ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை. சுகுமாரன் பொதுவாவே, ஆத்மாநாம் கவிதைகள் தர்க்கம், அதர்க்கம் அப்படிங்கற இரண்டு எல்லைகளுக்குள்ள போய்ப்போய் வந்துக்கிட்டே இருக்கு. ஆனா, தர்க்கத்தையும் அதர்க்கத்தையும் பிரிக்கிற கோடு அவ்வளவு துல்லியமானதாக இல்லை. அதனால்தான் வகைப்படுத்தறதும் சிரமம். யுவன் சந்திரசேகர்
ஆத்மாநாம் கவிதைகள் நவீன கவிதைகள் பிறந்த காலத்தில் தனது படைப்பாற்றலை முழுவீச்சாக பயன்படுத்தி தனக்கான தணிவித்துவமான இடத்தை அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டார், உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை கொண்ட அவரின் படைப்புகள் பெருநகர்களில் தனிமனித இருப்பு சார்ந்த நெருக்கடியைத் தெரிவிக்கிற, ஒரு செடியின் இருப்பு வழியாக மனித இருப்பின் அடிப்படைச் சிக்கலை விளக்கிக்கொள்ள முயல்கிற, சகவாசியின் வேதனையைப் பார்ப்பதோடு, கும்பலின் மீதான வெறுப்பை உமிழ்கிற, சுய தேடலுள்ள, குழந்தைகளின் உலகில் ஊடாடுகிற, விளக்குக் கம்பம், திருஷ்டிப் பொம்மை, திருஷ்டிப் பூசணி எனச் சாதாரணமாக நாம் தினசரி பார்ப்பவற்றை முற்றிலும் வேறாகக் கண்டு நமது வாழ்வினுள் கொண்டு வருகிற கவிதைகள், வாசகனிடம் நேரடியாகப் பேசும் கவிதைகள், இயக்கங்கள் தங்களது பிரச்சாரங்களில் உபயோகிக்கக்கூடிய அளவுக்குக் காட்டமான, அப்பட்டமான அரசியல் கவிதைகள், கேலி செய்யும் கவிதைகள், காதல் கவிதைகள் என்று பல்வேறு வகையான கவிதைகளையும் கொண்டது ஆத்மாநாமின் படைப்புலகம்.
சுதந்திரம்
எனது சுதந்திரம் அரசாலோ தனி நபராலோ பறிக்கப்படு மெனில் அது என் சுதந்திரம் இல்லை அவர்களின் சுதந்திரம்தான் உனக்கொரு அறை உனக்கொரு கட்டிலுண்டு உனக்கொரு மேஜையுண்டு உனக்குள்ளே ஒரே உரிமை சிந்திப்பது மட்டும்தான் மலைகளைப் பார் மரங்களைப் பார் பூச்செடிகளைப் பார் ஜீவநதிகளைப் பார் பரந்த கடலைப் பார் இதமூட்டும் கடற்கரையைப் பார் எவ்வளவு இல்லை நீ பார்க்க ஏன் அக்கசடர்களைக் குறித்து வருந்துகிறாய் குமுறுகிறாய் எழுத்துக் கூட்டங்களைச் சேர்க்கிறாய் உன் வேலை உன் உணவு உன் வேலைக்கு போய்வரச் சுதந்திரம் இவற்றுக்கு மேல் வேறென்ன வேண்டும் சாப்பிடு தூங்கு மலங்கழி வேலைக்குப் போ உன் மீது ஆசை இருந்தால் குறுக்கிடாதே.