வாசிப்பு உலகின் பிரம்மாண்டத்தை, அழகியலை, ஆழங்களை, அற்புதங்களை, மனிதன் கடந்து வந்த பாதைகளைப் படம்பிடித்துக் காட்டும். "ஆழ்கடல் - சூழலும் வசிப்பிடங்களும்" நிச்சயம் ஒரு பிரம்மாண்டத்தைக் கொடுக்கும். எளிதாக அறிந்துகொள்ள முடியாத செய்திகள். ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் துவங்குகின்றது, பல்வேறு ஆழ்கடல் வாழ்விடங்களுக்கு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச்செல்கின்றது. வாசிப்பவருக்குப் புதிய உலகினை காட்டும்.
"நாம் வாழும் பூமியில் இப்படி ஓர் இடமா?" என ஆச்சரியப்பட வைக்கும், சிலிர்க்க வைக்கும், வாய்பிளக்க வைக்கும், 'ஓ' என 'உம்' கொட்ட வைக்கும், புதிதா இருக்கிறதே என யோசிக்க வைக்கும், "இப்படியென்றால் என்ன?" எனத் தேட வைக்கும்.