அவளுடைய செல்போன் திடுமென ஒலியெழுப்ப அந்த சத்தத்தில் பட்டென்று கண்ணைத் திறந்தான் அவன். கண்களைத் திறந்தவன் அருகில் இருந்தவளைப் வெறித்துப் பார்க்க, “சாரி..” என்றவள், வேகமாக போனை சுவிட்ச் ஆப் செய்தாள். அவனுடைய தியானத்தை கலைத்தது போல் இருந்தது அவளின் வருகை. “நீங்க எதுக்காக இந்த சீட்ல உட்கார்ந்திருக்கிங்க..?” என்றான் பட்டென்று. “டிக்கெட்ல எந்த சீட் நம்பர் போட்டிருக்கோ அங்க தான சார் உட்கார முடியும்..” என்றாள் அவளும். “இல்லை, ஏதோ ஒரு பையன் பேரு சொன்னாங்க. அதான் கேட்டேன்..” என்றான். “என்னோட பிரண்ட் புக் பண்ணினான், அதான்..!” என்றவள், “பொண்ணு நானே தைரியமா உட்கார்ந்திருக்கேன். நீங்க என்ன சார் இத்தனை கேள்வி கேட்குறிங்க..?” என்றாள்.
எழுத்து நடை ரொம்ப நல்ல இருக்கு. கதா பாத்திரங்கள் அழகாய் நேர்த்தியாய் சொல்லி இருக்காங்க. எந்த இடத்திலியும் தொய்வு தெரியல. இடை விடாமல் படிக்க வைக்குது கதை போக்கு