நூலை முதலாவதாக வாசித்தவன் என்கிற அடிப்படையில், அதே ஆத்மசுத்தியுடன் சொல்கிறேன், "தனிமனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமை புத்தகங்களுக்கு இருப்பதாக நாம் நம்புவது உண்மைதான் என்றால், உத்தரவாதமாக இந்தப் புத்தகம் பலருடைய வாழ்க்கையை அசைக்கும். உள்ளுக்குள் உள்ள கோழைத்தனத்தைப் பிடறியைப் பிடித்து வெளியே தூக்கிக்கொண்டுவந்து வீசும். ஒவ்வொரு மனிதரிடத்திலும் உள்ள நீதியுணர்வைக் கம்பீரமான செயல்பாடு நோக்கி நகர்த்தும்!"
- சமஸ்
சந்துரு எனும் தனிமனிதரின் வாழ்க்கைக் கதை அல்ல இது; சமகால இந்திய வரலாற்றின் ஒரு சிறுபகுதி. நமக்கு ஒருபோதும் திறக்கப்படாத கதவுகளை இந்நூல் வழி திறக்கிறார் சந்துரு. இந்திய நீதித் துறையில் முன்னுதாரணம் இல்லாத ஒரு புத்தகமாக இது இருக்கும்.
Justice K. Chandru (born 1951), is an Indian advocate and former judge of Madras High Court. Chandru has disposed of 96,000 cases during his tenure as a Judge. Chandru is known for a case which took place in 1993 when he was practising as a lawyer, to which the film Jai Bhim is dedicated.
தான் சந்தித்த எண்ணற்ற வழக்குகள் பற்றி பேசியிருக்கிறார் சந்துரு. இன்றும் கலைஞர் மேல் உள்ள மறுக்கமுடியாத குற்றச்சாட்டுகளுள் ஒன்றான சிதம்பரம் மாணவர் வழக்கு இப்புத்தகத்தில் விலாவாரியாக பேசப்பட்டுள்ளது.
சில வழக்குகள் தவிர பெரும்பாலும் தள்ளுபடி செய்தேன் உத்தரவிட்டேன் என்று list செய்திருப்பதால் இருந்து வாசிப்பவனுக்கு என்ன takeaway?
சற்று கடியான புத்தகம். எண்ணற்ற தகவல்கள். ஏராளமான குறிப்புகள். தொடர்ச்சியாக நினைவில் நிறுத்துவதற்கு கடினமான புத்தக மொழி நடை.