள்ளச் சாராயமும் காய்ச்சுகிறான் என்று தெரிந்தபோது “போச்சே! என் வம்சம் போச்சே” என்று இடிவிழுந்த பனைமரமாய்க் கருகிப் போனார்.

‘மண்ணுந் தண்ணியுந் தாண்டா குடியானவன் கும்புடுற சாமி’ இது பேயத்தேவரின் கடவுட் கொள்கை.

இந்த மிளகாய்ச்செடி முதல்காய் காய்க்க எழுபதுநாள் ஆகும். நட்ட செடி முதலில் வேர் பிடிக்க வேண்டும். வாரம் ஒரு தண்ணீர் கட்டி மாதம் ஒரு களையெடுக்க வேண்டும். முன்வினைப் பயனாகவோ மூத்தோர் செய்த தர்மமாகவோ இந்த மிளகாய்ச்செடி தலை குளிர வேர்நனைய மசமசவென்று ஒருமழை பெய்யவேண்டும். இவ்வளவுமிருந்தாலும் இடையில் சீக்கடிக்காமல் இருக்கவேண்டும். பிஞ்சிறங்கும் காலத்தில் சூறைக்காற்று வந்து நாட்டாமை பண்ணாமல் இருக்க வேண்டும். காய்த்துப் பழமாகி வாரம் ஒரு எடுப்பு எடுக்கும் காலத்தில், எடுக்கும் பழம் வெறுந்தோல்காட்டிச் சிரிக்காமல் விதைக் கட்டுமானம் உள்ள பழமாக இருக்க வேண்டும். களத்தில் காயப்போடும்போது மழை நனைக்காமல் இருக்கவேண்டும். ‘சாக்குமூடை’ கட்டிச் சந்தைக்குத் தூக்கிப்போனால் விலை இருக்க வேண்டும். அன்றைக்குப் பார்த்துக் கடன்காரன் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். இதில் ஒன்று போனாலும் உள்ளதெல்லாம் போச்சு. சீட்டு விளையாட்டு-தாயம் மட்டுமல்ல விவசாயமும் ஒரு சூதாட்டம்தான். ஆட்டக்காரர்களில் எவனோ ஒருவன்தான் கெலிக்கிறான்.

வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும் மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புதான். மழைத்துளியில் எறும்பு மூழ்கினாலும் கடலுக்குள் கப்பல் மூழ்கினாலும் வலி வலிதான். அதனதன் நிலையில் அவரவர் துயரம் பெரிதுதான். துன்பத்தில் ‘சிறசு-பெருசு’ என்பதெல்லாம் இடம் பொருள் ஏவல் குறித்த ஒப்பீடுகளல்லாமல் வேறென்ன?

மண்ணைக் கிண்டும் ஒருத்தனுக்கு வாக்கப்பட்டவ வாழ்க்கை கட்டில் உற்பத்தியில் மட்டுமல்லாமல் காட்டில் உற்பத்தியிலும் அவள் வேர்வை விழுந்தாக வேண்டும்.

தாம்பத்தியத்தின் தேவை தீர்ந்த பிறகுதான் ஒரு குடும்பத்தில் உண்மையான கணவனும் உண்மையான மனைவியும் பிறக்கிறார்கள். உடல் தேவை என்னும் சாம்பல் உதிர்ந்த பிறகுதான் உள்ளிருக்கும் அன்பின் கங்கு துலக்கமாகிறது.

பெற்றவர்கள் மறைந்துபோக - உடன்பிறந்தவர்கள் அவரவர் பிழைப்புத்தேடி ஒதுங்கிப்போக - நல்லது கெட்டதுகளுக்கு மட்டுமே சுற்றங்கள் வந்து சூழ்ந்து விலகிப்போக - பெற்று வளர்த்த பிள்ளைகள் ‘கெழவன் கெழவி செத்தாச் சொல்லிவிடுங்க’ என்று கண்ணுக்குத் தெரியாத தங்களின் இன்னொரு தெப்பூழ்க் கொடியையும் அறுத்துக் கொண்டோட, உடம்பிலுள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாய் ‘ஆளவிடு சாமி’ என்று அதனதன் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும்போது மனைவியின் மடிசாய்கிறான் கணவன்; கணவனின் மடிசாய்கிறாள் மனைவி.

கடவுள் வேலைக்காரனாக முடியாது; வேலைக்காரன் கடவுளாக முடியாது. ஆனால் விவசாயக் கலாசாரத்தில் கடவுளாகவும் வேலைக்காரனாகவும் இருப்பது மாடுதான். வருசமெல்லாம் அடிவாங்குவதும் அதுதான். தைப்பொங்கல் வந்தால், அவனவன் அரசியலைக் கொம்புகளில் தாங்கிக் கொண்டு சூடம்சாம்பிராணியோடு வணங்கப்படுவதும் அதே மாடுதான்.

மனுச வாழ்க்கையில் நல்ல இடம் சுடுகாடுதான். மனசு மட்டுப்படுவது அங்கேதான். செத்துப்போனவனுக்கு நிரந்தரமான நிம்மதியும் வீடு திரும்புகிறவனுக்கு ‘இத்துனூண்டு’ ஞானமும் தருகிற உலகத்தின் பழைய்...ய பள்ளிக்கூடம் அதுதான். ‘இன்னைக்கி இருக்கோம்; நாளைக்கி இல்ல. இதுல வம்பெதுக்கு? வழக்கெதுக்கு? என்று எல்லாரும் கொஞ்சம்போல நல்ல மனுசனாவதும், ‘இருக்கிறது பொய்யி சாகறது நெசம்’ என்று அவனவன் அச்சுநிமிசத்துக்குள் ‘அவசரச் சித்தரா’வதும் சுடுகாட்டில்தான்.

நூறு வருசம் எதுக்கு இருக்கணும்? ஒரு மனுசன் செந்தமா ஒண்ணுக்குப் போற வரைக்கும்தான் இருக்கணும். இடுப்புத் துணிய அவனாக் கட்டிக்கிற காலம் வரைக்குந்தான் உயிரோட இருக்கணும். ஏங்கையத் தூக்கிவிட இன்னொரு கையி வேணுங்கிறப்ப நான் இருந்தா என்ன? போனா என்ன?

“ஆண்டாண்டு காலமா நாம ஆண்டு அனுபவிச்ச பூமியில அண கட்டப்போறாங்கலாம்ப்பா அண”

பொன்விளையுங் காடு
பூர்வீகப் பெருங்காடு
நல்ல பொலிகாடு
நாளைக்கு என்னதில்ல

காடையெல்லாம் எரபெறக்கக்
காதுவாலி முட்டையிட
நாலுபோகம் வெளைஞ்சகாடு
நாளைக்கு என்னதில்ல

சடைசடையாத் தானியங்க
சரஞ்சரமாத் தட்டாங்கா
நச்சுன்னு புடிச்சகாடு
நாளைக்கு என்னதில்ல

கடைசி அறுவடைக்குக்
கையோட தெம்புமில்ல
கருதறுக்கும பண்ணருவா
கழுத்தறுத்தாத் துன்பமில்ல

நெஞ்சமுட்டும் கண்ணீரு
நில்லுன்னா நிக்குதில்ல
புடிச்சுவச்ச என்னுசுரு
‘போ’ன்னாப் போகுதில்ல.
-வைரமுத்து.
Profile Image for Jayanth J.
8 reviews
January 22, 2016
ஒரு பாவப்பட்ட கெழவனின் கதை... ஒரு விவசாயியின் கதை..
Profile Image for Dwarakeshwaran Malathi Magesh.
52 reviews3 followers
March 2, 2021
The best part of reading a book is not at the beginning; not at the middle; not at the end. It's the total journey of reading a book that makes a book Legendary.

கள்ளிக்காட்டு இதிகாசம் is one such book.

It doesn't have any definite storyline. It's all about this 70-year-old guy - Peyathevar. The struggles he faces and how he confronts those struggles is the essence of this book. I don't want to judge this book politically because this book isn't about the imbalance in social hierarchy or misogynism. It's about a father; it's about a Grandfather; it's about a husband and it's about a man who wants to survive despite the struggles he faces.

There was this fantastic line that describes the character of Peyathevar (which was told to him by his father at his death bed)

உடம்பு செத்து போகலாம், ஆனா மனசு செத்து போக கூடாதுறா மவனே!

I had literal chills when I read this.

This book is a kind of story where one doesn't want to end. As I said before, it's the journey of reading this book that makes this book a catharsis-inducing read. And Vairamuthu's style of writing plays a major part in it.

It was bliss!
Profile Image for Ramalakshmi shanmugavel.
40 reviews18 followers
Read
December 2, 2017
No philosophies would teach us more than life by experience..if we want to get experienced n a better way we should keep hold the books..just love the way that it leads you..this book is based on a true story. It is like dictionary of Hardwork,love,people,pain,self confidence,affection,care,money and mainly "life"..we cant control the emotion when it makes us to feel the strong affection on animals and non-living things too..Great!
#Most favorite
25 reviews2 followers
May 3, 2021
வைரமுத்துவின் சிறப்பான காவியம். மனதில் நின்று விட்டார் பேயதேவர். இப்படி ஒரு உணர்ச்சி மிகுந்த ஒரு புத்தகத்தை நான் படிப்பது இதுவே முதல் முறை. இதுவே என்னை அடுத்த புத்தகமான கருவாச்சி காவியத்தை படிக்கத் தூண்டியது. அதுமட்டுமல்ல அடுத்தடுத்த கதைகளான தண்ணீர் தேசம், மூன்றாம் உலகப் போர் புத்தகங்களையும்.

நன்றி திரு.வைரமுத்து..
Profile Image for Gowtham.
249 reviews48 followers
January 3, 2019
"மானச கொளச்ச படைப்பு" ✨
முடிச்ச கையோட
மானசுல ஒரு பாரம் தொத்திகிச்சு
கண் கலங்கி மெய் சிலிர்க்குது
நெனப்பு எல்லாம் ஊரு மேல
புத்தி மொத்தமும் "பேயத்தேவர்" மேல😭

"கள்ளிக்காட்டு இதிகாசம்"😻

"தமிழ் படிக்க தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய காவியம்" 🙏
#வைரமுத்து ❤️
Profile Image for Murugesan A.
25 reviews5 followers
December 24, 2021
மேகங்கள்..!!
ஒரு விவசாயி புன்னகை செய்ய கண்ணீர் சிந்து கின்றன ..!!
அந்த கண்ணீருக்கும் கருணையில்லாத ஒரு காடு கள்ளிக்காடு. பாலைவனத்தில் ஒருவன் தன் கண்ணில் பட்ட கானல் நீரைக் கண்டு சில கண நேரம் மட்டுமே மகிழ்ச்சியுற்று பின்பு மீளா துயரத்தை அது அவனுக்கு நல்குவது போல வறட்சியின் பிடியிலும்,வறுமையின் அடியிலும் காலம் சென்று கொண்டிருக்கும்போது வாழ்க்கைச் ஒரு கணம் பொய்மையான மகிழ்ச்சியை வரவழைத்து பின்பு துயரத்தை மகிழ்ச்சிக்கும் சேர்த்து தருவது வாழ்வின் கொடுமையிலும் கொடுமை. விவசாயத்தால் ஏற்படும் ஏமாற்றங்களையும் ,தான் பெற்ற பிள்ளையினால் தரப்படும் இன்னல்களையும் பொறுத்து வாழ்வின் ஏதோ ஒரு மூலையில் நமக்கான ஒரு விடியல் எழுந்துவிடும் என்று தன்னம்பிக்கை முழுவதையும் தன் மண்ணில் மேல் வைத்து தள்ளாத வயதிலும் தளராத மன உறுதியோடு தன் மண்ணை காப்பாற்ற பேயதேவன் எனும் கிழவன் தன் கடைசி மூச்சுவரை போராடும் போராட்டம் தான் "கள்ளிக்காட்டு இதிகாசம்".
இறுகிய இதயத்தையும் நெகிழச் செய்யும் பேயத்தேவரின் நம்பிக்கை அதை வாசிப்பவர் மனதிலும் பதிய செய்கிறது. தன் மனைவி மீது கொண்ட அளப்பரியா அன்பை தன்னை விட்டு பிரிந்து சென்ற போது அவர் உணர்ந்ததை எடுத்துரைத்தது கவிஞர் உச்சம்.
மேலும் குறிப்பாக எந்த ஒரு குறிப்புகளாக இருந்தாலும் எ.கா. அணை கட்டுவது, கிணறு வெட்டுவது ,சாராயம் காய்ச்சுவது, ஆடு தருட்டு என கவிஞர் எடுத்துரைக்கும் எல்லா வேலைகளையும் பற்றி பழகி பயின்று மற்றும் அதை கதைக்கேற்ப பொருத்தியது மிக மிக அற்புதம் இதை முன்னுரையில் ஆசிரியரே குறிப்பிடுகிறார்.
இப்புத்தகம் படித்தபின் கவிஞர் வைரமுத்துவின் எழுத்துக்கள் மேல் மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
Profile Image for வெங்கட் பீமசேனன்.
86 reviews1 follower
April 26, 2025
கள்ளிக்காட்டு இதிகாசம் என்பது ஒரு புதினம் மட்டுமல்ல, அதுவே ஒரு காலத்தையும், வாழ்க்கையையும், கரையாத நினைவுகளாக நம் மனதில் பதிய வைக்கும் அனுபவக் காவியம்.

இந்நூலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் இயற்கையின் ஓரமாக நமக்குள் வந்துவிடுகிறது. குறிப்பாக பேயத்தேவர்—அவர் ஒரு கதாபாத்திரம் என்றதை நாம் மறந்து, நம் அருகில் உள்ள ஒரு முதியவராகவே உணரத் துவங்குகிறோம். அவரது மனைவியுடன் பகிரும் உறவு, மகளுடன் கூடிய பிணைப்பு, ஊதாரி மகனுடன் ஏற்பட்ட அன்புடன் கூடிய வெறுப்பு—இவை அனைத்தும் வெறும் சம்பவங்களல்ல, உயிரோடும் உணர்வோடும் கூடிய வாழ்க்கையின் பிரதிபலிப்புகள்.

கதையின் பின்பகுதியில் பேயத்தேவர் எதிர்கொள்கின்ற தனிமையும், வாழ்க்கையி���் எல்லா பக்கங்களும் கைவிடும் அந்த தருணங்களும் நம்மை அமைதியான வலியில் ஆழ்த்துகின்றன. அவ்வளவிற்கே அவரது முடிவுகள் நம்மை அதிரவைக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளன.

இந்நூலில் தாத்தாவுக்கும் பெயரனுக்கும் இடையிலான பாசப் பிணைப்பு, கிராமத்தின் இயல்பு, அதன் தினசரி நிகழ்வுகள்—எல்லாம் உயிரோடு படம் பிடிக்கப்பட்டுள்ளன. தீண்டாமை என்னும் தீவிரமான சமூகப் பிரச்சனையை கூட, வைரமுத்து மிகுந்த நேர்த்தியுடன், உண்மைச் சாயலோடு கூறுகிறார்.

கள்ளிக்காட்டு இதிகாசம் ஒரு புத்தகம் அல்ல, அது வாசகனை அந்த கிராமத்திற்கே அழைத்து சென்று, அந்த வாழ்க்கையை சில கணங்கள் வாழ வைக்கும் வாய்ப்பு. இதை வழங்கியதற்காக ஐயா வைரமுத்துவுக்கு நம் நெஞ்சளாவிய நன்றி.
Profile Image for Aishwarya Ramkumar.
5 reviews3 followers
October 11, 2016
Being an ardent fan of Tamizh, I started to search for some Tamizh novels, not too historic/epic. In this process, I came through 'Kallikaatu Ithigaasam' by Vairamuthu and started reading it. Though the slang in which the entire story was narrated being in a village style, one could understand the depth of the story through it. I was able to visualize every line in it, which no book has did to me. Every chapter in it,ending with a curiosity to read the next one, I could complete the whole book quickly. One should read every line in it and understand,to feel the sweetness of 'Uvamai'. The manner of narration proved that Vairamuthu is a legend and one could get all the feel- happiness, sadness, fear and anxiety. In a gist, one will really love village lifestyle, culture and customs followed, love and faith in relationship, peace and the hardships faced by the people in there.
Profile Image for Yuvaraj Ravichandiran.
15 reviews
April 17, 2014
The novel depicting the lives of village farmers is a rare one, this book is the best in this context. Adding the fact that this book says the early life of Kaviarasu Vairamuthu, the story moves with the culture and life around Kallipatti.

We can feel their lives on those days and can gain an immense knowledge about a village. It had shown me how the people live, what they do for their living, how they eat, what they eat, how they sleep, how a theft occurs, how sarayam is prepared and sold, how a water well is constructed, how vegetations are grown, what they wear, how death is faced, second marriage, family connections, ancestor sentiment, financial status at that time, government schemes and many more.. Who can give us such immense detail other than Kaviperarasu?
Profile Image for Bala.
33 reviews3 followers
February 13, 2016
படிக்க படிக்க நமது கிராமத்து மக்களின் தொலைந்த வாழ்க்கையும், அவர்களோடு சேர்ந்து படிபவரும் கூட வாழுகிற அந்த அனுபவமும் . . .

அந்த மண் வாசனை, மாடு கண்டுகளும், புளிய மரமும், முத்தாலமண்ணும், களிகாடு மக்கா மாருகளும், அவுக குடிக்கிற கூலும், உறியிலே பதபத்துன நேத்து மீன் கொழம்பும், திருவிழா கோலாகலமும், புளிதி பறகுற காட்டுல நடக்குற வாய்கா தகராறும், பட்ட சாராயமும், பெறுசுகள அவக பெத்த புலைக படுத்துற பாடும் . . .

பெயதெவருங்குர கிழவனோட வாழ்க்கைய சொல்லுர கதை கருவுல நாம தொன்று தொட்டு இழந்து நிக்கிற நமது கிராமத்து மக்கா மாருகளையும் அவக வாழ்ந்த வாழ்க்கையையும் அதுல இருந்த இருக்கிற இன்பத்தையும் தும்பதையும் மணி மணியா எழுதிருக்காறு வைரமுத்து.

புத்தகமல்ல, புதயல்!
Profile Image for Ruby Rajendran.
3 reviews1 follower
July 4, 2014
The lead character reminds me so much of all the people i have seen when I go to my native place. "mapilla" thatha who will be usually seen under the giant tree beside the road which leads to my grandparent's house, "Mittaai" thatha who gives a kiss on my cheeks and orange mittaai in my hand every time i see him, and finally my grand father who i can see from the road leading to the house because he will be sitting on a stone, which is used to tie cattle, feeding the cattle and waiting for us every summer.
15 reviews
October 1, 2019
மண்ணை காப்பாற்ற பேயத் தேவன் எனும் ஒரு கிழவன் தன் கடைசி மூச்சு உள்ள வரை வாழ்க்கையோடு மனம் தளராமல் போராடும் போராட்டம் தான் கள்ளிக்காட்டு இதிகாசம்.....
கடைசி அத்தியாயம் தொடங்கும் போதே கனத்த மனதோடு இருந்த என்னை கலங்க வைத்துவிட்டது.....
Displaying 1 - 30 of 167 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.