புத்தகம்: ஆறுமுகம் எழுத்தாளர்: இமயம்
பிரசுரம்: க்ரியா
ஆறுமுகத்தை பத்தி பேசணும் என்றால் அவனை சுற்றியுள்ள எல்லாமே தான் அவன். ஆறுமுகம் நாவல் முழுக்க விரைவு இருக்கிறது மனுஷங்களோட வாழ்வு, எளிய விளிம்பு நிலை வாழ்வு. செத்த தூக்கி பொட அல்ல வேணும் என்கிற வாழ்வு. விபச்சாரம் சார்ந்த பின்னி கெண்ட நாவல்கள் இப்படி தான் என்று வெளிச்சம் போட்டு காட்டும். இங்க வெறும் அசை பட்டு இங்க வரல. அன்றாட பிழைப்பு எப்படி எல்லாம் சீப்பாத்து இருக்கு. அதை எப்படி கூட இந்த ஒரு வாழ்வியலை சொல்லிட முடியும் என்று ஆறுமுகம் வாயிலாக இமயம் காண்பித்துள்ளார். தனபாக்கியம், தாத்தா, சின்ன பொண்ணு வசந்தா, ராமன் குப்புசாமி, பாக்கியம், ஜிப்மர் மருத்துவமனை, பாண்டிச்சேரி மேச்சேரி அப்படியே அந்த வாழ்க்கையோடு ஒன்றி ஒரு வலியை தருகிறது.
இமயத்தோட எந்த பக்கமே சோட போகாது. மூன்று நாவல்கள் வாசித்து உள்ளேன் மூன்றுமே மிக மிக அற்புதமான காவியங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
கண்ணீர், சாதி அடக்குமுறை, உறவுகள் தரும் வலி.
அம்மண்ணில் உள்ள வலிகளை, அம்மண்ணின் மொழியிலேயே நம்மை கலங்க செய்கிறது.
புத்தகத்திலிருந்து பிடித்த வரிகள்:
நேத்துங்கறது பொணம். பொணத்த யாரும் ஊட்டிலியே வச்சிக்க ஆசப்படுறதில்ல, எல்லாத்தயும் அடியோட கயிச்சுக்கட்டு.ஈவத்துக்கட்டு. பொணத்துமேல மண்ணத் தள்ளி முடுறாப்ல நேற்றுங்கற எல்லாத்துமேலயும் காறித் துப்பிட்டு மூடு.
என்னோட மொகத்த நான் யாரோட மொகத்துல போய்ப் பாப்பன்.
ஒருத்தன வெசத்த வச்சிதான் கொல்லணுமின்னு இல்ல, வெல்லத்த வச்சே கூட கொன்னுபுடலாம்.
யாருக்குத்தான் யாரு யாரா வேணும்?
எப்படி கூப்பிட்டா என்னா? தொண்டை சத்தத்துல என்னா இருக்கு?
பொட்டச்சிக்கு எதுக்குடா சாதி? கொலம் கோத்தரமெல்லாம் எதுக்குடா? பொட்டச்சிக்கிட்டே இருக்கிற தொட சந்துக்காதாண்டா எல்லாச் சாதிக்காரனும் வச்சிக்கிட்டு இருக்கானுவோ?