தோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் காட்டுகிறார் தொ.ப. வாலியோன் என்கிற பலராமன் வழிபாடு வழக்குக் குன்றி மறைந்துவிட்டது என்று எழுத்துச் சான்றுகள் கொண்டு எவரும் சொல்லிவிடலாம். வெள்ளைச்சாமி, வெள்ளைக்கண்ணு முதலிய பெயர்களின் தொடர்ச்சியில் அதன் எச்சங்கள் நிலவுவதைத் தொ.ப.தான் கண்டுகாட்ட முடியும். கள்ளழகர் என்பது மாயனின் கள்ள அழகு வழிப்பட்டதென்பது பௌராணிகம்.
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.
Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.
பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.
அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.
தொ.பா என்றாலே நாட்டார் தெய்வங்கள் & தொல்லியல் எச்சங்கள் சார்ந்த ஆய்வுப்பணிகளில் கைதேர்ந்த முக்கியமான ஆசான் ஆவார். தமிழ்நாட்டில் உள்ள அடித்தளத்து மக்கள் வழிபடும் சிறு தெய்வங்கள் பற்றியும், அது எப்படி பெருந்தெய்வங்களின் இருந்து வேறுபட்டு நிற்கிறது என்பதை பற்றியும் விவரித்துள்ளார்.
தெய்வங்கள், சிறுதெய்வ வழிபடு, பலராம வழிபடு, அழகர்கோவில் அமைப்பு, கள்ளழகர், தமிழகத்தில் வைணவத்தின் பங்கு, பார்ப்பார் பெயரின் தோற்றம், ஹரிஜன ஆலய பிரவேசம் என்று மதம், பண்பாடு தளத்தை மேல்சொன்ன கட்டுரைகள் வருடி செல்கிறது.
எனக்கு மிகவும் பிடித்தது வைணவம் எப்படி அடித்தளத்து மக்களின் பண்பாட்டை அரவணைத்து கொண்டது என்பது தான். சைவம், நிலவுடைமை சார்ந்து மேலோங்கி இருந்த காலத்தில், வைணவத்தால் சைவம் அளவுக்கு வளர்ச்சி காணமுடியவில்லை. இருப்பினும், எளிய மக்களிடம் வெற்றிகாண்பதை இன்றும் சில கோவில்களில் நடைமுறையில் உள்ள சடங்குகளை பார்க்கலாம். உதாரணமாக சவுரிராஜ பெருமாள் திருவிழாவில் மீனவர்களின் பங்கு, நம்மாழ்வார் விக்கிரகத்திற்கு குறவன் கொண்டை இடுவது.
வைணவம் - பிராமண மேலாண்மை, ஆகம நெறி, சாதி கோட்பாடு, தீண்டாமை கோட்பாடுகளை ஏற்று கொண்ட சமயம் என்றாலும், அதை தகர்த்தெறியும் ஆற்றல் பெற்று எளிய மக்களை அரவணைத்தது.
புத்தகம்: தெய்வங்களும் சமூக மரபுகளும் தேதி: 10-08-2025 ஆசிரியர்: தொ.பரமசிவன்
சில காலங்களுக்கு முன்னர் ஐயா தொ.ப அவர்களின் "பண்பாட்டு அசைவுகள்" எனும் நூலை வாசித்திருந்தேன். அது அணி அவர் எழுதி ஏற்கனவே வெளிவந்திருந்த இரு நூல்களின் தொகுப்பு. அதில் ஒன்றே இந்த "தெய்வங்களும் சமூக மரபுகளும்". ஆக, இது எனக்கு ஒரு மறுவாசிப்பு அனுபவமாகும். நாம் வாசிக்கும் புத்தகங்கள் எவ்வளவு சீக்கிரம் மறந்து போகின்றன என்பதை இது எனக்கு உணர்த்தியது.
ஐயா தொ.ப அவர்கள் தமிழ்நாட்டின் தலைசிறந்த பண்பாட்டு ஆய்வாளர்களில் ஒருவர் ஆவார். அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில் உள்ளடக்கப்பட்ட ஒவ்வொரு கட்டுரையும் இதுவரை நாம் அறியாத செய்திகளை நமக்கு ஊடுகிறது. "தெய்வங்கள்" என்ற முதல் கட்டுரையே தொ.ப அவர்களின் பண்பாட்டு ஆய்வுக்கு சிறந்த சான்றாகும். மனிதகுலம் தோன்றிய காலத்தில் "தெய்வம்" என்ற ஒன்று எவ்வாறு உருவானது, பின்னர் அது வளர்ந்து எவ்வாறு நிறுவனமயமாக்கப்பட்டது போன்றவற்றை எழுதியிருக்கிறார்.
அதுபோக, "சிறுதெய்வ நெறிகள்" என்ற கட்டுதையில் நாட்டார் தெய்வங்களைப் பற்றியும், "அடிதொழுதல்" என்ற கட்டுரையில் காலில் விழுந்து வணங்கும் செய்கை உருவான வரலாறு பற்றியும், "பலராம வழிபாடு" குறித்து என இதுவரை பெரிதும் சொல்லப்படாத வரலாற்றை தொட்டுக் காட்டியிருக்கிறார்.
எனக்கு குறிப்பாக "கள்ளரும் அழககும் கள்ளழகரும்" என்ற கட்டுரை மிகவும் பிடித்திருந்தது. அதுபோக, "உடைமையும் ஒழுக்கமும்" என்ற கட்டுரை எவ்வாறு நிலவுடைமை "சைவம்" என்ற நிறுவன சமயத்துக்கு வித்திட்டது என்பதைப் பேசுகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939-ஆம் ஆண்டு "அரிசன ஆலயப் பிரவேசம்" (கோவில் உள்நுழைவு) நடக்கும்வரை அவகு தாழ்த்தப்பட்டவர்கள் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்ட செய்தி வியப்புக்குள்ளாக்கியது.
ஆக, ஐயா தொ.ப அவர்கள் இதற்கு முன் பலர் நிகழ்த்திய ஆய்வுகளைத் துணைக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், நேரடியாக கள ஆய்வில் இறங்கி மக்களின் நம்பிககைகளை, அவர்களிடையே வழங்கப்படும் கதைகளையும் தன் ஆய்வுக்கான ஆதாரங்களாக முன்னிறுத்துகிறார். ஏனெனில், இங்கே நமக்குச் சொல்லப்பட்ட வரலாறுகள் பெரும்பாலும் மேட்டிமை மக்களாலும், ஆளும் வர்க்கங்களினாலும் அவர்களுக்கு ஏற்ற வகையில் சொல்லப்பட்டவை (திரிக்கப்பட்டவை).
சொல்லப்படாத வரலாறுகளும் உண்மைகளும் வெகுமக்களிடையே கதைகளாகவும், கலைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவைகளை வெகுமக்களிடம் எடுத்துச் செல்லவும், உண்மைகளை உடைத்துக் காட்டவும் தொ.ப போன்ற ஆய்வாளர்கள் அரும்பணி ஆற்றியுள்ளனர்.
தெய்வங்களும் சமூக மரபுகளும் என்ற இந்த புத்தகம் பத்து கட்டுரைகள் கொண்ட தொகுப்பாகும்.
தொப எழுதிய புத்தகங்களை இந்த வருடம் முழுவதும் வாசித்ததில் நான் கண்டுகொண்ட ஒரு விஷயம், சில கட்டுரைகளும் தகவல்களும் பல புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளது என்பதே.
இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகளில் இரண்டு மூன்று தவிர்த்து மற்றவற்றை ஏற்கனவே பிற புத்தகங்களில் வாசித்துள்ளேன். எனவே ஒரு மறுவாசிப்பு போன்ற அனுபவமே இந்த புத்தகத்தை வாசிக்கும் போது எழுந்தது.
வழிபாடு முறைகள் தோன்றியதன் காரணத்தை விளக்கும் முன்னுரையை ரசித்தேன்.
இயற்கை வழிபாடு சமூகத் தேவைக்காக உருவக வழிபாடாக மாறியதை விளக்குகிறார். அந்ததந்த இணக்குழுக்களுக்கு, ஊர்களுக்குள்ள தெய்வத்தின் வழிபாடு அந்த மக்களின் வாழ்க்கை முறையை சார்ந்தது என்ற கண்ணோட்டம் நாம் வணங்கும் தெய்வங்கள் அனைத்தின் அமைப்பையும் கண்முன் வரவழைத்து வழிபாட்டு முறைகளின் காரணங்களை யோசிக்க வைக்கிறது.
எத்தனை முறை வாசித்தாலும் சிறுதெய்வ வழிபாடு குறித்த கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஊர்ப் புறங்களில் உள்ள வழிபாடு முறைகளின் காரணங்களை அறிந்து கொள்ள முடிவதால் இருக்கலாம்.
சமண மதத்தில் இருந்து உண்டான 'அடிகள்' என்ற பெயர்க்காரணம், அதன் மூலம் அடிதொழுதல் என்ற வழக்கத்தின் மூலத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
மறைந்து போன பலராம வழிபாட்டின் எச்சங்களாக இருக்கும் வெள்ளைச்சாமி போன்ற பெயர்களைக் கேட்கும் போது தொப தான் நினைவிற்கு வருகிறார்.
அழகர் கோயில் புத்தகத்தில் ஆழமான வாசித்த பல தகவல்கள் இந்த புத்தகத்தில் இரண்டு மூன்று கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் வைணவம் சிறுதெய்வ வழிபாடுகளில் ஏற்படுத்திக் கொண்ட சமரசம் மூலம் பாமர மக்களும் எளிதில் வழிபடும் சமயமாக மாறியதை விளக்கமாக எழுதியிருக்கிறார்.
மறுவாசிப்பில் ஒரு புது கண்ணோட்டம் கிடைப்பது போல சில தகவல்களை அனுபவித்து உணர்ந்து கொள்ள முடிந்தது.
தெய்வங்களும் சமூக மரபுகளும் by தொ. பரமசிவன் is a intriguing collection of essays that discusses about நாட்டார் தெய்வங்கள். The book is informative, loaded with literature references and on ground research. I wish the author could have added additional context in regards to Sangam Literature references. It's definitively a must read for someone looking to know more about Tamil நாட்டார் தெய்வங்கள்.