சொல்வதெல்லாம் உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பது என்னுடைய நண்பர்கள் துணையோடு கைக்குக் கிடைத்த சிறுமணல் துகள்களில் இருந்து நான் உருவாக்கிய உலகம் என்பதைக் கொஞ்சம் அடங்கிய தொனியிலேயே பதிவு செய்கிறேன். கார்ப்பரேட் பகடையாட்டத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியாமல், அதை விட்டு வெளியேறினேன். ஆனால் எனக்குப் பின்னால் வருகிறவர்களுக்காக வெற்றியை ஓரு ஆயுதமாக்கி மிச்சம் வைத்துவிட்டுத்தான் வந்தேன். அந்தத் திருப்தியில் முற்றிலும் அந்த உலகத்தை விட்டு வழக்கம் போல என்னுடைய இயல்புப்படி வெளியேறியும் விட்டேன்.
இப்போது வெளியே நின்று திரும்பிப் பார்க்கும் போது, அந்த நிகழ்ச்சி எனக்கு எவ்வளவுக்கெவ்வளவு பெருமித உணர்வைத் தந்திருக்கிறதோ, அதேயளவு குற்றī