தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்பவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய புனைவாக இதை நான் கருதுகிறேன். இது எனது முதல் சுயபுனைவு முயற்சி. ஆன்லைனில் தொடராக வெளிவந்தபோது, 'ஷிவானி, எங்கள் பரிதாபநிலையை உன் கதையில் கிண்டல் செய்வாயா?' என்ற கொதிப்புகள் தான் அதிகமாக இருந்தது. அவற்றை, நான் என் கதைக்களம் பேசும் பிரச்சினையின் உண்மைத்தன்மைக்கு சான்றாகவே கருதினேன்.
ஒரு கதை என்றும் ஏதோ ஒன்றைப் பற்றிய அறிதலாய் தான் இருக்க வேண்டுமேயொழிய, போதனையாய் இருக்கக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுண்டு எனக்கு. என் கதை ஒரு மனிதரிடத்தில் ஒரு விரும்பத்தக்க மாற்றத்தை உண்டாக்கினால் மகிழ்ச்சி. உண்டாக்கவில்லையெனில் நிச்சயம் அது என் ஒருவளின் பிரச்சினை கிடையாது.