பெண்ணுலகம் எதனையெல்லாம் கொண்டு துயருறுகிறது? அவர்களுக்குத் தங்களின் மனங்கள்போலவே உடல்களும் சுமையாக மாறுகின்றன. தன்னிலையைச் சமூக நிலையோடு பொருத்த வேண்டிய அவசியத்துக்குள்ளும் திணிக்கப்படுகிறார்கள். அந்தப் போராட்டங்களின் அவசங்களையும் மன எழுச்சியையும் இயல்பான சொற்களுக்குள் வடித்தெழுதுகிறார் கிருத்திகா. பெண்களின் அக உலகம் அவர்கள் உடல்களினின்றும் வேறானவையல்ல என்பதை ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லும் கதைகள் இவை.
பெண்களின் வெவ்வேறு வயதில் அவர்கள் சந்தித்த இன்னல்களை/மகிழ்ச்சியை கடந்து வந்த காலங்களை ஒன்பது சிறுகதைகள் ஆக எழுதியுள்ளார்.. பெருக்கு, குளிர்ச்சி ஆகிய கதைகள், என் வாழ்வில் பொருந்தக்கூடியதாக இருந்தது..