Jump to ratings and reviews
Rate this book

Aatkolli

Rate this book
ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்கக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி.என்.விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாரவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதியாவது அவர் காரணமாக வந்தவைதான். இளவயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான். -க.நா.சுப்ரமண்யம்

94 pages, Paperback

First published January 1, 1957

Loading...
Loading...

About the author

க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர். எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தேர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தார்.

க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் முதலான பல நூல்கள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக நிற்க வேண்டும் என்ற கவலையில், தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்திலும், பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.

சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் தரமாக இயங்கிய க.நா.சு தன் காலத்திற்கு மேலான பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.

நவீன இலக்கிய முயற்சிகளுக்கான சங்கமாகச் செயல்பட்ட மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினர் இவர். 1986ஆம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழக அரசின் விருது, குமாரன் ஆசான் விருது போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டார்.

1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மறைந்தார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க.நா.சு வின் மருமகன்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (25%)
4 stars
9 (37%)
3 stars
7 (29%)
2 stars
2 (8%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Anitha.
Author 15 books41 followers
February 26, 2019
மாமா, மாமி வீட்டில் தங்கி படிக்கிறான் நாயகன் ராஜன். தன் தந்தைக்கும், மாமாவுக்கும் அவன் காணும் வித்தியாசங்கள், அவர்கள் வாழ்க்கையிலிருந்து எப்படி அவன் தன் வாழ்க்கையை வகுத்துக் கொள்கிறான். பொருளாதார ரீதியில் வெற்றி பெறவில்லை என்றாலும் அவனுக்கு எது தேவை என்பதில் எதனால் உறுதியாக இருக்கிறான்....என்று ராஜனின் பார்வையில் நகர்கிறது கதை.

கோபத்தால் ஐந்து ரூபாய் கூட லாபம் இல்லாதபோது, கோபப்படுவது வீண் என்று நினைக்கும் மாமாவிற்கு, சர்க்கார் உத்தியோகத்தில் திறமை இல்லாததால், உத்தியோக மாற்றம் மட்டுமே ஏற்படுகிறதே தவிர, சம்பளத்தில் மாற்றம் இல்லாமல் அதே தொண்ணூத்தி மூணே முக்கால் ரூபாய் மட்டுமே பல வருடங்களாக வாங்கி வருகிறார். திறமையே இல்லாதவர் எப்படி அதைத் தொண்ணூறாயிரமாக மாற்றுகிறார்? வெறும் அதிர்ஷ்டத்தாலா? உத்தியோகத்தில் திறமை இல்லையே தவிர அவருக்கு லேவாதேவியில் பணம் சேர்க்கும் திறமை இருந்திருக்கிறது. நியாயம் என்பது என்ன? அதை நிர்ணயிப்பவர் யார்? பணத்துக்காக அவனைப் போற்றுபவர்கள், அதே பணத்துக்காக அவனைத் துவேஷித்து தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள். அங்கே பணம் ஆட்கொல்லியாகிறது.

ருசிக்காகச் சாப்பிடுவது எதற்கென்று பசிக்காகச் சாப்பிட்டு(ஆனால் மாமி ரெட்டை சரீரம்?) எதற்குச் சேர்க்கிறோம் என்று தெரியாமலே, பணம் பெற்றவனை தான் மதிப்பார்கள் என்று பணம் சேர்க்கும் மாமி. தேடி தேடி சேர்க்கும் பணத்தின் தேடலும் முற்று பெறுகிறது தங்கள் மகனுக்காக ஒரு உறவையும் அந்தப் பணத்தால் சேர்க்க முடியாதபோது. அங்கே பணம் ஆட்கொல்லியாகிறது...

நாத்தனார் பிரச்சனையால் அவர்கள் பிள்ளைகளிடம் காட்டப்படும் வித்தியாசங்கள்...அம்மா வழி பாட்டி நல்ல பாட்டி என்ற பெயரிலும், அப்பா வழி பாட்டி கெட்டவள் என்று நாயகன் மனதில் படும் வித்தியாசம்....பாட்டி வீட்டில் பால் சோறு சாப்பிடும் ராஜாவின் வெள்ளி கிண்ணி எப்படி மாமிக்கு சொந்தமாகிறது, என்று ஆரம்பத்தில் இருந்தே குடும்ப அரசியலை ஆராய்ந்து செல்கிறது கதை....

ஒருவன் நல்லவன் என்று பெயரெடுத்துவிட்டால் அவன் செய்யாத செயலுக்கும் அவனை நல்லவனாக்கிவிடும் உலகம் அதே போல் ஒருவன் கெட்டவன் என்று பெயரெடுத்துவிட்டால் அவன் செய்யாத செயலுக்கும் அவனையே பழியாக்கிவிடும் உலகம்.....

ஒவ்வொரு மனிதனும் தனக்கு பின் தன் பெயர் நிலைபெற வேண்டும் என்ற ஆசையினாலே பிள்ளை பெறுகிறான்...தனக்கு சமாதி கட்டிக்கொள்வது, சிலை வைப்பது, பல லட்சங்கள் செலவு செய்து வீடு கட்டுவது, ஏதோ ஒன்று செய்து தம் பெயரை நிலை பெற செய்வது, இவை அனைத்தும் மனிதனின் மறைவுக்கு பின்னும் அவன் பெயர் நிலைக்க வேண்டும் என்கிற ஆசையினாலே.

அப்படி ஆசையைத் துறந்த வேதாந்த மனப் பக்குவம் பெற்றவன், தான் வந்து வாழ்ந்துவிட்டு சென்ற கரைகளை சத்தம் இல்லாமல் துடைத்துவிட்டே செல்கிறான்.
Profile Image for Naren.
90 reviews2 followers
Read
May 7, 2024
எழுத்தாளர் பணம் மீதான தனக்கிருக்கும் கேள்விகளையும் அதனை சார்ந்த தத்துவங்களையும் சொல்வதற்காகவே இந்த கதை எழுதினார் போல் ஒரு உணர்வு அளித்தது
Profile Image for MJV.
92 reviews40 followers
December 29, 2020
கா.நா.சு அவர்களின் இரண்டாவது புத்தகம். முன்னர் படித்தது பித்தப்பூ. இவரின் எழுத்து, கதையின் நகர்த்தல்கள் யாவும் நம் வீடு திண்ணையில் அமர்ந்து கதை கேட்பதை போல காட்சி படுத்தப்பட்டிருக்கும். சில எழுத்தாளர்களின் எழுத்துக்கள் கற்பனையா? நிகழ்ந்தவையா என்ற வேறுபாடின்றி நகரும். அப்படியான கதையே இந்த ஆட்கொல்லியும்.

வேங்கடாசலம் என்ற தன் தாய்மாமாவையும், மாமியைப் பற்றியுமான கதையை நமக்கு சொல்கிறார் இந்த கதையின் நாயகன் ராஜா! இது அவர்கள் அழைப்பது. உண்மையில் பெயர் சூட்டப்பட்ட நாயகனா? அல்லது நிழலின் தனிமை என்ற தேவி பாரதி அவர்களின் புத்தகத்தில் வரும் பெயரிடப்படாத நாயகன் போன்ற நிலையா என்பது சற்றே விளங்கவில்லை. எனக்கு தெரிந்த வரை பெயர் இல்லாமலே நகர்கிறது நாயகனின் வாழ்க்கை!

சரி கதையின் கரு என்பது, பணத்தாசை பிடித்த மாமா, மாமியின் வாழ்வின் தடம் எப்படியாக செல்கிறது என்பதை பணத்தை எப்படி வாழ்வில் சேர்ப்பது என்பதையே அறியாத, அல்லது அறிய விரும்பாத நாயகனின் பார்வையில் நகரும் வாழ்க்கை. எல்லோரிடமும் கண்ணும், பணமுமாக இருக்கும் மாமா, மாமி இவரிடம் மட்டும் ஏன் கரிசனம் காட்டுகிறார்கள்? எப்படி மாமா தன்னுடைய 93.75 ருபாய் பிரதி மாத சம்பளத்தில் லட்சதீபதி ஆகிறார்? எப்படி மாமியின் நகைகள் பெருகின? ஏன் எல்லோரும் இணக்கமாகவும், அதே நேரத்தில் விலகியும் இருந்தார்கள் அந்த மாமா, மாமியிடம்? தனது சொந்த தங்கையை கூட பெரிதாக ஏறெடுத்து பார்க்க மறுத்த அந்த நடத்தை எப்படி வந்தது?

பணம் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கைக்கு அல்லது பணத்தையே குறியென சேர்க்கும் மனிதர்களின் வாழ்க்கைக்கான அர்த்தம் என்ன? இது ஒரு வகையில் தன் பெயர், புகழ் அடுத்த தலைமுறைக்கும் சென்றடைய வேண்டுமென்ற தற்புகழ்ச்சி நிலையினால் விளைந்ததா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் நிறைத்து செல்கிறது கதை. பணம் வேண்டுமென்று நினைப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?

"சமைத்துக் கொள்ள முடியவில்லை என்று கண் துடைப்புக்காக ஒரு காரணம் சொல்வதுண்டு. அது கூட நாளடைவில் நின்று விட்டது. "சாப்பிட்டு என்ன கண்டது? ருசி என்று சொல்லப்படுவதெல்லாம் தொண்டை வரையில்தான்?" என்பாள் மாமி அடிக்கடி. "பணம் என்றால் அது பாங்கி வரையிலும்தான்" என்று ஏன் திருப்பிச்
சொல்லக்கூடாது என்று எனக்குத் தோன்றும். ஆனால் அது உண்மையல்ல என்பது பணம் படைக்காத எனக்கே தெரிந்ததே!"

பணம் படைத்தவன் என்று சொல்லப்படுவதில்லை. பணம் படைத்தவர்கள் என்றே சொல்லி பார்க்கும் இந்த சமூகம், உண்மையில் அவர்களை சுற்றி வருவது ஏன் என்றும், அல்லது பணம் படைத்தவர்களை யாராகப் பார்க்கிறது இந்த சமூகம் என்பன போன்ற உரையாடல்கள் நிறைந்து கிடக்கின்றன இந்த புத்தகம் முழுவதும்.

"பணக்காரனாகத் தன் முயற்சிகளால் ஆகாவிட்டவனை உலகம் பார்க்கிற பார்வை தனியான பார்வைதான். எவ்வளவு பொறாமையுடன் பார்க்கிறது உலகம். எம்.ஏ. படித்தால் என்ன, அதற்கப்புறம் தினமும் ஒரு புஸ்தகமாக உலகிலுள்ள அறிவு நூல்களையெல்லாம் கரைத்துக் குடித்திருந்தால் தான் என்ன? வெறும் அறிவையும், அறிஞனையும் கண்டு உலகம் சற்றுப் பயந்து ஒதுங்கிப் போகிறமாதிரித்தான் எனக்குத் தோன்றுகிறது. பணம் படைத்தவனைச் சுற்றி வளைய வந்து புகழ்ந்து பாடி அநுபவிக்கிறது உலகம்."

இப்படியான சொல்லாடல்களும், இதற்கு எதிர் மாறான சொல்லாடல்களையும் கொண்டதே இந்த புத்தகம். நாயகன் தன் இயலாமை பற்றி சொல்வதிலும், தன் மாமா, மாமியின் கெட்டிக்காரத்தனம் என்று உலகம் சொல்வதையும் மாறி மாறி நின்று அந்த ஆட்கொல்லியை நினைத்துப் பார்க்கிறான். பகடியாக, வாழைப்பழ ஊசியாக பல தர்க்கங்களை முன் வைக்கிறார் கா.நா.சு அவர்கள்.

"உலகத்தின் பாவச்சுமையை ஏற்றுக்கொள்ள முன் வருபவர்கள் மஹான்கள், பரமபிதாவின் மகன் என்று உலகம் போற்றுகிறது. உலகத்தின் பாபங்களுக்கெல்லாம் ஆதி காரணமாக நிற்கும் பொருளையும் பணத்தையும் சுமையாக ஏற்றுக்கொள்ளுகிற தைரியம் படைத்த மனிதரைகளையும் ஏன் மஹான்களாகச் சொல்லக்கூடாது? உலகில் ஏழைகள்தான் நல்லவர்கள் என்று எல்லோரும் ஒருமுகமாக அபிப்பிராயம் சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட நல்லவர்கள் அதிகரிக்க பணக்காரர்களைப்போல உதவி செய்பவர்கள் யார்? என் மாமா வேங்கடாசலம் காரணமாக உலகிலே பலர் ஏழைகளாகி, இப்போது நல்லவர்களாகியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது."

ஊரை அடிச்சி ஓலையில போட்றதுன்னு ஒரு சொல்லாட்சி உண்டு. அதைதான் கா.நா.சு சொல்லியிருப்பதாக புரிகிறது. படித்துப் பாருங்கள்...

Displaying 1 - 4 of 4 reviews