Jump to ratings and reviews
Rate this book

உலோகம்

Rate this book
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணரவேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம் கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம் அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு ஒரு முடிச்சைப் போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த திரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக் கூடியது. ஈழத்தோட தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்கமுடிகிறது.

168 pages, Paperback

First published January 1, 2010

20 people are currently reading
437 people want to read

About the author

Jeyamohan

211 books835 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
75 (23%)
4 stars
102 (32%)
3 stars
91 (28%)
2 stars
31 (9%)
1 star
16 (5%)
Displaying 1 - 24 of 24 reviews
Profile Image for Balaji Sriraman.
Author 1 book17 followers
January 22, 2018
மெதுவாய் நகரும் ஒரு த்ரில்லர் கதை. த்ரில்லரையும் இலக்கிய பாணியில் எழுத முடியும் என்று நிரூபிக்க ஆசைப்பட்டரோ என்னவோ! ஜோர்ஜ், ரெஜினா பாத்திரங்கள் என்னை ரொம்பவே பாதித்தது. வைஜெயந்தி என்னை நிறைய குழப்பினாள். த்ரில்லர் போல இப்புத்தகம் படிக்க ஆரம்பித்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஜெமோ வை படிக்க இப்போது தான் ஆரம்பித்ததால் பொறுமை பலன் அளித்தது.
Profile Image for Raja Guru.
34 reviews18 followers
December 26, 2018
குண்டு செலுத்தப்பட்ட துப்பாக்கி , சுடப்பட்டவரை நோக்கி எந்த யோசைனையும் இன்றி சுடுவது போல , காலம்காலமாக போராட்ட குழுக்கள் , தங்கள் ஆணைகளை நிறைவேற்ற , எந்த கேள்வியும் கேட்காத , போராளிகளை தயார் செய்கின்றனர். இதில் வரும் சாந்தன் ஒரு துப்பாக்கி தான் , அவனுள்ளும் ஒரு குண்டு உள்ளது . ஒரு போரில் அவன் குண்டடிப்பட்டு அந்த குண்டானது இன்றும் அவனுள் இருப்பது, ஒரு உருவகமாக சொல்லப்பட்டு இருந்தாலும் , அவன் நிஜத்தில் , எந்த கேள்வியும் கேக்காத , திரும்பி பேசாது , சுட வேண்டிய ஒரு துப்பாக்கி தான் . தன் ஆணையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து வந்து , இங்கு அகதியாய் குடியேறி , இங்குள்ள ரா அமைப்பின் ஒரு எதிர் குழுவில் சேர்ந்து , அவன் சேர வேண்டிய இடத்தில் சேர்கிறான்.
இந்தியா-பாகிஸ்தான் போரில் இலங்கை , பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் எரிபொருள் நிரப்ப இடம் கொடுத்தததற்காக , இந்தியா அரசு விடுதலை புலிகளை பயன்படுத்தி , அவர்களை வலிமையாக்கி , இலங்கையில் உள்நாட்டு போர் மூலம் , அரசின் ஸ்திர தன்மையை குலைக்க முயற்சிக்கிறது . இது அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தியாதலின் , ராவின் பங்கு இதில் புரிந்து கொள்ள முடிகின்றது , மற்றபடி இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என தெரிகிறது , இருப்பினும் இதில் உள்ள முக்கிய பாத்திரங்களை நிஜத்தில் யாராக இருக்கும் என கண்டுபிடிக்க முடியவில்லை. இலங்கை முக்கிய பிரமுகர் இங்கு கொல்லப்பட்டது போன்ற தகவலும் திரட்ட முடிவில்லை.
Profile Image for Dineshsanth S.
188 reviews42 followers
October 31, 2016
ஈழப்போராளி ஒருவரின் உண்மைக் கதையை தழுவிய குறுநாவல் என்று குறிப்பிடப்பட்டாலும் அது ஏனோ மனதோடு ஒன்றவில்லை.இந் நூலின் முன்னுரையில் அகத்தோடு பேசுவது தான் இலக்கியம் என்று குறிப்பிட்டிருப்பார் ஜெமோ.ஆனால் இக்கதையில் எம்மோடு பேசும் அகம் ஜெமோவினுடையது என்பது குறித்த முன்னாள் போராளியின் வார்த்தைகளில் குறிப்பாக வரலாறு தொடர்பான அவனது கருத்துகளில் தெளிவாகவே புலப்படுகின்றது.எட்டுப் பத்து வரிகளிலேயே எம் ஆழ்மனத்துயரங்களையும் உணர்வுகளையும் கண்ணாடி போல் பிரதிபலிக்கும் ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளையும் மனதோடு ஒட்டாமல் வெறும் கதையாக நகரும் உலோகத்தையும் நோக்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது எம்மவர் உணர்வுகளை பிரதிபலிக்க எம்மவர்களால் மட்டும் தான் முடியும்.
17 reviews1 follower
December 13, 2020
ஈழப்போர் பின்னணியில் ஒரு திரில்லர்.

'அறம்' புத்தகம் வாசித்ததிலிருந்து ஜெயமோகன் அவர்களின் ரசிகனாகி விட்டேன்.

ஆயுதம் ஏந்திய எந்தவொரு இயக்கமும், துரோகம் செய்தவர்களை கொன்றுவிடும். புலிகளுக்கு துரோகம் செய்துவிட்டு உயிருக்கு பயந்து 'ரா' அமைப்பில் சரணாகும் ஒருவரை கொல்லவரும் புலிகளின் ரகசிய உளவாளியின் (சார்லஸ்) கதை. திரில்லராக இருப்பினும், கதை யதார்த்தத்தை மீறவில்லை.
Slow paced thriller, good read.
Profile Image for Priyanga Thamizhini.
6 reviews10 followers
December 6, 2021
ஈழத்துப் பின்னணியில் கதைக்களம். வாழ்க்கையில் சரி தவறுக்குக் கோடே இல்லாத ஓர் கதை. கால் இடறி வழுக்கி விழுந்தவர்களெல்லாம் வரலாற்றில் வல்லவர்களாக சித்தரிக்கப்படும் அவலநிலை இக்கதையிலும் உண்டு. நாவலின் ஆரம்பம் ஆர்வம் ததும்ப வரவேற்று, வெற்றுப் பக்கங்களாக மாறிய உணர்வு. -தமிழினி
Profile Image for Sanjay.
45 reviews61 followers
February 3, 2011
Published as a fast paced thriller. Please do not compare with similarly branded/marketed English books. This has the Jeyamohan stamp much more than a fast paced thriller stamp!
14 reviews
April 21, 2021
மட்டமான புத்தகம்.
எந்த ஒரு கதாபாத்திரமும் சரியாக புரிபடவில்லை.
என்னை பொறுத்தவரை Rate கொடுக்க கூட தகுதி அற்ற புத்தகம் இது.
Profile Image for Suba Mohan.
96 reviews3 followers
March 29, 2024
ஈழப்போர் பின்னணியில் ஒரு slow thriller. இயக்கத்தைச் சேர்ந்த ரகசிய உளவாளி சார்லஸ் என்கிற சாந்தன் இலங்கையில இருந்து இந்தியா வராரு. இயக்கத்துக்கு துரோகம் செய்த ஒருத்தர கொல்ல சொல்லி உத்தரவு வருது. அந்த கொலையோட தான் கதை ஆரம்பாகுது, அதே கொலையோட தான் முடியவும் செய்யுது. இடைப்பட்ட அவரோட பயணம் தான் இந்த கதை.

இயக்கத்தில இருக்கும்போது நடக்குற போர்ல தொடைல ஒரு குண்டு ஊடுருவிப்போய் அங்கேயே இருக்கு. அந்த உலோகத்தினாலான குண்ட குறிப்பிட்டு தான் இந்த தலைப்பு. 

கதை ரொம்ப ரொம்ப ரொம்ப slow. இயக்கத்தோட தகவல் பரிமாற்றங்கள், தோழமை, பண பரிவர்த்தனைகள் எப்படினு இதுல தெரிஞ்சுக்கலாம். நடுவுல வர ஒரு encounter shot சூப்பரா இருந்துச்சு. சில இடங்கள்ள வர symbolic representations எனக்கு புரியல. இன்னும் கொஞ்சம் fast paced ah இருந்து இருந்தா நல்லா இருந்திருக்கும்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Barath.
13 reviews2 followers
February 1, 2025
2.5*
ஒரு சிறுகதையாக எழுதியிருக்கவேண்டிய ஒரு கருவைக்கொண்டு ஒரு நாவல் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். நாவலின் பெரும்பகுதியும் எதுவுமே நிகழ்வதில்லை. அவர் எடுத்துக்கொண்ட திரில்லர் அமைப்புக்கு இது பெரும்குறை. அதனால் அவரது வழமையான பாணியிலும் இல்லாமல், த்ரில்லராகவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக வந்திருக்கிறது.
Profile Image for Srihari Iyer.
42 reviews
December 18, 2021
புரியாத நாவல். திரில்லர் கதை என்று ஆரம்பித்தால், மொத்தமுமாக இலக்கிய நடையில் இருக்கிறது.

எந்த கதாபாத்திரமும் அழுத்தமாக மனதில் பதியவில்லை.

திக் திக் நிமிடங்களில் எப்படி ஒரு மனிதன் ஆழ் மனங்களின் ரகசியங்களை பற்றி ஆராய்வான் என்று புரியவில்லை. ஆனால் கதை முழுவதும் அதுதான் நடக்கிறது.
Profile Image for Karthick Subramanian.
17 reviews21 followers
May 22, 2013
வாசித்து முடித்து 4 நாள் ஆச்சு. இன்னைக்காவது எழுதிடணும்னு எழுதுறேன்.திரில்லர் தான் என்றாலும் அதில் தனது இலக்கிய நடையையும் இணைத்துஎழுதி இருக்கிறார் ஜெ.மோ . அது சில நேரங்களில்கதையின் சுவாரஸ்யத்தை குறைத்து விட்டதாக தோன்றுகிறது.ப்ரோஜெக்டிங் வில்லனிசம் ஒன்றும் " ஜெ.மோ " க்கு புதுசில்லை ஆனாலும்.கொஞ்சம் வேகம் குறைகிறது கதையில்.

ஆனால் இதில் என்ன வித்தியாசம் என்று பார்த்தால் "பழிவாங்குவது / கொலை செய்வது தான் என் நோக்கம் , குழந்தைகளை , குடும்பங்களை, கொலை செய்யமாட்டேன். பெண்களை "ரேப்"ங்கலாம் நோ நோ. போன்ற ஓல்ட் கிளாஸ் ஹீரோ வெல்லாம் இல்லை.அவன் ஒரு கொலையாளி அவனை சுற்றியுள்ள கூட்டமும்அத்தனை கேவலமானதே, கொலையாளி சினிமாக்களில், கதைகளில், வருவதை போல் "கும்பல் ஆப்" நல்ல பீப்பில் கில்லிங் எனிமிஸ் பார் நியாயம்லாம் இல்லை. அவனுக்கு பணித்ததை அவன் செய்கிறான் அதற்கான நியாய அநியாயங்களை சீர்தூக்கி பார்க்கும் சில்லி விஷயங்களெல்லாம் "ஜெ .மோ" செய்யவில்லை.

உளவாளிகளின் , கொலையாளிகளின் , இயக்கங்களின் மன நிலை , செயல் பாடுகள் குறித்து மிக நுட்பமான விளக்கங்கள் நன்றாக இருக்கிறது.சூழ்நிலை கைதிகள் அவர்களின் நிலை மாற தரும் விலை மட்டமானதாக காடப்படிருந்தாலும் சில இடங்களில் அது உண்மையாகவே (அவர்களை பொறுத்த வரை நியாயமானதாகவும்)படுகிறது.
கொலை , துப்பாக்கி , இயக்கம் , ரா , இதுமட்டுமே இணைந்து திரில்லர் ஆவதில்லை இன்னும் சுவாரஸ்யம் கூடும் விதத்தில் நான்றாக இருக்கலாம் (நமக்கு திரில்லர்நாலே "திகு திகு பாஸ்ட் பார்வேர்ட் தான ?)
Profile Image for Elankumaran.
134 reviews25 followers
May 8, 2022
உலோகம் ❤️

ஜெயமோகன் பல நாவல்களும் சிறுகதைகளையும் எழுதித்தள்ளும் பிரபல்ய எழுத்தாளர். அவர் படைப்பில் ஒரு நூல் வாசிக்கவேண்டும் என்று பல நாள் நினைத்ததுண்டு. இறுதியில் உலோகம் புத்தகத்தில் தொடக்கம்.

அவருடைய புத்தகங்களை பற்றி பார்த்துக்கொண்டு வரும் பொழுது இந்தப்புத்தகம் தன்னை வாசி என்பது போல் என்னை இழுத்தது. காரணம், முதலில் தலைப்பும் அட்டைப்படமும், இரண்டாவது, கதை ஈழப்பின்னணியில் அமைந்தது, அடுத்தது, இது ஒரு த்ரில்லர் கதை. (நான் இதுவரை தமிழில் த்ரில்லர் கதை வாசித்திருக்கவில்லை)

கதையின் முடிவை முதல் அத்தியாயமே சொல்கிறது. பக்கத்திற்கு பக்கம் கதைத்திருப்பங்களும் இல்லை. ஆனாலும் கதை மிகவும் விறுவிறுப்பாக சோர்வில்லாமல் பக்கங்களை புரட்டவைக்கிறது. இயக்கங்கள், துரோகங்கள், எதைப்பற்றியும் தெரியாத கட்டளையை மட்டும் ஏற்று செயல்படுத்தும் அடிமட்ட கருவிகள், என்பவற்றை கருவாக கொண்டு அழகாக களமாடியிருக்கிறார் ஜெயமோகன்.
42 reviews
February 16, 2014
The protagonist is an assassin sent to kill a politician from Sri Lanka in exile in New Delhi. Jeyamohan gets into the characters and in his inimitable way reveals different slices of the exile's life who leaves home under the threat of violence. I found his characterization of RAW and the political "double-games" played by different parties based on Eezham in India ring very true. Highly recommended !
Profile Image for Karthik D.R.
149 reviews12 followers
October 16, 2013
Porul puriyaadha arasiyal vilayaattu!

Ilangai thamzhanin unmai pakkathai alasum pakkangal. padikka padikka manam ranamaagum! manam balamaana vaasagargal maatum padiyungal. 'Jeyamohan'-in 'puratchi' idhilum velicham, oorjidham!

Idhai paditha pin, vidiyal pudhiyadhaaga irukku, LTTEin meedhu paarvai maarugiradhu!
24 reviews9 followers
February 27, 2013
A fast paced thriller in tamil, similar to its english books. A very good try and a interesting read. Thought I don't agree with lot of political comments said in this book - since it's a fiction - I'm giving it full rating.
10 reviews3 followers
February 24, 2011
மீள்வாசிப்பு செய்ய வேண்டும் அல்லது செயமோகன் எழுத்துடன் என்னை பழக்கிகொள்ள வேண்டும். காய்ச்சலில் படுத்திருந்த காலங்களில் படித்ததாலோ என்னவோ அவ்வளவாக ஈர்க்கவில்லை கடைசி சில அத்தியாயங்கள்.
39 reviews7 followers
January 8, 2014
A Casual Read. Not the best of Jeyamohan. The pace is lowered by his literary inclination nevertheless unputdownable..
Profile Image for Chandrasekar Pattabiraman.
10 reviews2 followers
June 11, 2014
அருமையான த்ரில்லர். நம் வாழ்க்கையில் சந்திக்கவே முடியாத ஒருவனின் வாழ்க்கை....
3 reviews
November 30, 2016
A good view of the normal life an isolated, beaten soul. A novel breaking the stereotypes of the era.
42 reviews5 followers
November 7, 2017
தனதென்று தனித்தில்லாமல், எய்பவன் இலக்கையே தனதாக்கிப் பாயும் தோட்டாவின் கதை.
Displaying 1 - 24 of 24 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.