காலம் கடந்து நிற்கும் ஆளுமைகளின் படைப்புகளை வாசிப்பது, எழுதுவதற்கான முதல் பயிற்சி என்றால், சமகால எழுத்தாளர்களின் ஆக்கங்களை உடனுக்குடன் வாசிப்பது, தற்காலக் கதைக் களங்கள், பேசுபொருட்கள், எழுத்து முறை ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவுபவை. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்து படைப்புகளையும் அநேகமாக அவை முதல் பதிப்பாக வந்த சில நாட்களுக்குள் வாசித்திருக்கிறேன். இப்படைப்புகள் என்னுள் சலனத்தையும், அவை குறித்து எழுதுவதற்கான உத்வேகத்தையும் அளித்தவை. ஆகவே இவை மனதுக்கு நெருக்கமானவை என்பதில் சந்தேகமில்லை. படைப்புகள் குறித்த நேர்மறை எண்ணங்களையே கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறேன். எனவே இத்தொகுப்பைப் படைப்புகள் குறித்த திறனாய்வாகவோ விமர்சனமாகக் கொள்ளா