கூட்டமாக இருந்த பஸ் ஸ்டாப்பில் நகத்தைக் கடித்துத் துப்பியபடி நின்று கொண்டிருந்தாள் மாளவிகா..'இன்னும் பஸ்ஸைக் காணோமே..'அவளுக்குப் பதட்டமாக இருந்தது.. அருகிலிருந்-தவர்களில் வழக்கமாக அவளது பஸ்ஸீக்குள் ஏறிக்கொள்பவர்களை அளவெடுத்தாள்.. எண்ணிக்கை குறையாமல் அத்தனை பேரும் அங்கேயே இருந்து வைத்ததில் அவளுக்குள் டென்சன் கூடியது..'எல்லாமே போகலைன்னா.. எப்படி..? இத்தனை பேரும் தொற்றினா நான் படியில் கால் வைக்கக் கூட முடியாது போல இருக்கே...'