Jump to ratings and reviews
Rate this book

அதிசயமணிகள் : புதையலைத்தேடி ஒரு சாகசப்பயணம்

Rate this book
புதையல்வேட்டை என்பது சாத்தியமா? புதையல் எடுக்க ஆசைப்படாதவர்கள் உலகில் உண்டா? Treasure hunting எனப்படும் புதையலைத் தேடுவது உலகில் மிகச்சில நாடுகளில் தடைசெய்யப்பட்டிருந்தாலும் அனேக நாடுகளில் இன்னும் சட்டப்பூர்வமாகவே உள்ளது. பாலைவனங்கள், கடல்கள், ஆறுகள் , காடுகள் , அழிந்துபோன பண்டைய நகரங்கள் மற்றும் ரத்தினங்கள் விளையக்கூடிய நிலப்பகுதிகளிலும் புதையலைத்தேடி உயிரைப்பணயம் வைத்து சாகசப்பயணங்கள் செய்பவர்கள் உலகம் முழுதும் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். புதையல் வேட்டையை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் உலகம் முழுதும் வந்துகொண்டேதான் இருக்கிறது. mackenna's gold , Indiana jones , pirates of the Caribbean, treasure island, blood diamond இது போன்ற நூற்றுக்கணக்கான திரைப்படங்களை நாம் பார்த்திருப்போம்.

184 pages, Kindle Edition

Published July 11, 2022

11 people are currently reading
5 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
31 (70%)
4 stars
8 (18%)
3 stars
2 (4%)
2 stars
2 (4%)
1 star
1 (2%)
Displaying 1 - 11 of 11 reviews
Profile Image for Premanand Velu.
244 reviews39 followers
September 28, 2022
தமிழில் சமகாலத்தில் எழுதப்பட்ட தன வரலாறு நூல் இது. ஆனால் விறுவிறுப்பிலும், அமைப்பிலும், ஒரு சாகச புதினத்துக்கு சற்றும் குறையாத வகையில் அமைந்திருக்கும் நூல் இது.

அடிப்படையில் தமிழில் அதிகம் தொடப்படாத களத்தில் அமைந்திருக்கும் இந்த நூல், விவரணையிலும், தகவல் செறிவிலும் சற்றும் குறைவில்லாமல், அதே சமயம் வாசிப்பவர்களின் ஆர்வம் சற்றும் குறையாத வகையிலும் சுவாரசியமான நடையில் செல்கிறது.

உதாரணமாக, குகையை குடைந்து மரகதக்கற்களை எடுத்து வரும் சம்பவம், தமிழில் இதுவரை வாசித்திராத விவரணை. ஆங்கிலத்தில், இது போன்ற பல சம்பவங்களை படித்திருந்தாலும், தமிழில், அதுவும், நாமறிந்த நிலப்பரப்புகளில் நடக்கும் நிகழ்வுகளாக வாசிப்பது ஒரு தனி அனுபவம் தான்...

அப்படி அந்த அனுபவங்களுக்கு ஆசிரியர் தரும் முக்கியத்துவம் அவர் வரிகளிலேயே மின்னுகிறது.

“நாம வாழ்ந்துட்டு இருக்கும் வாழ்க்கை கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என மூன்று பரிணாமங்களைக் கொண்டதுங்க மாம்ஸ். இதில் கடந்த காலங்களில் கிடைத்த அனுபவங்களை வைத்து, எதிர்காலத் திட்டங்களை நிகழ் காலத்தில் கட்டமைக்க முயற்சிப்பவன் மட்டும்தான் வாழ்க்கையில் வெற்றியடைய முடியும். காலத்தைப் போல பாடம் நடத்தும் ஆசான் இந்த உலகத்தில் எங்குமே இல்லை மாம்ஸ். அந்த பாடத்தை படிக்கும் முதல் பெஞ்ச் மாணவனா இருப்பது ஒன்றுதான் நம் வெற்றிக்கான நிரந்தர வழியாக இருக்கும்.” வெற்றி என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்லங்க மாம்ஸ்”. பணத்திற்கு நிகராக அனுபவங்களை சம்பாதிப்பதும் ஒரு வகையில் வெற்றிதான்”.

இறுதியில் அனுபவங்களும், அந்த அனுபவங்களை வார்த்தைகளில் வடிப்பதும் தானே சுவாரசியத்தின் வெற்றிக் கூட்டணி?...

அதையும் கடந்து, இந்த நூலின் நோக்கம் என்பது வெறும் தகவல் கோர்வை மட்டும் அல்ல... அந்த அனுபவங்களின் வழியே வாழ்வின் நோக்கத்தை நிறுவுவதேயாகும்.

"வாழனும்னு முடிவு செஞ்சுட்டா வெறும் பிண்டமா வாழ்ந்துட்டு போறதுல என்ன இருக்கு சொல்லுங்க?.. கண் முன்னாடி இருக்கும் இப்படியான வாய்ப்புகளைக் கூட திறந்து பார்க்கக் கூட துணியாத வாழ்க்கை எதற்குமே பிரயோஜனப்படாதுங்க மாம்ஸ். சண்டைக்கு போறவன் மட்டும் வீரனல்ல. சரித்திரம் படைப்பவனும் வீரன் தானுங்க மாம்ஸ். இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தாலும் நாம் செய்த இந்த செயல் நமக்கு ஆழ்மனதில் ஒரு நிறைவை கொடுக்கும். கவலைய விடுங்க”
Profile Image for Krishnamurthi Balaji.
24 reviews27 followers
July 30, 2022
மாணிக்க அனுபவங்கள்

வாழ்க்கையில் படாத அடிகள் எல்லாம் பட்டு, விடாது முயற்சி செய்து, இறுதியில் வெற்றியை எட்டிப் பிடித்தார் ஒருவர் என்பதை அறியும் போது நமக்கு எத்தனை மகிழ்ச்சி உண்டாகிறது! அத்தகைய மகிழ்ச்சியை இந்த நாவலைப் படிப்பவர்கள் அடைவது நிச்சயம். அதிசய மணிகளைத் தான் தேடிச் சென்று ஓரளவு வெற்றி பெற்ற அனுபவத்தையும் எதிர்கொண்ட சாகசங்களையும் மிக அழகாக எடுத்துரைக்கிறார் இந்த நாவலில், நண்பர் திரு குணசீலன் அவர்கள். சரியாகச் சொல்லப் போனால் இது ஒரு நாவல் அல்ல - அவரது சுயசரிதை என்று அறியும் பொழுது தாங்கொணாத வியப்பு ஏற்படுவது சகஜம். படித்து முடிக்கையில் நாம் ஒரு பரவச உலகத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் மாணிக்கக் கற்களையோ நவரத்தினக் கற்களையோ தேடும் பணியில் அவர் குன்றும் மலையும் குடவரைகளும் கடந்து செல்லும்போது, அந்தப் பணியில் அவர் எதிர்ப்படும் இடர்களும் இன்னல்களும் நம்மைத் திகைக்க வைக்கின்றன. கேட்டாலே மயிர்க்கூச்செரியும் பற்பல சம்பவங்களை அவர் இதில் விளக்கியுள்ளார். ஒவ்வொரு முறையும் சந்திக்கும் இன்னல்களை அவர் எதிர்கொள்ளும் விதத்தைக் காணும் பொழுது நமக்குத் திகைப்பு தான் ஏற்படுகிறது.

அடுத்து இவரது எழுத்துத் திறமை பற்றிச் சொல்லலாம் என்றால் அவை வார்த்தைகளுக்குள் அடங்காது ! மிகச் சிறப்பான முறையில் ஒவ்வொரு அனுபவத்தையும் ரசிக்கத்தக்க விதத்தில் எழுதும் திறன் ஆச்சரியப்பட வைக்கிறது! நவரத்தினம் பற்றியும் கற்கள் பற்றியும் நாம் அறிந்திராத பற்பல விஷயங்களை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார். எழுத்தில் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. இவரது விடாமுயற்சி மிகவும் அதிசயிக்கத்தக்க ஒன்று!

இறுதிச் சேர்க்கையாக, இரத்தினக் கற்கள் பற்றிப் பலருக்கும் உள்ள பல ஐயப்பாடுகளைப் பட்டியலிட்டு கேள்வி பதிலாகவே தந்திருக்கிறார். இது பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக அழகான முறையில் எழுதப்பட்டு இருக்கும் இந்த நாவலைப் பரிந்துரை செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

நண்பர் குணசீலன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றிகள் மேன்மேலும் வந்து குவியட்டும் என்று வாழ்த்துகிறேன்.

--கிருஷ்ணமூர்த்தி பாலாஜி
Profile Image for Saran Saru.
Author 2 books4 followers
February 5, 2023
எழுத்தாளரின் வாழ்வியல் அனுபவம் பல சாகசங்களுடன் அமைந்திருக்கிறது,
KGF ன் ஒரு குவாட்டர் கதை போல் இருக்கும் இந்த கதை பெரும் சாம்ரஜியம் அடைவது இல்லை என்றாலும் சுரங்க சுரண்டலும், தேடலும், கலவரமும், சதிகளும், சண்டைகளும் அதொடு கதை சொல்லுய பாங்கும் அதில் இருந்த இயல்பும் வாசிப்பில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது.
ரத்தினகற்கலின் விளக்கங்கள் கதையின் இடையே ஒரு அறிவியல் சார்ந்த விளக்கம் என்ற எண்ணம் தோண்றாமல் மிக தெளிவாக எளிதாக புரிந்துக்கொள்ள முடிந்தது.
உயிர் துடிக்கும் பல சமயங்களிலும் எழுத்தாளரின் முயற்சி அசட்டுதனமோ! இல்லை இயல்பில் சாத்தியமா! என தோண்றினாலும் ஆபத்து காலங்களில் அவரது அதிர்ஷ்ட காலங்கள் தவிர்த்து உண்மையான அவரது விடாமுயற்சியும், நிதானமான செயலும் நிச்சயம் பலருக்கு உதவலாம்.
அனுபவங்களின் பாடத்தில் கிடைக்கபட்ட அவரது கருத்துக்களும் நமக்கும் நிச்சயம் உதவும்:
* “நாம வாழ்ந்துட்டு இருக்கும் வாழ்க்கை கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என மூன்று பரிணாமங்களை கொண்டது. இதில் கடந்த காலங்களில் கிடைத்த அனுபவங்களை வைத்து எதிர்கால திட்டங்களை நிகழ் காலத்தில் கட்டமைக்க முயற்சிப்பவன் மட்டும்தான் வாழ்க்கையில் வெற்றியடைய முடியும்.
* வாழனும்னு முடிவு செஞ்சுட்டா வெறும் பிண்டமா வாழ்ந்துட்டு போறதுல என்ன இருக்கு?”..
* ஒரு சிறிய அனுபவங்களில் கூட பெரிய பாடங்களை கற்றுக்கொள்பவன்தான் எப்பேர்ப்பட்ட கடினமான சூழல்களையும் கடந்துவர முடியும்.
* “வெல்லவேண்டும் அல்லது வீழவேண்டும்.
* ஒரு தோல்வியின் அனுபவத்தில்தான் வெற்றிக்கான சாவி ஒளிந்திருக்கிறது.
* வாழ்க்கையில் நாம் சம்பாதிக்கும் அனுபவங்கள்தான் நிரந்தர பொக்கிஷங்கள்
* அதிர்ஷ்டம் என்பதே அது இஷ்டம் தான். யாருக்கு வேண்டுமானாலும் வரும். அல்லது வராது. இது எல்லாமே நம்பிக்கை சார்ந்தது மட்டுமே.
1 review
July 16, 2022
Roller coaster ride

Author's previous books was wonderful work based on real life incidents from his life and they truly engaged me, with that experience started reading this book, absolutely roller coaster ride of events and nicely written. His way of written and structure of the content is fresh and no boring at all and one learn many things about stones through an interesting way. Must read book
4 reviews
October 15, 2022
விருவிருப்பான கதை ஓட்டம்.

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் சில சாகசங்கள் நிகழலாம்.ஆனால் சாகசங்களே வாழ்க்கையாக எப்படி வாழ்ந்தார் என அதிசயமாக உள்ளது.
நேற்று நடந்த்தை இன்று சொல்ல முடியவில்லை.எப்படி வரிக்கு வரி எழுதியது மட்டுமல்ல .நம்மையும் கூடவே கூட்டி போகிறார்.
இன்றைய தலைமுறை எந்த நல்லது /கெட்டதையும் தட்டி கேட்பது இல்லை.அந்த விதத்தில். வீரத் தமிழனாக நிற்கிறார்.

மொத்தத்தில் ஒரு நல்ல சுயசரிதை.
வெற்றிச் செல்வி
Profile Image for S Thirumavalavan.
3 reviews
July 26, 2022
Individual success story

It was a wonderful experience reading this
book by Gunaseelan. Nicely narrated and gives an expression that we actually entered narrow cave in search of gems.
4 reviews
November 10, 2022
Excellent Thrilling Experience

Excellent Thrilling Experience. Nonstop entertainer and very much informative. Worth to be selected for Top Most First Ranking in the Amazon Contest.
21 reviews2 followers
July 15, 2022
short and sweet autobiographical story

Writer Gunaseelan written this autobiographical story with full of energy and witticism . You cannot keep the book away once you start.
2 reviews1 follower
October 13, 2022
Real story that makes you to feel strong and fight hard!

Good story and lot of life lessons.
Thriving for success in ur passionate business even in hard times.
Nice writings.
2 reviews
August 16, 2022
அனுபவத்தில் மணிகள்

பொதுவாக ஒரு மனிதனின் வெற்றியின் மகிழ்ச்சி முகத்தை மட்டுமே காண்போருக்கு அதன் பின்னால் உள்ள உழைப்பும் பட்ட பாடுகளும் புரிவதில்லை இந்த நூலின் ஆசிரியர் அதனை நம்முடன் அழைத்துச் செல்வதன் மூலம் நம்மையும் அதனை அவருடனே அனுபவிக்க முயல்கிறார் பல இடங்களில் இதனை நாம் உணரலாம்

ஆசிரியருக்கு மிக்க நன்றி
2 reviews
September 26, 2022
Very Entertaining biography

Athidaya manigal means Athisaya Manigal means rare Gems! This book is based on the authors personal journey in search of rare Gems written in lucid style and its very interesting to read, just like a treasure hunt.
I Reccommend it to every avid reader , as adventurous biographies are rare to find.
Displaying 1 - 11 of 11 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.