பலரும் காதலிக்கிறார்கள், எல்லோரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் சில தம்பதிகளிடம் இருக்கும் அன்யோன்யம், நெருக்கம் கொஞ்சம் வேற லெவல் தான். அப்படிபட்ட ஒரு தம்பதியரின் ஆரம்ப கால காதல் கதை தான் இந்த புத்தகம். 'நித்திலாவின் நேசன்' பள்ளிக்காலத்தில் ஆரம்பிக்கும் காதல் கதை. 2005ல் ஆரம்பிக்கிறது. பள்ளி வயதில் எல்லோருக்கும் வரும் பப்பி லவ் தானே என்று இல்லாமல் அதை எப்படி இருவரும் கையாள்கிறார்கள், எப்படி இருவரும் அந்த காதலை தக்கவைத்து கொள்கிறார்கள், திருமணத்தில் சேர்கிறார்கள் என்று எழுதி இருக்கிறேன். படித்து முடித்தவுடன் இந்த கதையின் நித்திலாவும், நேசனும் உங்கள் மனதில் நிறைந்து மகிழ்விப்பார்கள் என்று நம்புகிறேன்.